கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிரபாகரனுக்குத் தெரிவிக்க உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர். எம் அனைவருக்குமே பிரபாகரன் இது குறித்து மகிழ்ச்சியடைவார் என்பது தெரியும். உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் சில நாட்களில் திரும்பி வந்த போது பிரபாகரன் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது என்று என்னிடம் கூறினர். தவிரவும், கணேஸ்வாத்தியின் காட்டிக்கொடுத்த துரோகச் செயலுக்கு அவரைக் கொலைசெய்திருக்க வேண்டும் என்று பிரபாகரன் கடிந்து கொண்டதாகவும் கூறினார்கள். அப்போது இருபத்தி நான்கு வயதை எட்டிப்பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் பிரபாகரனின் தூய இராணுவ வழிமுறை மீதான நம்பிகையில் பஸ்தியாம்பிள்ளை கொலை நிகழ்வு ஒரு மைற்கல்.

மக்கள் எழுச்சியைப் பாதுகாக்கவும், அதனை மேலும் உரமிட்டு வளர்க்கவும் ஆயுதப் போராட்டம் பயன்பட்டிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆயுதங்கள் வெகுஜன எழுச்சியைத் தற்காத்துக்கொள்ளும் கேடயங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. மக்களின் நிறுவன மயப்பட்ட எழுச்சியைத் தூண்டுவதும், அவ்வெழுச்சி உருவாக்கும் சூழலில் மக்கள் மத்தியில் ஆயுதம் தாங்கிய கெரில்லாக்கள் தம்மை வலுப்படுத்துவம் வெற்றியின் இன்னொரு அம்சம். கடந்த அரை நூற்றாண்டு காலம் உருவாக்கிய சிந்தனைப் போக்கு ஈழத்தில் மட்டுமல்ல, அதிகாரமும் அடக்குமுறையும் கோலோச்சுகின்ற எந்த நாட்டிலும் மக்களைச் சாரா ஆயுத அமைப்புக்களே ஆதிக்கம் செலுத்தின. இராணுவ வெற்றிகளின் இறுதியில் இவ்வமைப்புகள் எல்லாம் தோற்றுப் போய் சரணடைந்திருக்கின்றன. சோமாலியாவில், இந்தோனேசியாவில், காஷ்மீரில், பங்களாதேஷில், இலத்தினமரிக்க நாடுகளில், கிழக்காபிரிக்காவில் எல்லாம் இது ஒரு சாபக்கேடு போல மக்களை அழித்துப் போராட்டங்களையும் அழித்துக் காட்டிக்கொடுத்திருக்கிறது.

சமூக உணர்வு கொண்டவர்களும், தேசப்பற்றாளர்களும், ஜனநாயக வாதிகளும் ஆயுதங்களின் மீதும் தூய இராணுவ வாதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தவர்களாகவே வாழ்ந்த வரலாறுகள் துன்பகரமானவை. பிரபாகரன் என்ற தேசப்பற்று மிக்க இளைஞனின் ஒட்டுமொத்த சிந்தனையும், செயற்பாடும் போராட்டத்தை நோக்கியே ஒருமுகப்பட்டிருந்தது. தனது சுய லாபத்தையோ, சுய விளம்பரத்தையோ அனறு அவர் முதன்மைப்படுத்தியதில்லை.

70 களின் சூழல் வடகிழக்கில் பொருளாதார அபிவிருத்தியும் அதனோடு கூடவே இயல்பான தாராள வாதக் கலாச்சாரமும் துளிர்விட்டடிருந்தது. வடகிழக்குப் பெண்கள் ‘மினி ஸ்கேட்’ அணிவது கூட சமூக வழமையாகியிருந்த கலாச்சார மாற்றம் துளிர்விட்டிருந்த காலமது. சுப்பிரமணியம் பூங்கா இளம் காதலர்களால் நிரம்பி வழிந்தது. பிரபாகரனின் வயதை ஒத்த மத்தியதர வர்க்க இளைஞர்கள், உருவாகி வளர்ந்து கொண்டிருந்த அந்தக் கலாசாரத்தை நுகர்ந்து கொண்டிருந்த வேளைகளில் பிரபாகரனுக்கு இயந்திரத் துப்பாக்கி மீது அளவற்ற காதல் ஏற்பட்டிருந்தது. தமிழீழத்தை எப்போதாவது அடைந்தே தீருவோம் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்க்கியைத் தன்னுடனேயே வைத்துக்கொண்ட பிரபாகரன், அடிக்கடி அதைத் தொட்டுப்பார்த்துக் கொள்வார். குழந்தைகள் போல தன்னோடு வைத்துக்கொண்டே உறங்கச் சென்றுவிடுவார். சில வேளைகளில் நள்ளிரவு கடந்த வேளைகளிலும் திடுமென எழுந்து உட்கார்ந்து கொண்டு துப்பாகியைச் சுத்தம் செய்து கொள்வார். எங்கள் உறக்கத்தைக் கலைத்து இயக்கத்தின் அடுத்த நடவடிக்கைகள் குறித்துப் பேசுவார். நாம் ஒரு இராணுவக் குழுவைக் கட்டமைத்து விடுவோம், தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்ற கருத்தில் துளியளவும் குலைந்து போகாத நம்பிக்கை வைத்திருந்ததார்.

பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இரகசியப் பொலீசாரைக் கொலைசெய்த நிகழ்வு எமக்கு மட்டுமே தெரிந்திருந்ததது . இலங்கை அரசிற்கு அவர் கொல்லப்பட்டாரா, தலைமறைவானாரா, விபத்தில் சிக்கிவிட்டாரா என்பதெல்லாம் மர்மமாகவே இருந்தது இலங்கை முழுவதும் தேடுதல்களும், திடீர்ச் சோதனைகளும் அதிகரித்திருந்தன. இலங்கை அரசு அதிர்ந்து போயிருந்தது. அரச படைகளைப் பொறுத்தவரை கனகரத்தினம் கொலைமுயற்சியின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீட்சியடையாத நிலையில் இன்னொரு மூன்று முக்கிய பொலீஸ் அதிகாரிகள் குறித்த மர்மம் நீடித்தது.

இந்த மர்மம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஏதோ வழியில் அரச படைகள் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைகளை அறிந்துவிடுகின்றனர். சம்பவம் நிகழ்ந்து சரியாக நான்கு நாட்களுள் இரகசியப் பொலீசாரின் இறந்த உடல்களைப் பொலீசார் மீட்டதாக 12.04.1978 இல் அனைத்து பிரதான இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதுவும் எங்கு எப்போது நடைபெற்றது என்ற நுண்ணிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் ஒரே பரபரப்பு.

வீரகேசரி, தினகரன், டெயிலி நியூஸ் போன்ற தினசரிகளின் தலைப்புச் செய்திகள் இதுவாகத்தான் இருந்தன.

‘வன்செயல் சம்பவங்கள் தொடர்பாக மன்னார் பகுதிக்கு விசாரணை செய்யச் சென்ற இரகசியப் பொலீஸ் உத்தியோகத்தர்கள் நால்வர், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். மடுவுக்கும், மடுவீதிக்கும் இடையிலுள்ள மூன்றாவது கட்டையிலுள்ள காட்டுப்பிரதேசத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இரகசியப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்தனா(சாரதி) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள்’ என்று வீரகேசரியின் தலைப்புச் செய்தி அறிவித்தது.

‘ பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சேபால ஆட்டிகல, வடபகுதி பொலீஸ் மா அதிபர் அனா செனிவரத்ன, இரகசியப் பொலீஸ் அதிபர் நவரட்ணம் ஆகியோர் விசாரணையை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளனர். இவ்விசாரணை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் நேற்றிரவு அவர்கள் கையளித்தனர்’ என்று மறு நாள் வீரகேசரிச் செய்தி தெரிவித்தது.

தமிழீழக் கனவிலிருந்த தமிழ்ப் பேசும் மக்கள் ‘பொடியள் கெட்டிக்காரங்கள்’ என்று பரவலாகப் பேசிக்கொண்டார்கள். தலமறைவு வாழ்க்கை நடத்திய நாம் வெளியே சென்று வரும் வேளைகளில் தமிழர்கள் பேசிக்கொள்ளும் போதெல்லாம் மௌனமாய் பெருமையடைந்து கொள்வோம்.அரசபடைகள் எப்படி இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது எமக்குப் புதிராக இருந்தது. புளியங்குளம் முகாமில் பிரபாகரன் உட்பட மத்திய குழுக் கூட்டங்களை நடத்தினோம். அவ்வேளைகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தெல்லாம் ஆராய்வோம்.

விரைவிலேயே தகவல்கள் அரச உளவாளிகளுக்கு தெரிய வந்தது எப்படி என்பதை நாம் அறிந்து கொண்டோம். பதினேழு வயதில் செட்டியின் சாகச நடவடிக்கையால் கவரப்பட்டிருந்த பிரபாகரன் உட்பட நாமெல்லாம் இப்போது செட்டி தான் இந்தத் தகவல்களை இராணுவத்திற்கு வழங்கியிருந்தார் என்று அறிய வந்ததும் சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவ்வேளையில் செட்டி சிறையிலிருந்து திரும்பி சில மாதங்களே இருக்கும். பிரபாகரன் செட்டியோடு எந்தத் தொடர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் நானும் குலமும் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்தோம். இந்த விடயத்தில் எம்மிருவராலும் பிரபாகரன் மீது ஆளுமை செலுத்த முடிந்தது என்பது என்னவோ உண்மைதான்.

துரையப்பா கொலையை ஒட்டிய காலகட்டத்தில் பிரபாகரன் எம்மைச் சந்திக்க வந்த வேளையில் செட்டியின் ஆளாகவே அறிமுகமானதால் நாம் தொடர்பு வைத்துக்கொள்வதை நிராகரித்திருந்தோம். செட்டியுடன் உறவுகளை அறுத்துக்கொள்வது என்ற உறுதி வழங்கப்பட்ட பின்னரே நாம் இணைந்து செயற்பட ஆரம்பித்தோம்.

பஸ்தியாம்பிள்ளைக் கொலையில் செல்லக்கிளி அதிரடி நடவடிக்கைகள் எமக்கு உண்மையில் பிரமிப்பாகவே இருந்தது. செட்டி கூட இப்படித்தான். இப்படியான சந்தர்ப்பங்களில் துணிவாகச் செயற்படும் திறமை படைத்தவர். அவரது வாழ்க்கை முழுவதும் குற்றச் செயல்களோடு தொடர்புடையதாக இருந்ததால் தயக்கமின்றி முன்செல்லக் கூடியவர். பலம்மிக்க கட்டுக்கோப்பான இராணுவத்தைக் கட்டியமைப்பதே விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பியிருந்த பிரபாகரன், அந்த இராணுவத்தைக் கட்டியமைப்பதில் செட்டி போன்ற துணிச்சல் மிக்கவர்கள். காத்திரமான பங்கு வகிக்க கூடியவர்கள் என நம்பியிருந்தார்.

மக்களின் பலத்தில் தங்கியிருக்காத, தனிமனித சாகசங்களில் நம்பிக்கையுள்ளவர்களைப் பொறுத்தவரை எதிரிக்கும் நண்பர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகக் குறுகியது என்பதற்கு செட்டி முதல் உதாரணமாக அறிமுகமானவர். இப்போது செட்டி அரசின் உளவாளியாகிவிட்டார் என்பது எங்களைவிட பிரபாகரனுக்கு அதிர்ச்சியானதாக இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட வேளையில் அதன் மகளிர் அணியின் செயலாளராகவிருந்த ஊர்மிளா என்பவருடன் அறிமுகமாகியிருந்தார். ஊர்மிளா மிகுந்த தேசிய உணர்வுகொண்ட போராளி என்பது தவிர அடக்கு முறைகள் மிகுந்த சமூகத்தில் எமக்கு ஆதரவாகக் கிடைத்த முதல் பெண் என்பது இன்னொரு சிறப்பம்சம். அவருடனான தொடர்புகளை உமா தொடர்ச்சியாகப் பேணிவந்தார். ஊர்மிளாவிற்கு அறிமுகமான பெண் ஒருவருக்கு தொடர்பான இன்னொருவர் இலங்கை உளவுப்பிரிவில் வேலைசெய்து கொண்டிருந்தார். அவரூடாக உளவாளியாக மாறியிருந்த செட்டி சிறிலங்கா இரகசியப் பொலீசாருக்கு எழுதியிருந்த கடிதத்தின் பிரதியொன்று ஊர்மிளாவிற்குக் கிடைக்கிறது. அந்தக் கடிதத்தில் மடுப் பண்ணையில் பஸ்தியாம்பிள்ளையைக் கொலைசெய்த சம்பவத்தின் விபரமும் தொடர்புபட்ட போராளிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்த்தின் பிரதியை கொழும்பு சென்றுவரும் சாந்தன் ஊடாக ஊர்மிளா எமக்குச் சேர்பிக்கிறார். ஆக, செட்டிதான் காட்டிக்கொடுப்பாளன் என்பதை உறுதி செய்து கொள்கிறோம். இனிமேல் இந்த விபரங்கள் எப்படி செட்டிக்குத் தெரிய வந்தது என்று ஊகிக்க எமக்கு நேரமெடுக்கவில்லை. செல்லக்கிளி செட்டியின் ஒன்றுவிட்ட சகோதரர். அவரூடாகத் தான் செட்டி இவற்றை அறிந்திருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையாகவே அனுமானித்துக் கொள்ளக்கூடிய நிலையில், செல்லக்கிளியிடம் இது குறித்துக் கேட்கிறோம். செல்லக்கிளி யாழ்ப்பாணம் சென்ற வேளையில் கள்வியங்காட்டில் செட்டியைச் சந்தித்திருக்கிறார். அங்கு தனது வீரச்செயல்கள் குறித்து செட்டியிடம் பேசியிருக்கிறார். அவரோ செல்லக்கிளி சொன்னவற்றையெல்லாம் எழுதி இலங்கை உளவுத் துறைக்கு அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய கடிதத்தின் பிரதி இப்போது எம்மிடம் இருந்தது.

நாம் கணேஸ் வாத்தி இல்லாத ஐந்து உறுப்பினர்களாகச் சுருங்கிப் போன மத்திய குழுவை இப்போது அவசரமாகக் கூட்டுகிறோம். ஏனைய பண்ணைகள் குறித்த விபரங்களை செல்லக்கிளி செட்டியிடம் தெரிவிக்கவில்லை என முதலில் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஆக,பண்ணையின் கட்டமைப்புக்கள் அனைத்தும் அப்படியே இருக்க மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறோம்.

அரசபடைகளுக்கு இப்போது ஒரு தலைமறைவு இயக்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இயங்கி வருவதாகத் தெரிந்துவிட்டது. கனகரத்தினம் எம்.பி இன் கொலை முயற்சிக்கும் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பாதுகாப்புச் செயலகம் அறிக்கை வெளியிட்டது. எம்மை நோக்கிய அவர்களின் நடவடிக்கைகளும் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது. இப்போது எதிர்பார்புடனிருந்த தமிழ் மக்களுக்கு எம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள இது சரியான சந்தர்ப்பம் எனத் தீர்மானிக்கிறோம். இந்த வகையில் நமது அனைத்து நடவடிக்கைகளையும், தாக்குதல்களையும் உரிமை கோருவதாக முடிவிற்கு வருகிறோம்.அந்த முடிவின் அடிப்படையில் துண்டுப்பிரசுர வடிவிலான கடிதம் ஒன்றைத் தயாரித்து பத்திரிகைகளுக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கிறோம். அதற்கான பொறுப்பு அவ்வேளையில் செயலதிபராகவிருந்த உமாமகேஸ்வரனிடம் வழங்கப்படுகிறது.

உமாமகேஸ்வரனால் எழுதப்பட்டு அவர் கையொப்பத்தோடு வெளியிடப்பட்ட பிரசுரம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப் பிரசுரம். இந்தப் பிரசுரத்தில் நாம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உரிமை கோரப்படுகின்றன.

துண்டுப் பிரசுரத்தின் முழுமையான விபரம்:

தொடர்புடையோரின் கவனத்திற்கு,

தமிழ்ப் புதிய புலிகள் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகப் பெயர் 05.05.1976 முதல் மாற்றி அமைக்கப்பட்டு ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பின்வரும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்:

1. திரு.அல்பிரட் துரையப்பா ( யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை)

2. திரு என். நடராஜா (உரிமையாளர் பெற்றோல் கராஜ், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு)

3. திரு ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை,சுட்டுக்கொலை)

4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை.

(அதே நாளில் சுட்டுக்கொலை)

5. திரு.சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் வல்வெட்டித்துறை)

6. திரு. தங்கராஜா (முன்நாள் நல்லூர் சுதந்திரக் கட்சி எம்பீயான திரு.அருளம்பலத்தின் காரியதரிசி)

7. திரு.சி.கனகரத்தினம் (முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தற்போது ஐ.தே.க வில் அங்கம் வகிக்கும் பொத்துவில் எம்.பி)

8. திரு,பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்)

9.திரு.பேரம்பலம் (இரகசியப் பொலீஸ் சப் இன்ஸ்பெக்டர்)

10. திரு.பாலசிங்கம் (இரகசியப் பொலீஸ் சார்ஜன்ட்)

11. திரு.சிறிவர்தன(இரகசியப் பொலீஸ் சாரதி)

1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடிவந்தனர். அவர்கள் வசம் எஸ்.எம்.ஜி, ஷொட்கன், கைத் துப்பாக்கி ஆகியவை இருந்தன. அவர்கள் புலிகளைத் தாக்கினார்கள். அப்புலிகள் தங்களுக்கு உடல் காயமோ உயிர்ச் சேதமோ எதுவுமின்றி அவர்களை அழித்தார்கள். காரும் அழிக்கப்பட்டது.

இந்த மரணங்களுக்கு வேறு எந்தக் குழுவோ அல்லது இயக்கமோ அல்லது தனி நபர்களோ உரிமை கொண்டாட முடியாது. இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளைத் தவிர இவற்றுக்கு உரிமை கொண்டாடும் வேறு எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கராஜா கொலைமுயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட தங்கதுரை குட்டிமணி சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா இலங்கைக்கு இடையேயான கடத்தல் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகளின் பெயரிலேய்ர்ர் உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராஜாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

துண்டுப் பிரசுரத்தை எழுதி முடித்ததும், சாந்தன் அதனைக் கொழும்பிற்குக் கொண்டு சென்று ஊர்மிளாவிடம் ஒப்படைத்து தட்டச்சுச் செய்கிறார். அங்கிருந்தே அதன் பிரதிகள் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அது அனுப்பப்பட சில தினங்களிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தோடும்,உமாமகேஸ்வரனின் கையொப்பத்துடனுமான அந்தத் துண்டுப்பிரசுரம் பத்திரிகைகளில் வெளியாகின்றது. தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் பெரும் பரபப்பை ஏற்படுத்திய இப் பிரசுரம், இலங்கை அரசையும் கூட மிகவும் பாதித்தது.

இப் பிரசுரம் வெளியான மறு தினத்திலிருந்து, இலங்கைத் தீவு தனது அனைத்து வாழ்வலங்களையும் ஒரு புறத்தே ஒதுக்கி வைத்துவிட்டு, புலிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் தம்மைப் பாதுகாக்க இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட பாதுகாவலர்கள் போலவே புலிகளை நேசிக்க ஆரம்பித்தனர். சிங்கள மக்கள் பெருந் தேசியவாதம் இன்னொரு படிநிலை வளாச்சியை அடைவது போல் தோற்றமளித்தது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அனா செனிவரத்ன கொக்காவிலில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று வவுனியா பொலீஸ் நிலையத்தில் பேசினார். 77 இன வன் முறையால் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருந்த தமிழ் அகதிகள் பொலீசாரால் தாக்கப்பட்டனர். புலிகள் தடைச் சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் பேசப்படுகிறது. தமிழர் விடுத்லை கூட்டணி உறுப்பினர்கள் தாக்கப்படுகிறார்கள்.

பிரபாகரன் கனவுகண்ட இராணுவ வெற்றிக்கும்,ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவத்திற்கும் மக்கள் ஆதரவைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பிரபாகரன் ஹிட்லரின் நாசிக் கொள்கையாலோ, சுபாஸ் சந்திரபோசின் எதிர்ப்பு அரசியலாலோ ஆட்கொள்ளப்படவில்லை. அவை பற்றியெல்லாம் அவருக்கு கரிசனை இருந்தது கிடையாது. அவர்கள் கட்டமைத்திருந்த இராணும் குறித்தும் அதன் ஒழுங்கு முறைகள் குறித்துமே அவரின் முழுக் கவனமும் ஒருங்குபடுத்தப்பட்டிருந்தது. அன்று மாவோசேதுங்கின் இராணுவப்படைப்புகளை இவர் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவராலும் பிரபாகரன் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்று பிற்காலங்களில் நான் எண்ணுவதுண்டு.

இன்னும் வரும்..

  கட்டுரையைத் தொடர்ந்து விவாதம் நடத்துவோர் கட்டுரையைச் செழுமைப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைக்குமாறு வேண்டப்படுகின்றனர். தவிர், சம்பவங்களும் அது குறித்த அரசியலும் தொடர்பான வினாக்களுக்கு தனது இறுதிப் பதிவில் ஐயர் பதிலளிப்பார்.

பாகம் பத்தை  வாசிக்க..

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

112 thoughts on “கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)”

  1. இல்லை. அவர் கொல்லப்பட்டு விட்டார் அல்லது இறந்து விட்டார். புளட்டால் கொல்லப்பட்டதாக புலிகளும்(பிரபா) ஜோன்டிஸ் நோயினால் இறந்ததாக புளட்டும் கூறுகிறது. உண்மை 12 இல் தெரிய வரலாம்.

 1. ஆயுதம் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள் (தோட்டா, துப்பாக்கி)

 2. PLOTE released stamps in memory of its six senior members including Sivakumar and Urmila, in 83. These stamps were sold in all schools in Thayagam along with the book titled “Vangam Thantha Paadam”

  Thanks

  1. அஞ்! உர்மிளா எப்படி இறந்தார் எனச் சொல்லமுடியுமா?நன்றி.

   1. வணக்கம் Soorya
    புலத்தில் இருந்தவர்களால் தளத்தில் நின்றவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலை மட்டும் இங்கு தருகிறேன். உமா வெளிநாடு ஒன்றுக்கு ( மொரிசியஸ் என்று நினைக்கிறேன்) சென்றிருந்த சமயம் ஊர்மிளா புலிகள் இயக்கத்தால் காட்டில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்டு அவரது உடல் அங்கேயே எரிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    பிரபாகரன் திருமணம் செய்த பொழுது ஊர்மிளா – உமா சம்பந்தப்பட்ட விடயம் மிக முக்கிய விமர்சனமாக புலிகள் இயக்கத்துக்கு எதிராக முன் வைக்கப் பட்டது. இத்துடன் புலிகள் இயக்க முகாம்களில் கையாளப்பட்ட பிரம்மச்சாரியம் என்ற தாந்திரீக மரபு அட்டிப்படையிலான கொள்கையும் கைவிடப்பட்டது.
    தாயகத்திற்கு விவசாயம் மற்றும் பொறியியல் பீடங்கள் கேட்டு உண்ணா விரதம் இருந்தவர்களில் மதிவதனியும் ஒருவர். உண்ணா விரதம் இருந்த ஏழு பேரும் புலிகள் இயக்கத்தால் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டார்கள்.
    நன்றி

     1. சூர்யாவிற்கு நச்சென்று ஒரு குட்டு வைத்தீர்கள் அன்ச்

     2. அது என்ன குட்டு மாமணி அதுவும் நச் என்று? கேள்வி பதில் சரியாகப் புரிந்துகொண்டுதானா கருத்து எழுதுகிரீநர்கள்? எஙக எதுக்கு எப்படி என்று எழுதத் தெரியாமல் எல்லாவற்றிற்கும் சும்மா ஏதோ எழுதி பண்டிதர் ஆக முடியாது. 

  2. “வங்கம் தந்த பாடம்” நிஜமென்று இன்று முள்ளிவாய்க்கால் மட்டும் நடந்து நந்திக்கடலில் சங்கமாகிய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன என்பது மட்டுமல்ல, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நீண்ட தூர தீர்க்கதரிசனத்தையும் கோடிட்டு காட்டியது. ஆனால் துர்ப்பாக்கியம் “வங்கம் தந்த பாடம்” எழுதிய “புதிய பாதை” சுந்தரத்தின் ஊரை சேர்ந்த காந்தியத்தில் அவருடன் ஒன்றாகிய சேவை செய்த தோழர், எல்லைகிராமங்களில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறாமல் தடுத்து, பாதிக்கப்பட்ட மலையக மக்களை குடியேற்றி காந்தியத்தில் டாக்டர். இராஜசுந்தரம், டேவிட் ஐயா அவர்களுடன் தனது ஆரம்ப நாட்களைக் கழித்த பொதுவுடமைவாதி, ஓர் இடதுசாரி சந்ததியார் இன்று நம்மிடம் இல்லை.

   டாக்டர். இராஜசுந்தரம்1983வெலிக்கடை படுகொலையில் கொல்லப்பட்டார்.
   இவரின் துணைவியார் திருமதி.டாக்டர். சாந்தி இராஜசுந்தரம் அவர்கள் வவுனியாவில் ‘சாந்திக் கிளினிக்’ என்னும் மருத்துவ மனையை நடத்தினார் இதன் மூலமாக ஏழை மக்களுக்கு (தமிழ் அகதிகளுக்கு) இலவசச் சிகிச்சை செய்தார், பின் இந்தியாவிற்கு அகதியாக இடம்பெயர்ந்த நிலையில் நான் அறிந்த மட்டும் சென்னையில் தமிழ்நாடு அரசாங்க வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டு தன்னாலான சேவையை ஈழத்தமிழருக்கு செவையாற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் வைத்தியசாலைக்கோ, அவரின் வீட்டிற்கோ எந்நேரம் சென்றாலும் வேண்டிய உதவிகளை மனம் கோணாமல் புன்முறுவலுடன் செய்வார் என்பதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

   இவர்களுடன் காந்தியத்தில் சேவைசெய்து பின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைத்து தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுருத்தல்களுக்கு மத்தியில் தொடர்ந்து வவுனியாவின் எல்லைக் கிராமங்களில் சேவை செய்துகொண்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்ட தோழர் பாரூக்கும் இன்று நம்முடன் இல்லை.

   டேவிட் ஐயா அவர்கள் இந்தியாவில் இருக்கிறார் என அறியப்படுகிறது.

   மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு முத்திரைகள் அச்சிட்டு கொடுத்த திரு. மறவன்புலவு சச்சிதானத்தன் அவர்கள் தற்போது சென்னையில் தொடர்ந்தும் “காந்தளகம்” புத்தக சாலையை நடாத்தி வருகிறதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராடத்தை ஆதரித்தும் வருகிறார். அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பாகாலத்தில் தமிழ்நாட்டில் பல தொடர்புகளை ஏற்ப்படுத்த இவர் காரணமாக இருந்தது மட்டுமல்லாமல் அமரர் உமாமகேஸ்வரனின் மொரிசிய நாட்டு பயணத்திற்கும் உந்துகோலாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தானே 1983 ற்கு முன்னமே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு முத்திரைகள் அச்சிட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் தான் போட்டும் கடிதங்களிலும் அவ் முத்திரைகளை இட்டே அனுப்புவார்.

