கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரின் திடீர் இடமாற்றத்தினை எதிர்த்து வேலை நிறுத்தம்

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மேலிட உத்தரவிற்கமைய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வருவதுடன் ஓய்வினைப் பெறுவதற்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் இத்திடீர் இடமாற்றம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கல்விப்பணிமனை ஊழியர்கள் இந்த இடமாற்றத்தினை உடனடியாக நிறுத்துமாறு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே விவிசாயத் திணைக்களம், பொது வைத்திய சாலை அதிகாரிகள் திடீர் இடமாற்றங்களிற்கு உள்ளாகியிருக்கின்றனர். இச்செயற்பாடுகள் இராணுவ நடைமுறைகளும் அவர்களது அதிகாரமும் கிளிநொச்சியில் நிலவிவருவதன் வெளிப்பாடுகள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.