கியூப புரட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா காலமானார்!

cecகியூப புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா இதய நோயால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82.

கியூபாவின் துணை அதிபரான யூவான் அல்மெய்தா, ஃபிடல் மற்றும் ராவூல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியின் ஆரம்பகாலங்களின் போது போராடியிருந்தார்.

இந்த போராட்டத்தின் முடிவாக ஃபல்கேன்சியோ பாட்டிஸ்டாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியில் தூக்கி எறியப்பட்டது.

ஹவானாவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யூவன் அல்மெய்தா, புரட்சியாளர்கள் தலைமை பீடத்தில் இருந்த கறுப்பினத்தவர் ஆவார்.

One thought on “கியூப புரட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா காலமானார்!”

  1. வீர வணக்கம்..! வீரவணக்கம்..!
    புரட்சியல் வரலாற்றின் மாவீரனுக்கு எமது வீரணக்கம்.
    மேலும் புதிய தலைமுறைக்குள் நுழைந்திருக்கும் கியூப அரசிற்கு ஈழத்தின் உண்மை நிலையை புரியவைத்து ஈழத்தின் தேவையையும், அவசியத்தையும் உணர்த்திட ஓர் உலகலாவிய புரிந்துணர்வும், மக்கள் விடுதலைக்கான புதிய அணிதிரட்டலும் அவசியம்.

Comments are closed.