குண்டுகள் நிரப்பிய வாகனம் : சரத் பொன்சேகாவைக் கொலைசெய்யத் திட்டம்?

spotlight-15கொழும்பில் குண்டுகள் நிரப்பிய வாகனங்கள் மூலம் முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக ஸ்ரீலங்கா புலனாய்வு தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முன்னாளர் பாதுகாப்பு படைகளின் பிரதானி சரத் பொன்சேகா கொழும்பு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்ட கருத்துக்களை நிராகரிக்க முடியாது என்று புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டுகள் நிரப்பட்ட வாகனம் கொழும்பிற்குள் ஊடுருவியிருப்பதாக புலனாய்வு துறை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இதனை கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சரத் பொன்சேகாவை வாகனக் குண்டு வெடிப்பின் மூலம் படுகொலை செய்வதற்காகவே அரசாங்கம் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது