கிளி . கந்தசாமி கோயில் பகுதியிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற உதவுமாறு கோரிக்கை.

கிளிநொச்சி கந்தசாமி கோயில் மடத்திலிருந்தும் ஆலயத்தின் அருகிலுள்ள கடைகளிலிருந்தும் படையினர் வெளியேறுவதற்கு நடைவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஐ.தே.க. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜயகலா மகேஸ்வரன் அப்பகுதிக்கு விஜயம் செய்த போது இது தொடர்பான கோரிக்கையை அவரிடம் மக்கள் முன்வைத்துள்ளனர்.
கந்தசாமி கோயில் மடத்திலும் ஆலயத்தின் அருகிலுள்ள கடைகளிலும் இராணுவத்தினரின் 58 ஆவது படையணியினர் நிலைகொண்டுள்ளனர். ஆலயத்தின் மடத்தினை இராணுவத்தினர் சமையலறையாக பயன்படுத்தி வருகின்றனர். இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்தள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் ஆலயத்தின் கும்பாபிசேகம் நடைபெற இருப்பதனால் படையினரை ஆலயப்பகுதியில் இருந்து உடன் வெளியேற்ற உதவுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.