கிராமவாசிகளை ஏமாற்றிப் பெளத்த விகாரை அமைக்கப்படுகிறது : தொடரும் இனச் சுத்திகரிப்பு

மட்டக்களப்பில் கன்னபுரம் கிராமவாசிகளை அக்கிராமதில் முருகன் கோவில் ஒன்று அமைக்கப் போவதாக கிரமடத்தில் இருந்தவர்களை இலங்கை அரசு வெலியேற்றியுள்ளது. விசேட இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கிராமவாசிகளை ஏமாற்றி வெளியெற்றிய பின்பு, அதே இடத்தில் இப்போது பெளத்த கோவில் ஒன்றை அமைப்பதாகத் தெரிய வருகிறது.
முருகன் கோவிலை எதிர்பார்த்திருந்த கிராம வாசிகளைக் கொண்டே பெளத்த விகாரை நிறுவப்படும் இடத்தைச் சுத்திகரித்துள்ளனர் இராணுவத்தினர். கல்லோயா குடியேற்றத்திட்ட காலத்திலிருந்து இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகமாகப் பலியாகிவருவது கிழக்கு மாகாண மக்களே.
கருணா மற்றும் பிள்ளையான் தலைமையிலான அரச துணைக் குழுத் தலைவர்களின் துணையோடு கிழக்கு மாகாணம் சூறையாடப்ப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது தமிழ் கிராமங்களுக்கு அதிக அளவிலான புத்த துறவிகளும் வருகை தருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கிரான், வவுணதீவு, வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை போன்ற கிராமங்களுக்கு அதிக அளவிலான சிங்கள புத்த துறவிகள் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.