கே.பி.யின் விசாரணை தொடர்பாக இலங்கை – இந்தியா உறவில் விரிசல்!?

kp100இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதென்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் குறித்து புலிகளின் முக்கிய பிரமுகரும் மலேஷிய அரசால் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டவருமான கே.பி யிடம் விசாரணை செய்வதற்காக பாகிஸ்தான் புலனாய்வுக்குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. இந்த விசாரணைக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நடைமுறை காரணமாக இந்திய அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக கே.பியிடம் விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா இலங்கையை பலகாலமாக கேட்டு வந்தபோதிலும் அதனை அனுமதிக்காத இலங்கை தற்போது கொழும்பு வந்திருக்கும் பாகிஸ்தான் புலனாய்வுக் குழுவிற்கு அனுமதி வழங்கியிருப்பது இந்தியாவை பார்க்கிலும் பாகிஸ்தானுக்கு இலங்கை முக்கியத்துவம் கொடுக்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனவும் கூறப்படுகிறது.

3 thoughts on “கே.பி.யின் விசாரணை தொடர்பாக இலங்கை – இந்தியா உறவில் விரிசல்!?”

 1. திருத்தம்: கே.பி. மலேஷிய அரசால் கைது செய்யப்படவில்லை.

  ராஜீவ் காந்தியின் கொலைக்கு இந்திய நீதித்துறை தீர்ப்பு வழங்கியாயிற்றே.
  மேலும் விசாரிக்க சோனியா காந்தி அரசகாங்கம் உண்மையிலேயே விரும்புமா? தமிழக காங்கிரஸ் தான் விரும்புமா?

 2. பாகிசதானுக்கு அனுமதி தந்த இலங்கை இந்தியாவின் கோரிக்கைகளை தராது இருப்பது விந்தையாக இருக்கிற்து.. இதில் இலங்கையின் அச்ட்டையைத்தான் காண்முடிகிரற்து.

 3. பாகிஸ்தானை நேரடியாகப் பாதிக்கிற உடனடியான பிரச்சனைக்கும் இந்தியாவுக்குப் பெரிய பாதிப்பற்ற 15 வருடம் பழைய பிரச்சனைக்கும் வேறுபாடுண்டு.

  இந்தியா வற்புறுத்திக் கேட்டதா என்பது ஒரு விடயம்.
  இந்தியா கே.பியை இலங்கையில் வைத்து விசாரிக்கக் கோரியதா அல்லது இந்தியாவிற்குக் கொண்டு போய் விசாரிக்கக் கோரியதா என்பது இன்னொரு விடயம்.

  இந்தியா-பாகிஸ்தான் சக்களத்திச் சண்டையில் இலங்கைக்குப் பெரிய ஈடுபாடில்லை.

  இங்கே இந்திய ஆளும் அதிகார வர்க்க ஆதிக்கமே அதிகம். அது தான் நமது கவலை.

Comments are closed.