   முதன் முதலில் தமிழ் புத்தகங்களை internet மூலம் வாங்குவதற்கான சேவையை தொடங்கியவர்கள் “காந்தளகம்” என்பது குறிப்பிடத்தக்கது.

   பிற்குறிப்பு:
   வந்த பல விமர்சனங்களுக்கான வில் பின் கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுபவர் தோழர் பாரூக்கை ஓத்த தோற்றத்தை உடையவராகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

   1. அலெக்ஸ் தெரியாமல் தான் கேட்கிறேன் 1,வங்கம் தந்த பாடம் யாரால் எப்போது எழுதப்பட்டது? 2,சுந்தரம் எப்போது கொல்லப்பட்டார்??

    3,கழகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது??? (என்ன திருவிளையாடல் தருமி மாதிரிவச்சுக்குங்க) தயவு செய்து என்னிடம் கேள்வி ஏதும் கேட்டுடாதேங்கோ எனக்கு தெரியாது

    1. 1. “வங்கம் தந்த பாடம்” 1984 என்று நினைக்கிறேன் தோழர் சந்ததியாரால் எழுதப்பட்டது.

     2. தோழர் சுந்தரம் அவர்கள் 1982-01-02 அன்று யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் வைத்து சுடப்பட்டு இறந்தார்.

     3. உமாமகேஸ்வரன் தலைமையில் 1980 ல் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

     “காந்தளகம்” முகவரி கேட்டு சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

     http://www.tamilnool.com இவ் இணைய முகவரி மூலம் நிங்கள் அவர்களுடன் தொடர்புகொள்வது மூலம் PayPal மூலம் பணம் செலுத்தி நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

     மேலும் மேலே குறிப்பிட்ட பிற்குறிப்பில்: “Chanel 4ல் வந்த பல விமர்சனங்களுக்கான video வில் பின் கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட ….” என்று வரும்

     1. வணக்கம் alex
      வங்கம் தந்த பாடம் 83 இல் வெளியடப்பட்டு தாயகத்தில் உள்ள எல்லா பாடசாலைகளிலும் விற்கப்பட்டது. அதன் உண்மையான நோக்கமே மக்களுக்கு அரசியல் அறிவை புகுத்துவதுதான். இது “முக்தி வாஹினி” இயக்கத்துக்கு இந்தியா செய்த துரோகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதுதான் தற்போது எங்களுக்கும் நடந்துள்ளது.

      டேவிட் ஐயா பற்றிய விபரங்களுக்கு நன்றி.

      தோழர் சுந்தரம் சித்திரா அச்சகத்தில் வைத்து கொல்லப்பட்டதன் நோக்கமே காந்தீயம் என்ற இயக்கத்தை அளிப்பதுதான்.

      நன்றி

 3. சாத்தியமான நேர்மையோடு எழுதிவருகிறீர்கள் ஐயரே. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தொடர்ந்தும் இதே நேர்மையை எதிர்பார்க்கிறோம். உங்களுடைய இத்தொடர் பல வாசல்களைத் திறந்துவிட்டுள்ளது. எழுத்து மனிதர்களுக்கு நல்வாழ்வைத்ததருகிற ஒரு பயிற்சியும் கூட. எனவே இதனை எழுதுவதன் மூலம் உங்கள் ஆயுள் உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டதைவிட மேலும் ஒரு பத்தாண்டுகளுக்கு அதிகரிக்கப்போகிறது.

  -நட்சத்திரன் செவ்விந்தியன்.

 4. தோழமையுடன் ஐயர்,
  ஈழத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது உங்கள் எழுத்துக்களில் இருந்தே ஆரம்பிக்கலாம். நேர்மையான இடதுசாரிக் கண்ணோட்டம் என்பது இப்படித்தான் இருக்க முடியும். ஒவ்வொரு சம்பவம் குறித்தும் உங்கள் ஆழமான பார்வை எதிர்காலத்தின் கதவுகளைத் தட்டுகின்றன. வாழ்த்துக்கள்.

  1. மாலன்,
   இடதுசாரிக் கண்ணோட்டம் எண்று எதைக் கருதுகிறீர்களென்று விளக்க முடியுமா?

   1. இலங்கைத் தமிழர்களில் யாருமே இடதுசாரிகள் கிடையாது.சரியாக ஆராய வேண்டும்(நம்பி ஏமாறுகிறவர்கள்) என்று கேட்டுக் கொள்கிறேன்.அதற்கான புறக் காரணிகள் குறைவு.”கீ போர்ட் மார்க்ஸிஸ்டுகள்” என்று கூறலாம்”!.நீங்கள் எல்லாவற்றையும் விட்டு,விட்டு(காந்தி,நேதாஜி,கடல்புறா சாண்டில்யன்,சேகுவேரா,வரலறு என்னை விடுதலை செய்யும் ஃபிடல் காஸ்ரோ….) தற்போது “சீனா பொருளாதார ரீதியில்” முன்னேறுவதால்,”மாவோயிஸ்டுகளை” பிடித்துக் கொண்டு திரிகிறீர்கள்!.அதற்கு தகுந்த மாதிரி “ஐயரும்” சந்தர்ப்பவாதியாக கதாகாலட்சேபம் நடத்துகிறார்!.இது “பெட்டி பூர்ஷ்வா” பச்சோந்தித் தனமே!.இந்த குண்டுசட்டி சிந்தனைக்கு,பிரேமதாஸா காலத்தில் சிங்கள? அரசாங்கத்துடன் சேர்ந்ததைத் தவிர வேறு உதாரண்ம் சொல்லமுடியாது.இதில் வருமானம் இருக்கிறவரை,உங்கள் காட்டில் மழைதான்!.

    1.   ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் பிணங்களின் மேலிருந்துதான் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஜேம்ஸ் உங்கள் ஈகோவிற்கு தீனிபோட  ஈழப்பிணந்தானா கிடைத்தது?
     கழுகு போல ?
     சும்மா இலக்கில்லாமல் கொத்திக்கொண்டே இருக்கிறீர்கள்.
     அக்கறையில்லை  சும்மா வாதம் புரிகிறீர்கள் என்பது ஊட்டமில்லாத பின்னூட்டத்திலிருந்து  வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

   2. என்ன கணக்கெடுப்புநடத்திவிட்டுக் கதைக்கிறீர்களா, அல்லது தமிழ்த் தலைமைகள் பானியில் கணக்கு விடுகிறீர்களா?
    சீனாவை ஏந்த மாஒவாதியும் சோஸலிச நாடாகக் கருதவில்லை என்று கூடத் தெரியாமல் என்ன அரசியல் எழுதுகிறீர்கள்?

    ஐயர் சொல்லுவதில் ஒருவர் விளக்கங்களுடன் வேறுபடலாம். தகவல்களுடனும் வேறுபடலாம். பொய்கள் இருந்தால் தைரியமாகச் சுட்டிக் காட்டுவது தானே.

    வருமானக் கதை கதைத்தால் முட்டாளகப் போவது நீங்கள் தான். தமிழீழத்தின் பேராலும் போராட்டத்தின் பேராலும் செய்யாத வசூலா?

    1. நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் கீழே யமுனா ராஜேந்திரனிடம் பதில் இருக்கிறது! “புரட்சிகர இயக்கங்களின் சிக்கல்கள் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களும் அதனது ஆதரவாளர்களிடமிருந்து வந்திருக்கின்றனவேயொழிய, அதனது எதிரிகளிடம் இருந்து இல்லை”. நீங்கள் “பிரஞ்ஞையில்லாமல்” ஒரு இலங்கைத் தமிழராகத்தான்?? நடந்துக் கொள்கிறீர்களே தவிர,மார்க்ஸிய,மாவோ,வாதியாக அல்ல!.அதாவது,”புலி??! எதிர்ப்பு(அரசாங்க ஆதரவு),புலி ஆதரவு(அரசாங்க எதிர்ப்பு)” ஆகிய வட்டங்களை விட்டு யாருமே இன்னும் வெளிவரவில்லை!.இந்திய கருத்தியலையும்,இந்த குண்டுசட்டிக்குள் முடக்கி விகிறீர்கள்.வருமானம்,கடின உழைப்பு பற்றி ஆற்றாமைப் படுவது,தாழ்வு மனப்பான்மை அல்ல “இந்திய கன்டக்ஸ்டில்” இதை ஒரு “சமூக பிரச்சனை கருத்தாக” முன் வைக்க முனைய வேண்டும்.உதாரணம்,”அமெரிக்காவின் அன் லாபுல் டிரேட் பிராக்டிக்ஸ் போல??”.இதை இலங்கைத் தமிழருடன் குழப்ப வேண்டாம்.இருக்கவே இருக்கிறது “மலையாளிகள் மாடல்”!.இது தீவிரமான விஷயம் அல்ல,ஒரு சமூக அணுகு முறையே.பலர் சங்கோஜப் படுவார்கள்,நான் துணிந்து பூனைக்கு மணி கட்டுகிறேன்!.

     1. திருத்தம்
      ”புலி??! எதிர்ப்பு(அரசாங்க ஆதரவு),புலி ஆதரவு(அரசாங்க எதிர்ப்பு)” ஆகிய வட்டங்களை விட்டு யாருமே இன்னும் வெளிவரவில்லை!.இந்திய கருத்தியலையும்,இந்த குண்டுசட்டிக்குள் முடக்கி விகிறீர்கள்.”

      ஜேம்ஸ்
      இனியொரு இணையத்தளமே உங்கள் கூற்றின் முற் பகுதியை மறுதலிக்கிறது.
      இந்தியக் கருத்தியல் என்று பொதுவான ஒன்று உண்டா?

      உங்கள் இடதுசாரி விரோதக் குண்டுச் சட்டிக்குள் தான் நீங்கள் எதையெதையோ எல்லாம் ஓட்டப் பார்க்கிறீர்கள்.

    2. ”புலி??! எதிர்ப்பு(அரசாங்க ஆதரவு),புலி ஆதரவு(அரசாங்க எதிர்ப்பு)” ஆகிய வட்டங்களை விட்டு யாருமே இன்னும் வெளிவரவில்லை!.இந்திய கருத்தியலையும்,இந்த குண்டுசட்டிக்குள் முடக்கி விகிறீர்கள்.

     1. /தோழமையுடன் ஐயர்,
      ஈழத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது உங்கள் எழுத்துக்களில் இருந்தே ஆரம்பிக்கலாம். நேர்மையான இடதுசாரிக் கண்ணோட்டம் என்பது இப்படித்தான் இருக்க முடியும். ஒவ்வொரு சம்பவம் குறித்தும் உங்கள் ஆழமான பார்வை எதிர்காலத்தின் கதவுகளைத் தட்டுகின்றன. வாழ்த்துக்கள்/

      மாலன்,
      எப்போது தொடக்கம் உமக்கு ஈழத்திலே கரிசனம்?

 5. “கடந்த அரை நூற்றாண்டு காலம் உருவாக்கிய சிந்தனைப் போக்கு ஈழத்தில் மட்டுமல்ல அதிகாரமும் அடக்குமுறையும் கோலோச்சுகின்ற எந்த நாட்டிலும் மக்களைச் சாரா ஆயுத அமைப்புக்களே ஆதிக்கம் செலுத்தின. இராணுவ வெற்றிகளின் இறுதியில் இவ்வமைப்புகள் எல்லாம் தோற்றுப் போய் சரணடைந்திருக்கின்றன. சோமாலியாவில் இந்தோனேசியாவில் காஷ்மீரில் பங்களாதேஷில் இலத்தினமரிக்க நாடுகளில் கிழக்காபிரிக்காவில் எல்லாம் இது ஒரு சாபக்கேடு போல மக்களை அழித்துப் போராட்டங்களையும் அழித்துக் காட்டிக்கொடுத்திருக்கிறது”

  அன்புள்ள ஐயர்-

  இது மிக மிகப் பொதுமைப்படுத்தப்பட்ட, எளிமைப்படுத்தப்பட்ட, வரலாற்றின் பல்வேறு சிக்கலான நிகழ்வுகளை, ஒரே பத்தியில் துடைத்து அழித்துவிட்டுப் போய்விடும் அவதானம். குறிப்பாகப் பேசுவதானால், அரை நூற்றாண்டு இலத்தினமெரிக்காவுக்கு இதைப் பொறுத்துவது முற்றிலும் அபத்தமாகமாகவே இருக்கும் என்பது எனது எண்ணம். ஓரு குறிப்பிட்ட அனுபவத்தை (உங்களது எல்லையில் ஈழம்) உலகின் முழு விடுதலைப் போராட்ட நடைமுறைகளுக்கும் பொதுமைப்படுத்துவதிலுள்ள சிக்கல் இது என நான் நினைக்கிறேன். விமர்சன மார்க்சியர்கள் வேறு. மார்க்சிய எதிரிகள் வேறு. இது போன்றே விடுதலைப் போராட்ட நடைமுறை குறித்த விமர்சனம் வேறு. அதனை முற்றிலும் நிராகரிப்பது வேறு. ஓன்றை மட்டும் இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சோவியத் யூனியன் வீழ்ச்சி பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களும், புரட்சிகர இயக்கங்களின் சிக்கல்கள் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களும் அதனது ஆதரவாளர்களிடமிருந்து வந்திருக்கின்றனவேயொழிய, அதனது எதிரிகளிடம் இருந்து இல்லை.

  தங்களது கட்டுரைகள் மிகுந்த புறநிலையிலிருந்தும் அவதானத்திலும் எழுதப்படுகின்றன. எனினும் பொதுமைப்படுத்தல்கள் ஒப்புக்கொள்ள இயலாதவை என்பதனைப் பதிகிறேன். இத்தகைய வித்தியாசங்களையும் பொதுமைப்படுத்தல்களையும் தொடரின் இறுதியில் விவாதிக்க முடியும் என நினைக்கிறேன்.

  அன்புடன் யமுனா ராஜேந்திரன்

  1. அன்றைய அந்த இளைஞர்களின் உண்மையான கனவாக விடுதலை மட்டுமே இருந்துள்ளது என்பது ஐயரின்பதிவுகளில் இருந்து தெரிய வருகின்றது. ஆனால் பின்னர் படித்தவர்களால் ஏற்படுத்தப் பட்ட தலைமைத்துவத்துக்கான போட்டியே பிரபாகரனை தடம் மாறச் செய்திருக்கின்றது என நான் கருதுகின்றேன். ஆனாலும் தான் எண்ணியதை செயற்படுத்திய பிரபாகரன் தமிழர் வரலாற்றில் மறைக்கப்பட முடியாதவர்தான். பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும். இப்போது புலிகள் மீது விமர்சனங்கள் வைக்கப்படாமல் தமது எழுத்துப் பிழைப்புவாதத்திற்காக சேறு பூசுவதை மட்டுமே சில புத்திஜீவிகள் எழுத்தாளர்கள் என்பவர்கள் முயன்று கொண்டுள்ளனர். இவ் எழுத்தளார்கள் யாருமே நேர்மையானவர்கள் இல்லை. இவர்கள் சிங்களப் பேரினவாதிகளாலும் இந்தியப் பார்ப்பனியவாதிகளாலும் விலைக்கு வாங்கப்பட்டு தீனி பொடப்படுபவர்கள். புலிகள் பலமாக இருந்த காலங்களில் தம்மீதான விமர்சனங்களை ஆயுத பலத்தால் இல்லாதொழித்தார்கள் என்பதனை நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போது கையறு நிலையில் இருக்கும் எங்கள் உறவுகளுக்காகவேனும் ஆயுத பலத்தில் இலங்கைப்படைகளுடன் சம நிலையில் இருந்தவர்களுக்கு சேறு பூசுவதை பலர் நிறுத்தலாம். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன்னமும் புலிகள் மீதான பயம் போகவில்லை. ஒரு குறைந்த உரிமைகளையாவத தற்காலிகமாகப்பெறவாகிரலும் அதனைப் பயன்படுத்துவோம்.

   1. விமர்சனம் என்பது சேறு பூசுவது அல்ல. ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்காமலும், விமர்சித்தவர்களுக்கு துரோகி முத்திரை குத்தியதாலுமே இன்று இந்த நிலைமை. இது ஓர் “தீர்க்கதரிசனமற்ற சம நிலை”. இந்த நிலை வரும் என்று வருடங்களிற்கு முன்பே தெரியும்.

    1985 இல் தமிழீழ விடுதலைக் கழகத்தினரிடம் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் ஏனைய 4000 இயக்கங்களிளிடம் போராளிகளும் இருந்த நிலையில் இலங்கை இராணுவத்தில் 28 ,000 னரே இருந்தனர். இன்று….. பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த பிழையான பாதையினாலேயே இந்த நிலைமை. இன்று இலங்கை இராணுவத்தில் எத்தனை பேர்?

    அன்று 85 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த பிழையான பாதை போராட்டத்தை மழுங்கடிக்கப்போகிறது என்று சொன்னதற்கு ஆதாரம் உள்ளது.

    1. உண்மை காலங்கடந்தாலும் நிற்கும்.சரியாகவே பேசுகிறீர்கள் அலெக்ஸ்.

    2. ஓர் திருத்தம் “1985 இல் தமிழீழ விடுதலைக் கழகத்தினரிடம் 6000 பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் ஏனைய 4000 இயக்கங்களிளிடம் போராளிகளும் …….. என்று வரும்.

     ஆதாரம்:
     http://www.tamilarangam.net/document/plot/notices/UmaHeadline.pdf

     1. அன்புடன் அலெக்ஸ் இரவி மாற்று இயக்கங்களை அழிப்பதால் நமக்கு முள்ளி வாய்க்கால் நிலை வரும் என்ற “தீர்க்க தரிசனத்தை ” சொல்ல பட்டப்படிப்பு ஒன்றும் படித்து அறிய வேண்டியதில்லை .80 களில்(ஓரளவு பேச்சு சுதந்திரம் இருந்த காலத்தில்) சாதாரண தமிழ் பிரஜைகள் ஆசிரியர்கள் ,வர்த்தகர்கள் ,விவசாயிகள், ஆண் பெண் என இருபாலரும் வாசிகசாலை ,வீட்டு முற்றம்,கோவில்,ஆலமர நிழல்,தவறணை போன்ற கூடி பேசும் பொது இடங்க்களில் பேசிய அரசியல் “அவங்கள் ஒரு பக்கம் நிண்டு அடிச்சால் இவங்கள் மற்றப்பக்கம் நிண்டு அடிக்கட்டும் எல்லாரும் நிண்டு அடிச்சாத்தானே அந்தப்பெரிய ஆமியை விழுத்தி தமிழிழம் எடுக்கலாம்.எல்லாரையும் பகைசிட்டு என்ன செய்யப்போறாங்கள் குழந்தைப்பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” .
      “அறத்துக்கு படிச்ச அவர்” (வங்கம் தந்த பாடம்) ஆயுத மீட்புக்காக அம்மையாரின் காலில் வீழ்ந்து நொந்தார்.”கெடுகுடி சொற்கேளாது” என்ற தத்துவம் படித்த இவர் எம். ஜி.ஆர். காலில் விழுந்து அத்திவாரத்தை பலமாக்கினார். கொஞ்சகாலம் தலை கால் தெரியாமல் ஆடினார். எல்லாருடைய தலையிலும் போட்டார். கடைசியிலை தன்ரை தலையிலும் வாங்கினார்.மற்றபடி எலாரும ஒரே குட்டையில் ஊரினவர்கள் ஆச்சே

    3. ஆமாம் அலெக்ஸ்! 80 களில் கழகம் பொங்கலுக்கு தமிழ் ஈழம் பிரகடனப்படுத்துகிறோம் என்று வருடா வருடம் தவணை சொன்னதற்கும் ஆதாரம் உள்ளது..

    4. எண்ணிக்கைதான்  பலம்? பெரும்பான்மை  ராணுவம் பெரும்ப்பான்மையாகவே இருந்திறுக்கும் எப்போதும்.
     ஆரம்பத்தில் புளொட்டின் திட்டப்படி இறுதிப்பாய்ச்சல்நடத்தியிருந்தாலிலங்கையரசு  ஏலத்துக்கு விட்டிறுக்கும்…  யார் இந்த போரை  நடாத்துவீர்கள்?  இந்தியா? பாகிஸ்தான்? அமெரிக்கா?  சைனா?    இந்தியா  ஏலத்தில் வென்று  தான் கொடுத்த  கறள் பிடித்த ஆய்தத்துகு போடும் எண்ணையை தடுக்க  6000 பேரும் மாவட்ட சபைதான் ஈழம் என்று சொல்லி இந்தியா காட்டுவதே ஈழம் என்றிருப்பார்கள்.
     கொல்லைப்புறத்து சண்டைபோல ஒருநாளில்  முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும். கடிவாளமிடப்பட்ட போராட்டம்..
     உலகுக்கு தெரியவராமலெயே அடங்கிப்போயிருக்கும்.
     புலம்மெயர்கூட்டம்  என்று ஒன்று இருந்திருக்காது

     1. இல்லை.நீங்கள் கூறுவதுபோல் இறுதிப்பாய்சல் எவ்வளவு தூரம் சாத்தியமாகியுருக்கும் என்று கணிப்பது கடினம். உலக இராணுவ தலையீடுகள்,கண்காணிக்கும் திறன் என்பன இன்றய இராணுவ வெற்றிகளை தீர்மானிக்கின்றது. அவை எண்பதுகளில் இலங்கை இராணுவத்திடம் மிகவும் வறியநிலைதான். அதனால் திட்டமிட்ட குறியகால பாரிய தாக்குதல் தொடராகநடத்தப்பட்டிருக்குமானால் இலங்கை இராணுவம் தோற்கடிக்கபடிருக்கலாம். இன்றையநிலையில் வியட் கொங் கெரில்லாக்கள் அமெரிக்க, பிரன்சு துருப்புகளுடன் போரிட்டிருந்தால்நிலைமை எப்படியிருந்திருக்கும்.

     2. மாமணி! மாமணீ!! மாமணி

      ஒரே பாச்சலில் கழகம் செய்த தாக்குதலுக்கு எடுத்துக்காட்டு….

      1988 Maldives Coup
      From Wikipedia, the free encyclopedia
      Jump to: navigation, search
      Operation Cactus

      An Indian Air Force Ilyushin Il-76 transport aircraft that was used to paradrop Indian troops in Male.
      Date November 3, 1988
      Location Maldives
      Result Decisive Indian/Maldivian victory
      Government rule restored in Maldives

      Belligerents
      India
      Maldives PLOTE
      Commanders
      Prime Minister Rajiv Gandhi
      Brig. FFC Bulsara
      President Maumoon Abdul Gayoom Abdullah Luthufi #
      Uma Maheswaran
      Strength
      1,600 paratroopers 80 gunmen
      Casualties and losses
      1 Wounded 19 Killed

      The 1988 Maldives Coup, whose rescue efforts were code-named Operation Cactus by the Indian armed forces, was the attempt by a group of Maldivians led by Abdullah Luthufi and assisted by about 80 armed mercenaries of a Sri Lankan secessionist organisation, People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), to overthrow the government of the island republic of Maldives. The coup was foiled after Indian forces were invited by the Maldivian government to intervene.

      Contents [hide]
      1 Prelude
      2 The Operation
      3 Aftermath
      4 See also
      5 References
      6 External links

      [edit] Prelude
      Whereas the 1980 and 1983 coup attempts against Gayoom’s presidency were not considered serious, the third coup attempt in November 1988 alarmed the international community. About 80 armed PLOTE mercenaries [1] landed on Malé before dawn aboard speedboats from a freighter. Disguised as visitors, a similar number had already infiltrated Malé earlier. Although the mercenaries quickly gained control of the capital they failed to capture President Gayoom, who fled from house to house and asked for military intervention from India, the United States, and the United Kingdom. Indian prime minister Rajiv Gandhi immediately dispatched 1,600 troops by air to restore order in Malé.

      [edit] The Operation
      Less than 12 hours after the request from President Gayoom, Indian paratroopers arrived on Hulhule, causing some of the mercenaries to flee toward Sri Lanka in a hijacked freighter. The operation started on the night of November 3, 1988, as the Indian Air Force airlifted a parachute battalion group from Agra and flew them non-stop over 2,000 kilometres (1,240 mi) to Maldives. The Indian paratroopers landed at Hulhule and secured the airfield and restored the Government rule at Malé within hours. Those unable to reach the ship in time were quickly rounded up. Nineteen people reportedly died in the fighting, and several taken hostage also died. Three days later an Indian Navy frigate captured the mercenaries on the hijacked freighter near the Sri Lankan coast. Swift operation by the military and precise intelligence information quelled the insurgency in the island nation.

      [edit] Aftermath
      In July 1989, a number of the mercenaries were returned to Maldives to stand trial. Gayoom commuted the death sentences passed against them to life imprisonment under Indian pressure[2].

      The 1988 coup had been headed by a once prominent Maldivian businessperson named Abdullah Luthufi, who was operating a farm on Sri Lanka. Ex-president Ibrahim Nasir denied any involvement in the coup. In fact, in July 1990, President Gayoom officially pardoned Nasir in absentia in recognition of his role in obtaining Maldives’ independence.

      The operation also strengthened Indo-Maldivian relations as a result of the successful restoration of the Gayoom government.

      [edit] See also
      Parachute Regiment (India)
      [edit] References
      1.^ Institute of Peace and Conflict Studies
      2.^ Madagascar Security Concerns – Flags, Maps

 6. வணக்கம் திரு ஐயர் அவர்களே எனக்கு தந்தை செல்வா அவர்களின் மரணம் தொடர்பான பூரண விபரம் தேவைப்படுகின்றது அதனை தயவுசெய்து தெரியப்படுத்தவும். நன்றி – அருகன்.

