கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்!

கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் இவவார்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டப் பேரணியில் பொலிஸாரின் அராஜகத்தை இல்லாமல் ஆக்குவோம், எரிக்கப்பட்ட மஸ்ஜிதை மீண்டும் கட்டித்தா, இடம் பெயர்ந்த மக்களை உடனடியாகக் குடியேற்று, எமது பூர்வீகக் காணிகளை அபகரிக்காதே, பயிர்களை அழித்து நாட்டில் வறுமையை ஏற்படுத்தாதே என்ற சுலோக அட்டைகைளையும் ஏந்தியவாறு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.