கி. வீரமணியின் ஆர்ப்பாட்டம் கருணாநிதிக்காகவா? ஈழ மக்களுக்காகவா? எச்சரிக்கை தேவை.

நேற்று சென்னை மேமோரியல் ஹால் அருகே திராவிடர் கழகம் சாரிபில் ஈழத்தமிழர்களுக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகம் என்னும் கம்பெனியின் முதலாளி கி,வீரமணி கலந்து கொண்டு‘’தீவிரவாதத்தினை

எதிர்ப்பதுதான் எங்களின் நோக்கமே தவிர, ஈழத் தமிழர்களை சங்கடப்-படுத்தும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது என்று ராஜபக்சே சொன்னாரே_ அது உண்மை-யென்றால், அவர்களின் கூற்றுப்படியே – தீவிர-வாதிகளைத்தான் ஒழித்துக் கட்டிவிட்டார்களே. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, போரி-னால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நலத் திட்டங்-களை மேற்கொண்டிருக்க வேண்டாமா?முள்வேலி முகாமுக்குள் சிறை வைக்கப்பட்ட தமிழர்-களை அவர்களின் சொந்த வாழ்விடங்-களில் மீள் குடியேற்றம் செய்திருக்க வேண்-டாமா?இராணுவத் தீர்வுக்குப் பின் அரசியல் தீர்வை நோக்கி அடியெடுத்து வைத்திருக்க வேண்டாமா?உலகம் பூராவும் போர் நடந்து முடிந்தவுடன், மக்களின் சுமூக வாழ்க்கைக்கான முயற்சிகளில், நலத் திட்டங்களில்தானே எந்த அரசும் ஈடுபடும். ஆனால் இலங்கையில் நடப்பது என்ன? போர் முடிந்தும் அம் மக்களைப் பழிவாங்கும் வேலை-யில்-தானே அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.தமிழர்களில் இளைஞர்களாக இருக்கக் கூடிய-வர்களை விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை யுத்த நெறிமுறைகளுக்கு மாறாக நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்லுவது எந்த நியாயத்தில் ஏற்றுக் கொள்வது?இரண்டாவதாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசின் கடமை என்ன? அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வெறும் வார்த்தையளவில் இந்திய அரசு சொன்னால் போதுமா? போதுமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாமா?சீனா அளிக்கும் தைரியத்தில், பாகிஸ்தானின் பக்க பலத்தில் இந்திய அரசின் குரலை, இலங்கை அரசு கேட்கத் தயாராக இல்லை என்பதையாவது இந்தியா காலந்தாழ்ந்தாவது உணருமா?இலங்கைக்கு இந்திய அரசைவிட அதிக உதவி செய்தவர்கள் வேறு யார்? எவ்வளவு ஆயு-தங்களை இந்திய கொடுத்து உதவியது? இவ்வளவும் கொடுத்து உதவிய நாடு என்ற முறையில், இலங்கையை வற்புறுத்த இந்தியாவுக்கு உரிமை இருக்கிறதே.ஏன் வலியுறுத்தவில்லை? இந்தியாவுக்கு மனமில்லை என்ற முடிவுக்குதானே தமிழர்கள் முன்வருவார்கள்?அப்படியானால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தங்களின் தொப்புள்கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்று பொருள்படாதா?இந்தியா என்றால் அங்கு தமிழர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்ற எண்ணம் தமிழர்-களிடத்தில் உருவாக இடம் கொடுப்பது புத்தி-சாலித்தனம்தானா?மற்ற மற்ற நாடுகள் ஈழத் தமிழர் பிரச்சினை-யில் காட்டும் அக்கறை கூட இந்தியா காட்டு-வ-தில்லையே,- ஏன்?போர் முடிந்த பிறகு கூட அந்த மக்களின் அடிப்-படை வாழ்வுரிமை பற்றி இந்தியாவுக்கு அக்-கறை பிறக்கவில்லை என்பது கண்டனத்திற்கு உரியதாகும். இந்த வகையில் தமிழர்களின் உணர்வு-களை இந்திய அரசுக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டம்.தமிழர்கள் மத்தியில் ஈழப்பிரச்சினை என்பது கூட அரசியலாக்கப்படுவது வேதனைக்குரிய-தாகும். அதனால்தான் வேண்டாம், -வேண்டாம்_ -அரசியல் வேண்டாம்;- ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் வேண்டாம் என்ற முழக்கம் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது.இந்த அரசியலும் கூட ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணங்களுள் முக்கிய-மானது என்பதை ஒதுக்கி விடமுடியாது.பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படு-கொலைக்கு ஆளான பிறகும் கூட, இன்னும் நமக்குத் தமிழர்கள் என்ற இனவுணர்வு, – பொறுப்-புணர்வு வரவில்லை என்ல் _ அதிலும் அர-சியல்-தான் என்றால், தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடாதா? இந்த ஆர்ப்பாட்டத்-தின் மூலம் தமிழர்களின் சிந்தனைக்கு திராவிடர் கழகம் இந்த வினாக்களை முன்வைக்கிறது.”இந்த உளரல்களைத்தான் நாம் சகித்துக் கொள்ள வேண்டும் என்றால் ஈழத் தமிழர் பிரச்சனையை அரசியலாக்கக் கூடாதாம். அதனால்தான் வேண்டாம் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்று கோஷமிட்டாராம் வீரமணி, ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொடூரப் போரில் கொல்லப்பட்ட போது அங்கே போரே நடைபெற வில்லை என்று இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி மீது தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்துள்ள கசப்புகளை போக்குவதற்காக அரசியல் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் வீரமணி. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கருணாநிதியால் ஏமாற்றப்பட்ட உணர்வை அடைந்திருக்கும் நிலையில் அதிலிருந்து கருணாவைக் காப்பாற்றும் பல் வேறு முயர்ச்சிகளில் ஒன்றாகவே இதைக் காண வேண்டியுள்ளது. என்பதோடு, ஈழத் தமிழர் பிரச்சனையில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட சுத்த இராணுவ வாதமும் ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கான காரணம் என்று விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது வீரமணி வேண்டாம் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்பது மீதி யிருக்கும் மக்களையும் கொலைக்களத்திற்கு அனுப்புகிற செயலே…