 7. ஐயா,
  செட்டியை மட்டும் காட்டிக்கொடுத்தவர் என்று ஏன் சந்தேகப்பட்டீர்கள் அது தவறு என்றுநான் கருதுகின்றேன்.கையாலாகதவர்கள்தான் பெரும்பாலும் காட்டிக்கொடுப்புகளில் ஈடுபடுகின்றவர்கள்.”பஸ்தியாம்பிள்ளைக் கொலையில் செல்லக்கிளி அதிரடி நடவடிக்கைகள் எமக்கு உண்மையில் பிரமிப்பாகவே இருந்தது. செட்டி கூட இப்படித்தான். இப்படியான சந்தர்ப்பங்களில் துணிவாகச் செயற்படும் திறமை படைத்தவர். அவரது வாழ்க்கை முழுவதும் குற்றச் செயல்களோடு தொடர்புடையதாக இருந்ததால் தயக்கமின்றி முன்செல்லக் கூடியவர்” என செட்டியின் துணிச்சலை குறிப்பிட்டீர்கள் .செட்டிக்கு உங்களுடன் பகை இருந்திருன்தால் தீர்த்துக்கட்டத்தான் எண்ணியிருப்பார்.எழுதியெல்லாம் மினைக்கட்டிருக்கமாட்டார். எனக்கு ஏதோ கணேஸ் வாத்தியில் தான் சந்தேகம் .ஏனெனில் அவருக்கு பற்க்குணதிற்க்கு,மைக்கலுக்கு நடந்தது தெரியும் . தலைவரின் (பிரபாவின்) குணமும் தெரியும் தனக்கு நடக்கப்போவதும் தெரியும்.அதனால் தன்னுயிரைக்காக்க சமயோசிதமாகச் சிந்தித்து செட்டியின் பெயரில் கடிதமூலம் காட்டிக்கொடுத்திருக்கின்றார். கணேஸ் வாத்தி உங்களைக்காட்டிக் கொடுத்ததை உங்கள் கண்களால்தானே நேரில் பார்த்தீர்கள். அவரிற்க்கும் பண்ணையில்வைத்து பஸ்தியாம்பிள்ளை கோஸ்டியினரைக் கொன்றவர்களின் பெயர் விபரம் தெரியும் . கணேஸ் வாத்திக்கு மற்றைய பண்ணைகளின் விபரம் தெரியாததாலும் பின்னர் செட்டி கொல்லப்பட்டதைத் தெரிந்து கொண்டதாலும் மேலும் காட்டிக்கொடுப்புகளில் ஈடுபடவில்லை.?

 8. ஐயரே, விளம்பரம் விரும்பாத தேச பக்தி கொண்ட தலைவருக்கு வியாபாரிகள் மேளம் அடித்து விளம்பரப்படுத்தினர் அந்த மேளமே தலைவருக்கும்,தேசத்திற்கும் பறை (சாவு) மேளமாகிவிட்டது

 9. “மணியண்ணை” ஐ உசுப்பேத்திவிட்டு புலம் பெயர்ந்தோர் அடித்த கடைசி (பறை) மேளம். இனியொரு தணிக்கை பண்ணாது எனநம்புகிறேன்..http://www.youtube.com/watch?v=gcVYvdB-c9k

 10. நட்புடன் யமுனா ராஜேந்திரன்,
  விமர்சன மார்க்சியர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது மார்க்சியத்தை விமர்சன ரீதியாக அணுகுபவர்கள் என்பதையே என்று நான் புரிந்து கொள்கிறேன், அது தவறில்லைத் தானே?
  பின்னதாக எனது புரிதல்களின் அடிப்படையில் “மார்க்சியம்” என்பது பல சிக்கலான அடுக்குகளைக்கொண்டுள்ளது.
  1.
  வரலாற்றை, புறச் சூழலை, பொருள் முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்ளல் என்பது சமூகம் குறித்த பொருள்முதல் வாதப் பார்வை. அவ்வாறு புரிந்துகொள்ளப்பட்ட சமூகத்தின் இயக்கத்தை, அதன் மாற்றத்தைப் பகுத்தாராய்தல் இயங்கியல் எனப்படுகிறது. இந்த இரண்டையும் ஒருங்கு சேர்த்த ஆய்வு முறைமையே மார்க்சியப் பகுப்பாய்வு எனப்படுகிறது.
  இதைத் தான் விஞ்ஞானபூர்வ முறைமை என்கிறோம். இது பைதகரசின் தேற்றம் பொன்றதோ, வைச்ரைசின் தேற்றம் போன்றதோ, நியூட்டனின் விதிகள் போன்றவையோ தான். எப்படி இந்த விஞ்ஞான அடிப்படிகளை விமர்சித்தல் சார்பு நிலையான உண்மைக்குப் புறம்பானதோ அவ்வாறே மார்க்சிய அடிப்படைகளை விமர்சித்தலும் என்பது எனது கருத்து.
  2
  இந்த மார்க்சிய அடிப்படைகளை முன்வைத்தே மூலதனம் குறித்த மார்க்சின் பார்வையும், சமூகம் குறித்த பல்வேறுபட்ட பகுப்பாய்வுகளும் உருவாகின. இவை வேண்டுமானால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படலாம். முன்னையது தர்கீக முறைமை,பின்னயது அதன் அடிப்படையில் எழுந்த கருத்தாக்கம். எனினும் முன்னையது செழுமைப்படுத்தப்படலாம். குறிப்பாக முரண்பாடுகள் குறித்த மாவோவின் தத்துவம் இதன் விஞ்ஞானபூர்வ விரிவாக்கமாகக் கொள்ளப்படலாம்.

  இன்றைய சமூகப் புறனிலை யதார்த்தம் குறித்த மார்க்சியப் பகுப்பாய்வு அவசியம். மூலதனத்தின் இன்றை சமூகனிலை அறியப்பட வேண்டும். மூலதனத்தின் இன்றைய இயக்கம் உருவாக்கியுள்ள உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் குறித்த அறிதல் மார்க்சியப் பகுப்பாய்வின் அடிப்படையில் அவசியமாகிறது. இவைகளெல்லாம் கிறுக்கப்படாத பேப்பர்கள் போலத்தான் இன்றும் காட்சியளிக்கின்றன என்பது தான் எனது கருத்து. பின் காலனியச் சூழலை வெறுமனே நவகாலனித்துவம் அல்லது அரைக்காலனியம் என்று இலகுபடுத்துவது வரட்டுவாதம். இவை அர்ப்பணம் மிக்க ஆய்வுகளூடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
  3.
  மூன்றாவதாக மார்க்சிய நடைமுறை குறித்த விடயம்! சோவியத்திலும் சீனாவிலும் ஏற்பட்ட தோல்விகள் குறித்த பிரச்சனைகள். புரட்சியின் புதிய வளர்ச்சி நிலை குறித்த இயங்கியல் பார்வையில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. அது குறித்த ஆய்வும் முடிபுகளும் தேவை என்பதே எனது தாழ்மையான கருத்து.

  இந்த மூன்று வேறுபட்ட விடயங்களும் மிகக் குறிப்பானவை. ஆக, மார்க்சிய விமர்சனம், விமர்சன மார்க்சியம் என்பவை குறித்த மிகத் தெளிவான வரைமுறைகள் தேவை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்.
  இறுதியாக ஐயரின் வரலாற்றுப் பதிவு குறித்த விடயம்.
  தான் சந்தித்த ஒவ்வொரு சம்பவங்களையும் ஐயர் பொருள்முதல் வாதப் பார்வையுடன் எதிர் கொள்கிறார் என்பதே எனது கருத்து. உ-ம் பிரபாகரன் என்ப்வரது பாத்திரம் அவரின் சிந்தனை பாதித்த சமூக இயக்கங்கள் யாவை என்று பேசாமல், பிரபாகரனின் சிந்தனையை உருவாக்கிய சமூகக்காரணிகள் (பொருள்) குறித்து ஐயர் பேசவிழைதல் என்பது பொருள்முதல்வாதப் பார்வையே. அதனால் தான் தனிமனித அவதூறுகளைக் கடந்து அவரால் எழுத முடிகிறது. கார்ல்மார்க்சின் எழுத்துக்களில் தனிமனித அவதூறுகளைக் காணமுடியமைக்கும் இதே பார்வை தான் காரணம்.

  இறுதியாக ஐயர் விடுதலை போராட்டத்தை ஒரு போதும் நிராகரிக்கவில்லை அதன் தூய இராணுவ வாதத்தையே தெளிவாக விமர்சிக்கிறார். அவர் குறிப்பிட்ட நாடுகளிலெல்லாம் கடந்த ஐம்பது ஆண்டுகள் தூய இராணுவக் கண்ணோட்டமே கோலோச்சியிருக்கிறது என்பதில் என்ன தவறு?

  எது எவ்வாறாயினும், மார்க்சியம் குறித்தும், விடுதலைப் போராட்டங்கள் குறித்தும் நீண்ட விவாதம் ஒன்று இன்றைய சூழலில் தேவையானதே. அந்த விவாதத்தை நீங்கள் ஏன் தொடரக் கூடாது. நானும், அதில் முழுமையாகப் பங்களிக்கத் தயார். யார் கருத்துக் கூறுகிறார்கள் என்பதற்கு அப்பால் என்ன கருத்தைக் கூறுகிறார் என்ற அடிப்படை அறத்திலிருந்து இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைத் தோடர்வது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இனியொரு இதற்கான தனியான ஒரு விவாத அரங்கை அமைத்துக் கொடுக்குமானால் அது இன்னும் சிறப்பாக அமையும். – நன்றி

 11. “அவர் குறிப்பிட்ட நாடுகளிலெல்லாம் கடந்த ஐம்பது ஆண்டுகள் தூய இராணுவக் கண்ணோட்டமே கோலோச்சியிருக்கிறது என்பதில் என்ன தவறு?”

  அன்புள்ள கோசலன். ஐயர் ஈழம் குறித்து தனிநபர் அவதூற்றுக்கு அப்பால் பகுப்பாய்வு செய்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அவர் குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் தூய ராணுவக் கண்ணோட்டம் தான் செயல்பட்டது என்பது சரியானதில்லை. கியூப விடுதலையிலோ – ஏன் பொலிவியாவில் சேவினது முயற்சிகளோ கூட சுத்த ராணுவக் கண்ணோட்டத்தில் அமைந்தவை அல்ல. தத்துவக் கல்வியையும் அரசியல் விவாதங்களையும் அவர்கள் தொடரந்து மேற்கொண்டார்கள். பொலிவியாவில் சே ஆயுதங்களை மட்டும் நம்பியவராக இல்லை. இது பற்றி நிறைய எழுதலாம். நீங்கள் குறிப்பிட்டபடி நான் சில கட்டுரைகளை இது குறித்து உயிரோசை தளத்தில் எழுதினேன். எனது சில புத்தக வேலைகளால் அதனைத் தொடர முடியவில்லை. இப்பிரச்சினை குறிதத கட்டுரைகளை இனியொருவில் எழுதவே உத்தேசித்திருக்கிறேன். விரைவில் சாத்தியப்படும் என்நே நினைக்கிறேன். மார்க்சிய விமர்சனம் என்பது அடிப்படையிலான மாரக்சியப் புகுப்பாய்வை ஏற்பது. விமர்சன மாரக்சியம் என்பது இதுவரைத்திய மார்க்சிய நடைமுறை என்று சொல்லப்பட்டதன்பாலான விமர்சனபூர்வமான அணுகுமுறை என நான் அர்த்தப்படுத்துகிறேன்.அன்புடன் யமுனா ராஜேந்திரன்

  1. A new beginning : The emerging democratic paradigm in Latin America
   http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm

   How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..

   ..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I’ll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”

   also see : http://nellikkani.blogspot.com/2010/02/blog-post.html கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

   1. ஐயா இந்த “The Hindu” எல்லாம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். அவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். எம்மவர்கள் தங்களுக்கிடையில் முரண்படுவதை பார்த்து எங்களுக்கு அறிவுரை கூற ஜெயமோகன், ஞானி என்று தொடங்கி தற்பொழுது சுகி சிவம் என்ற அதி மேதாவியும் இணைந்து கொண்டது கொடுமையிலும் கொடுமை. தமிழ்நாடு எழுத்தாளர்களுக்கு எமக்குள் உள்ள பிளவு அல்லது பிரிவு நல்லதொரு வியாபாரப்பொருள்.
    சாறு நிவேதிதா மொழியில் உங்களிடம் ஒரு கேள்வி. வினவு தம்பி என்ன சொல்கிறார்?
    உங்கள் நன்பர்களான “கேள்விக்குறி” “வால்பையன்” எல்லாம் எப்படி?
    உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து எங்களை எங்கள் பாட்டில் விடுங்கள்.
    நன்றி

    1. Anj,
     இந்து பத்திர்க்கை ஈழப்பிரச்சனையில் நடந்த கொண்ட விதம் சரியில்லை என்பதால், இந்துவில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளையும் reject செய்வது பைத்தியக்காரத்தனம். மார்க்சிசம் மற்றும் மாவோயிசம் பற்றி ஒரு முன்னாள் போராளியின் பேட்டி அது. மிக முக்கியமான பார்வை. அதை பற்றி விவாதிக்காமல், இந்து பத்திரிக்கையை பற்றி பேசுவது பகுத்தறிவல்லவே.
     வினவு என்ன சொல்கிறார் என்று அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். பொருளாதாரம் பற்றிய எமது பதிவுகளுக்கு மறுப்பு இருந்தால் அங்கு உங்கள் கருத்துகளை பதிவிடலாம். விவாதிப்போம்.
     ///உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து எங்களை எங்கள் பாட்டில் விடுங்கள்.///
     இதில் நான் என்ன இடையூரு செய்தேன் ? உங்களுக்கு ஒரு தகவல் : 80களில் எங்கள் ஊர் அருகே ஒரு பயிற்சி முகாம் இருந்தது. எம குடும்பத்தவர் பல உதவிகள் செய்துள்ளோம். எமது ஊரில் அமிர்தலிங்கம், சிறீ சபாரத்தனம் பேசிய மீட்டிங்களுக்கு சென்றுள்ளேன். புதுக்கோட்டை அருகே அன்று பிளாட் குழு நடத்திய ஒரு பயிற்சி முகாமிற்க்கு சென்று, அங்கு முகுந்தனையை சந்தித்திருக்கிறோம். அன்று நான் பள்ளி மாணவன். ஈழவர்களின் துயரை போக்க எங்களுக்கும் நோக்கமுண்டு. So don’t generalize..

     1. இத்தனை வருடங்களின் பின்பும் இயக்கங்கள் பற்றிய தெளிவு இல்லாத உங்களுக்கு நீங்கள் சொல்வது பைத்தியக்காரத்தனம் என்று சொல்வேனா? அடைக்கலம் உதவி என்று இலங்கைத் தமிழன் உங்களிடம் வந்ததாலா இத்தனை வீராப்பு? எம்மை சும்மா விட்டீர்களா இன்றுமட்டும் போட்டுத் கிளறிக்கொண்டு இருக்கிறீர்கள்! மனித நேயம் உள்ள தமிழர்கள் தமிழ் நாட்டில் இன்னமும் இருக்கிறார்கள். ஆனால் தமிழரை முற்று முழுதாக அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் இந்து பத்திரிகையை அதில் வரும் வேறு நல்ல கட்டுரைகளுக்காக அதை பணம் கொடுத்து வளர்க வேண்டுமா? மலக்குழியில் வயற்றில் சமியாத எதுவோ முழுதாக கிடக்கிறேதே என்று அதற்குள் கைவைத்து எடுக்க வேண்டுமா?

     2. Soorya,
      இயக்கங்கள் பற்றி போதுமான தெளிவு உள்ளது. உங்களைப் போல புனை பெயர்களில், வெளிநாடுகளில் வசித்துக் கொண்டு, இணையத்தில் பேசுபவர்கள் இஸ்டம் போல, என்ன வேண்டுமானாலும் எழுதலாம். தமிழகத்தில் வசித்துக் கொண்டு, சொந்த பெயர், புகைபடத்துடன் எழுதும் எம்மை போன்றவர்கள் அப்படி வெளிப்படையாக எல்லா விசியங்களையும் எழுத முடியாது.

      கடந்த காலங்களில் புலிகளுக்கும், இதர குழுவினருக்கும் உதவி செய்ய பலரும் 1991இல் நடந்த ’துன்பயில் நாடகத்திற்க்கு’ பின் சந்திக்க நேர்ந்த துன்பங்கள் ஏராளம். போதுமப்பா போதும். உதவி செய்தவர்களுக்கு நன்றி காட்டாவிட்டாலும், இகழ்ச்சியாக பேசாமல் இருங்கள். உதவி செய்தது தவறு போலும்.

      மார்க்சியம் பற்றிய விவாதத்திற்கு சம்பந்தமாக ஒரு relevantஆன சுட்டியை அளித்தால் இப்படிதான் பேசுவதா ?
      புலிகள் அழிந்ததுதான் ஈழத்தவர்களுக்கு பெரிய நன்மை என்றே கருதுகிறேன். After much dis-illusionment over the decades. இன்னும் ஒரு பத்தாண்டுகளில் அங்கு நிலைமை மேம்படும். இப்போதிய பிரச்சனைகள் வறுமையும், வாழ வழிகளும் தான். இனி எறிகுண்டுகளுக்கும், ஆர்டிலரிகளுக்கும், குண்டு வீசும் விமானங்களுக்கும் அங்கு வேலை இல்லை என்பதே பெரும் நிம்மதி தருகிறது. Enough is enough.
      எதிர்காலத்தில் ரணில் போன்ற ஒரு moderate தலைவர் வரலாம். ராஜபக்சேக்கள் நிர்ந்தரமல்ல. Political rights, federal set up கூட முக்கியமாக படவில்லை. அடிப்படை civil rights and employment opportunities தான் அதி முக்கியமாக இன்று தெரிகிறது.
      வெறுப்பும், வன்முறையும், ஆயுத குழுக்களும், ஃபாசிசமும் வெகுவாக குறைந்து, அமைதியும், செழுமையும், ஒற்றுமையும் ஓங்கும் என்றே நம்புகிறேன். God bless.

     3. எங்களூக்காக ஒரு பேரறீவாளன் இன்னும் சிறயில் இருக்கிறான் இன்னும் எண்ணற்றோர்.இந்துவை விட நமக்கு நல்ல பத்திரிகைகள் கிடைக்கின்றன நல்ல நாட்டில் வாழ்கிறோம்.இந்துவை நினைத்து ஏன் நமது உறவுகள நாம் பகைக்க வேண்டும்.

     4. உங்களையோ அல்லது எங்களுக்காக இன்று வரை நின்றுகொண்டு இருக்கும் தமிழ்நாடு மக்களையோ இகழ்ச்சி செய்வது எனது நோக்கமல்ல. அந்த நோக்கத்தில் எதுவும் எழுதப்படவில்லை. அவர்களை எப்போதும் நாங்கள் மதிக்கிறோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். . The Hindu என்பது மட்டும் எங்களுக்கு வேண்டாம். அவர்கள் பிழைப்பு எப்படிபட்டது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் போற்றும் இதே Jose Mujica வைப்பற்றி பிற்காலத்தில் இதே பத்திரிகை என்ன எழுதும் என்பதும் எங்களுக்குத் தெரியும். அங்கிருந்து வரவேண்டியது வரவில்லை என்றால் அந்தர் பல்டிதான். பொறுத்திருந்து பாருங்கள். அவசரப்படவேண்டாம்.
      வினவு பற்றி கூறியது ஒரு நகைச்சுவை குறிப்பு மட்டுமே.
      எங்கள் மக்களின் இன்றைய தேவை உயிர் வாழ்தல். எமது வேதனையும், சுமையும் எங்களுக்கு மட்டும்தான் தெரியும். இந்த நேரத்தில் மார்க்சிசம் எல்லாம் தேவை இல்லை என்பதே எனது கருத்து அதற்காக மர்க்சிசமே வேண்டாம் என்பது அல்ல. Ranil ஒரு modarate தலைவர் அல்ல. புலிகள் அழிந்தார்களா இல்லையா என்பதற்கு காலம் பதில் சொல்லும். அவர்கள் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை எம் மக்களுக்கு மட்டுமே உண்டு.

      மீண்டும் அதே வேண்டுகோள் தற்போதைக்கு எங்களை எங்கள் பாட்டில் விடுங்கள்.
      தயவு செய்து கோபப்பட்டு வார்த்தைகளை அள்ளித் தெளிக்காதீர்கள்
      நன்றி

     5. தமிழ்நாட்டிலுள்ள உண்மையான போராட்ட சக்திகளை புலிகள் உட்பட யாரும் சரியாக அணுகவில்லை. அதை விடுத்து அதியமான் போன்ற அனுதாபிகளை ஏன் புண்படுத்துகிறீர்கள்.யாருடனோ உள்ள கோபத்தை அப்பாவிகள் மேல் காட்டாதீர். அந்தநாட்டின் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை விட 1.5 லட்சம் மக்கள் முகாங்களிலும் அதையொத்த எண்ணிக்கையான ஈழதமிழர் ஒரளவேனும் வசதியாக பராமரிக்கபடுகிறார்கள். அந்தநன்றி உணர்வு வேண்டும்.

     6. ///அவர்கள் போற்றும் இதே Jose Mujica வைப்பற்றி பிற்காலத்தில் இதே பத்திரிகை என்ன எழுதும் என்பதும் எங்களுக்குத் தெரியும். அங்கிருந்து வரவேண்டியது வரவில்லை என்றால் அந்தர் பல்டிதான். பொறுத்திருந்து பாருங்கள்.///

      அவரை போற்றவும் இல்லை. தூற்றவும் இல்லை. அவரின் பேட்டி அது. அவ்வளவுதான். மாவோயிசம், மார்கிசியம் மிக எதிர்மறையான விளைவுகளையே எப்போதும் ஏற்படுத்தும் என்பதை நிறுபிக்க ஒரு வாதம். அவ்வளவுதான்.

      இந்திய ’அமைதி’ படையை எதிர்க்க அன்று புலிகள் பிரமதாசாவின் உதவியை பெற்றனர். கூட்டு சேர்ந்தனர். அது ராஜ தந்திரம். ஆனால் ’தமிழின எதிரி’ யான இந்து பத்திரிக்கையில் இருந்து ஒரு கட்டுரையை எடுத்துக் காட்ட கூடாது. முரண்தொகை.

      சரி, இருக்கட்டும். ஒரு காலத்தில் பிரபாகரனின் படத்தை வீட்டில் மாட்டி, புலிகளை கண்மூடித்தனமான ஆதரித்தவன் தான் நான். பிறகு ‘தெளிந்து’ விட்டது. புலிகள் வென்று, தமிழீழம் அமைந்து, அதை இலங்கை அரசும், இந்தியாவும், உலக நாடுகளும் அங்கிரத்திருந்தால் : தமிழன் தமிழனுக்கு அடிமையாக இருந்திருப்பான். தமீழத்தில் அடிப்படை ஜனனாயகம், மாற்று கருத்துக்கள், எதிர் கட்சிகள் எதுவும் இருந்திருக்காது. It would have been a right wing dictatorship bordering fascism. And would have become progressively more corrupt overtime. Esp after Pirabakaran. LTTE had been running a huge, very huge international ‘business’ operations into all possible sectors like shipping, narcotics and arms smuggling, contraband smuggling, video piracy, extortion, money laundering and racketeering.(as you all know very well). All in the name of ‘freedom struggle’ ; the very nature of these illegal operations corrupts the system. And once Eelam is established ‘legally’ under LTTE leadership, this corruption would have become institutionalized and it would have been impossible to check these trends. Eelam would have deteriorated into a warlord like fascisim like many African states. We can witness this kind of corruption in Dougulas and Pillayan and Karuna.
      In my opinion, the current plight of Eelam tamils is much better than being crushed under a corrupt and fascist ‘Tamil’ dictatorship and certainly would improve over time.
      Among LTTE’s past sins, them most unforgeivable one is their last one : Holding thousands people at gun point as human shields to the bitter end. Stopping innocent people from trying to leave the battle zone. There are enough proof for this. Those Eelam Tamils who underwent all this would certainly not support a revival of LTTE in any form. That is my humble opinion.

  1. /07ம் திகதி ஏப்பிரல் மாதம் 1978 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பல குறிப்புகள் பதியப்பட்டிருக்கின்றன/ //சம்பவம் நிகழ்ந்து சரியாக நான்கு நாட்களுள் இரகசியப் பொலீசாரின் இறந்த உடல்களைப் பொலீசார் மீட்டதாக 12.04.1978 இல் அனைத்து பிரதான இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. //ஐயர். ///இப்போது எதிர்பார்புடனிருந்த தமிழ் மக்களுக்கு எம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள இது சரியான சந்தர்ப்பம் எனத் தீர்மானிக்கிறோம். இந்த வகையில் நமது அனைத்து நடவடிக்கைகளையும், தாக்குதல்களையும் உரிமை கோருவதாக முடிவிற்கு வருகிறோம்.அந்த முடிவின் அடிப்படையில் துண்டுப்பிரசுர வடிவிலான கடிதம் ஒன்றைத் தயாரித்து பத்திரிகைகளுக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கிறோம்.///ஐயர். வெற்றிச்செல்வன் நான் லண்டனில்தான் இருக்கின்றேன்.ஐயரின் தகவலின்படி 12.04.1978 இற்க்குப் பிறகுதான் பத்திரிகைகளுக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கப்படுகின்றது. வடபகுதியிலிருந்து கொழும்பு செல்ல ஒருநாள். கடிதம் எழுத குறைந்தது ஒருநாள் (இரகசிய கடிதம் என்பதால்) லண்டனுக்குப்போய்ச்சேர 1978 இல் என்றால் குறைந்தது ஒருகிழமை(15/4/1978 சனிக்கிழமை)லண்டனில் கடிதத்தைக்கூடி வாசித்துவிட்டு திருப்பி இலங்கைக்கு அனுப்ப குறைந்தது இரண்டுநாள்(அந்தக்காலத்தில் ஆபீசிலாவேலைசெய்தார்கள் உடனடியாக செயற்ப்பட) இலங் கைப்பத்திரிகைகளுக்குக்கிடைக்க எத்தனைனாள்? எப்படி 25/4/1978 திகதியிடப்பட்ட வீரகேசரியில் பிரசுரமானது இது சாத்தியமா?

  2. சச்சிதானந்தம் அய்யாவை விட்டு விடுவோம் வயதான காலத்தில் அவருக்கு ஏன் வீணான மனச்சுமையை ஏற்றூவான்.

  3. பாட்டிக்காலத்து ஆங்கிலத்தை வைத்து வடை சுடுகிற இந்து எங்களூக்கு வேண்டாம்.லிபரல் மற்றூம் இன்டிபென்டன் போன்ற நல்ல பத்திரிகைகள் இங்கே நமக்கு கிடைக்கின்றன்.

 12. We all shd UNITE and work together for HR,equality,freedom,dignity,justice based on Gandhi’s principles towards PROGRESS!!!

  HOW TO STOP SINHALA CRUELTIES TOWARDS TAMILS NOW AND IN FUTURE?

  HOW TO FIND POLITICAL FEDERAL SOLUTION TO NESL WITH A HELP OF IC,UN, ETC? WE SHD FIND ANSWERS!!!

 13. பின்னூட்டங்கள் மறைக்கப்பட்ட மறு காலை இதைத் தொடர்கிறேன்….

  பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டுவிட்டார்கள்.
  கொட்டிலுக்குள் போட்டு எரித்துச் சாம்பலாகியும் விட்டார்கள்.

  அப்பொழுது இது பற்றி யாருக்கும் தொரியாது…

  பத்திரிகையில்… ”12.04.1978 இல் அனைத்து பிரதான இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதுவும் எங்கு எப்போது நடைபெற்றது என்ற நுண்ணிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் ஒரே பரபரப்பு.”

  பஸ்தியாம்பிள்ளை சுடப்பட்டு சரியாகப் 18வது நாள் புலிகள் முதன்முறையாக இக்கொலை உட்பட 11 கொலைகளை உரிமை கோரினர். இது நடக்கும் போது ஜே.ஆரின் ஆட்சி நடந்தது. தமிழ்க் கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்தது.

