கிளிநொச்சி என்ற குறுகிய நிலப்பரப்ப்பில் தினமும் நான்கு பெண்கள் தற்கொலை

கிளிநொச்சி மாவட்டத்தில் தினமும் நான்கிற்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர்களில் அதிகளவிலானோர் விதவைகள் மற்றும் கணவன்மார் காணமல் போய் தனிமையில் வாழும் பெண்களே என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல மருத்துவர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அதிகளவான தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலர் தற்கொலை செய்கிறார்கள். சமூகப்பாதுகாப்பின்மை, பொருளாதாரப் பிரச்சினைகளே இதற்கான முக்கிய காரணிகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை மனநோயால் பாதிக்கப்பட்டோரின்; எண்ணிக்கையும் கணிசமானளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 500 வரையான மனநோயளிகள் இருப்பதாகவும் அவர்களில் அதிகமானோர் பெண்கள், சிறார்கள் போன்றோரே. இவர்களில் பலர் யுத்தத்தில் தமக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்கள்
வசதிகள் பற்றாக்குறையாக இருக்கின்ற போதும் இயலுமான நடவடிக்கைகளை மேற்கொணண்டு வருவதாகத் தெரிவிதுள்ள மருத்துவர் எல்லோரும் ஒன்றிணைந்து இவற்றிற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பாடசாலை செல்லாத சிறார்களும் அதிகளவில் காணப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.