குண்டு துளைக்காத வாகனம் : பிள்ளையான் பாவனைக்கு

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரான பிள்ளையானுக்கு அந்நாட்டு அரசாங்கம் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது இந்த விவகாரம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியது.ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, குண்டுதுளைக்காத வாகனத்தை அரசாங்கம் பிள்ளையானுக்கு வழங்கியிருப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.
இந்தக்குற்றசாட்டுக்கு பதிலளிக்கையில் அரசாங்கத்தின் பிரதம கொறடா தினேஸ் குணவர்த்தன குண்டு துளைக்காத வானங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது உண்மையே என்றும் எனினும் அவற்றில் ஒன்று பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதா? இல்லையா என்பது குறித்து தற்போது எதனையும் கூறமுடியாது என தெரிவித்தார்.

தற்போதைய நாடாளுமன்றம் கூடிய பின்னர் இதுவரை 31 குண்டு துளைக்காத வாகனங்களை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளது. பிள்ளையானுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே அவருக்குரிய பாதுகாப்பை அரசாங்கம் வழங்கும். பிள்ளையானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தால் இருப்பதால் அவர் பயன்படுத்துவது குண்டு துளைக்காத வாகனமா? இல்லையா என்பது குறித்த தகவல்களை அரசாங்கம் வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்..