காஸ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண எந்தப் பிரிவினைவாத அமைப்புடனும் பேசத்தயார்:மன்மோகன்சிங் .

10.10.2008.

இந்தியாவின் காஸ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண எந்தப் பிரிவினைவாத அமைப்புடனும் பேசத் தயாராகவிருப்பதாக இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும், பாக்கிஸ்தானும் உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், காஸ்மீரைச் சேர்ந்த எந்தவொரு இந்தியருடனும் இதுகுறித்துப் பேசத் தான் தயாராகவிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஜம்மு பிராந்தியத்தில் புதிய நீர் மின் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்த அவர், அதன் பின்னர் அனைத்துக்கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டார். இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடையே பேசும்போதே, பிரதமர் மன்மோகன்சிங் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண பாக்கிஸ்தானையும் உள்ளடக்கிய முத்தரப்புப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முன்னர், முதலில் காஸ்மீரிலுள்ள பிரிவினைவாத அமைப்புக்களுடன் தாம் பேச விரும்புவதாக அவர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.