கூட்டமைப்பு எம்.பிக்களாக இருந்த பன்னிருவருக்கு இம்முறை கல்தா?

     இதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் எம்.பிக்களாக இருந்த 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அரி தாக உள்ளதாகத் தெரியவருகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,  தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா ,அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,ஈழமக்கள் புரட் சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ்பிரேமச்சந்திரன் , ரெலோ அமைப்பின் செயலாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய ஐவரும் கூடி தற் போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்தனர்.

அப்போது அடுத்துவரும் தினங்களில் கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான பொறிமுறை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று இரா.சம்பந்தன் அங்கு கருத்துத் தெரிவித்தர் என அறிய வருகிறது.

இதேவேளை நாடாளுமன்றம் கலைக் கப்பட்டுவிட்டதால் இனிமேல்  நடைபெற வுள்ள புதிய வேட்பாளர் தெரிவு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு இதுவரை எம்பிக்களாக இருந்த 22 பேரையும் அழைக்கும் நடைமுறை பின்பற்றப்பட மாட்டாது என்று கூட்டமைப்பின் உயர் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளைஇ இதுவரை எம்.பிக்களாக  இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம்இ என்.ஸ்ரீ காந்தாஇ பத்மினி சிதம்பரநாதன்இ செல்வ ராஜா கஜேந்திரன் , சிவநாதன் கிஷோர் , கனகசபை , கனகரட்ணம் ,தங்கேஸ்வரி கதிரமன் , சந்திரநேரு , ஜெயானந்தமூர்த்தி உட்பட குறைந்த பட்சம் 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அந்தத் தலைவர் கோடிகாட் டினார்.

5 thoughts on “கூட்டமைப்பு எம்.பிக்களாக இருந்த பன்னிருவருக்கு இம்முறை கல்தா?”

 1. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கைலேஸ்வரராஜா சற்று முன்னர் தெரிவித்தார்.

  தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் இன்று மாலை தமது கட்சி இந்த முடிவினை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்

  .
  எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சிறுபான்மையின கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படுவது அவசியமாகின்றது என புளொட் அமைப்பின் தலைவர் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அதன்மூலமே எமது பலத்தையும் நிரூபித்து பேரம்பேசும் சக்தியாகவும் மாறமுடியும் பலத்தின்மூலம் ஜனாதிபதியுடன் பேசி தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கேனும் தீர்வு காணமுடியும் இது தொடர்பில் தாம் தமிழ்பேசும் கட்சி தலைவர்களுடன் பேசிவருவதாகவும் திரு சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். எமது பிரச்சினை தெர்டர்பாக ஜனாதிபதியுடன் பேசியே தீர்க்கப்பட வேண்டும் இந்நிலையில் எமக்கிடையில் ஒட்டுமொத்த ஐக்கியமே அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில் நின்று செயல்படுவதே சிறந்தது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

  தனித்து வீணைச்சின்னத்தில் அல்லது அரசுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பான அறிவிப்பை நாளை அல்லது நாளை மறுதினம் ஈ.பி.டி.பி வெளியிடும்

 2. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.

  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனும், தமது கட்சிக்குள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. இதனையடுத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்ததாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதியவர்கள் சிலரை அறிமுகப்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அறியப்படுகிறது.

  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானம், தமது கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவித விரிசலையும் ஏற்படுத்தாது எனவும் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகு சின்னத்தில் போட்டியிடவிருப்பதாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

  இதே நேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. மேலும் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் உட்படதமிழ் பேசும் பிரதேசங்களில் முஸ்லிம் கங்கிரஸுடன் புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அறியப்படுகிறது.

  thamileela விடுதலை புலிகளின் ஆளுமை இல்லாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிட ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் நாளை செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேட்பாளர் தேர்வு இடம்பெறும் என்றும் தெரியவருகிறது.

