கிளிநொச்சியில் ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு ஒரு ஆசனம் மாத்திரமே வழங்குவேன் – சிறிதரன்!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்த ஆசனப் பங்கீட்டு பிரச்சனையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ரெலோ, புளொட்அமைப்புக்களுக்கு 2 ஆசனங்கள்வீதம் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இணக்கம் காணப்பட்டது.

இந்நிலையில், தற்போது அவ் அமைப்புக்களுக்கு (ரெலோ, புளொட்) இரண்டு ஆசனங்கள் வழங்கமுடியாதெனவும், ஒவ்வொரு ஆசனம் மாத்திரமே வழங்கமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இவ்விரு அமைப்புக்களும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் பேசப்போவதாகவும், இதில் இணக்கம் காணப்படாவிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கட்சிகளும் போட்டியிடப்போவதில்லையென அறிவித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தை தனது ஆளுகையின்கீழ் கொண்டுவருவதற்கு சிறிதரன் கடந்த காலங்களில் பல அடாவடித் தனங்களைச் செய்திருந்தார். தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மிரட்டல் விடுகின்றார்.