கூர்க்காலாந்து சகோதரப்படுகொலை? மதன் தமாங் கொல்லப்பட்டார்.

இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது சிலிகுரி கூர்கக இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்தியா ஒடுக்கபப்டுகிற மக்களை வஞ்சிப்பது போலவே கூர்க்கா இன மக்களையும் நீண்டகாலமாக ஒதுக்கி வைத்துள்ளது. இந்து சாதி அமைப்பினுள் அனுமதிக்காத கூர்க்கா இன மக்கள் நீண்டகாலமாக கூர்காலாந்து தனி மாநிலம் கேட்டுப் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டங்களை இந்திய உளவு நிறுவனம் தன் உளவுவாளிகளால் சிதைத்து வந்து வரலாறும் உண்டு. இந்நிலையில் அகில இந்திய கூர்க்கா லீக் கட்சியின் தலைவராக மதன் தமாங் செயற்பட்டு வருகிறார். இந்நிலையில் மதன் தமாங் தனது கட்சி மாநாடு ஒன்றையும் பேரணி ஒன்றையும் டார்ஜிலிங்கில் ஏற்பாடு செய்திருந்தார். நேற்று காலை மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட தனது கட்சியினரோடு சென்ற மதன் தமாங்கை மர்ம நபர்கள் கூரிய கத்தியாலும் தடிக்கம்புகளாலும் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்து மரணமடைந்தார். மருத்துவமனைக்குச் எடுத்துச் செல்லும் வழியிலேயே மதன் தமாங் மறைந்ததாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில் கூர்காலாந்து பகுதி முழுக்க கடுமையான பதட்டம் நிலவுகிறது. சிலிகுரி, டார்ஜிலிங் பகுதிகள் இக்கொலையால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருக்கிறது.

சகோதரப்படுகொலை

கூர்காலாந்து மாநிலக் கோரிக்கைக்காக பல அமைப்புகள் போராடி வந்தாலும் அகில இந்திய கூர்க்கா லீக் கட்சியும், கூர்கா ஜனமோர்ச்சாவும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு கட்சிகளிடையே அரசியல் ரீதியான மோதல்கள் இருந்தாலும் இரு கட்சிகளுமே கூர்க்காலாந்து கோரிக்கையை முன் வைத்தே போராடி வருகின்றன. இந்நிலையில் இந்திய கூர்க்கா லீக்கையும் அதன் தலைவர் மதன் தமாங்கையும் பிடிக்காத கூர்க்கா ஜன மோர்ச்சாவே இக்கொலையை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஈழத்தில் சகோதரப்படுகொலைகளால் போராட்டத்தை பல வீனமாக்கியது போல கூர்க்காலாந்திலும் சகோதரப்படுகொலைகளை ஊக்குவிக்கிறது இந்தியா.