காஷ்மீர் 50 பேர் படுகொலை. கலகம் நீடிப்பு.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஒடுக்க இந்தியா எடுத்த எல்லா முயர்ச்சிகளும் தோல்வியில் முடிந்து கொண்டிருக்க மழை வெள்ளப்பாதிப்புகளில் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் தங்களது அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். காஷ்மீர் மக்களின் விடுதலைக்கு எதிரிகளான பார்ப்பன பண்டிட்களை தூண்டி விட்டு காஷ்மீர்களின் போராட்டத்தை இந்து முஸ்லீம் கலவரமாக மாற்ற பி.ஜே.பியுன் காங்கிரசும் திட்டமிட காஷ்மீர்களோ இந்திய ஆக்கரமிப்பாளர்களின் சதிகளுக்கு பலியாகாமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவர் ஞாயிறன்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து பதற்றத்தைத் தணிக்க ஸ்ரீநக ரில் திங்களன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த வாரம் ஸ்ரீநகர் புறநகரான ஷெல்டெங்கில் வன்முறைக் கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய துப் பாக்கிச்சூட்டில் காய மடைந்த பிதா நபிலோன் மருத்துவமனையில் இரவு உயிரிழந்தார். இவரின் மர ணத்துடன் இதுவரை நடந்த வன்முறைச் சம்பவங் களில் 50 பேர் உயிரிழந் துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.இதையடுத்து மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஸ்ரீநகரில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதாகவும், தெற்கு காஷ்மீரின் சில நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.