  பஸ்தியாம்பிள்ளை கொல்லப்பட்டதை உறுதிசெய்ததே இவ் உரிமைகோரல் தான். இத்துண்டுப்பிரசுரம் (கடிதம்) அனுப்பப்பட்ட இடங்களை இவ் வரலாற்றுக் குறிப்பு மறைத்துள்ளது.

  “The Bastiampillai party came in search of the Liberation Tigers of Tamil Eelam at about 6am on April 7, 1978 with SMG, shot gun, revolvers and pistols, and attacked the Tigers, but the Tigers destroyed them without any death or body injury to Tigers and the car was also destroyed.
  “No other groups, organizations or individuals can claim this death. Serious action will be taken against those who claim the above other than Tigers in Ceylon and abroad. We are not responsible for past robberies of any kind. “Secretary, Central Committee. TULF – Tamil United Liberation Front; UNP – United National Party; SLFP – Sri Lanka Freedom Party; KKS – Kankesanthurai; VVT – Valvetiturai; CID – Criminal Investigation Department; MP – Member of Parliament.”
  The Virakesari news story created the impact Uma anticipated. People, especially the Tamils, came to know that an organization had been formed to fight Sinhala oppression. Jaffna journalists who worked for the Tamil provincial daily Eelanadu and for Saturday Review told me that the news was received with admiration. “Our boys have done it,” was the general feeling, they said. The letters posted to the CID and the police were passed on to President Jayewardene.

  (by T. Sabaratnam ; published October 20, 2003)

  இவ் உரிமைகோரல் துண்டுப் பிரசுரத்தை (கடிதத்தை) புலிகள் தமது ”விடுதலைப் புலிகளில்” (1984) இல் கையெழுத்தை மறைத்து வெளியிட்டனர். (2005) ஆம் ஆண்டு வெளிநாட்டுப் புலிகள் இதே ‘கேசரி’க் கட்டிங்கை வெளியிட்டனர். (அதில் கையெழுத்தும் இருந்தது)

  இதைத்தான் சொல்வதோ! ‘தர்மத்தை சூது கவ்வும் மறுபடி தர்மம் வெல்லும்’ இது பத்திரிகை தர்மத்துக்கும் பொருந்துகிறது அல்லவா?

  இதைப் பார்த்தபோதும், இப்பொழுது இக் குறிப்பை எழும் போது: அப்பொழுது ‘விடுதலைப்புலிகளின்’ ஆசிரியராக இருந்தவரை, நினைத்து இப்பொழுதும் என் நெஞ்சு எரிகிறது…

  மீண்டும்…

  ரூபன்
  010410

 14. //கியூப விடுதலையிலோ – ஏன் பொலிவியாவில் சேவினது முயற்சிகளோ கூட சுத்த ராணுவக் கண்ணோட்டத்தில் அமைந்தவை அல்ல. //
  சே இன் முயற்சிகளும் கியுப விடுதலையும் தான் புரட்சியில் இராணுவக் கண்ணோட்டம் என்பதே தத்துவமயமாக்கலுக்கு உட்படுவதற்கு முதல் அடி எனலாம். சே இன் போக்கோ தியரி என்பது அதி உச்சமான இராணுவக் கண்ணோட்டம் தவிர வேறென்ன? இந்த இராணுவக் கண்ணோட்டம் என்பது கியுபாவின் விதிவிலக்கான சூழலில் வெற்றி பெற்றமை என்பதைப் பொதுமைப்படுத்தலாகாது! இப்போ, மக்கள் சார்ந்த இயக்கம் என்பது ஐயர் அடிக்கடி கூறுவது போல மக்கள் திரள் அமைப்புக்களூடாக மக்களை பலம்பொருந்தியவர்களாக மாற்றுவதிலிருந்தே உருவாகும். அப்படி மக்கள் பலம்மிக்கவர்களாக மாறும் போதுதான் மாவோ கூறுவது போல கட்சி மக்களின் கண்காணிப்பில் வாழமுடியும். ஆயினும் சீனாவிலும் சோவியத்திலும் கட்சியை மக்களிலும் அதிகமாக பலப்படுத்திய இராணுவக் கூறு என்பது அமைந்திருந்தது. இறுதியில் அதுதான் புரட்சியை சீர்குலைத்ததற்கான நேரடியான ஆதாரங்கள் உள்ளன.
  கியூபா, பொலீவிய விவாதங்களில் பெரும்பாலானவை ஈழவிடுதலை இயக்கங்களில் நடந்த தத்துவார்த்த விவாதங்களை ஒத்த இராணுவ அமைப்பு சார்ந்த விவாதங்களாகவே அமைந்திருந்தன. இதற்கும் பல உதாரணங்களைத் தர இயலும். முன்னர் கூறியது போல சே வின் குவியக் கோட்பாடு என்ற தூய இராணுவக் கண்ணோட்டம் ஒரு “சாபக்கேடு” என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

  //மார்க்சிய விமர்சனம் என்பது அடிப்படையிலான மாரக்சியப் புகுப்பாய்வை ஏற்பது. விமர்சன மாரக்சியம் என்பது இதுவரைத்திய மார்க்சிய நடைமுறை என்று சொல்லப்பட்டதன்பாலான விமர்சனபூர்வமான அணுகுமுறை என நான் அர்த்தப்படுத்துகிறேன்.//
  ஆக, நான் கூறிய மூன்றாவது பகுதியை விமர்சன பூர்வமாக அணுகுவதே விமர்சன மார்க்சியம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நன்று. இவ்வாறு புதிய சொல்லாடல்கலை அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவை தெளிவுபடுத்தப்பட்டவிட்டால் குழப்பங்களை உருவாக்கும் என்பது எனது கருத்து. தத்துவார்த்த விவாதங்கள் சென்றடையும் எல்லையை விரிவுபடுத்த வேண்டிய கடமையை ஒவ்வொரு படைப்பளனும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

  //அன்புள்ள கோசலன். ஐயர் ஈழம் குறித்து தனிநபர் அவதூற்றுக்கு அப்பால் பகுப்பாய்வு செய்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. // இங்கு முதன்மையாந்து தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் பகுப்பாய்வு செய்கின்றார் என்பதல்ல. எவ்வாறு அதனை அவரால் செய்ய முடிகின்றது என்பதே. அதனை அவர் அவ்வறு செய்ய முடிவதற்குக் காரணம் ஒவ்வொரு சம்பவத்தையும் அதற்கான புற நிலையையும் தனிமனித சிந்தனை ஒழுக்கம் என்ற கருத்து முதல்வாத நோக்கிலிருந்தன்றி அந்தச் சிந்தனையைத் தீர்மானித்த பொருள் என்ன என்ற பொருள் முதல்வாத நோக்கிலிருந்தே அணுகுகிறார். இதற்குப் பல உதாரனங்களை முன்வைக்கலாம்.
  இதனால் தான் மார்சியத்தின் எதிரிகளும் அதனைத் தவறாகப் புரிந்துகொண்ட வரட்டுவாதிகளும் தனிமனிதத் தாக்குதலையே அரசியல் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். புகலிட வாழ்வியல் ஏற்படுத்திய தொடர்பறுந்த நிலை பல மன நோயாளிகளைக் கூட ஏற்படுத்தியுள்ளது. ” இந்த மத்தியதர லும்பன்களுக்கு வயிறு மட்டும் பெரிதாக இருந்திருந்த இந்னேரம் மற்றவர்களைப்பிடித்துத் தின்று ஏப்பம் விட்டுரிப்பார்கள்.
  என்று 68 பிரஞ்சு எழுச்சியில் பங்கேற்ற டானியல் பென்டிட் கூறியது நினைவிற்கு வருகிறது.
  இறுதியாக,
  உங்கள் வேலைப் பழுவிற்கு மத்தியில் எனது கருத்துக்களுக்குப் பதிலளித்தமைக்கு எனது நன்றிகள்.

  நட்புடன் கோசலன்.

 15. நட்புடன் யமூனா ராஜேந்திரன்,
  //கியூப விடுதலையிலோ – ஏன் பொலிவியாவில் சேவினது முயற்சிகளோ கூட சுத்த ராணுவக் கண்ணோட்டத்தில் அமைந்தவை அல்ல. //
  சே இன் முயற்சிகளும் கியுப விடுதலையும் தான் புரட்சியில் இராணுவக் கண்ணோட்டம் என்பதே தத்துவமயமாக்கலுக்கு உட்படுவதற்கு முதல் அடி எனலாம். சே இன் போக்கோ தியரி என்பது அதி உச்சமான இராணுவக் கண்ணோட்டம் தவிர வேறென்ன? இந்த இராணுவக் கண்ணோட்டம் என்பது கியுபாவின் விதிவிலக்கான சூழலில் வெற்றி பெற்றமை என்பதைப் பொதுமைப்படுத்தலாகாது! இப்போ, மக்கள் சார்ந்த இயக்கம் என்பது ஐயர் அடிக்கடி கூறுவது போல மக்கள் திரள் அமைப்புக்களூடாக மக்களை பலம்பொருந்தியவர்களாக மாற்றுவதிலிருந்தே உருவாகும். அப்படி மக்கள் பலம்மிக்கவர்களாக மாறும் போதுதான் மாவோ கூறுவது போல கட்சி மக்களின் கண்காணிப்பில் வாழமுடியும். ஆயினும் சீனாவிலும் சோவியத்திலும் கட்சியை மக்களிலும் அதிகமாக பலப்படுத்திய இராணுவக் கூறு என்பது அமைந்திருந்தது. இறுதியில் அதுதான் புரட்சியை சீர்குலைத்ததற்கான நேரடியான ஆதாரங்கள் உள்ளன.
  கியூபா, பொலீவிய விவாதங்களில் பெரும்பாலானவை ஈழவிடுதலை இயக்கங்களில் நடந்த தத்துவார்த்த விவாதங்களை ஒத்த இராணுவ அமைப்பு சார்ந்த விவாதங்களாகவே அமைந்திருந்தன. இதற்கும் பல உதாரணங்களைத் தர இயலும். முன்னர் கூறியது போல சே வின் குவியக் கோட்பாடு என்ற தூய இராணுவக் கண்ணோட்டம் ஒரு “சாபக்கேடு” என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

  //மார்க்சிய விமர்சனம் என்பது அடிப்படையிலான மாரக்சியப் புகுப்பாய்வை ஏற்பது. விமர்சன மாரக்சியம் என்பது இதுவரைத்திய மார்க்சிய நடைமுறை என்று சொல்லப்பட்டதன்பாலான விமர்சனபூர்வமான அணுகுமுறை என நான் அர்த்தப்படுத்துகிறேன்.//
  ஆக, நான் கூறிய மூன்றாவது பகுதியை விமர்சன பூர்வமாக அணுகுவதே விமர்சன மார்க்சியம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நன்று. இவ்வாறு புதிய சொல்லாடல்கலை அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவை தெளிவுபடுத்தப்பட்டவிட்டால் குழப்பங்களை உருவாக்கும் என்பது எனது கருத்து. தத்துவார்த்த விவாதங்கள் சென்றடையும் எல்லையை விரிவுபடுத்த வேண்டிய கடமையை ஒவ்வொரு படைப்பளனும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

  //அன்புள்ள கோசலன். ஐயர் ஈழம் குறித்து தனிநபர் அவதூற்றுக்கு அப்பால் பகுப்பாய்வு செய்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. // இங்கு முதன்மையாந்து தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் பகுப்பாய்வு செய்கின்றார் என்பதல்ல. எவ்வாறு அதனை அவரால் செய்ய முடிகின்றது என்பதே. அதனை அவர் அவ்வறு செய்ய முடிவதற்குக் காரணம் ஒவ்வொரு சம்பவத்தையும் அதற்கான புற நிலையையும் தனிமனித சிந்தனை ஒழுக்கம் என்ற கருத்து முதல்வாத நோக்கிலிருந்தன்றி அந்தச் சிந்தனையைத் தீர்மானித்த பொருள் என்ன என்ற பொருள் முதல்வாத நோக்கிலிருந்தே அணுகுகிறார். இதற்குப் பல உதாரனங்களை முன்வைக்கலாம்.
  இதனால் தான் மார்சியத்தின் எதிரிகளும் அதனைத் தவறாகப் புரிந்துகொண்ட வரட்டுவாதிகளும் தனிமனிதத் தாக்குதலையே அரசியல் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். புகலிட வாழ்வியல் ஏற்படுத்திய தொடர்பறுந்த நிலை பல மன நோயாளிகளைக் கூட ஏற்படுத்தியுள்ளது. ” இந்த மத்தியதர லும்பன்களுக்கு வயிறு மட்டும் பெரிதாக இருந்திருந்த இந்னேரம் மற்றவர்களைப்பிடித்துத் தின்று ஏப்பம் விட்டுரிப்பார்கள்.
  என்று 68 பிரஞ்சு எழுச்சியில் பங்கேற்ற டானியல் பென்டிட் கூறியது நினைவிற்கு வருகிறது.
  இறுதியாக,
  உங்கள் வேலைப் பழுவிற்கு மத்தியில் எனது கருத்துக்களுக்குப் பதிலளித்தமைக்கு எனது நன்றிகள்.
  நட்புடன் கோசலன்.

  1. ஐயர் என்ன பகுப்பாய்வு செய்கிரறாரோ அல்லது குதப்புறாரோ? இங்கு விளக்கங்கள் எழுதும் மற்றயோர்க்கும். இலங்கையில் ஒரு இனம் இன்னொரு இனத்தோடு போர் தொடுத்தது தன் உரிமையை பெற்றுக்கொள்ள. தமிழரின் உரிமையை நிலைநாட்டுவதே ஒரே இலட்சியமென கடைசிவரை போராடிய ஒரு மாபெரும் போராட்ட தலைவனுக்கு பக்கதுணையாய் நின்று போராட்டதில் வெற்றி பெற முடியவில்லை. இப்போ அங்கும் இங்கும் அடைகலம் புகுந்துகொண்டு அவன் இவனிடம் பணம் பெற்றுக்கொண்டு பகுப்பாய்வும் குதப்பலும். அதுக்கேற்றாப்போல பக்கப்பாட்டு, மாக்சிசம், லெனினிசம், இவர்களெல்லாம் பதவிக்காகப் புதுப்புதுப் பெயரில் ஒரே இனத்துக்கெதிரான போராட்டம். தமிழன் போராட்டம் உரிமைப்போராட்டம்.

   அமெரிக்காவுக்கு அடிமையாகவே அறிமுகப்படுத்ப்பட்ட ஒரு இனம் இப்போ தன்னை அடிமைப்படுத்திய இனத்தையும் சேர்த்து ஆட்சி செய்யுது. ஆனால் அமெரிக்கா உலகப்படத்தில் சேர்க்கபடும் காலத்துக்கு முன்னரே இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த தமிழ் இனம் இப்போ தன் உரிமையை நிலைநாட்ட ஆலாய்ப்பறக்குது, உலகம் முழுக்க அகதியாய் அலையுது. கொஞ்சம் தன் தாய்நாட்டில் அகதியாய் வாழுது மிச்சம் அடிவருடி வாழுது.

   1. பழமை பேசிப்பேசியே சாகாதீர். ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு வாசகம்தான் நினைவு வருகிறது. ஆண்ட பரம்பரை ஆண்டியாகமல் முதலில் வாழ வைக்கும் வழியை பாருங்கள்.

    1. வெவ்வேறு மனிதர்களின் மாறுபட்ட சிந்தனைதான் மாதக்கணக்கில் எடுத்த பயணங்கள் இன்று மணித்தியாலங்களின் முடிகிறது. முப்பது வருட மனிதவாழ்க்கை நூறு வயதை எட்டியது. இதில் எது பழமை. நல்ல மனிதர்கள் எப்போதும் மற்றையோரைப்பற்றியே நினைப்பர். உம்மைப்போலல்லாது.

     1. ஐயா பொதுநலவாதியே நீவீர் ஒரு மீள்குடியேற்ற கிராமங்களில் பணியாற்றும் தொண்டர் என்று அறியாமல் கருத்து பதிந்து விட்டேன். நான் சுயநலமாக சிந்திப்பவன் என்று எப்படி கணித்தீர் ஓ நீரும் தீர்க்கரிதசியோ?

 16. நட்புடன் கோசலன். யமூனா ராஜேந்திரன் இருவருக்கும்….
  வணக்கங்கள்….
  நீங்கள் இருவரும் முக்கியமான ஒரு உரையாடலை ஆரம்பத்திருக்கின்றீர்கள்…
  மார்க்சியம்
  மார்க்கியம் பற்றிய விமர்சனம்
  மார்க்சிய பார்வையிலான விமர்சனம்….
  பொருள் முதல் வாதம்
  மக்களை அரசியமயற்படுத்தல்
  தனி மனிதரின் அரசியல்
  மற்றும் இராணுவக் கண்ணோட்டமும் அதன் அதன் நன்மைகளும் பாதிப்புகளும்…
  இப்படி பல தலைப்புகளில் தங்ளது உரையாடல் செல்கின்றனது…
  இது இன்றைய சுழலில் அவசியமானதே….
  இது தொடர்பாக தனியான ஒரு கட்டுரையை வரைந்து அதில இந்த உரையாடலைத் தொடா;ந்தால் நன்மையளிக்கும் அல்லவா?
  இது தொடர்பாக இனியொரு அக்கறை கொள்ளும் என நம்புகின்றேன்.
  நட்புடன் மீராபாரதி

 17. அன்புள்ள கோசலன். நான் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவது எனத் திர்மானித்திருப்பதால் நாம் தொடர்ந்து இங்கு கருத்துப் பரிமாறுவது பொருத்தமாக இருக்காது என நினைக்கிறேன். எனினும் நான் முன்பு எழுதியதிலிருந்து ஒரு தெளிவுக்காக மட்டும் இதனைக் குறிப்பிட விரும்புகிறேன். கியூப அனுபவத்தையும் சேவின் போகோ தியரியையும் எவ்வாறு பொதுமைப்படுத்த முடியாதோ அவ்வாறே ஈழ அனுபவத்தையும் பொதுமைப்படுத்த முடியாது என்பதுவே எனது பார்வை. என்றாலும் இந்தத் தனித்தன்மைகளிலிருந்து புரட்சிகளின் நடைமுறை-அறம்-இலக்கு போன்ற பொதுவான அம்சங்கள் குறித்த கோட்பாட்டு முயற்சிகளை செய்ய முடியும் எனவே நினைக்கிறேன். எடுத்துக் காட்டாக சோசலிச மனிதனின் உருவாக்கம் பற்றிய சேவின் எழுத்துக்களில் வெளிப்படும் புரட்சிகர அறவியல் அவருடைய மிகமுக்கியமான பங்களிப்பு எனக் கருதுகிறேன். பிறவற்றை நான் கட்டுரைகள் எழுத நேரும் தருணத்தில் நாம் உரையாடுவோம். அன்புடன் யமுனா ராஜேந்திரன்

 18. அன்புள்ள மீராபாரதி. இத்தகைய உரையாடல் சாத்தியம். நீங்கள் குறிப்பிட்டபடி அதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்கிறேன. கட்டுரை வடிவில் மறுபடி சந்திப்போம். அன்புடன் ராஜேந்திரன்.

  1. KOSALAN-YAMUNA RAJENDRAN-MERA BHARATHI

   INTRAIYA ULAKA MAYA SOOLALIL VARKKA PORATTAM THODARAVE SEYYUM. ADUTHA KATTA PORATTAM THODARNTHU NADATHA NATANTHA THAVARUKAL MULUMAIYAKA AAIVU SEYYAPPADAVENDUM. THATHUVAM KURITHUM VIVATHAM NATATHAPADAVENUM. VIVATHANGAL THODARNTHU NADAKKATTUM

 19. தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி ஒருபோதும் அவர் கருத்து சொன்னதில்லை. சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. எல்லாருடைய ஆதரவும் தேவை என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. அவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ உதவிகள் செய்தபோதும், கலைஞரை அவர்கள் துளிகூட விமர்சித்ததில்லை.

  ”1982-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி. சென்னை பாண்டி பஜாரில் தம்பி பிரபாகரனும், பிளாட் அமைப்பின் தலைவர் முகுந்தனும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டார்கள். அது துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

  அப்போது நான் மதுரையில் இருந்தேன். புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த பேபி சுப்பிரமணியம் என்னை உடனடியாக சென்னைக்கு வரும்படி அழைத்தார். நான் இல்லாத வேளைகளில் மயிலாப்பூரில் உள்ள எனது அறையில்தான் பேபி தங்கியிருந்தார். அவரோடு வேறு சில புலிகளும்

  இருந்தனர். கைது செய்யப் பட்ட பிரபாகரனையும் முகுந்தனையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, சிங்களப் போலீஸ் உயரதிகாரிகள் சென்னை வந்திருந்தார்கள்.

  நான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினேன். ‘பிரபாகரன், முகுந்தன் ஆகியோரை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சிங்கள போலீஸாரிடம் ஒப்படைக்கக்கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருபது கட்சிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய இத்தீர்மானம், தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இருவரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டது. இதன் பிறகு, நான் சிறையில் இருந்த பிரபாகரனையும் முகுந்தனையும் சந்திக்கச் சென்றேன்.

  இந்த இடத்தில் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். அதுவரை நான் பிரபாகரனைச் சந்தித்தது இல்லை. எனது அறையில் தங்கும் பேபி மற்றும் அவரது தோழர்களிடம், ‘பிரபாகரனை நான் சந்திக்க வேண்டும்’ என்று பல முறை கேட்டிருக்கிறேன். ஏதேதோ சாக்குகள் கூறி வந்தார்களே தவிர, பிரபாகரனை அழைத்துவரவில்லை. சென்னைச் சிறையில் சிறை அதிகாரி அறையில் நான் அமர்ந்திருந்தேன். பிரபாகரன், முகுந்தன் மற்றும் இரு தோழர்கள் உள்ளே நுழைந்தார்கள். முகுந்தனை எனக்கு அடையாளம் தெரியும். எனவே, பிரபாகரன் யாரென்று தெரியாமல் நான் திகைத்தேன்.

  பிரபாகரன் முன்வந்து, ‘அண்ணா! நான்தான் பிரபாகரன்’ என்றபோது…, அந்தக் காட்சியை பார்க்கவேண்டுமே! எனக்குப் பேரதிர்ச்சி. ஏனென்றால், பேபியோடு எனது அறையில் தங்கியிருந்தவர்களில் இவரும் ஒருவர். பலமுறை இவரை என் வீட்டில் பார்த்திருக்கிறேன். ‘எங்கய்யா உங்க தலைவர்?’ என்று கேட்டபோதெல்லாம், ‘அவரும் உங்களை பார்க்கனும்னுதான் விரும்பறார்’ என்று பதில் வரும். இவர் வாய் பேசாமல் உட்கார்ந்திருப்பார்.

  புலிகளை மாதிரி ரகசியம் காப்பதற்கு இன்னொருவர் பிறந்துவர வேண்டும்.” என்றபடி மலரும் நினைவுகளில் வியப்பில் ஆழ்கிறார், தடை செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன்.

  ”வழக்கறிஞர் என்.டி. வானமாமலைதான் பிரபாகரனுக்கு பிணை விடுதலை வாங்கிக் கொடுத்தார். ‘அவர் மதுரையில் தங்கி கையெழுத்திடவேண்டும்’ என்று உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைதான் பிரபாகரனை எனக்கு நெருக்கமாக்கியது. சுமார் ஏழு மாதங்கள் என் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். அந்த காலகட்டத்தில், பிரபாகரனைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் நிறையவே நான் அறிந்துகொண்டேன்.

  மதுரையில் இருந்தபோதுதான் இயக்கத்துக்கான சின்னம் வடிவமைக்கப்பட்டது. ஓவியர் நடராசன் அதை வரைந்துகொடுத்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் பார்மஸிஸ்ட்டாக பணியாற்றியவர்.

  எங்கள் வீட்டில் குடியிருந்த டைலர் தங்கராசுதான் சீருடையை வடிவமைத்துக் கொடுத்தார். தொப்பி மட்டும் மதுரை புது மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் தேர்வு செய்தார்கள். சீருடையை பார்த்துவிட்டு, ‘நூறு பேர் இந்த ராணுவ சீருடையோடு அணிவகுக்கவேண்டும். அதை நான் பார்க்கவேண்டும்’ என்றார் பிரபாகரன். அது ஆயிரம், பல்லாயிரம் என்று பெருக்கெடுத்தது. இவ்வளவு பெரிய ராணுவத்தை கட்டமைத்து, அதற்கு திறம்பட பயிற்சியளித்த மாபெரும் தலைவன், யாரிடமும் பயிற்சி பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

  கைத்துப்பாக்கி முதல் கனரக பீரங்கிகள் வரை தனக்குத்தானே பயிற்சி எடுத்துக்கொண்டார். நேதாஜியை மட்டும் அவர் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார். மதுரையில், முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் மாவீரர் நேதாஜிக்காக ஒரு விழா எடுத்தார்கள். என்னோடு சேர்ந்து பிரபாகரனும் அந்த விழாவில் கல்ந்துகொண்டார். இந்திய தேசிய ராணுவ கீதம் பாடும்போது கேப்டன் லட்சுமிக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கிருந்தவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர். வரும் வழியில் தம்பி சொன்னார், ‘எத்தனை வருஷம் ஆச்சு? இவர்கள் நேதாஜியையும் மறக்கவில்லை. அந்த சம்பவங்கள்ளையும் மறக்கவில்லை.’ நேதாஜி மீது தம்பி அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார். அவர்தான் தனக்கு வழிகாட்டி என்று தம்பியே என்னிடம் கூறியிருக்கிறார். புலிகளின் அலுவலகங்களில் நேதாஜி, பகத்சிங் ஆகிய இரண்டு பேரின் படங்களை நான் பார்த்திருக்கிறேன்.”

  ”முதன் முதலில் எப்போது இலங்கைக்குச் சென்றீர்கள்?”

  ”யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டபோது, 1982-ல் அரசுக்குத் தெரிந்து விமானப் பயணம் மேற்கொண்டேன். அதன் பிறகு 1985-ம் ஆண்டில் படகில் ரகசியப் பயணம் மேற்கொண்டேன். பிரபாகரனின் சொந்த மெய்க்காப்பாளர் படைத் தலைவர் கேப்டன் லிங்கம், இப்போதிருக்கும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு இருவரும்தான் என்னைக் கூட்டிச் சென்றனர். என் பாதுகாப்புக்கு வந்தவர்களில் நான்கு பேரை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது. அங்கே மக்கள் படும் அவலங்களை நான் வீடியோ படமாக எடுத்துவந்தேன். அதுதான் ஈழத் தமிழர்களின் நிலைமையை முதன் முதலில் உலகத்துக்குச் சொன்னது.

  தமிழ்நாடு திரும்பியதும், ராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவரும் சந்திப்பதற்கு நேரம் கொடுத்திருந்தார். ஆனால், மூப்பனாரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரமும் அதைக் கெடுத்துவிட்டார்கள். அதன் பிறகு, வை.கோ.தான் அனைத்துக் கட்சி எம்பிக்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். எதிர்கட்சித் தலவைராக இருந்த சந்திரசேகர் இதைப் பார்த்துவிட்டு, ‘நான் புலிகள்னா டெரரிஸ்ட்னு நெனச்சேன். பட் தே ஆர் லைக் சுபாஷ் போஸ், ஐ.என்.ஏ’ என்று சொன்னார்.

