கே.பி. இரகசியமான முறையில் விசாரணை!

  
    மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட கே.பி. தற்போது இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் கீழ் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருவதாக இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வப் பிரிவின் இரகசியத் தகவலொன்று  சற்று முன்னர் தெரியக்கிடைத்தது.

கே.பி. மலேசியாவிலிருந்து கடத்தப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னரே, அவர் கைதுசெய்யப்பட்ட செய்தியை இலங்கை அரசாங்கம் அறிவித்தது என்ற செய்தியையும் அந்த நம்பகரமான தகவல் உறுதிப்படுத்தியது.

கே.பி. கடத்தப்பட்டு, கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், சற்றுமுன்னரே எமக்கு அந்தத் தகவலை முழுமையாக உறுதிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது.
இனப்படுகொலையின் போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய இந்திய அரசே இந்தக் கடத்தலின் பின்னணியில் இருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.