  அத்துடன் ரஷ்யா ஜனாதிபதிக்கு கலாநிதி பட்டம் வழங்கி 300மில்லியன் கடனுதவி செய்த நிலையிலும், இந்தியா, சீனா புனர்நிர்மான உதவிகள் செய்து வரும் நிலையிலும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான GSP + சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது தெரியவருகிறது.

  PLOTE Leader Dharmalingam Siddarthan claims that the LTTE damaged the Tamil cause much more than the Sinhala leadership or the government led army.

 3. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.

  http://www.plote.org/reports.php?sscate_id=125

  And the Final Report of the Commonwealth Expert Team which observed the 26 January Presidential election in Sri Lanka says that overall the 2010 Presidential elections in Sri Lanka did not fully meet key benchmarks for democratic elections.

  The Commonwealth Secretary-General, Kamalesh Sharma, in releasing the report, noted the Team’s conclusion that, “even though on the day of the election voters were free to express their will, shortcomings primarily in the pre-election period meant that overall the 2010 Presidential elections in Sri Lanka did not fully meet key benchmarks for democratic elections.“

  The Secretary-General added: “Many of the problems identified reflect the same problems identified during previous elections. These problems – which have also been highlighted by the country’s own Commissioner of Elections – will hopefully receive urgent consideration. The Commonwealth is ready to assist as requested”.
  See full report http://www.thecommonwealth.org/files/220094/FileName/FINALREPORT-CET2010PrintVersion.pdf

 4. தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) தனித்து போட்டியிட தீர்மாணம் – துரைரட்ணசிங்கம்

  நடைபெறவுள்ள பொது தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிட தீர்மாணித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்டணசிங்கம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

  தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பில் நேற்று நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் இவ் தீர்மாணம் எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

  பொது தேர்தலில் போட்டியிடுவது குறித்து, வீரகேசரி இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போதே உத்தியோக பூர்வமாக இன்று செவ்வாய்க்கிழமை எமது இத்தகவலை வழங்கினதாக அறியப்படுகிறது.

 5. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் (PLOTE) பேச்சுவார்த்தையில் ஈட்படிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) நடைபெறவுள்ள பொது தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மாணித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்டணசிங்கம் தெரிவித்துள்ளதாக அறியப்படும் வேளையில் இரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் யானைச்சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைவர் இரவூப் ஹக்கீம் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார் என்று தெரியவருகிறது.

  முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர்பீடம் இன்று அல்லது நாளை கூடவுள்ள நிலையில் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

  இதே நேரம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் (TNA) வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பொதுத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளதாக அறியப்படும் வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் ஊடாகத்தான் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திகளையும் மக்களுடைய தேவைகளையும் நிவர்த்தி செய்ய முடியும் எனவேதான் ஆளும் கட்சியில் இணைந்து தான் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

  மேலும் நேற்று வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் றிசாட் பதியுதீன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரிஇளங்கோவன், ஜனாதிபதியின் ஆலோசகர் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணாண்டோ, உள்ளிட பலர் கலந்து கொண்ட வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான புதியவகுப்பறைகளை தொடங்கி வைக்கும் வைபவத்திலும் திரு.கனகரட்ணம் கலந்து கொண்டிருந்தார் எனவும் அறியப்படும் வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் (TNA) இணைந்து தேர்தலில் போட்டியிடக் கூடிய சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

  தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு (TULF) அழைப்பு விடுப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) இணைந்துகொண்டால் அது வரவேற்கக்கத்தக்கது எனவும் கட்சியின் எம்.பி சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ள நிலையில் எவ்வாறெனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஆனந்தசங்கரி கூறியுள்ளார். யுத்தகாலத்தில் அப்பாவி தமிழ் பொதுமக்கள் அழிவுகளை எதிர்நோக்கியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பொறுப்பாளிகளாவர். புலிகள் மனிதக் கேடயமாக பொதுமக்களை பயன்படுத்திய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை தட்டிக் கேட்கத் தவறியது. வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளோம் என்றும் ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.