  1987-ம் ஆண்டு திலீபன் உண்ணாவிரதத்தின்போது மீண்டும் ரகசியப் பயணம் மேற் கொண்டேன். நான் பிரபாகர னோடு இருந்தபோது, இருநாட்டு ராணுவமும் என்னை வலை போட்டு தேடிக் கொண்டிருந்தது. அது ஐ.பி.கே.எஃபுக்கும் புலி களுக்கும் எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம் என்கிற காலகட்டம். யாழ் நகருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த ஒரு வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார். வீட்டைச் சுற்றி பங்கர்கள் இருக்கும். புலிகள் ஆயுதம் ஏந்தி காவல் காப்பார்கள்.

  நானும் பிரபாகரனும் ஒரே அறையில்தான் படுத்து உறங்குவோம். அவர் சாதாரண பாயில்தான் படுப்பார். தலையணை பயன்படுத்தமாட்டார். ஒரு கையை தலைக்கு வைத்துக்கொண்டு, இன்னொரு கையில் கைத்துப்பாக்கியுடன் படுப்பார். ஒருநாள் இரவு, சிறுநீர் கழிப்பதற்காக நான் படுக்கையைவிட்டு எழுந்தேன். அவ்வளவுதான்! ‘சடக்’கென எழுந்து கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டிவிட்டார். காரணம், அவரது எச்சரிக்கை உணர்வு. இலைகள் அசைந்தால்கூட அவர் உஷாராகிவிடுகிறார். பாய் அசைந்த ஓசைதான் அவரை எழுப்பிவிட்டது என்பதை புரிந்துகொண்டேன். அதன்பிறகு, இயற்கை உபாதைக்குகூட நான் இரவில் எழுந்திருக்கவில்லை.

  காலையில் எழுந்ததும் உடற்பயிற்சிக்குப் பிறகு அலுவகம் செல்வார். அங்கே முக்கிய தளபதிகளுடன் ஆலோசனை நடத்துவார். அதன் பிறகுதான் குளியல், சாப்பாடு. மதிய வேளைகளில் பயிற்சிக் களத்துக்குச் சென்றுவிடுகிறார். அங்கே ஒரு மனித பொம்மை வைத்திருப்பார்கள். அதன்மீது துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடக்கும்.

  நான் பார்த்தவரையில் மையப்புள்ளியில் சுடும் ஒரே நபர் பிரபாகரனாகவே இருந்தார். வலது கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு இடது கையால் வலது கையை பிடித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தோட்டா விசை காரணமாக கை அசைந்து குறி தவறிவிடும். பிரபாகரன் தன்னுடைய கைத்துப்பாக்கியைக் கொடுத்து, ‘அண்ணா! நீங்க சுடுங்க…’ என்றார். அப்போது காசி ஆனந்தன் பக்கத்தில் இருந்தார். நான் கையை பேலன்ஸ் செய்யவேண்டும் என்பதை மறந்து, ஒற்றைக் கையால் சுட்டுவிட்டேன். ஒரே கைத்தட்டல் ஆரவாரம்! மையப்புள்ளிக்கு அடுத்த வட்டத்தில் தோட்டா பாய்ந்ததுதான் அதற்குக் காரணம். தம்பி உடனே, ‘என்னண்ணா! எடுத்த எடுப்பிலேயே அசத்திட்டீங்க. அதுவும் ஒரே கையால!’ என்றார். ‘இதுதான் தம்பி குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச கதை. எனக்கென்ன தெரியும்? ஏதோ குருட்டாம்போக்குல சுட்டேன். அது சரியா பாஞ்சிருக்கு’ என்றேன். ‘ஆபத்துணா… உங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறதே ஆபத்து’ என்று சொல்லி சிரித்தார்.

  இன்னொரு ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன். மேசை மீது விதவிதமான துப்பாக்கி ரவைகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தது. போராளிகள், அவருடைய கண்களை இருக்கக் கட்டினர். அவர் ஒவ்வொரு ரவையாக தடவிப்பார்த்து, எது எது, எந்தெந்த துப்பாக்கிகளுக்கு உரியது என்பதை மிகச் சரியாக சொல்லிக்கொண்டு போனார். அதேபோல புதிய புதிய ஆயுதங்களை தயார் செய்வதிலும் புலிகள் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

  தளபதிகள் மீது மிகவும் பாசமாக இருப்பார் தம்பி. வெளிநாட்டிலிருந்து வரும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள், காமிரா, வாட்சுகள் என அனைத்தையுமே தளபதிகளுக்கு கொடுத்துவிடுவார். ‘டே! நீ இதை எடுத்துட்டுப் போடா’ என்பார். நான், ‘வாட்சையாவது நீங்க கட்டலாமே!’ என்றேன். ‘நீங்க வேறண்ணா! என் மனைவி ஒரு கடிகாரம் கொடுத்திருக்கா. அதைத்தான் கட்டிட்டு இருக்கேன். வேற கட்டினா, அவ சண்டைக்கு வந்துடுவா!’ என்றார். தனக்கென அவர் எதையும் வைத்துக்கொண்டதில்லை.

  அவருடைய கைத்துப்பாக்கி இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. கிட்டுதான் அதை பரிசாக அளித்திருந்தார். தமிழ்நாட்டுத் தலைவர்களில் எம்.ஜி.ஆர்.மீதுதான் அவர் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். அதேபோல, புலவர் கலியபெருமாள், பெருஞ்சித்திரனார் ஆகியோர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.” -சற்று இடைவெளிவிட்டு தொடர்கிறார் நெடுமாறன்.

  ”ஒருபோதும் அவர் மக்கள் வேறு குடும்பம் வேறு என்று பிரித்துப் பார்த்ததில்லை. ஒரு தடவை நாங்கள் காட்டில் உட்கார்ந்திருந்தோம். அவர் மகன் சார்லஸ் ஓடி வந்து அவர் மடி மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தான். துவாரகாவும் இருந்தாள். ‘இந்தக் குழந்தைகள் இன்றைக்குச் சிரித்து விளையாடுகிறார்கள். நான் இவர்கள் மீது பாசம் வைக்கவில்லை. எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் செத்துப் போகிறார்கள். நாளைக்கு இவர்களுக்கும் அந்தச் சாவு வரலாம்.’ என்றார். எதையும் தாங்கும் மனப்பக்குவத்தை நாங்கள் பெற்றுவிட்டோம். அதேபடிதான் சார்லஸுக்கு ஆகிவிட்டது.

  ”பெண் புலிகளைப் பற்றி?”

  ”பெண்களை அவர் ஆண்களுக்கு நிகராகக் கருதினார். நேதாஜி படையணியில் இருந்த மகளிர் பிரிவுகூட மருத்துவ உதவிப்படைதான். உலகிலேயே, ஆண்களுக்கு நிகராக ராணுவத்தில் பெண்களைப் பயன்படுத்தியது பிரபாகரன்தான். அதன்பிறகுதான் மற்ற நாடுகள் பெண்களைச் சேர்த்தன. ‘ஈழத் தமிழினம் எண்ணிக்கையில் குறைவு. எனவே பெண்களின் பங்கு தவிர்க்க முடியாதது. சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் தாங்கிய பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம், பெண் அடிமைத் தனத்தையே நாம் உடைக்கிறோம்’ என்று பெருமையுடன் என்னிடம் கூறினார்”.

  ”பிரபாகரன் கண்ணீர்விட்ட சம்பவம் ஏதாவது உண்டா?”

  ”நவம்பர் 27 மாவீரன் சங்கர் இறந்த நாள். கொரில்லா போரின்போது, குண்டடி பட்ட சங்கரை குற்றுயிரும் குலையுயிறுமாய் மதுரைக்குத் தூக்கி வந்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அதிகமான தண்ணீர் தாகம் ஏற்படும். படகில் வரும்போது அவருக்கு நிறைய தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறு செய்திருக்கக்கூடாது. அதனால், ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தும் சங்கர் மரணம் அடைந்துவிட்டார். ‘தம்பி, தம்பி’ என்று அலறியபடியே பிரபாகரன் மடியில்தான் உயிரைவிட்டார். பிரபாகரன் அப்போது கண்ணீர்விட்டதை நான் பார்த்தேன். அதன் பிறகு திலீபன் இறந்தபோதும் கலங்கினார்.” என்கிறவர், ”அங்கிருந்து நான் கிளம்பும்போது எல்லோரும் சேர்ந்து குதூகலமாக என்னை வழியனுப்பினார்கள். ‘அண்ணா ஒவ்வொரு தடவையும் உங்களை அழைக்கிறப்போ, சரியான வசதிகளை செஞ்சு கொடுக்க முடியலை. அடுத்த தடவை நீங்க வரும்போது, சுதந்திரத் தமிழீழத்தில் உங்களுக்கு ராஜமரியாதையோடு வரவேற்பு கொடுப்போம்’ என்றார்கள்” சொல்லிக்கொண்டே கண்களை மூடி மீண்டும் நினைவுகளில் ஆழ்கிறார்.

  ”கடைசியாக எப்போது தொலைபேசியில் பேசினீர்கள்?”

  ”நான் எப்போது தொலைபேசியில் பேசினேன்? இதுவரை அப்படி பேசியதே கிடையாது. நான் மட்டும் அல்ல, யாருமே அவருடன் தொலைபேசியில் பேச முடியாது. காரணம், அவர் தொலைபேசியோ, கைபேசியோ பயன்படுத்துவது இல்லை.”

  ”அப்படியானால், பிரபாகரனுடைய செல்போன் என்று இலங்கை ராணுவம் காட்டியது?”

  ”பல கட்டுக்கதைகளில் அதுவும் ஒன்று. அப்படி அவர் செல்போன் பயன்படுத்தி இருந்தால், எப்போதோ அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து குண்டுவீசி இருப்பார்களே! இந்த நவீன யுகத்தில் செல்போன் என்பது இருப்பிடத்தை அறியும் ஒரு கருவி. சிங்களவர்களுக்கு பொய் சொல்வதில்கூட புத்திசாலித்தனம் இல்லை.”

  ”ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிரபாகரனின் பேச்சு ஒன்று இருக்கிறது. தமிழக தேர்தல் குறித்து அதில் பேசப்பட்டிருக்கிறது. இப்பேச்சு வெளியானால், தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்படக்கூடும் என்பதால், உளவுத்துறை அதைக் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறதே?”

  ”வேடிக்கையான கருத்து. தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி ஒருபோதும் அவர் கருத்து சொன்னதில்லை. சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. எல்லாருடைய ஆதரவும் தேவை என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. அவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ உதவிகள் செய்தபோதும், கலைஞரை

  அவர்கள் துளிகூட விமர்சித்ததில்லை.

  91-ல் பிரபாகரன் கை ஓங்கியிருந்த நேரம். கலைஞர் பேசி, முரசொலியில் ஒரு செய்தி வெளியாயிற்று. ‘பிரபாகரன் யார்? எனக்காக சைதாப்பேட்டை தொகுதியில் தேர்தல் வேலை பார்த்த தம்பிதானே!’ என்று எழுதப்பட்டிருந்தது. நான் பிரபாகரனைச் சந்தித்தபோது முரசொலியை எடுத்துக் காட்டினேன். தம்பி அதற்கு, ‘வை.கோ.கூட தேர்தல்ல நின்னாரு. அப்போ நான் அங்கேதான் இருந்தேன். நானோ, எங்க ஆட்களோ உங்க தொகுதிகளுக்காவது வந்திருக்கிறோமா? இல்லையே! ஏதோ சொல்றாரு. சொல்லிட்டுப் போகட்டும்’ என்றார். ஆக, தமிழ்நாடு பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ தம்பி விமர்சனம் செய்யமாட்டார். ‘மாவீரர் நாளில் அவருடைய பேச்சு வெளியாகுமா?’ என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். நானும் அப்படித்தான்.’

  1. அண்ணை ஆளை விடுங்கோ. தயவு செய்து நெடுமாறனின் குப்பைகளை கொண்டுவந்து இங்கே கொட்டாதீர்கள்.,இது மூன்றாந்தர அரசியல்வாதிகளின் புளுகளை எழுதும் இடமல்ல.அவர் வன்னியில் வெள்ளை காகம் பறந்ததையும் பார்த்தவர்.

 20. http://www.eegarai.net/-f53/–91–t5732.htm

  கிட்டு – மாத்தையா – கே.பி. கரிகாலன் – பொட்டு அம்மான் – சுப.தமிழ்ச்செல்வன் – காசி ஆனந்தன்
  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீச்சும் பிரபாகரனின் சாதனைகளும் ஒப்பிட முடியாதவை. இயக்கமும், பிரபாகரனும் வெற்றியடைய பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். போராளிகளாக பல்லாயிரம் இளைஞர்கள் சேர்ந்து, பயிற்சி பெற்று பல்வேறு பகுதிகளில் செயலாற்றியும் வந்திருக்கிறார்கள்.

  தமிழீழம் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிக்கென தளபதிகளும் நியமிக்கப்பட்டார்கள்.

  இந்தத் தளபதிகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள் மாத்தையா, கிட்டு, விக்டர், புலேந்திரன், குமரப்பா ஆகியோராவர். இவர்கள் அனைவரும் பிரபாகரனின் பால்ய கால நண்பர்கள் ஆவர்.

  இயக்கத்தில் பெரும்பாலும் வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களே முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதாக ஒரு பிரசாரம் எழுந்தது.

  இதுகுறித்து யாழ்த் தளபதியாக இருந்த கிட்டு ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:

  வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறியதோடல்லாமல், அதற்கு மேலும் சென்று ஒரு குறிப்பிட்ட சாதியினரே அதிகம் உள்ளனர் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். இந்தப் பிரசாரத்தின் நோக்கம் என்னவென்றால், தமிழ்ச் சமுதாயம் முழுவதும் எங்கள் இயக்கத்தில் இணைந்து விடக் கூடாது என்பதுதான்.

  உண்மையான செய்தி என்னவென்றால், பிரபாகரன் இந்த இயக்கத்தை முதலில் ஆரம்பித்தபோது, அவரோடு இணைந்தவர்கள் அவரது நண்பர்கள், பள்ளியில் படித்தவர்கள், உறவினர்கள் மற்றும் ஊரார்தான்.

  அதுமட்டுமல்ல; இயக்கமும் வல்வெட்டித் துறையிலேயே ஆரம்பமானது. நாங்கள் வளர்ந்தோம் – பின்னர் தமிழீழத்தைச் சேர்ந்த பலர் இயக்கத்தில் இணைந்தனர். எங்கள் இயக்கத்தில் “சீனியாரிட்டிபடி’ முதலில் இணைந்தவர்களுக்கு முன்னுரிமைகள் அதாவது பதவிப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இது இயல்பான ஒன்று.

  முதலாவது படையணியிலுள்ளவர்கள் பயிற்சி பெற்று தளபதிகளாக இருக்கிறார்கள். ஏனைய பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களுக்கு “சீனியாரிட்டிபடி’ பதவிப் பொறுப்புகள் நாளடைவில் கிடைக்கும். சாதி அடிப்படையில் இயக்கம் இயங்குவதாகச் சொல்வது சுத்தப் பொய்.

  பிரபாகரனுக்கும் இயக்கத்துக்கும் உறுதுணையாக பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை மட்டும் இங்கே பார்க்கலாம்.

  பேபி சுப்ரமணியம்: கிருபாகரன் என்பது இவரின் முழுப்பெயராகும். இளங்குமரன் என்றும் பிற்காலத்தில் அறியப்பட்டார். காங்கேசன் துறையைச் சேர்ந்தவர். குடும்பமே கோயில் பணியில் ஈடுபட்டிருந்தது. அம்மா, பார்வையற்ற அண்ணன், இரு சகோதரிகள் கொண்ட ஏழ்மையான குடும்பம். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியில் பங்கு பெற்று அதன் தலைவர் செல்வநாயகத்தின் கூடவே இருந்தவர். பின்னர் பிரபாகரனுடன் இணைந்தார். விடுதலைப் புலிகளின் பிரசாரப் பணியில் இருந்தார். சாதாரணமாக இவரைப் பார்க்கும்போது “போராளி’ என நினைக்கவே முடியாது. அவ்வளவு சாதுவாக இருப்பார்.

  கிட்டு என்கிற கிருஷ்ணகுமார்: யாழ்ப்பாணம் தளபதியாக இருந்தவர். இவரின் தாயார் ராஜலட்சுமி தமிழரசுக் கட்சியின் மாதர் பிரிவில் தலைவராக இருந்தவர். கிட்டுவுக்கு ஒரு வயது நடக்கையில், அறப்போராட்டத்தில் அம்மாவுடன் சிறை சென்றவர் (1961இல்), பின்னர் 1987-இல் யாழ் நகரை சிங்கள ராணுவப் பிடியில் இருந்து மீட்டவர். சிங்கள ராணுவத்தை யாழ் கோட்டைக்குள்ளேயே சுருண்டு கிடக்கச் செய்தவர். ஒரு சமரில் தனது காலை இழந்தார். 1993-இல் இந்தியக் கடற்படையினரிடம் சிக்கி, மரணத்தைத் தழுவினார்.

  மாத்தையா என்கிற மகேந்திர ராஜா: வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். வெளிநாடு போக இருந்தவர் பிரபாகரனால் ஈர்க்கப்பட்டார். மென்மையாகப் பேசுவார். பிரபாகரனுடன் நீண்டநேரம் உரையாடும் உரிமை பெற்றவர்களில் ஒருவர். பிரேமதாசா-விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்கிற அரசியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். வவுனியா தளபதியாக இருந்தார். கிட்டுவுக்குப் பிறகு யாழ்ப்பாணப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

  சங்கர்: பிரபாகரனின் பால்யகால நண்பர். மெய்க்காப்பாளர்களில் ஒருவர். வல்வெட்டித் துறையில் 1982-இல் சங்கர் தங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்ததும், அந்த வீட்டில் இருந்து தப்பிக்கும்போது, வயிற்றில் குண்டு பாய்ந்தது. மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பிரபாகரன் சங்கரின் கையை எடுத்து, தன் கையில் வைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கையிலேயே, அந்த இருபத்திரண்டு வயது இளைஞனின் உயிர் பிரிந்தது. அவர் உயிர்த் துறந்த நவம்பர் 27-ஆம் தேதி, மாவீரர் தினமாக அறிவிக்கப்பட்டது.

  கேபி (எ) பத்மநாதன்: குமரன் பத்தன், கேபி, குட்டி என்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் பத்மநாதன் மயிலிட்டியைச் சேர்ந்தவர். சர்வதேச நடவடிக்கைகளுக்காக இவர் பணிக்கப்பட்டார். ஆயுதங்கள் பற்றிய விவரம் இவரது விரல் நுனியில்; கொள்முதல் பொறுப்பாளர்.

  கரிகாலன்: திருகோணமலையைச் சேர்ந்தவர். பள்ளியில் இருந்து நேரே பிரபாகரனிடம் வந்தவர். பிரேமதாசாவுடன் அமைதி உடன்பாடு ஏற்பட்டபோது எதிர்த்தவர். பிரபாகரனுடன் நேரடியாக வாதிக்கும் உரிமை பெற்றவர்.

  அன்டன் பாலசிங்கம்: வடமராட்சியைச் சேர்ந்தவர். வீரகேசரி, பிரிட்டிஷ் தூதரகம் முதலியவற்றில் பணிபுரிந்தவர். அந்த வேலையை விட்டுவிட்டு லண்டன் சென்றார். அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். லண்டனில் மாணவர் பேரவைக் கிளையில் பங்காற்றினார். பிரபாகரன் தொடர்பு கிடைத்ததும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை வகுப்பாளராக, அரசியல் ஆலோசகராக மாறினார். ஆங்கில வெளியீடுகள் அனைத்திலும் இவரது பார்வை இருக்கும். சமரசப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்.

  பொட்டுஅம்மான் (எ) சிவசங்கரன் சிவலிங்கம்: அரியாலையைச் சேர்ந்தவர். பதினெட்டு வயதில் இருந்தே மாணவர் பேரவையில் பங்கு பற்றினார். தெற்காசியா மட்டுமல்ல வட, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், கீழைத் தேசங்களின் அரசியலும் அத்துப்படி. புலனாய்வில் புலி. இவர் கணிப்பு என்பது இயக்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கும். பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர், இவருக்கும் பிரபாகரன்தான் நம்பிக்கை.

  சுப. தமிழ்ச்செல்வன்: தென்மராட்சியைச் சேர்ந்தவர். பின்தங்கிய சமூகத்தவர். பொதுவுடைமைவாதி. கிட்டுவுக்குப் பிறகு அதிகார பூர்வ யாழ் பொறுப்பாளர் ஆனார். அரசியல் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆகி, அன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து பணியாற்றி பேச்சுவார்த்தைகளிலும் பங்கு பெற்றார். ஸ்ரீலங்கா ராணுவத் தாக்குதலில் மரணமடைந்தார்.

  காசி ஆனந்தன்: மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 7 ஆண்டுகள் கண்டியிலும் கொழும்பிலும் இலங்கை அரசின் சிறைகளில் வாடியவர். தமிழீழம் என்ற சொல், தமிழ் விடுதலைப்புலிகள் என்ற இயக்கப்பெயர் யாவும் இவர் தந்தவை. பிரபாகரனின் நெருங்கிய சகா. “மாமனிதர்’ என்ற பட்டம் பிரபாகரன் இவருக்கு வழங்கியது.

  1. Is Kasi Annathan is belong to Batticaloa what about his parents? V*T

   1. He is from Batti. Contested 1977 election under federal parrty (தமிழரசு கட்சி) and lost to Rajathurai. During this election Rajathurai contested under TULF. But TULF leaders supported only Kasi and not Rajathurai.
    Because of this reason Rajathurai joined UNP after the election and got ministerial position.
    Kasi’s wife is from Thondaimanaru.

  2. அண்ணை கிட்டு காதலி வீட்டிற்கு போய் வரும் வேளை மாத்தயாவால் குண்டெறிபட்டு காலை இழந்தார்.சமரில் அல்ல.சும்மா கண்டதையும் எழுத, கதைக்க இது தமிழ் நாட்டு அரசியல் அல்ல. கோவிக்க வேண்டாம் தமிழ்நாட்டு நண்பர்களே நீங்கள் எவ்வளவு வாசித்தாலும் உங்களால் புரியப் படாமலே எமதுபிரச்சனை இருக்கின்றது.

 21. “கிட்டுவுக்கு ஒரு வயது நடக்கையில், அறப்போராட்டத்தில் அம்மாவுடன் சிறை சென்றவர் (1961இல்), ”

  தயவு செய்து எந்தச் சிறைக்கு அனுப்பப்பட்டார் என்று தெரிவிக்க முடியுமா?

 22. அனுதாபம் தேடுகிறார்களா?எல்லா போராளிகளுக்கும் இதே வரலாறு உண்டு

 23. தம்பி’ எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!
  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
  பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
  பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
  மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
  ”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”
  ”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
  அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!
  எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!
  ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
  ‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
  போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
  ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
  பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
  பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!
  தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
  பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
  அநாதைக் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
  ‘உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!
  பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!
  பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
  தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”
  ”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்!
  ‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!
  (நன்றி: ஆனந்த விகடன்)

  – திருமாவேலன்

  1. ‘நிஜங்கள் எப்பொழுதும் இருட்டறையில் இருப்பதில்லை’

   இதற்கு காலங்கள்தான் பதில் சொல்லும் …

   (முள்ளிவாய்க்கால் கனவு போல…)

   ரூபன்

   040410

   1. ரூபன்! வெந்த புண்ணில் வேல் தொடர்ந்து பாச்சாதீர்கள். உங்களுக்கு விளங்குமென எண்ணுகிறேன். சொந்த அனுபவம் ஏதேனும் கசப்பாக இருந்தால் இங்கு எழுதுங்கள், பாவவிமோசனம் கிடைக்குமா எனப்பார்ப்போம்.

    1. சூரியா, என்னிடம் வேலெதுவும் இல்லை. அதுவும்போக, இது யாரொருவரையும் தைப்பதற்கு இது தனிமனித வரலாறுமல்ல.!எனக்கோ உனக்கோ என்றில்லாமல் வரலாறுகள் மக்களுக்காக: உண்மைகளை மட்டுமே பேச எத்தணிக்க வேண்டும். அதுதான் எழுதினேன். புரிகிறது … அமிர்தத்தில் விசமும் கலந்திருந்தது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே.. (வரலாறுகள் தனிமனிதனுக்கு என்றால், இந்த வியாபாரத்தில் எனக்கு உடன்பாடில்லை!)

     ரூபன்
     040410

     1. முள்ளிவாய்க்காலில் தனி ஒரு மனிதன் அழிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பல மனிதர் படும் வேதனயை இட்டுத்தான் நான் கருத்து எழுதினேன். முள்ளிவாய்க்கால் மிகப்ப பெரும் அவலம், இதைத் திரும்பத் திரும்ப குத்திக்காட்டுவதால் என்ன பயன்? யாருக்குத் தெரியும் உண்மை? உண்மை பேச அங்கு அவலப்பட்ட மக்களுக்குத்தான் உரிமை உண்டு.

     2. கீழே உள்ளவற்றுக்கு:—

      சூரியா என்னவோ தெரியவில்லை உனக்குப் பதிலளிக்க முடியில்லை. உனது பேருக்கு பின் … (கருத்துக்குப்பின்) … ( Reply) உடன் வரவில்லை!

      ”யாருக்குத் தெரியும் அந்த உண்மை!…”

      அந்த மக்கள் சாகும் வரை வெளிநாட்டில்
      துள்ளிக் குதித்ததை நான் மறக்கமுடியாது…

      (இப்பொழுது ‘கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்’ தேவையற்ற ஒன்று)

      இப் பின்னூட்டம் ஏறுமா என்பதே எனது தடுமாற்றம்….

      இந்த நிமிடம் வரை நடந்த ‘திருகுதாளங்களும்’ வரலாறுதான்!

      ரூபன்
      050410

 24. Wednesday, January 20, 2010
  தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (1)

  1986 ஆம் ஆண்டு. பிரபாகரன் உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) தனிப் பெரும் இயக்கமாக உருவான ஆண்டு.

  பத்பநாபா, சீறீ சபாரெத்தினம், பாலகுமார், உமா மகேஸ்வரன் எங்கே போனார்கள்? மற்ற இயக்கங்கள் என்னவாயிற்று?

  இன்று வரையிலும் முழுமையான புரிதல்கள் இல்லாமல் பிரபாகரன் மேல் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளை சற்று உள்வாங்கிவிடலாம். காரணம் இப்போதைய சூழ்நிலையில் இந்தியா பிரபாகரன் மேல் கொலை வெறி பார்வை பார்த்துக்கொண்டுருக்கிறது. திம்பு, பெங்களூர் பேச்சுவார்த்தை என்று எல்லாமே தோல்வியில் முடிந்து கொண்டுருப்பதால் ஜெயவர்த்னே நமுட்டுச் சிரிப்பும், ராஜீவ் காந்தி தடுமாற்ற சிந்தனைகளும், மொத்த இந்திய அதிகார வர்க்கத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் உள்ளுற புகைச்சலுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் சூழ்நிலை இது.

