கொழும்பில் இந்தியத் திரைப்பட விழா : சென்னையில் ஆர்ப்பாட்டம்

“இனப்படுகொலை” நாட்டின் தலைநகரில் இந்தியத் திரைப்படக் கலைஞர்கள்  விழாநடத்தத் தீர்மானித்திருப்பதற்கு  எதிராக சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்  ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் ஜூன் மாதம் 3 முதல் 5ஆம் தேதிவரை நடத்தவுள்ள விருது வழங்கு விழாவை இலங்கைத் தலைநகர் கொழும்பல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் அமைப்பான சேவ் தமிழ் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

சென்னை பூங்கா நகரிலுள்ள நினைவரங்கம் முன்னால் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

இது குறித்து தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் அமைப்பான சேவ் தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயத்தால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் குற்றம் செய்துள்ளது என்றும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளது என்றும் குற்றம் சாற்றப்பட்டுள்ள சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வணிகத் தடைகளை விதித்துள்ள நிலையில், அந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உள் நோக்கத்துடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் அங்கு தனது விருது வழங்கு விழாவை நடத்த முன்வந்துள்ளது என்று குற்றம் சாற்றியுள்ளது.

5 thoughts on “கொழும்பில் இந்தியத் திரைப்பட விழா : சென்னையில் ஆர்ப்பாட்டம்”

  1. தோழர்களின் இப்போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்திய அரசின் இலங்கை இனவெறி அரசுடன் ஆன கள்ளக்கூட்டிற்கு இத்தகைய விழாக்கள் ஒரு சான்று. இத்தகைய விழாக்களை புறக்கணித்து இலங்களை அரசுன் ஆன அனைத்து உறவுகைளுயும் இந்திய அரசு முறத்துக்கொள்ள வேண்டும். “சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும் சிந்தையிரங்காரடீ – கிளியே செம்மை மறந்நதாரடீ” என்ற பாரதிதான் நினைவிற்கு வருகிறான்.

  2. save-tamil is under a famous tamil ‘father’. these guys want to get the name from seeman. not with the real intention…

  3. ஈழத் தமிழர்களுக்காக விலை போகாமல் போராடும் இவர்களுக்கு ஐரோப்பாவில் வாழுகின்ற நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

  4. விலை போவதும் போகததும் லாபநட்டக் கணக்குப் பார்த்துத் தானே நடக்கிறது.
    ஈழத் தமிழனைப் பற்றி யாருக்கு அக்கறை?
    ஈ.வே.ரா. பெரியார் சொல்லுவார் ” கூத்தாடிப் பசங்க!” என்று.
    தமிழ்நாடே கூத்தாடிகளின் ஆதிக்கத்தில் தான் உள்ளது.

Comments are closed.