கொழும்பில் தமிழர்களைப் பொலீசில் பதிவு செய்ய மீண்டும் வேண்டுகோள்

கொழும்பு நாரகென்பிட்டிப் பகுதியில் வாழும் தமிழர்களிடம் பொலிஸில் பதிவு செய்யுமாறு கோரி பொலிஸ் உத்தியோகத்தர்களால் பதிவுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டள்ளன. நாரகென்பிட்டி தொடர் மாடிக் குடியிருப்புக்களில் வசிப்பவர்களிடமே இவ்வாறு பதிவுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்து சகஜமான நிலைமை தோன்றிவிட்டது எனக் கூறப்படும் நிலையில் மீண்டும் பொலிஸில் பதிவு செய்துகொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினைத் தோற்றுவித்திருக்கிறது.
இதே வேளை மன்னாரில் சில பகுதிகளில் அங்கு வாழ்பவர்களை இனங்காணத்தக்க வகையில் இராணுவத்தினரின் விசேட அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.