  பிரபாகரன் தலைமறைவு வாழ்க்கை தொடங்கிய இளவயது முதல், தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கை மூலம் வெளியிட்ட 1978 ஆம் ஆண்டு, ” மொத்த கொலைகளுக்கும் நாங்கள் தான் பொறுப்பு ” என்று உமா மகேஸ்வரன் கையெழுத்து போட்டு பத்திரிக்கையின் வாயிலாக அரசாங்கத்திற்கு தெரிவித்தது வரையிலும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட எந்த கொள்கையிலும் சந்தர்ப்பவாதம் என்பது இல்லாமல் மொத்த லட்சிய முன்வரைவாகவே நகர்த்திக்கொண்டு வந்தார்.

  1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு தன்னை விட மற்ற இயக்கங்களின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும், நிதி ஆதாரங்கள் தங்களை விட மேம்பட்டு இருந்த போதிலும் கூட தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளவில்லை. இனி சேர்ந்து செயல்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ஆன்டன் பாலசிங்கம் கொடுத்த அழுத்தம் கூட பல முறை யோசித்து, பல நாட்கள் கழித்து வேறு வழியில்லை என்பதாகத்தான் மொத்த மற்ற இயக்கங்களுடன் கை கோர்த்தார். எவருடனும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவும் இல்லை.

  ஆனால் இதே காலகட்டத்தில் ரா உள்ளே நுழைந்து சந்திரஹாசன் மூலம் டெலோ இயக்கத்தினர், அதனைத் தொடர்ந்து மற்ற இயக்கங்களுக்கு கிடைத்த இந்திய மரியாதை யோசிக்க வைத்ததே தவிர கலக்கத்தை உருவாக்கவில்லை. பயிற்சி முக்கியம் என்பதாக தானாகவே ரா விரித்து வைத்திருந்த வலையில் போய் மாட்டிக்கொண்டார். ஜெயவர்த்னே ஒரு பக்கம், இந்தியா மறு பக்கம். இது போக வேறு வழியே இல்லாமல் இந்தியாவின் அதிகாரவர்க்கத்தினர் முன் கைகட்டி மண்டியிட வேண்டிய அவஸ்யம். அவர்களின் ஏச்சும், பேச்சும், அவமரியாதையும், மிரட்டலும் என்று எல்லாவகையிலும் மனோரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருந்ததும் உண்மை.

  ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்? ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டத்தான் தயாராய் இருக்கிறார்கள். காரணம் ரா வலைக்குள் உள்ளே நுழைய முயற்சித்த போது (தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் பொறுப்பாளராக இருந்து மற்ற இயக்கங்களுக்கு செயல்பட்டுக் கொண்டுருந்தவர்) கிடைத்த பாடம் மொத்தத்திலும் கொடுமையானது. ரா அதிகாரி கேட்ட முதல் கேள்வியே பிரபாகரனின் மொத்த கோபத்தையும் வெளியே காட்டும் அளவிற்கு இருந்தது. ” LTTE க்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமென்றால் மற்றவர்களைப் போல நீங்களும் சந்திரஹாசனை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்”. பிரபாகரன் கோபத்தை விட ஆன்டன் பாலசிங்கம் மனைவி அடேல் பாலசிங்கம் கூட பொங்கும் அளவிற்கு உருவாக்கியது.

  ஆனால் ரா உள்ளே நுழைந்து முதல் டெலோவிற்கு சிறப்பான பாதை உருவாகிக் கொண்டுருந்தது. அவர்களின் தைரியமும் அளவுக்கு மீறி வளர்ந்து கொண்டுருந்தது. மொத்தமாக நிதி உதவி என்று வேறு ஒரு தளத்திற்கு அவர்களை மாற்றி தங்களுடைய ஏவலாளிகள் போல் மாற்றிக்கொண்டுருக்க ஒவ்வொரு இயக்கத்தின் செயல்பாடுகளும் இயல்பான போராளிக்குழுக்களின் வாழ்க்கையில் இருந்து மாற்றம் பெறத் தொடங்கியது. ஆடம்பரம், தான்தோன்றித்தனம், இந்தியா தங்களுடன் இருக்கும் வரை வேறு யாரும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது, இந்தியா உதவியுடன் எதிர்காலத்தில் சிறப்பான இடத்தை அடைந்து விடமுடியும், என்று ஒவ்வொருவரும் தனக்குண்டான எதிர்கால அபிலாஷைகளுடன் முன்னேறிக்கொண்டுருந்தனர்.

  இது போக மனதிற்குள் இருக்கும் ” நான்” ” தான் மட்டும்” என்ற இந்த இரண்டு மன அழுக்கு பல அசிங்கமான பாதையில் பயணிக்க வைத்தது. பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுதல், மிரட்டுதல், கொலை, கொள்ளை, வழிப்பறி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் இது போக மற்ற இயக்கங்களை வம்புக்கு இழுத்து அழித்தல், குறிப்பிட்ட பகுதியில் தங்களுடைய ஆளுமைய நிலைநாட்டியவர்கள் அதன் தொடர்ச்சியாக மற்ற பகுதிகளுக்கும் நகர்த்தும் போது, உருவான பல பிரச்சனைகளையும் கண்டும் காணாமல் முன்னேறிய போது தான் மொத்தமாக பிரபாகரன் பார்வை அவர்கள் மேல் பட்டது. காரணம் இதைத்தான் ரா வெகுநாளாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது. போராளிகள் இருக்க வேண்டும். ஆனால் வளரக்கூடாது. ஒருவருடன் ஒருவர் ஒற்றமையாக இருக்கக்கூடாது. இப்போது நாம் இந்த ஒவ்வொரு ரத்தச் சகதியிலும் கால்வைத்து மேல் நோக்கி நகரலாம்.

  முதலில் உமா மகேஸ்வரன். (PLOTE)

  பிரபாகரன் வளர்ச்சிக்கு எத்தனையோ அடி உரமாய் இருந்து இருக்கின்றனர். தொடக்கத்தில் ராகவன் போல,

  இந்த உமா மகேஸ்வரன் இயக்கத்தை ஒரு தெளிவான பாதைக்கு, மக்கள் இயக்கமாக, உலகளாவிய மற்ற நாடுகள் அங்கிகரிக்கும் அளவிற்கு இறுதி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பியவர். நல்ல புத்திசாலி, படிப்பாளி, தீர்க்கமான சிந்தனை உள்ளம் படைத்தவர். ஆனால் பிரபாகரன் கொண்டு வாழ்ந்த தனி மனித ஒழுக்கம் என்பதில் அடிபட்டு ஒதுங்கிப் போனவர். பெண்ணாசை காரணமாக இருவரும் பிரிந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை. பிரபாகரன் கொள்கையின் படி இயக்கத்தில் இருந்து பிரிந்து வேறு இயக்கம் தொடங்கக்கூடாது என்பதையும் மீறி PLOTE இயக்கம் தொடங்கி, வெவ்வேறு பாதையில் இருவரும் பயணித்தனர். ஆனால் உமா மகேஸ்வரன் விரும்பிய ஜனநாயக பாதையே அவரின் ஓட்டுநர் மூலம் அவர் உயிரை பறித்தது. இந்த இடத்திலும் ரா திருவிளையாடல் இருக்கிறது. அதை பிறகு பார்க்கலாம். ஏற்கனவே தொத்தலாக போய்க்கொண்டுருந்த இயக்கம் மெதுமெதுவாக தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. சென்னையில் ஆன்டன் பாலசிங்கம் முன், பிரபாகரன் கொடுத்த சத்தியத்தை கடைசி வரையிலும் உமா மகேஸ்வரன் விசயத்தில் காப்பாற்றியது முதல் ஆச்சரியம்.

  உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதியான ” இனி நான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரின் மீது சொந்தம் கொண்டாட மாட்டேன்”. இதைப் போலவே பிரபாகரன் ” நான் உமா மகஸ்வரன் விசயத்தில் தலையிட மாட்டேன். என்னால் எந்த பிரச்சனையும் வராது”.

  இயக்கத்திற்கான ஒழுக்கக் கோட்பாடுகள் என்று ஏழு கட்டளைகள் போல் வகுத்து இருந்தாலும் பிரபாகரனை பொறுத்தவரையில் தானும் மீறுவதில்லை மீறுபவர்களையும் பொறுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் பிரபாகரனை எதிர்ப்பவர் எவரும் உயிருடன் வாழ முடியாது என்ற குற்றச்சாட்டுக்கும் சில விளக்கங்கள்.

  தொடக்கத்தில் இயக்கத்தை புணர் நிர்மாணம் செய்தவர்களில் முக்கியப் பங்காற்றியாற்றியவர் ராகவன். இவர் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். பிரபாகரனுக்கு சிகரெட்டின் வாடை கூட பிடிக்காது. மரியாதையின் காரணமாக அனுமதித்த முதல் நபர் ராகவன். இவரும் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து பின்னாளில் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தவர். பின்னால் வந்த ஆன்டன் பாலசிங்கம் கூட இந்த சிகரெட் பழக்கத்தை விட முடியாமல் தவித்தவர். இறுதிவரையிலும் இவர்களின் தனிப்பட்ட பழக்கங்களை பிரபாகரன் பொறுத்துக்கொண்டார் என்பது அடுத்த ஆச்சரியம். இதன் தொடர்ச்சியாக பின்னால் வரப்போகும் மாத்தையா முதல் கருணா வரைக்கும். பிரபாகரன் நினைத்து இருந்தால் கருணா ஒரு பொருட்டே அல்ல. பொட்டு அம்மன் சொல்லியும் கேட்காத பிரபாகரன் கருணாவுக்கு வழங்கியது ஏறக்குறைய உயிர்ப்பிச்சை. காரணம் கருணாவின் வீரம் அந்த அளவிற்கு பிரபாகரனை ஆளுமை செய்து இருந்தது. எப்போதே தோன்றும் இந்த இரக்க உணர்வு தான் மொத்த வாழ்க்கையையும், தமிழர்களின் வாழ்வுரிமையும் இன்று கேள்விக்குறியாக்கி இருக்கிறது?

  மாத்தையா மீது பொட்டு அம்மன் உளவு அறிந்து கொண்டுவரப்பட்ட செய்திகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைத்த போதிலும் அவர் தரப்பு அத்தனை வாத பிரதிவாதங்களையும் அனுமதித்து பிறகு தான் தண்டணை நிறைவேற்றப்பட்டது. முதன் முறையாக மொதுமக்கள் முன்னிலையில் அறிக்கை வாசிக்கப்பட்டது.

  ஒரே காரணம் திறமையாளர்களின் பங்களிப்பு என்பது சில சமயம் பாறை மனதில் விதை முளைக்கும் என்பதை நிரூபிக்கும் ஆதாரம்.

  மாத்தையாவின் விசுவாசம் என்பதும், அவருடைய திறமை என்பது அளவிடற்கரியது. ஆயுதப்பயிற்சிக்காக பிரபாகரனை தமிழ்நாட்டில் வைத்து ரா உளவுத்துறையுடன் நேரிடையாக சந்திக்க வைக்க ஆன்டன் பாலசிங்கம் முயற்சித்த போது, அப்போது தி நகரில் காவல்துறை பிரச்சனைகளும், பின்னாளில் இலங்கைக்குச் சென்றதும், இதன் தொடர்ச்சியாக காவல்துறை மீண்டும் தன்னை கைது செய்து விடுமோ என்று பயந்த பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார். மீண்டும் அழுத்தம் கொடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க பிரபாகரன் சார்பாக தமிழ்நாட்டுக்கு வந்தவர் மாத்தையா. வேலை முடிந்தது மாத்தையா அன்று பாலசிங்கத்திடம் சொன்ன வாசகம் இது.

  ” தலைவருக்கும் ஏதாவது ஒன்று என்றால் நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள்”

  இதே இந்த மாத்தையா கூட உளவுத்துறையின் திருவிளையாடல் காரணமாக மரணிக்க நேர்ந்தது. பின்னால் வரும் சம்பவங்கள் மூலம் அதை கண்டு உணரலாம்.

  பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதல் ஒரே சொல். ஒரே வார்த்தை.ஒரே நோக்கம்.

  ஆங்கிலத்தில் சொல்வார்களே? Why Should I Compromise?

  இரண்டாவது சிறீ சபாரெத்தினம்.

  பிரபாகரனின் தொடக்க போராட்ட காலத்தில் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த போது குட்டிமணி தங்கதுரை உருவாக்கி இருந்த டெலோ இயக்கத்தில் தான் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தார் என்று சொல்வதை விட பிரபாகரன் திறமைக்காக அவர்களே இவரை அழைத்தனர் என்பது தான் உண்மை. வயதில் சிறியவர் என்பதால் செல்லமாக அழைக்கப்ட்ட தம்பி என்ற பெயரே காலம் முழுக்க நிலைபெற்றது. சொல்லப்போனால் அவர்களுடன் போய் பணியாற்றிய போது, துப்பாக்கிகள் பற்றிய முழுமையான அறிவு, இயக்கத்திற்கான மொத்த எதிர்கால நோக்கங்கள் என்று எல்லாமே கற்றுக் கொண்ட நிகழ்வுகள் நடந்தது. ஆனால் தன்னுடைய மனதில் அடைகாத்து வைத்திருந்து, தனக்கு பிடித்தமான தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை விட மனதில்லாமல் பின்னாளில் உமா மகேஸ்வரனை இணைத்துக்கொண்டு தனக்குச் சமமான பதவியையும், மரியாதையும் அளித்து மொத்தமாக தன்னுடைய இயக்கத்தை வளர்ப்பதில் உறுதியாய் இருந்தார்.

  ஒவ்வொரு காலகட்டத்திலும் “பிரபாகரன் சர்வாதிகாரி” என்று ஒவ்வொருவரும் ஒதுங்குவதும், தூற்றுவதும் நடந்து கொண்டுருந்த போதிலும் தன்னுடைய பாதையில் மட்டும் கவனமாக முன்னேறிக்கொண்டுருந்தார். அடுத்த வேளை சோற்றுக்குக்கூட கடினமாக வாழ்ந்து கொண்டுருந்த காலகட்டம் அது. ஆனால் வெளியேறிவர்கள் தூற்றுதலை அதிகப்படுத்தியதும், வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் மொத்தமாக பிரபாகரன் குறித்து அவதூறுகளை பரப்பிய போது, எச்சரிக்கைகளையும் மீறி தொடர்ந்து கொண்டே இருந்த போது தான் எதிரிகளை நோக்கி பிரபாகரனின் துப்பாக்கி ரவை பேசியது.

  ஆனால் டெலோ இயக்கத்தில் சிறீ சபாரெத்தினம் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதற்கு சில காரணங்கள். தொடக்கம் இப்படித் தான் தொடங்கியது.

  TELO FLAG

  ” 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி விடுதலைப்புலிகள் பயணம் செய்த படகை இலங்கை இராணுவம் சிறைபிடித்தது. அதில் இருந்தவர் சிறீ சபாரெத்தினத்தின் உறவினரும், பிரபாகரனின் வலது கரமான மட்டக்களப்பு மேஜர் அருணா கொல்லப்பட்டார். அதன் துக்க சுவரெட்டிகளை டெலோ இயக்கத்தினர் கிழித்து எறிந்ததும், கடையடைப்பு நடத்திய மக்களை மிரட்டியதும், இதைக் கேட்கப் போனவர்களை உதைத்து அனுப்பியதும், சிலரை (லிங்கம் )சுட்டுக்கொன்றதும் நடந்தது”.

  ஆனால் விடுதலைப்புலிகளின் கோட்பாட்டின்படி பிடிபடும் போது சயனைடு சுவைத்து உயிர் இழப்பது தான் கொள்கை. அதையும் மீறி அருணாவை இராணுவத்தினர் உயிருடன் தான் பிடித்து வைத்து இருந்தனர். ஆனால் அதுவரைக்கும் டெலோ மேல் கொண்டுருந்த கசப்பான நிகழ்வுகள் இதை தொடக்கமாக வைத்தும், ரா உளவுத்துறையுடன் கொண்டுருந்த நெருக்கமான புரிந்துணர்வுகளுக்காக காலத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்தார் என்பது தான் முற்றிலும் உண்மையாக இருக்க முடியும். மேலும் அவர்களின் தினசரி மோசமான நடவடிக்கைகள் அத்தனையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுருந்தது.

  கெட்ட நேரம் வரும் போது சிந்தனைகளும் மழுங்கிப்போகும் என்பது போல் டெலோ அமைப்பினர் வெறியாட்டம் நடத்திக்கொண்டுருந்தனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், தங்களுடைய ஆதிக்கத்தை மட்டும் நிலை நிறுத்துதல், கடத்திச் சென்று கதற அடித்தல் என்று இது போல மூன்றாந்தர அத்தனை வேலைகளையும் நடத்திக்கொண்டுருந்தனர். இதன் தொடர்ச்சியாக தேடித்தேடி டெலோ இயக்கத்தினர் அத்தனை பேர்களையும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கி ரவை தின்று தீர்த்தது. இறுதியில் ஓளிந்து வாழ்ந்த சிறீ சபாரெத்தினத்தை, விடுதலைப்புலிகள் மக்களுக்கு கொடுத்துருந்த அச்சுறுத்துதல் காரணமாக புகலிடம் எவரும் கொடுக்க மறுக்க, புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை யாழ் தளபதி கிட்டு வெறி தீர மொத்த (28) தோட்டங்களும் சீறிப் பாயும் அளவிற்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சிறீ சபாரெத்தினம் கெஞ்சிய உயிர்பிச்சை காற்றில் கரைந்து மறைந்தது.

  எண்ணம் உள்ளே இருந்ததை வெளிக்கொண்டு வர உதவியதும், அதுவே இறுதியில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட உதவியதும் என்று நடந்தேறியது. இரண்டும் முக்கியக் காரணம். பிரபாகரனின் சுயநலமும் மக்களின் பொதுநலமுமாக, டெலோ இயக்கம் முடிவுக்கு வந்தது.

  டெலோ அழிக்கப்படாமல் இருந்தால் என்ன நடந்து இருக்கும்?

  ரா உளவுத்துறையின் ஆதிக்கம் இன்னும் அதிகமாக தொடக்கம் முதலே வலுப்பட்டு இருக்கும்.

  சிறீ சபாரெத்தினம்

  இலங்கைக்கும், பிரபாகரன் இயக்கத்திற்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து இருக்கும்.

  இயக்கத்தின் கொள்கைகள் என்று மொத்த நாலாந்தரமான அத்தனை கீழ்த்தரமாக செயல்பாடுகளும் நடந்தேறி மொத்த மற்ற போராளிகுழுக்களுக்கும் உலக மக்களிடம் வெறுப்புணர்வை உருவாக்கியிருக்கும்.

  பிரபாகரன் இலங்கையுடன் போராடி ஜெயிப்பதை விட இவர்களைப் போன்றவர்களிடம் போராடுவதும், பின்னடைவுகளை சந்திப்பதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டுருந்துருக்கும். பின்னாள

  1. உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதியான ” இனி நான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரின் மீது சொந்தம் கொண்டாட மாட்டேன்”. இதைப் போலவே பிரபாகரன் ” நான் உமா மகேஸ்வரன் விசயத்தில் தலையிட மாட்டேன். என்னால் எந்த பிரச்சனையும் வராது”.

   இந்த உறுதி மொழி பிரபாகரனால் காப்பற்றபடவில்லை 85 இல் சென்னை தமிழர் தகவல்நடுவகத்திற்கு வந்த உமாவை புலிகள் கடத்த முற்பட்டு அது முடியாமல் போகவே கண்ணனை கடத்தி சென்று பின் மோகனதாசின் கட்டளையின் படி அவரை விடுவித்தனர். அந்தநேரத்தில் புலிகளின் பிரதான வசிப்பிடமாக பெசன்ற்நகர் இருந்தது அதில் ஒன்றில்தான் பிரபாகரன் இருக்கிறார் என்ற உளவு தகவலை வைத்து கந்தசாமி என்ற சங்கிலி புலிகளின் அத்தனை வீடுகளையும் தாக்க முற்பட்டார் ஆனால் உமாவால் அது தடுக்கப்பட்டது.

   பிறிதொரு சம்பவத்தில் “குருதியில் பூத்த தமிழீழம்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த உமாவை கொல்வதற்கு பொட்டு இருவரை அனுப்பியிருந்தார். அவர்களிருவரும் தமிழக இரகசிய போலீசார் போல்நடித்த புளட் உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்டனர்.

   1. உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதியான ” இனி நான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரின் மீது சொந்தம் கொண்டாட மாட்டேன்”. இதைப் போலவே பிரபாகரன் ” நான் உமா மகேஸ்வரன் விசயத்தில் தலையிட மாட்டேன். என்னால் எந்த பிரச்சனையும் வராது”.

    இந்த உறுதி மொழி பிரபாகரனால் காப்பற்றபடவில்லை 85 இல் சென்னை தமிழர் தகவல்நடுவகத்திற்கு வந்த உமாவை புலிகள் கடத்த முற்பட்டு அது முடியாமல் போகவே கண்ணனை கடத்தி சென்று பின் மோகனதாசின் கட்டளையின் படி அவரை விடுவித்தனர். அந்தநேரத்தில் புலிகளின் பிரதான வசிப்பிடமாக பெசன்ற்நகர் இருந்தது அதில் ஒன்றில்தான் பிரபாகரன் இருக்கிறார் என்ற உளவு தகவலை வைத்து கந்தசாமி என்ற சங்கிலி புலிகளின் அத்தனை வீடுகளையும் தாக்க முற்பட்டார் ஆனால் உமாவால் அது தடுக்கப்பட்டது ……………….plot sulipurathil ltte help us7 perai poduthali mannukkulai thadankalai 1984 ….athu ena mathiti

  2. பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதல் ஒரே சொல். ஒரே வார்த்தை.ஒரே நோக்கம்.

   ஆங்கிலத்தில் சொல்வார்களே? Wக்ய் ஸ்கொஉல்ட் ஈ Cஒம்ப்ரொமிசெ?

   ஒரே நோக்கம் பராட்டபடவேண்டியது தலைவனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமானவற்றில் ஒன்று. ஒரே சொல் ஒரே வார்த்தை என்ற வரட்டு பிடிவாதம் இன்று நம்மெல்லோரையும் எங்கு கொண்டு போய் விட்டிருக்கிறது. ஒரே சொல் ஒரே வார்த்தை குழுத்தலைவர்களுக்கு ஒத்து வரும் ஆனால் ஓர் இனத்தின் தலைவனுக்கு அரசியல் சாணக்கியம், ராஜதந்திரம், தொலைனோக்கு பார்வையிருக்க வேண்டும்.

   1. அப்ப நீங்கள் போய்ச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே? காலத்தை வீணாகி விட்டீர்கள்!

    1. நான் காலத்தை வீணாக்கவில்லை. என் வாழ்நாளை சேமித்திருக்கிறேன். கூடவிருந்த ஆலோகசர்களுக்கு என்ன நடைமுறையென்று நீங்கள் அறியாததா? அடுத்த இரண்டு தலைமுறையை கணிக்கும் தீர்க்கதரிசியின் வாரிசுகள் அல்லவா?

  3. கெட்ட நேரம் வரும் போது சிந்தனைகளும் மழுங்கிப்போகும் என்பது போல் டெலோ அமைப்பினர் வெறியாட்டம் நடத்திக்கொண்டுருந்தனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், தங்களுடைய ஆதிக்கத்தை மட்டும் நிலை நிறுத்துதல், கடத்திச் சென்று கதற அடித்தல் என்று இது போல மூன்றாந்தர அத்தனை வேலைகளையும் நடத்திக்கொண்டுருந்தனர். இதன் தொடர்ச்சியாக தேடித்தேடி டெலோ இயக்கத்தினர் அத்தனை பேர்களையும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கி ரவை தின்று தீர்த்தது. இறுதியில் ஓளிந்து வாழ்ந்த சிறீ சபாரெத்தினத்தை, விடுதலைப்புலிகள் மக்களுக்கு கொடுத்துருந்த அச்சுறுத்துதல் காரணமாக புகலிடம் எவரும் கொடுக்க மறுக்க, புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை யாழ் தளபதி கிட்டு வெறி தீர மொத்த (28) தோட்டங்களும் சீறிப் பாயும் அளவிற்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சிறீ சபாரெத்தினம் கெஞ்சிய உயிர்பிச்சை காற்றில் கரைந்து மறைந்தது.

   ரெலோ நடத்தியதாக சொல்லப்படும் பெரிய கொள்ளைகளை நடத்தியது புலிகள் தெல்லிப்பழை அம்மன் கோவில், யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் நல்ல உதாரணம். —— கெஞ்சிய உயிர்பிச்சை முள்ளிவாய்க்கால் காற்றில் கரைந்து மறைந்தது.

   1. ரெலோ நடத்தியதாக சொல்லப்படும் பெரிய கொள்ளைகளை நடத்தியது புலிகள் தெல்லிப்பழை அம்மன் கோவில், யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் நல்ல உதாரணம். —— கெஞ்சிய உயிர்பிச்சை முள்ளிவாய்க்கால் காற்றில் கரைந்து மறைந்தது.

    சரி மாமணி ரெலோ இரண்டாகப்பிரிந்து யாழ் ஆஸ்பத்திரியில் சுடுபட்டார்களா? முக்கியமாக துர்க்கை அம்மன் கோவில் கொள்ளை, ச்மூகவிரொத செயல் களுக்கு ரெலோவின் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனரா? புலிகளை அழிக்க ரெலோ திட்டம் தீட்டினரா? நேர்மையான பதிலை எதிர்பார்கிரேன்

    1. தாஸ் குறூப்பை  பேசக்கூப்பிட்டு   பொபி குறூப் ஆஸ்பத்திரியில் வைத்து போட்டுத்தள்ளியது.
     தாஸ் குறூப் சார்பாகநியாயம் கேட்டு தாஸ் ஆதரவாளர்கள்  ஊர்வலம் போனார்கள். அவர்கள் மீது க்ரனைட் ஒன்றும் வீசப்பட்டது.அதன் மீது ஒரு பையன் விழுந்து படுத்தான். வெடிக்கவில்லை    தப்பினார்கள்.
     தாஸ் சுயாதீனமாக இயங்க தொடங்க போட்டுத்தள்ளி விட்டார்கள்.இரு தாக்குதல்களை செய்திறுந்தார்கள்.

    2. mamani நல்ல நேரம் வரும்வரை பார்த்துக்கொண்டு இருக்கிறார். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

     1. சூர்யா!
      மா மணியிடம் இருந்து இதுவரை பதில் இல்லை விடியும் வரை காத்திருந்தேன் சூரியனும் உதித்துவிட்டது (Sun rise).
      காலையில் ரேடியோவில் பொங்கும் பூங் குனலும் கேட்டாகி விட்டது அடுத்த பொங்கலுக்கு முதல் பதில் கிடைக்குமா?

