கீழ் மட்ட உறுப்பினர்களிடையேயான மோதல் மட்டுமே : கருணா

39, கோவிந்தா வீதி என்னுமிடத்தில் அமைந்த்திருந்த தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பத்திரிகைக் காரியாலயம் கருணா குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடையேயான மோதல் மட்டுமே இது என்றும். இந்த விடையம் பெரிதல்லவென்றும் தெரிவித கருணா, சம்பவம் நடந்த வேளையில் பிள்ளையானுடன் சந்திப்பிலிருந்ததாகவும் இது தொடர்பாக இருவருக்கும் தெரிந்த்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவிக்கையில், ஆயுதம் தரித்த 30 கருணா குழுவினரால் முற்றுகையிடப்பட்ட காரியாலயம் உடனடியாகவே அவர்களின் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 100 பிள்ளையான் தரப்பு ஆயுத தாரிகள் கட்டடத்தைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அச்சகம் தற்போது முன்னைய நிர்வாகத் தலைமையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற அதேவேளை முறுகலை தணிப்பதற்கும் இரு குழுக்களுக்குமிடையில் சுமுக நிலையை ஏற்படுத்துவதற்கும் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகின்றது. இதேவேளை, பத்திரிகைகள் தீயிடப்பட்டமை மற்றும் குழு மோதலின்போது 13 பிள்ளையான் குழுவினர் கருணா குழுவினரால் பணயக்கைதிகளாக வைத்திருப்பது குறித்தும் தமக்கு எதுவும் தெரியாது என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

One thought on “கீழ் மட்ட உறுப்பினர்களிடையேயான மோதல் மட்டுமே : கருணா”

 1. kuddisri Oct 18th, 2008 at 16:22 pm . 1.கருணா அம்மான் தரப்பு? பிள்ளையான் குழு ? இது என்ன ? அப்ப டி.எம்.வி.பி என்பது புலுடாவா? 2.கருணா அம்மானுக்கு சொந்தமான அச்சகமொன்று தொடர்பில் நேற்றையதினம் முற்பகல் கருணாஅம்மான் தரப்பினருக்கும் பிள்ளையான் குழுவுக்குமிடையில் முறுகல்….கருணாவுக்கு சொந்தமானது என்றால் கருணாவின் உழைப்பில் வாங்கியதா? அல்லது பாட்டன் பூட்டனார் சொத்தா? அல்லது அபகரித்த சொத்தா? கருணாவுக்கு சொந்தமானது என்றால் கருணா என்ன தொழில் பார்த்து எவ்வளவு சம்பளமெடுத்தவர் சொல்லமுடியுமா? இந்த இடத்தில் இன்னுமொரு கேள்வி கருணா தனது மனைவி மூன்று பிள்ளைகளை லண்டனுக்கும் சொந்த பணத்திலையா அனுப்பினவர் ? இவை எல்லாம் மக்கள் சொத்து . மக்களிடம் சூறையாடியவை. போதக்குறைக்கு மட்டக்களப்பில் முன்னர் கருணாவால் சூறையாடப்பட்ட தினக்கதிர் பத்திரிகையின் அச்சக பொருட்களும் அடங்குகிறது. அச்சகப்பொருட்கள் கருணாவோ பிள்ளையானோ உரிமை கொண்டாட ஆதாரங்கள் ஆவணங்கள் இருக்கிறதா ? கருணா இன்னும் கொஞ்ச நாளில் பாராளுமன்ற கட்டிடமும் தனக்கு சொந்தமென்று சொன்னாலும் ஆச்சரியப்படதேவையில்லை … 3.பாராளுமன்ற பதவியை ஏற்றுக்கொண்ட போது செய்த சத்தியப்பிரமாணத்தை மீறிவிட்டரே? இறைமையுள்ள ஒரு நாட்டில் எப்படி தான் இன்னொரு புலனாய்வு அமைப்பை கருணா வைத்திருக்கிறார்? என்னடா கேவலம் கெட்ட இறைமை!! 4.வன்னிப்புலிகள் காட்டுப்புலிகள் என கத்தும் பாசிச வெறி பற்றியும் ஓலமிடும் இவர்கள் அடாவடித்தனத்தை இப்போது செய்தது புலிகளுக்கு எதிராகவில்லை. புலிக்கு எதிராக கிளம்பிய சகாக்களுக்கு எதிரானதே. கொட்டாவையிலும், ரெஜியையும் புலிகள் கொலை செய்ததை பற்றி இந்த அராஜாகம் எப்பாற்பட்டது. இது இன்னும் சில காலத்தில் ஓய்திருக்கும் தேவானந்தாகளுக்கும் திரும்பும் என்பது நிச்சயம். ……… எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் நடு நிலமை என்பதை கிழித்தெறிந்து விட்டு ஞானம்/ ஸ்ராலின் போல வேசங்களை கலைத்து விட்டு பகிரங்கமாக நாம் கருணாவின் அடுப்பு ஊது குழல் என்பதை வெளிப்ப்டுத்தி செய்தி போடவும். சும்மா நடு நிலை என்று காதில பூச்சுத்த வேண்டாம்
  k Oct 18th, 2008 at 18:04 pm என்னத்தைச் சொல்ல,

  புலிகளை குறை கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் இயக்கத்தை உடைத்தவர்கள்,

  புலிகள் மனித தர்மத்தை மதிப்பவர்கள் கிடையாது என்று கூறியவர்கள் பின்னர் தாங்கள் என்ன செய்தார்கள் !,

  கொலை கொள்ளை கற்பழிப்பு சித்திரவதை ஆட்கடத்தி பணம் பறிப்பு அப்பாவிச் சிறுவர்களை ஆயுதமுனையில் மிரட்டி படையில் சேர்த்தார்கள்,

  தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக தமிழ் இனத்தைப் பற்றி சிந்தியாது பிரதேச வாதத்தைக் கையில் எடுத்து சொந்த இனத்துக்குள்ளேயெ பிரிவினைத் தூண்டியவர்கள்,

  புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றியது தவறு என்று சொன்னவர்கள் பின்னர் தாங்களே யாழ்ப்பாணிகள் என்று கூறிக்கொண்டு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தங்கள் சொந்த மக்களையெ துரத்தியடித்தவர்கள்,

  புலிகள் மாற்று இயக்கங்களை அழித்த கொடூரக்காரகள் என்று சொன்னவர்கள்,

  இன்று ???!!!!!

  என்னத்தைச் சொல்ல,

  ஒரே வரியில் கூறுவதானால்

  நம்பர் வண் துரோகிகள். சிறிலங்கா அரசின் முதல் வரிசை செல்லப்பிள்ளைகள்.

  துரோகிகள் புதுசு புதுசா வந்து போவார்கள் ஆனால் நிலைத்தது கிடையாது.

Comments are closed.