கொல்வதற்கும் சுதந்திரம் உண்டு : கோதாபய ராஜபக்ச

GotaSBSInterviewஜனாதிபதிக்கு எதிராக சரத் பொன்சேகா போட்டியிடுவதனால் அவரை துரோகி என கூறவில்லை எனக்குறிப்பிட்டுள்ள கோத்தபாய, நாட்டு மக்களுக்கு படையினர் தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கிவருபவர்களே துரோகிகள் என அழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தின் பின்னர் சீனாவில் இருந்து பாரியத்தொகை ஆட்டிலறி உந்துகளை பல மில்லியன் ரூபாய்களுக்கு கொள்வனவு செய்ய வரையறுக்கப்பபட்ட லங்கா லொஜிஸ்டிக் அன்ட் டென்னோலொஜிஸ் நிறுவனம் முயன்றதாகவும் அதனை தாம் தடுத்ததாகவும் சரத் பொன்சேகா கூறியிருந்தமையை மறுத்துரைத்த கோத்தபாய ராஜபக்ச, தாமே அதனை தடுத்து நிறுத்தியதாகவும் சரத் பொன்சேகாவுக்கு அந்த அதிகாரம் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

குறித்த ஆயுதக்கப்பல், திருப்பியனுப்பட்டதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் விசாரணைகள் எவையும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு மனிதனுக்கு சுதந்திரம் உள்ளது இந்தவகையில் சரத் பொன்சேகாவுக்கும் சுதந்திரம் உள்ளதுதானே என கோத்தபாயவிடம் கேட்ட போது, ஆம் அதற்கு சுதந்திரம் உள்ளது. ஒரு மனிதனை கொல்வதற்கும் சுதந்திரம் உள்ளது என பதிலளித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதும், ஒரு மனிதனை கொல்வதும் இரண்டு வெவ்வேறு விடயங்களாகும் என சுட்டிக்காட்டி போது, எவரும் எதனையும் செய்ய சுதந்திரம் உள்ளது. ஆனால் அதற்கு நியாயங்கள் இருக்க வேண்டும் என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

2 thoughts on “கொல்வதற்கும் சுதந்திரம் உண்டு : கோதாபய ராஜபக்ச”

  1. மகிந்த சகோதரர்களுக்கு>கொலைகளைச் செய்த-செய்யும் பழக்கதோசத்தில்>அதுவே நினைவிலும் வாயிலும் வருகின்றது.

  2. கொலைபாதகரின் வாயில் வேறு என்ன எதிர் பார்க முடியும்.

Comments are closed.