    3. ரெலோவிற்கு வக்காலத்து வாங்க நான் வரவில்லை.
     மாத்தையா பிரபாகரனை கொல்ல திட்டமிட்டாரா? கருணா பிரபா மீது சாடும் குற்றங்கள் உண்மையானவையா? புலிகள் முழுக்க இந்திய எதிரிகளா? இந்திய ஆதிகத்தை மழுங்கடிப்பதற்காகவேயா ரெலோவை புலிகள் அழித்தனர்? கேள்விகளில் உங்கள் பதில்.

  4. அனுப்பக் கூடிய இணைய தளங்களிற்கு அனுப்பியுள்ளேன் பார்ப்போம் எத்தனை பேர் போடுகிறார்கள் என்று.

   kuzk; njUf;fspy; Jtf;Fld; jpupe;jJ
   1986k; tUlk;
   jkpoPo tpLjiy ,af;f (nuNyh)Nghuhspfis
   <dj;jdkha; Rl;Lk;
   capNuhL lau; Nghl;Lf; nfhOj;jpAk;
   gidNahL fl;b itj;J nuhf;fl; NyhQ;ruhy; rpjwbj;Jk;
   rNfhju ,af;fj;ij mopj;njhopj;j
   Gypfspd; muh[fj;ijAk;
   gjtp Nkhfj;ijAk; tpku;rpj;J
   md;iwa jUzj;jpy;
   Nghuhspf; ftpQd; ef;fPud;
   vOjp ntspapl;l ghly;.
   24 tUlq;fspd; gpd;
   fpilj;j ,e;jg; ghly;fis
   cq;fNshL gfpu;e;J nfhs;fpwJ #j;jpuk; ,izaj;jsk;.
   ghliyf; Nfl;f ,q;Nf mOj;jTk;.
   http://www.youtube.com/watch?v=3E11q7m8hTU&feature=player_embedded#
   mNj Mz;bd; ,Wjpapy; vq;falh mtd; ef;fPundz;l G+dh… mtd l;wf;fpy fl;b njUj;njUth ,Og;gd;” vd Nfl;Lf; Nfl;L fpl;ld; Nghuhspfis nfhLikg;gLj;jpa fijAKz;L.
   (ed;wp: capu;nka;)

   “ எங்கள் தோழர்களின் ஆத்மா சாந்திக்காக… ”

   கந்தன்கருணை படுகொலை எங்கள்
   கண்மணிகளை கருக்கிய படுகொலை
   காட்டு மிராண்டித்தனமான படுகொலை
   கருணை இல்லாத பாசிச புலிகளால்
   கண்ணீர்சிந்தவைத்த படுகொலை
   காவிய நாயகர்களின் கைகளை
   கட்டிவிட்டு புலிகள்கர்வம் காட்டிய படுகொலை
   கண்ணில் இருந்து மறையுமா இந்த
   காலச் சுவடுகள் பாசிச தலைவா??
   காலங்கள் உங்களுக்கு மட்டும்சொந்தமல்ல….
   கனிவான எங்கள் அரசியலை
   கண்சிமிட்டாமல் சிறிது வேளை
   கனிவுடன் உற்று நோக்கு
   கண்ணீர் சிந்தும் மக்கள் யார் பக்கம்
   கடவுள் பெயராலே அன்று
   கண்ணீர் சிந்த வைத்தவர்கள் இன்று
   கட்டிய கோமணமும் இழந்த நிலையில்….
   கடவுள் தீர்ப்பை பாத்தீரோ
   கந்தன் கருணை யார் பக்கம்
   கந்தன் கருணை யார் பக்கம்
   கவிய நாயகர்கள் எங்கள் தோழர்களுக்காக
   கண்ணீர்வடித்து நெஞ்சம் சுமக்கும் சுமையுடன்
   புரட்சிவேட்கை தோழமையுடன் —பாவரசன்—

   நன்றி! சூத்திரம் இணையம்

 25. தோட்டாவும் எதிர்வும் ஈஸ்டர் விடுமுறையில் சென்றுவிட்டார்களோ? ஐந்தாறு நாளக் காணக்கிடைக்கவில்லை?

  1. தோட்டா விடுமுறைக்குச் செல்லவில்லை. Anj கேட்டுக்கொண்டதால் மழை போகுமட்டும் வெயில் வரும்வரை காத்து இருக்கிறார். தமிழர்களின் வாழ்வில் வசந்தம் எங்கே வராமலா போகப்போகிறது!

   1. வணக்கம் Soorya
    நிச்சயம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை. எங்கள் இழப்புகளுக்கும் துயர்களுக்கும் நிச்சயம் விடிவு கிடைக்கும். காத்திருப்போம். மூன்று சந்ததிகளை இழந்து விட்டோம். நாலாவது சந்ததி புலம் பெயர் நாடுகளில் திக்கு தெரியாத திசையில் போய்க்கொண்டு இருக்கிறது. இவற்றை நினைக்கும் பொழுது சில சமயங்களில் மிகுந்த மனச்சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

    நன்றி

    1. //நிச்சயம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை// ஐயோ!!…ஐயோ!!.. ஐயோ!!.. இதுக்கெல்லாம் முதுகிலே தட்டி தைரியம் சொல்லுவதோடு நின்று விடாது. அப்படியே கதைத்து கதைத்து… உடம்பிலே குண்டைக்கட்டி அனுப்பிவிடுங்கோ… ஒரு 50 சிங்களவன் விளட்டும்./////நாலாவது சந்ததி புலம் பெயர் நாடுகளில் திக்கு தெரியாத திசையில் போய்க்கொண்டு இருக்கிறது ////ஐயோ!!…ஐயோ!!.. ஐயோ!!.. என்ன ஒரு கரிசனை?.. என்ன ஒரு அக்கறை?..அப்படியே அவர்களையும் திருத்தி அவர்களுக்கும் குண்டைக் கட்டரெடியாய் இருங்கோ?..கூப்பிட்டவுடன் வருவார்கள் ///சில சமயங்களில் மிகுந்த மனச்சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை//// ஐயோ!!…ஐயோ!!..ஐயோ! “அன்ஞ்” நீர் ஒரு கிழட்டு ரிவி பெட்டியை வைத்துக்கொண்டு ரொம்ப சினிமாக் காட்டுரீரே உங்க டிவியிலே எல்லாம் இனிமேல் சினிமா ஓடாது ராசா இப்போ எல்லாம் காலம் மாறிட்டுது. இனிமேல் பிளாஸ்மா டிவி- எல்சிடி டிவி- எச்சடி டிவி என்று வேற வேற டீவிக்கள் பவர்புள்ளாய வந்துட்டுது. நீங்கள் இப்பவும் அதே உல்ட்டாப்புக்களை விட்டுக் கொண்டிருந்தால் எப்படி?… நடிக்குறது றியலாய் இருந்தால்தான் சார் நம்புவாங்க. அப்படியே இவர்களுக்கு குண்டையும் சைனட்டையும் குடுக்குறதுக்கு றெடியா இருக்குறதோடு- உங்கள் பாதுகாப்புக்கு தேவையானவற்றையும் எடுத்து வையுங்கோ!!!! என்ன புரியலையா?… அத்தாம்ப்பா அந்த “வைள்ளைக் கொடி”

     1. அந்தப்பக்கமெல்லாம் ஒதுங்கவே இல்லை என்பதை எழுத்து காட்டி கொடுக்கிறது. நிரூபித்ததட்கும் நன்றி. இந்தமுறை முன்பக்கமும் வேக வேண்டும் என்று தீர்மானமே எடுத்தாச்சு போல. நாங்கள் என்னதான் செய்ய முடியும். தோட்டாவின் குடிலுடன் வந்து குப்புற படுத்து முனக எனது திண்ணையா கிடைத்தது. அதுதான் ஐயோ ஐயோ என்று சத்தம் வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் அம்மே(அம்மா அல்ல) அம்மே என்றும் சத்தம் வரும்.

      உங்களிடம் ஒரு கேள்வி. பாகம் பத்தில் பாலாவை, பாலாண்ணா என்று எழுதி இருந்தீர்கள் அவர் உங்கள் சொந்த அண்ணனா அல்லது ஓன்று விட்ட அண்ணனா. இதை முதலே கூறி இருந்தால் இப்படி எல்லாம் முனக வேண்டி வந்திருக்காதே.

      தனது அண்ணனை கசிப்பு குடித்தவன் புளிச்ச கள்ளு குடித்தவன் என்றெல்லாம் பலர் மத்தியில் திட்ட கூடாது கண்ணா.
      தப்பு கண்ணா தப்பு.
      அடிக்கடி சந்திப்போம்
      நன்றி.

     2. ///அந்தப்பக்கமெல்லாம் ஒதுங்கவே இல்லை/// மிஸ்டர் “அன்ஞ்” நீங்க எந்தப்பக்கத்திலே ஒதுங்குறதைப்பத்தி பேசுறீங்க என்றே தெரியலை பட் நாங்க எங்கே வேணுமென்றாலும் ஒதுங்குவோம் ஆனால் முள்ளிவாய்க்கால் பக்கம்மட்டும் ஒதுங்கவே மாட்டோம். ஒரு வேளை ஒதுங்கினாலும் ஒதுக்கப்படமாட்டோம். ஒருவேளை ஒதுக்கப்படப்போகின்றோம் என்று தெரிந்தால் கடைசிவரையிலும் “வெள்ளைக்கொடியோடு” போகவேமாட்டோம். ஒருவேளை வெள்ளைக்கொடியோடு போனாலும் கோமணத்தோடு நிக்கவேமாட்டோம். ஒரு வேளை கோமணத்தோடு நின்றாலும் “தலை”யை பிளந்து கிடக்கமாட்டோம். இப்போ தெரியுதா சார் நாங்க எந்தப் பக்கம் ஒதுங்குவோம் என்று?… அதே!..அதே!..அதே!!. அதேபக்கம்தான்… நீங்க நினைக்கிற அதே கோத்தபாய பக்கம்தான் நாங்க ஒதுங்கியிருக்கிறோம். என்ன?……எங்களுக்கெல்லாம் உடனே மண்டையிலே போட வேண்டும் போல் இருக்குமே?…. நான் மறுபடியும் சொல்லுகின்றேன் இப்படியான பிரச்சகைகளுக்கெல்லாம் உடனே உணர்ச்சிவசப்பட்டு உடம்பிலே குண்டைடைக்கட்டி என்னையும் சாகடிச்சு அனியாயத்துக்கு குண்டைக்கட்டினவனையும் சாகடிச்சு என்டை குடும்பத்தையும் நடுத்தெருவிலே கொண்டு வந்து விட்டு அவன்டை குடும்பத்தையும் நடுத்தெருவிலே கொண்டு வந்துவிட்டு கடைசியிலே முள்ளிவாய்க்காலில் போய் எல்லோரும் ஒதுங்க. இப்படியே எல்லோரையும் “சைனட்” கொடுத்து சாக்காட்டிப்போட்டு நீங்கள் மட்டும் வெள்ளைக் கொடியோடு போங்கோ என்னா?……. ஹி!..ஹி!.. இப்போ என்ன பிரச்சனையென்றால் எந்த வீட்டுத் திண்ணையிலே இருக்கின்ற “றேடியோ” புலிப்பாட்டுப்பாடுதோ அந்த வீட்டுத்திண்ணையிலே கேக்காமலே போய் குந்துறதுதான் என்ட “பாலிசி” பின்னே! இருக்காதா?… எல்லாம்….. நீங்கள் வன்னி மக்களைக் கொண்டுவந்து நடுத்தெருவிலே விட்டு விட்ட விசுவாசம்தானுங்கோ?… ஆமா!… நீங்க.. உங்க கசிப்பு பாலாண்ணையைப் பற்றியும் சொல்லி அப்படியே நான் முனகினதாகவும் ஏதோ சொல்லியிருங்கின்றீங்களே?… ஆனால் பாருங்கோ!… நான் இங்கே மூன்று சொல்லில் எழுத்து மூலம் முனகின அதே செயலை உங்க பாலாண்ணை தன்னுடைய காடைசிக்காலம் பூராவும் முனகினாரே?….. என்ன?. புரியலையா?.. அத்தாமப்பா புத்துநோய்வந்து முனகின முனகலைப்பத்திச் சொல்லுறேனுங்கோங்..கோங்..கோங்.. அது என்ன சார் முன்பக்கம் சிவந்தது பின் பக்ககம் சிவந்தது என்றே சொல்லிக் கொண்டேயிருக்கின்றீங்க எனக்கு இது எதுவுமே புரியலீங்கோ?.. எனக்கு புரிந்தது எல்லாம்…. மேல்பக்கம்… தலைக்கு மேல்ப்பக்கம் “பிளந்தது” மட்டும்தான் தெரியுமுங்கோ!… நீங்க தோட்டாவுக்கு “மழை” பற்றி பேசவேண்டாம் என்று சொல்லுவிட்டு நீங்கள் மட்டும் கண்டபாட்டுக்கு பேசுறீங்களே சார் இது நியாயமா?… நியாயத்தைப்பற்றி உங்களோடு பேசுவதற்கு செருப்பாலே அடிக்கவேண்டும் என்னை. அது என்னமோ சார் நியாயம் பத்தி பேசவெளிக்கிட்டாலே எனக்கு ஞாபகத்துக்கு வருவது -எங்களுக்கு “சைனட்” உங்களுக்கு வெள்ளைக் கொடியா?.. இதுதாம்ப்பா எனக்கு ஞாபகமாவருது நான் என்ன பண்ணட்டும்?…. ஹி!..ஹி!.. ஹி!… நான் இப்படியே எல்லாத்தையும் “பிரசர்” கூடுறமாதிரி உசுப்பேத்தி எழுதிப்போட்டு கடைசியிலே மன்னிப்புக் கேட்கா விட்டால் நால்லாருக்காது பாருங்கோ!…எனவே “அன்ஞ” அண்ணை.. அன்ஞ் அண்ணை!… நான் இப்படி.. இப்படி.. அப்படி!.. அப்படி!.. ஏதாவது தப்பா பேசியிருந்தால் ம..ன்;..னி..ச்..சி..ண்..டு..ங்..கோ!!!

 26. கோசலன் நீங்கள் கூறும் மார்க்சீய அனுகுமுறை பற்றிய நிலைப்பாடுதான் ஏற்றுக் கொள்ளக் கூடியது. நீங்கள் கூறும் நிலைப்பாட்டிற்கும் விமர்சன மார்க்சீயத்திற்கும் நிறைவே மாறுபாடு இருக்கின்றது. நீங்கள் கூறுவது புரட்சிகர நடைமுறைசார்ந்தது. மற்றையது இன்றைய சமூகத்தை ஆய்வு செய்வதன் ஊடாக நிலவுகின்ற முதலாளித்துவ நிறுவனங்களுக்கு தொண்டாற்றுவது. இவர்களே தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முண்டு கொடுக்கும் அறிவுப்பலம். இன்றைய முதலாளிய கல்வி நிறுவனங்களிடம் உருவாக்கப்படும் பல்முனை அணுகுமுறைக் கோட்பாடுகள் போல்தாம் விமர்சன மாக்சீயம். இதன் தமிழ் பிரதிநிதிகளை நாம் அடையாளம் கணடு கொள்ளவும் முடியும்.
  அமைப்பியல்வாதம் கட்டமைப்பு வாதம்நடைமுறைவாதம் போன்றே விமர்சன மாக்சீயமும் அது புரட்சிகரக் கோட்பாடாக இருக்கப் போவதில்லை. ஆனால் புரட்சியை ஏற்றுக் கொள்பவர்கள் அவர்களின் வளத்தை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ள முடியும் ஆனால் அதுவே புரட்சிகரமானது என்று வாதிடும் நிலைப்பாடு அபர்த்தமானது. அத்துடன் இவற்றை வரையறுக்காது புரட்சிகர நிலைப்பாடுகளில் உள்ளவர்கள் விமர்சனமார்க்சீயத்தை புரட்சிகர நிலைப்பாட்டிற்கு இணையாக விமர்சிப்பதும் தவறானதாகும். ஏனெனில் விமர்சன மாக்சீயம் புரட்சிகர மார்க்சீயம் இல்லை. இந்த கல்விசார் கோட்பாட்டாளர்களின் குதூகூல புதுக்கண்டுபிடிப்பாக சமூகத்திற்கு கொண்டுவரும் கோட்பாட்டு முனைப்புக்களில் அறிமுகப்படுத்தப் பட்ட பின்நவீனத்துவம் அல்லது மற்றைய அணுகுமுறை போன்றே விமாசன மார்க்கீயத்தை புரட்சிகரமாக காட்டி மாக்சீயத்தை மறுமலர்ச்சி செய்ய வேண்டும் அல்லது இலகுபடுத்துவது போன்ற கருத்தாடல்கள் எல்லாம் எதிர்ப்புரட்சிக் கூறே. எனவே தயவு செய்து புரட்சிகர மார்க்சீய அணுகுமுறையையும் விமர்சன மாக்சீயத்தையும் ஒன்றுபடுத்த வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

 27. சிங்கரா சென்னை(Madras) வாழ்வும் சீர் கெட்ட இயக்கங்களும்

  எண்பதின் நடுப்பகுதியில் சென்னை மந்தைவெளியில் காஸ்டலில் தங்கி அருகிலுள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.இலங்கை தமிழர் அதிகமாக அண்ணா நகர், கே.கே நகர்,பெசன்ட் நகர்,திருவான்மியூர்,விருகம்பாக்கம்,ஆழ்வார்திருநகர் போன்ற இடங்களில் சிறிதளவில் குடியிருந்தனர் .
  என்னைபோன்ற ஈழ மாணவர்கள் எப்ப சனி, ஞாயிறு வரும் தெரிந்த உறவினர்,நண்பர்கள் வீட்டுக்கு சென்று நம்மவர்களுடன் கதைத்து ஊர் உணவு உண்டு வரலாம் என ஆவலாய் இருப்போம்.ஊரில் இருந்தது போல ஊரடங்கு சட்டத்திற்கும்,ஆமி கெடுபிடிக்கும் பயந்து ஒடுங்கி இருக்கும் நிலை இருக்கவில்லை.சொல்லப்போனால்,தமிழக பிரஜையை விட அதி மரியாதையும்,அக்கறையும் சிலோன் தமிழர் மீது இருந்த காலம் அது அப்பொன்னான காலத்தை விபரிக்க முடியாது! ஆயினும், சில இயக்கங்களால் கெடுபிடிகள் பரவலாக சென்னையிலும் இருந்தது.(London gangs போல)
  இலங்கை தமிழன் என்பதை இவர்கள் எம் நடை,உடை பாவனை மூலம்( உ+ ம் பாட்டா செருப்பு அணிதல்,கறா ஜீன்ஸ்,சேட்டு கைமடிப்பு) அடையாளம் கண்டு .ஏன் வந்தாய்? எப்ப வந்தாய்? எந்த ஊர்? என்ன செய்கிறாய்? என்று விசாரணைகள் கொஞ்சம் எதிர்த்து கதைத்தால் குறைந்த்த பட்சம் காதைப்பொத்தி அறை வாங்க வேண்டிய நிலைமைகளும் அதற்கு மேலும் இருந்தன,… .இந்த அச்சம் காரணமாக போராளிகள் என்ற போர்வையில் உள்ள “பொறுக்கிகள்” வாழும் பகுதிகளான கே.கே.நகரும் அதனை சுற்றி உள்ள இடங்களுக்கும் போவதை தவிர்த்தே வந்தோம்.
  இங்கே ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்:கனடாவில் இருந்து இருவர் சென்னைக்கு வந்திருந்தனர். வெஸ்ட் கே.கே.நகர் அம்மன் கோயிலருகிலுள்ள குந்தில் சாவகாசமா உட்கார்ந்து கடலைக் கொட்டை திண்டபடி விடுப்பு பார்த்துக்கொண்டிருந்தனர்.உள்ளூர் கெடுபிடிகள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. நமது போராளிகள் மூவர் எதேச்சையாக இவர்களை கண்டு விட்டனர்.தங்கள் விசாரணைகளை தொடங்கினர் (.ஏன் வந்தாய்? எப்ப வந்தாய்? எந்த ஊர்? என்ன செய்கிறாய்) அதற்கு கனடா தமிழர் நீ யாரடா கேட்கிறதுக்கு என எதிர்த்து முடிவில் தோழர்களை ஓட ஓட அடித்து கலைத்துவிட்டு மறுபடியும் குந்தில் இருந்தனர்.சில நிமிடங்களில் AK 47 சகிதம் போராளிகள் போருக்கு வந்ததனர்.அவ்விருவரையும் இழுத்து சென்று கைமா பண்ணி அனுப்பினர் நல்ல வேளை கொல்லவில்லை! இவர்களுடைய இந்த சீர்திருத்தம் இலங்கயருடன் நில்லாது தமிழக மக்கள் மீதும் நீண்டது.கோடியாக்கரை, போன்ற கரையோர மாவடங்களில் போராளிகள் போகும் வாகனத்திற்கு பாத சாரிகள்,துவிச்சக்கர வண்டி ஓட்டுபவர்கள் இடைஞ்சல் தராமல் இருக்க ஜீப்பில் இருபக்கமும் தடி,கொட்டான் வைத்து அடித்து,விரட்டிய சம்பவங்களும் உள்ளன(பத்திரிகையில் வந்த செய்தியும் கூட) மேலும் தமிழத்தில் பல வீடுகளில் துப்பாக்கி காட்ட்டி மிரட்டி கொள்ளை களும் இவர்களால் காலப்போக்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது இவை மட்டும் இன்றி உடல் பயிற்சி மூலம் கட்டு மஸ்தான உடம்பை காட்டி பெண்களை மயங்கி நம்ப வைத்து நாசம் பண்ணிய சோக கதைகளும் உண்டு.ஈழத்தில் காட்டாத வீரம் யாவும் தமிழகத்தில் காட்டப்பட்டது.மொத்தத்தில் தமிழகத்தவர் “விடுதலை புலிகள்” இப்படி பண்ணுறாக்களே என்று பேசிக்கொண்டனர்.இதில் வேடிக்கை என்னவென்றால் பிரபாகரனின் ஒழுக்க கட்டுப்பாடுள்ள புலிகள் இயக்கம் இந்த முன்றாம் தர வேலை எதனையும் செய்யவில்லை என்பதே. தமிழத்தில் ஒழுக்கதுடனேயே இருந்தனர் என்பதனை பார்த்தவன்.பின் குறிப்பு; நான் எந்த இயக்கத்திற்கும் சார்போ எதிர்ப்போ இல்லை.

  1. நீங்கள் எந்த இயக்கத்தையும் சாரா விட்டாலும் குறிப்பிடும் ஊர்களிலிருந்து யாரை குற்றம் சாட்டுகிறீர்கள் என்பது புரிகிறது. சேலம்,கும்பகோணம்,ஆண்டிபட்டி,வருஷநாடு, சென்று கேட்டால் மற்றவர் ஒழுக்கம் தெரியவரும்.

  2. வடிவாக எழுத தொடங்கிவிட்டு கடைசியில் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்று முடித்துவிட்டீர்கள்.80 களில் தமிழ்நாட்டில் இருந்தவர்களுக்கு தெரியும் இந்திரா நகருக்குள் போகத்தான் எம்மவர்கள் பயப்பிடுவார்கள். இயக்க தலைவருக்குளேயே உயிருக்கு பயந்து வெளிவராமல் பலத்த பாதுகாப்புடன் இருந்த ஒரே தலைவர் பிரபாதான்,எல்லா இயக்கமுமே அட்டகாசம் பண்ணினார்கள். புலிதான் ஆயுதங்களை பாவித்து தமிழ்நாட்டு மக்களின்வெறுப்பை சம்பாதித்தவர்கள்.மகாலிங்கபுரம்,சூளைமேடு சம்பவகள். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது ரஜீவின் கொலை.இலங்கைத்தமிழனை இந்தியாவிற்கே எதிரியாக்கிய விடயமது.இது எல்லாம் படிக்காத தலைவனை உருவாக்கியதன் விளைவு.

   1. ரதன, தாங்கள் சொல்வது போல் இந்திரா நகரில் புலிகள் ஏதும் அட்டகாசம் செய்ததாக கேள்விப்படவில்லை.மாற்று இயக்கப்போராளிகள் சிலசமயம் பயந்திருக்கலாம்?…… சென்னையில் அன்டன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைக்கப்பட்டு மயிரிழையில் தப்பியதாக பத்திரிகையில் படித்த ஞாபகம்.! அதன் பின்னர் கெடுபிடி இருந்ததிருக்கலாம்? (ஊகம்) சொந்த அனுபவத்தில் பெசன்ட் நகர்,அடையார்,திருவான்மியூர்,இந்திரா நகர் பகுதிக்கு செல்வதில் பிரச்சனை ஏதும் இருக்கவில்லை.பிரபாகரன் அந்தகாலத்திலேயே புல்லட் புருவ் ஜாக்கெட் போட்டு அதன் மேல் சேட் போடுவார் என்று சொல்வார்கள். பத்மநாபாவை பல தடவை சைக்கிள் இல் செல்வதை பார்த்திருக்கிறேன். பத்மநாபா படுகொலை ராஜீவ் கொலை பற்றி ஏதும் சொல்ல விரும்ப வில்லை ஏனெனில் அப்படுகொலைகள் மட்டும் நடவாதிருந்தால் நமக்கு இந்நிலை வந்திராது

  3. ரதன்
   இலங்கைத் தமிழன் என்றுமே இந்தியாவின் (இந்திய அரசின்) நண்பனல்ல. வெறும் பகடைக் காய்.
   தமிழகத்தில் மக்கள் நடுவே இருந்த அனுதாபத்துக்கு வேட்டு வைக்க ராஜீவ் கொலை மிகவும் உதவியது என்பது கூட ஏற்கத்தக்கது.
   தனி மனிதக் கொலைகள் மூலம் விடுதலையை வெல்ல இயலாது என்ற உண்மை எத்தனை போராளி இயக்கங்கட்கு விளங்கியிருந்தது?
   மக்களைச் சென்றடையும் கருத்துக்கள் ஆயுதங்களை விட வலியன என்பது விளங்காததால் வந்த வில்லங்கம் என்பது ஐயர் சொல்லுகிற கதையால் உறுதிப்படுகிறதல்லவா.

 28. கோசலன் உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதே. முருகனின் கருத்துப் பற்றி தங்கள் கருத்து என்ன?

 29. நட்புடன் ரூபன்,
  ஒவ்வொரு சமூக அமைப்பின் அடித்தளமும் ஒவ்வொரு புதிய வர்க்க அமைப்பை உருவாக்கின்றது. முதலாளாளித்துவம் உருவான காலப்பகுதியில் குடியேற்ற வாசிகளாக ஐரோப்பவிற்கு வந்வர்கள் அராபியர்களாயினும்,அல்பேனியர்களாயினும் ஐரோப்பாவிலிருந்தவர்களோடு இரண்டறக்கலந்து போனார்கள். இன்றோ நிலைமை அதுவல்ல. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி இங்கில்லை. இது ஏகாதிபத்தியப் பொருளாதாரம். முதலாளித்துவக் கூறுகள் மட்டுமே இங்கு எஞ்சியுள்ளன. ஆக இங்கு குடியேற்ற வாசிகள் சமூகத்தோடு கலத்தல் என்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. இந்த சூழலில் தான் தொலைதூரத்துத் தேசிய வாதம் என்பது கூட உருவாகிறது. இது புலம்பெயர் நாடுகளின் அரசியலிலிருந்து தனிமைப்பட்ட ஒரு கருத்து நிலையாகக் கட்டமைக்கப்பட இங்கே புதிய புலம்பெயர் வர்க்க அமைப்பு ஒன்று உருவாகிறது.

  இது குறித்த ஆழமான பகுப்பாய்வு அவசியமெனினும்,இப்போது இங்கு உருவாகும் தேசியவாத லும்பனிசம் ஒன்றையும் லும்பன்களையும் குறிப்பிட்டாக வேண்டும்.முதலில் ஏற்கனவே உருவாகியிருக்கும் சமூகச் சூழலில் தம்மை இணைத்துக் கொள்ள முடியாது அன்னியமாகும் இவர்கள், புதிய உற்பத்தியோ முழுமையாக இணையாத புலம் பெயர் சமூகத்துடனும் இணைய முடியாத நிலையிலுள்ளனர். இவர்களின் தேசிய வாத லும்பனிசம் இவ்வாறான சமூகப் பகைப்புலத்திலிருந்து தான் உருவாகிறது. தனிமைப்பட்ட இந்த லும்பனிசம் புலம்பெயர்ந்த எமது அனைவரிடமும் வேறுபட்ட அளவுகளில் காணப்படுகிறது என்பது கசப்பான உண்மை. ஆனால் இதே லும்பனிசம் தான் அரசியலாக மாறுகின்ற தன்மையையும் கூட நாம் காணக்கூடியதாக உள்ளது. முதலில் அவர்கள் தம்மைப்போல உதிரி லும்பன்களுடன் இணைந்து கொள்வார்கள். அரசியல் பேசும் அனைவரையும் தமது எதிரிகளாகவே முன்னிறுத்துவர். புலம் பெயர் நாடுகளிலுள்ள எந்தப் போராட்ட இயக்கங்களோடும் இணைந்துகொள்ள மாட்டார்கள்(அது இங்குள்ள தொழிற்சங்கங்களிலிருந்து கம்யூனிச இயக்கங்கள் வரை பொருந்தும்.).

  இனி இந்த லும்பனிசத்திற்கு எந்தப் பொருள்முதல்வாதப் பார்வையும் கிடையாது. ஒரு நபர் குறித்த பார்வைகூட உதிரி என்ற அடிப்படையிலேயே தனிமனித தூய்மைவாத அடிப்படையில் முன்வைக்கப்படும்.
  ஐயருடைய கட்டுரை குறித்த உங்கள் விமர்சனத்தைப் பாருங்கள்.
  1. ஐயருடைய சமூகப்பார்வை பொருள்முதல்வாத அடிப்படையிலானதா?
  2. விடயங்களை திரிக்கவும் வேண்டுமென்றே கைவிடவும் அவருக்கு என்ன தேவை?
  இதில் முதலாவத் உண்மையானால் இரண்ட்டாவது பொய்யானது. ஆக இவ்வாறான பொருள்முதல் வாத அடிப்படையில் ஒவ்வொரு சிறிய விடயங்களையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதனூடாக லும்பனிசத்தின் விளைவான தனிமனித தாக்குதல்களைத் தவிர்க்க முடியும். ஐயரையே உதாரணமாக எடுங்கள் பலர் பிரபாகரை முழிபிதுங்க பற்களை நெரும்பிக்கொண்டுதான் விமர்சித்தார்கள். ஆனால் பிரபாகரனின் அரசியல் தவறை ஐயர் சுட்டிக்காடுவதன் மூலம் எதிர்காலத்திற்கு தேவையானவற்றை முன்வைக்கிறார்.

  உங்களிடம் காணப்படும் மற்றவர்கள் மீதான வெறுப்புணர்வு என்பது யாரோ சபாரட்ணம் என்பவர் சங்கம் என்ற இணையத்தில் நீண்ட காலத்திற்கு முன்னர் அனுமானங்கள் அடிப்படையில் எழுதியவற்றை ஆதாரமாக வைத்து ஐயர் உண்மையை மறைக்கிறார் என்கிறீர்கள். அதுவும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்ட இடங்கள் குறித்த உண்மையை.இதலிருந்து கட்டுரையின் நம்பகத் தன்மை குறித்துக் கேள்வியெழுப்புகிறீர்கள். ரூபன், அனைத்தையும் கேள்வியெழுப்புங்கள் ஆனால் அவற்றின் அரசியலை முன்வைத்து! புலம் பெயர் தேசியவாத லும்பனிச மனோபாவத்திலிருந்து வெளியே வாருங்கள். நாமெல்லாம் நிறையவே செய்து முடிக்கலாம்.

  1. புலிகள் சுட்டதிற்கு உரிமைவேறு கூறுகின்றனர் /  வேறு யாரவது உரிமை கோரினால் தண்டிக்க படுவீர்கள் எனவும் வேறு !!!
   புலிகளால் சுடப்பட்டவர் குடும்பங்களுக்கு அவர்களின் இன்னல்களில் அல்லது
   வாழ்கை தேவைகளுக்கு உதவிபுரிந்தார்களா? இயக்கங்கள் உருவாகும் முன்னரே அரசஉழியராக அல்லது போரட்டத்திற்கு எதிராக இருந்தவர்களை அரசியல் மயப்படித்தினார்களா ? இல்லை அவர்கள் அதில் இருந்து விடுபடுவதற்கு என்ன மற்றீடாக என்ன வழிகாட்டினார்கள். மக்களை ஆயுதமூலம் வழிநடத்துபவர்கள் தாங்கள் செய்யும் தவறுகளை மக்கள் முன் சுயவிமர்சனம் செய்து கொண்டார்களா இல்லாது விடில் தங்களுக்குள்ளாவதுதங்கள் செய்வது தவறு எனபுரிந்து சுயவிமர்சனம் செய்தார்களா

   எங்கு இவர்கள் தியாகம் செய்துள்ளார்கள் ஓவ்வொரு உயிரின் பெறுமதியையும் மதிப்பீடு செய்தார்களா
   13 ஆமி கொல்லும் போது 3000 பொது மக்கள் கொல்லப்படு வார்கள் என்பது தெரியாமல் இருந்தார்களா
   தெ ரிந்த பின்னரும் மீண்டும் மீண்டும் தொடர்ந்தார்கள் மக்களுக்கு தம்மால் பாது காப்பு கொடுக்க முடியாது எனதெரிந்தும் மக்கள் இருப்பிடங்கள் பார்த்து தானே குண்டுவைத்து சென்றார்கள் 
   ராணுவம் செத்துகிடக்கும் போது வந்த ராணுவம் என்ன கைகட்டி கொண்ட பார்த்து நிற்கும் 
   வந்த கோவத்திற்து கண் மண் தெரியாமல் சுடும் 

   இயக்கத்திற்கு ஆள்சேர்ப்புக்கு குண்டு வைப்பும் உரிமை கோரலும் இதேபாணியில் எல்லோரும் 
   மக்களுக்கு எங்கள் போரட்டம் விளங்கவும் இல்லை விளக்கவும் இல்லை என்ன செய்வது என்று தெரியாமல்மக்கள் யால்ற வேறு/ பணத்தின் மீதும் ஆயுதத்தின் மீதும் காதல் கொண்டவர்கள் யாருக்காக போரட புறப்பட்டார்களோ அவர்களை அடிமைப்படுத்தி இவர்கள் எஜமானரானர்கள் மக்கள் இவர்கள் சொல்வதெல்லாம் வேதம் என்றார்கள் இதுதான் மக்கள் போரட்டம் என்றார்கள்

   ஜயாவு ம்  மற்றும் கருத்து விதைப்பவர்களும் நல்ல விதை விதையுங்கள் நன்றி …..

 30. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு.

  ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள்,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்தது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப்படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை யுத்தகால அழிவுகளாக கொள்ள முடியாது. அது ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமல்ல அமைதிப் பணி என்ற பெயரில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படித்தான் அந்தச் சம்பவங்களைப் பார்க்க முடியும்.

  ரஜீவ்காந்தி இலங்கைக்கு வந்த போது ஒரு சிங்கள சிப்பாய் பகிரங்கமாக அவரைத் தாக்கினார். அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா வெய்யிலின் கொடுமையினால் ஏற்பட்ட மூளைக்கோளாறினால் அந்தச் சிப்பாய் அவ்வாறு நடந்து கொண்டதாக பகிரங்கமாகச் சொன்னார். இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராகவும் ரஜீவ்காந்தி கடைப்பிடித்த இலங்கை தொடர்பான அரசியல் போக்கிற்கு எதிராகவும் தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கம் மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியது. வடக்கில் தமிழ் மக்களை நம்பவைத்து மோசம் செய்த ரஜீவ்காந்தியின் படைகளை எதிர்த்து உயிர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

  இந்தச் சூழ்நிலையில் இந்தியா ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது. வடகிழக்கில் சீனாவை எதிர்த்து மேற்கே பாகிஸ்தானை எதிர்த்து தெற்கே புலிகள் ஜே.வி.பி எதிர்ப்பு உள்நாட்டில் பஞ்சாப், கஸ்மீர், மிஸோராம், நகலாந்து, கூர்க்கா போராளிகளின் எதிர்ப்பு தன்னைச் சுற்றியும் தனக்குள்ளேயும் எதிரிகளை அது தேடிக்கொண்டது. இது ரஜீவ்காந்தியினுடைய தலைமைத்துவத்தின் மீதான அவநம்பிக்கையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்றுவித்துவிடும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினார்கள். இந்தியாவின் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத சின்னஞ்சிறு நாட்டின் சிப்பாய் மரியாதை அணிவகுப்பின் போது தாக்கியதும், அதைப் பாரதூரமான சம்பவமாக நினைத்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனா மன்னிப்புக் கோராமல் மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலாக கூறியதை அவர்கள் மிகப்பெரிய விடயமாக எடுத்துக் கொண்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை யாராவது இன்னொரு நாட்டு பிரதமரை வரவேற்கும் அணிவகுப்புக்கு அனுப்புவார்களா? ஜே.ஆர் திட்டமிட்டு இந்தியாவையும் ராஜீவையும் அவமானப்படுத்திவிட்டர்h என அவர்கள் கறுவிக் கொண்டார்கள். புலிகளையும் ஜே.வி.pபயையும் அடக்குவதோடு ஜே.ஆர்க்கும் அவரைப்போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இந்தியாவின் பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த விவகாரத்தை கையாள்வதற்கு இந்தியாவின் பார்ப்பணிய மூளையான றோவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.

  றோ அதிகாரிகள் தெற்காசிய வரைபடத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக்கு அண்மையில் இருந்த சின்னஞ்சிறு நாடான மாலைதீவு, அவர்கள் கண்களில் பட்டது. காஸ்மீரையும், சிக்கின்மையையும் தந்திரமாக தங்கள் நாட்டில் மாநிலங்களாக ஆக்கிக் கொண்ட தாங்கள் நேபாளத்தையும், பூட்டானையும் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி இராணுவ மேலான்மைக்கு கீழ் கொண்டுவந்த தாங்கள் இந்தச் சின்னஞ்சிறு மாலைதீவை இதுவரை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மாலைதீவிலே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அப்தும் ஹயும் இந்தியாவுடன் அவ்வளவு தொடர்பில்லாதவர். ஆனால் பாகிஸ்தானுடன் நெருக்கமானவர். அதனால் அவரை இந்தியாவின் பக்கம் எடுப்பது பாகிஸ்தானை சீண்டுவதாக ஆகிவிடும். அதைவிட அவரின் எதிரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை இந்திய சார்பாளர்களாக்கி பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம் மாலைதீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என றோ நினைத்தது. அது அவர்களிற்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை. அப்தும் ஹயும் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றின் மூலமே பதவிக்கு வந்தவர். அவரால் பதவி இறக்கப்பட்ட அவரின் எதிரிகளில் இருவர் சிங்கப்பூரிலும் ஒருவர் கொழும்பிலும் இருந்தனர். றோ அதிகாரிகள் சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாலைதீவில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சாத்தியமில்லை என்பதும் அப்தும் ஹயும் எதிரிகள், இந்தியசார்பாளர்கள் என்பதும் தெரிந்தாலே இஸ்லாமியத்தின் எதிரிகள் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு என்பதும் றோவுக்கு புரிந்தது. எனவே இராணுவச் சதி புரட்சி ஒன்றின் மூலம் கயோமின் ஆட்சியைக் கவிழ்ப்பதே சிறந்ததும் சுலபமானதுமான வழி என்று அவர்கள் தீர்மானித்தனர். முன்னூறு பேர்வரை இல்லாத மாலைதீவு பாதுகாப்புப படையை முறியடிப்பது பெரிய கஸ்ரமான விடயமல்ல என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் யாரை வைத்து இந்தச் காரியத்தை சாதிப்பது என்பது அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. மாலைதீவு இளைஞர்களை பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிதாக பயிற்சி அளிக்க வேண்டும். வெறும் பயிற்சி மட்டும் போதாது யுத்த காலத்தில் நின்ற அனுபவமும், தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த விடயம் இன்றைக்கும் வெளியே வராமல் பாதுகாக்கக்கூடியவர்களாகவும��
  � இருக்க வேண்டும். மாலைதீவு இளைஞர்களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. எனவே ஈழப் போராளிகளையே இதற்கு பயன்படுத்த வேண்டும் என்று றோ எண்ணியது யாரைப் பயன்படுத்துவது? இதுவும் றோவுக்கு ஒரு சிக்கலான விடயமாக இருந்தது. EPRLF,ENDLF,TELO இந்த மூன்றும் தங்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பவை. இந்திய இராணுவத் துணையோடு இயங்குபவை இவர்களைப் பயன்படுத்தினால் நிச்சயமாக நாங்கள் தான் இந்தப்புரட்சிக்கு பின்னணியில் நின்றவர்கள் என்று பகிரங்கமாகிவிடும். அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியைக் கொண்டு வந்துவிடும் என்று அவர்களுக்குத் தோன்றியது. எனவே, இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிராத ஒரு குழுவை அவர்கள் தேடினார்கள். அப்போது புளொட் குழு அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது. உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பும், பேச்சுவார்த்தையும் வைத்துக் கொண்டாலும் வெளியில் அது மற்றைய இயக்கங்களைப் போல் இந்திய இராணுவத்துடன் சேர்ந்திருக்காது தனித்து நின்றது. அதே சமயம் புலிகளின் எதிரியாகவும் அது விளங்கியது. எனவே இந்தக்காரியத்திற்கு புளொட்டைத் தான் பயன்படுத்த வேண்டும் என றோ தீர்மானித்தது. புளொட்டினுடைய நிரந்தர இந்தியத் தொடர்பாளரான “பாலபுத்தர்” மூலம் உமாமகேஸ்வரனுக்கு தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டது. என்ன காரணத்துக்காக என்பது “பாலபுத்தரிடம்” சொல்லவில்லை புலிகளுக்கெதிராக யுத்தம் புரிவதற்கு ஆயுதம் வழங்கவே உமாமகேஸ்வரனை அழைப்பதாக அவர் நினைத்துக் கொண்டார். றோவிடம் இருந்த தகவல் வந்திருந்த சமயத்தில் உமாமகேஸ்வரனின் சகாக்கள் ஜோதீஸ்வரன் (கண்ணன்), வாசுதேவா ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டிருந்தனர். இதனால் பல தடைவ தன்னை நம்பவைத்து மோசம் செய்த றோவின் மீது ஆத்திரம் கொண்டீருந்த உமாமகேஸ்வரன் அதை மறந்து றோவை சந்திக்க ஒப்புக்கொண்டார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி வவுனியா செட்டிகுளத்தில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் இந்திய இராணுவத்தின் விசேட விமானத்தின்மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். இந்திய இராணுவ விமானப்படை அதிகாரிக்கோ அல்லது விமானிக்கோ கூட தங்களால் அழைத்துச் செல்லப்படுபவர் உமாமகேஸ்வரன் என்று தெரியாது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன்; றோ இரகசியச் சந்திப்பு நடந்தது. அந்தச்சந்திப்பில் மாலைதீவின் விவகாரத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. தாங்கள் சொல்கின்ற தாக்குதலைச் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பணமும், ஆயுதமும் புளொட்டுக்குத் தருவதாக றோ சொன்னது. புலிகளுக்கெதிரான தாக்குதலாகவே அது இருக்கும் என உமாமகேஸ்வரன் நினைத்துக் கொண்டார். அன்றைய சந்திப்பின் போது றோ 50லட்சம் ரூபா இந்தியப் பணத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்தது. அடுத்த சந்திப்பின் போது ஆயுதம் வழங்கப்படும் என்றும் அதற்கான இடத்தையும், திகதியையும் பின்பு அறிவிப்பதாகச் சொல்லி மீண்டும் இந்திய இராணுவ விமானத்திலேயே உமாமகேஸ்வரனை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். ஊருக்கு வந்த உமாமகேஸ்வரன் றோவின் பணத்தை கற்பிட்டியில் மாசிக் கருவாட்டுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய கோழிப்பண்ணை ஒன்றை அமைக்கவும் முதலீடு செய்துவிட்டு றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்தார்.

  தெடரும்………………….
  http://www.nitharsanam.com/?art=16502

  ——————–

  நாரதர் கலகம் நன்மையில் முடியும்

  Full Edit Quick Edit

  Replies
  narathar Apr 17 2006, 11:31 AM Post #2

  Group: Members
  Posts: 1,630
  Joined: 8-June 05
  Member No.: 1,361

  புளொட் அமைப்பின் மறுபக்கம். – தொடர் 03

  ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ ஜயாசச்சி ஸ
  கொச்சின் சந்திப்பு முடிந்து ஒரு சில நாட்களுக்குள் முள்ளிக்குளம், செட்டிகுளம், முருங்கன் பகுதியில் அதாவது புளொட் முகாம்கள் இருந்த பகுதிகள் இந்திய முற்றுகைக்குள் உள்ளாகின. அப்பகுதிகளை இணைக்கும் பிரதான பகுதிகளில் இந்திய இராணுவத் தடை அரண்கள் உருவாக்கப்பட்டன. இலங்கையில் இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழ் நாட்டின் கரையோர நகரமான மண்டபத்துக்கு அருகே உள்ள தீவில் வைத்து றோ புளொட்டுக்கு ஆயுதம் வழங்கியது. ஏ.கே 47 ரக இந்தியத் தயாரிப்புத் தானியங்கித் துப்பாக்கிகள் 240, எல்.எம்.ஜி. ரக இயந்திரத் துப்பாக்கிகள் 24, எம்.எம்.ஜி. இயந்திரத் தப்பாக்கிகள் 04, 30 கலிபர் ரக துப்பாக்கிகள் 06, 50 கலிபர் ரக துப்பாக்கிகள் 04, ஐசுPபு7 என்கிற சிறுரக குறுகிய தூர ஏவுகணை 28, மோட்டார்கள் 04 உட்பட பெருந்தொகையான ரவைகள், குண்டுகள், செல்கள், கைக்குண்டுகள், வாக்கிரோக்கிகள் திசையறி கருவிகள் என்பனவும் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட அதிவேக விசைப்படகுகள் 03 என்பனவும் றோவால் புளொட்டிற்கு வழங்கப்பட்டது.

  றோவின் ஆலோசனையின் பெயரில் இந்த ஆயுதங்களின் அரைவாசியை அந்தத் தீவில் பாதுகாப்பாக புதைத்து வைத்துவிட்டு மிகுதியை புளொட் இலங்கைக்கு எடுத்துச் சென்றது.

  ஆயுதம் வந்த கையோடு உமாமகேஸ்வரன் செயலில் இறங்கினார். லெபனான் பயிற்சி பெற்ற நான்கு பேரின் தலைமையில் நான்கு தாக்குதல் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இத்தாக்குதல் குழுக்களுக்கு பயிற்சியளிப்பதற்காக வில்பத்து மற்றும் கற்பிட்டிப்பகுதிகளில் அமைந்திருந்த சிறு இராணுவ முகாம்களும், காவல் நிலைகளும் தாக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு புளொட் நடத்திய இந்தத் தாக்குதல்களை விடுதலைப்புலிகள் செய்ததாகவே சிறிலங்கா அரசு நினைத்துக் கொண்டது. (புளொட் குழு ஒரு புறத்தில் இந்தியாவை எதிர்பார்ப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டு சிறிலங்கா அரசை எதிர்த்துப் போராடுவதாக சொல்லிக் கொண்டது. ஆனால் லலித் அத்துலத் முதலியுடன் அது இரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டது. ஜே.வி.பிக்கு எதிராகப் போராட விஜயகுமாரணதுங்காவின் மக்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செட்டிகுளத்தில் இராணுவ பயிற்சி கொடுத்தது. அதேநேரம் ஜே.வி.பிக்கும் நுவரெலியாவில் வைத்து இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவை வாசகர்களின் குழப்பத்தைத் தவிர்க்க இங்கே குறிப்பிடப்படுகின்றது).

  சிறிலங்கா இராணுவத்தின் மீதான தாக்குதல் நடத்திய நான்கு குழுக்களில் மிகத் திறம்பட செயற்பட்ட 3 குழுக்கள் மாலைதீவு இராணுவ நடவடிக்கைக்கு தெரிவு செய்யப்பட்டன. முதலில் இந்தக்குழு தலைவர்களிடமோ அல்லது அந்தக்குழுக்களின் இணைத் தலைவர்களிடமோ இந்த விடயம் சொல்லப்படவில்லை. முக்கியமான தாக்குதல் ஒன்றை நடாத்த பயிற்சி எடுப்பது என்றே சொல்லப்பட்டது.

  றோவினால் ஆயுதம் வழங்கப்பட்ட இடமான மண்டபத்திற்கு அருகில் உள்ள தீவே பயிற்சிக்குரிய தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 3 குழுக்கள் அந்தத்தளத்தில் பாதுகாப்பாக நிலைகொண்டிருக்க மூன்றாவது குழு கடல்வழியாக வந்து தீவின் பிரதேசத்தில் தாக்குதல் நடாத்தி தீவைக் கைப்பற்றுவது போல் சுழற்சிமுறையில் பயிற்சியளிக்கப்பட்டது. உமாமகேஸ்வரனின் நேரடி மேற்பார்வையில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்ட இந்தப் பயிற்சியை றோ அதிகாரிகளும் அடிக்கடி வந்து பார்வையிட்டனர்.

  அந்தத்தளத்தில் பயிற்சி எடுத்தவர்கள் சிறிலங்கா அரசின் காரைநகர் கடற்படைத் தளத்தையோ, அல்லது அதையொத்த வேறு தளத்தையோ தான் தாக்கப் போவதாக நினைத்துக் கொண்டார்கள். ஒரு மாத பயிற்சியின் பின்பே கழது;துஐலுவுர்;குளு; இரவுரகு;கும் தொலைத்தொடர்புக்குப் பொறுப்பான ஒருவருக்கும் விசயம் சொல்லப்பட்டது. அவர்கள் மூவரும் மாலைதீவு சென்று நிலமைகளை அவதானித்து ரெக்கி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

  கட்டுநாதயக்கா விமான நிலையத்தினூடாக அவர்கள் அடிக்கடி மாலைதீவு செல்லும் போது சிறிலங்கா அதிகாரிகளுக்கு சந்தேகம் வரலாம் என்ற காரணத்தினால் திருவானந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இந்தியக்கடவுச்சீட்டிலேயே அவர்கள் சென்றுவர ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

  ஏற்கனவே இந்திய இராணுவத்துடனும், றோவுடனும் ஒட்டிக்கொண்டிருந்த அவர்களின் செல்லப்பிள்ளையான ENDLF இன் தலைவர்களை அழைத்து றோ அதிகாரிகள் பேசினார்கள்.

  எல்.ரி.ரி.யும், புளொட்டும் ஒன்று சேர்ந்துவிடும் போலிருக்கிறது. இந்தியாவையும், இந்திய இராணுவத்தையும் எதிர்த்து உமாமகேஸ்வரன் விடும் அறிக்கைகள் புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றது. ஆவர்கள் இருவரும் சேர்ந்தால் உங்களுக்கு ஆபத்து. அதற்கு முன் எமாமகேஸ்வரனை கொலை செய்துவிட்டால் அவரின் விசுவாசிகள் தவிர மிச்சப்பேரை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தானே, எதற்காகப் பிரிந்திருக்க வேண்டும் என்று ENDLF தலைவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டது. றோவின் உபதேசத்தில் மயங்கிய அவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டனர். நீங்கள் இப்போதிலிருந்து அதற்கான முயற்சியில் இறங்குங்கள். ஆனால் நாங்கள் சொல்லும்வரை காரியத்தைச் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது.

  உமாமகேஸ்வரனை ஒழிக்கும் முயற்சியில் ENDLF, புளொட்டில் இருந்த “வசந்தன்” என்பவரை அணுக

 31. // டேவிட் ஐயா அவர்கள் இந்தியாவில் இருக்கிறார் என அறியப்படுகிறது.//

  டேவிட் ஐயா , தமிழகத்தில் இருக்கிறார். இவர் புலிகளது ஆதரவாளராக மாறி விட்டார். அவர் எழுதிய புத்தகம் ஒன்றில் கூட பிரபாகரனை மெச்சி எழுதியுள்ளார். உமா மகேஸ்வரன் மீது கொண்ட கோபத்தால் , உமாவை ஒரு ஓநாய் என சித்தரித்துள்ளார். தவிரவும் சந்தியார் கொலைக்காக அவர் , பாதுகாப்புத் துறைக்கும், ராஜீவ் காந்திக்கும் எழுதிய கடிதங்களும் அப் புத்தகத்தில் உள் அடக்கப்பட்டுள்ளது. டேவிட் ஐயாவின் , கடவுச் சீட்டையும் , அடையாள அட்டை போன்ற ஆவணங்களை, தமிழகத்தில் இருந்த புலிகள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது அவர் சொல்லிய தகவல்.
  ஊர்மிளாவை புலிகளே கொன்றனர் என்பது உமா மகேஸ்வரன் என்னிடம் சொன்னார். எனவே ஊர்மிளா , புலிகளால் கொல்லப்பட்டார். புளொட் சென்னையில் வைத்து 1985ல் வெளியிட்ட முதல் ஆடியோ கேசட்டில் ஊர்மிளா குறித்த ஒரு பாடலும் இடம் பெற்றது.

  1. நல்லது எழுதுங்கங்கள் ஆதே வேளை அதை ஆதாரமாகவும் வையுங்கள்!…

 32. எப்படடி எல்லாம் இருந்த ஈழமும் தமிழரும். எல்லாரும் ஆழாரழுக்கு ஏதோ பண்ணி இப்படி சந்தி சிரிக்க கொண்டு வந்து விட்டுவிட்டார்கள் “முதாயாரின் கனவுகளில் வாழ்வதன்றி கைவசம் ஏதும் இல்லை சகோதரா”

 33. Dear Brother
  Well come , You have done good work. you Expose all the truth.well done.I appreciate you. Thanks a lot. Wish you all the best. Go ahead.

Comments are closed.