கிளிநொச்சியில் அரச நீதிமன்றம் : 30 வருடங்களின் பின்

தமிழீழ விடுதலை புலிகளின் ஆட்சிப் பிரதேசமாக இருந்த வேளையில் அவர்களின் நீதிமன்றம் கிளினொச்சியில் இயங்கி வந்தது.

30 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் மீளவும் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட நீதவானாக பி.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.