காஷ்மீர் பிரச்சனை முடிவெடுக்க தனியார் முதலாளிகள் குழு.

காஷ்மீர் பிரச்சனை ஒரு தேசிய இனப்பிரச்சனை. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரே காஷ்மீர் சுயாட்சிப்பகுதியாக இருக்க ஜவஹர்லால் நேரு அடாவடியாக காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தார். இன்னமும் இந்திய அரசியல் சாசனம் காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமையை பேச்சளவில் ஏற்றுக் கொண்டிருக்க இப்போது காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்த மன்மோகன் தலைமையில் கூடிய குழு ஒன்று காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்திய பெருமுதலாளிகளின் குழு ஒன்றை அமைத்துள்ளது இவர்கள் காஷ்மீர் இளைஞர்களின் தேவை அறிந்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்களாம். காஷ்மீர் மாநில பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அங்கு புதிய வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்க முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவரும் முன்னாள் ஆந்திர மாநில ஆளுநருமான சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை பிரதமர் அமைத்துள்ளார்.இதில் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, சிஐஐ அமைப்பின் முன்னாள் தலைவர் தருண் தாஸ், காஷ்மீர் பிரிவு தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஷகீல் கலாந்தர் நந்தகுமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஜம்முகாஷ்மீர் மாநில அரசு சார்பில் ஒரு பிரதிநிதியும் குழுவில் இடம் பெறுவார்.காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து 3 மாதங்களுக்குள் இந்தக் குழு தனது ஆய்வை முடித்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கும்.நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்த பின்னர் இந்த நடவடிக்கையை பிரதமர் எடுத்துள்ளார். தங்களது ஆய்வின் ஒரு பகுதியாக தேசிய திறனாய்வு வளர்ச்சி அமைப்புடனும் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள்.இந்தக் குழுவின் பரிந்துரை எதுவாக இருந்தாலும், இதை வெற்றிகரமாக அமல்படுத்துவது என்பது அனைத்து இளைஞர்களையும், வேலைவாய்ப்பு வளையத்திற்குள் ஈர்ப்பதில்தான் உள்ளது. அனைவருக்கும் நம்பிக்கையூட்ட வேண்டும். சரியான இலக்கைக் காட்ட வேண்டும். அவர்களுக்குரிய சந்தர்ப்பங்கள் சரியான முறையில் கிடைக்கச் செய்திட வேண்டும் என்றார் பிரதமர். ஆனால் இந்த இந்திய பெருமுதலாளிகளின் சுரண்ட்ல் நலன் மேலும் மேலும் காஷ்மீரை பாழாக்கி படுகுழியில் தள்ளுமே தவிற பிரச்சனையை தீர்க்க உதவாது.

One thought on “காஷ்மீர் பிரச்சனை முடிவெடுக்க தனியார் முதலாளிகள் குழு.”

 1. காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க நடுவண் அரசு உண்மையாக விரும்பி (அப்படி ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம்) அதை வெறும் பாகிஸ்தானை ஆதரிக்கும் முஸ்லீம் கலகக் காரர்கள் என நோக்காமல், பெருவாரியான மக்கள் தம்மை இந்தியாவின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளாத காரணம் என ஆய்ந்து அந்த அடிப்படைக் காரணங்களை வேரறுக்கும் எந்த ஒரு முயற்சியும் வரவேற்கப்பட வேண்டியதே. பிரிவினையின் பொது இருந்த தலைமுறை இந்து-முஸ்லீம் என மத வேறுபாடு காரணங்களை தலையாகக்
  கருதுவது புதிது அல்ல. ஆனால், பிரிவினைக்கு பின் வந்த தலைமுறை, பொருளாதாரக் காரணங்களை முன் நிறுத்துவது ஒரு விதத்தில் சரியான அணுகுமுறையே. ஆதலால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அமைந்தால் , அவர்கள், பிரிவினை அல்லது மத வாதிகளின் பின் செல்லாமல், பொருளாதாரக் காரணங்களினால் குண்டு வெடிப்புக்கும், கல் எறிவதற்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என எதிர் பார்ப்பது சரியே.
  அதாவது அங்கு தொழில் பெருக வேண்டும். மைய அரசு தொடங்கிய நிறுவனங்கள் (உதாரணம் : எச் எம் டி) நல்ல விதமாக செயல் படுவதாகத் தெரியவில்லை.
  பொதுத் துறையோ, தனியார் துறையோ தொழில் பெருகட்டும் என்றே நாம் எண்ணவேண்டும். அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் இல்லாத குழு உருப்படியாக ஏதேனும் செய்ய வாய்ப்பு என வரவேற்போம்.
  மேலும், இதை அரசியல் பிரச்னையாக நோக்கி, சில அரசியல் வாதிகளே இதைப் பற்றி பேசி, குழப்பி, பிரச்னையை அறுபது ஆண்டுகளாக தீர்வு இல்லாமல் இருந்து வருகையில், சில புது முகங்களை தேடுவதே ஒரு நல்ல ஆரம்பம் அல்லவா?
  .

Comments are closed.