2 thoughts on “கி. வீரமணியின் ஆர்ப்பாட்டம் கருணாநிதிக்காகவா? ஈழ மக்களுக்காகவா? எச்சரிக்கை தேவை.”

  1. திரு வீரமணீ அவர்கள் முல்லைத்தீவிலும் ஒரு பல்கலைகழகம் கட்டி இலங்கைத் தமிழ் மாணவர்களூக்கு கல்வி தர முன் வர வேண்டுமாய் தாழ்மையாய் வேண்டுகிறோம்.

    ஆட்சிக்கு வருபவர்க்கெல்லாம் பொன்னாடை போர்த்தி சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கலை காத்து வரும் தங்கள் கடமையை மெச்சுகிறோம்.இந்தச் சொத்துக்களீல் பாதியையாவது தமிழ் காக்க தமிழ்த் தாயின் புகழ் காக்கத் தானம் செய்ய வேண்டுகிறோம்.

  2. /இந்தியா என்றால் அங்கு தமிழர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்ற எண்ணம் தமிழர்-களிடத்தில் உருவாக இடம் கொடுப்பது புத்தி-சாலித்தனம்தானா?/– அடுத்த முறை நான் ஆட்சிக்கு வரவில்லையென்றால்,தமிழகம் பஞ்சாபாக மாறும்!.வரும் ஜூலை நடக்கும்,உலகத்தமிழ் செந்தமிழ் மாநாட்டில் மாமனிதர் கார்திகேசு.சிவதம்பி,கூறுகிறபடி “அன்றே சொன்னார் தமிழின தலைவர் கலைஞர்,தமிழீழம் அமைந்தால் சர்வாதிகார ஆட்சி அமைய கூடாது என்று”.நவீன சோழ மன்னனான கலைஞர் பரம்பரையின் குடவோலையே சரி என்று!.”சர்வாதிகாரம் குடும்பத்தோடு ஒழிந்தது!”.அழுகை….. என் தம்பி பிரபாகரன் என்பதை என் உள்ளம் சொல்வதை யார் அறிவார்…(முன்னால் கூறியதை மறந்து விடு..)..தமிழ் செல்வனுக்கு “குலப்பற்றின்” காரணமாக,நான்தானே முதலில் கவிதை எழுதினேன்!.கேள்வி எதுவும் கேட்காதே,சினிமாவில் முதல் சீனில் பிச்சைகாரனாகவும்,அடுத்தசீனில் “அரசனாகவும்” “டபுள் ஆக்ஷன்” வருவதை கேள்வி கேட்கிறாயா?!.நம் இ(ழ)ளவல் கி.வீரமணி சொல்லுவதுபோல(ஆட்சி போனால் சொல்லமாட்டார்),சீக்கிரமாக “உலக தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவனாக” என்னை அங்கீகரித்து விடு.கழகக் காளையே(எறுமையே),அலைகடலென ஆர்ப்பரித்து வா….ஆடலேரே..சிங்கள அரக்கனின்(ஹிந்தியை இப்போ வுட்டுடு) சிதை மூட்ட வா….கவிஞர் கனிமொழிக்கு ராஜபக்ஷே வைரநெக்லஸ் கொடுத்தால் ஹிந்தியை பார்த்துக் கொள்ளலாம்….

Comments are closed.