காஷ்மீர் ஊடக அடக்குமுறை : இலங்கையின் மறுபிரதி

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில்  ஊரடங்கு காரணமாகவும், இதழியலாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் இரத்து செய்யப்பட்டதாலும் 2 நாட்களுக்கு அங்கு எந்த நாளிதழும் வெளிவரவில்லை.

டெல்லியில் இருந்து அழைத்துவரப்படும் இதழியலாளர்களுக்கு, அங்கு நடக்கும் கலவரத்தையும், நிலையையும் காண அனுமதிக்கும் அரசு, அங்குள்ள இதழியலாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகளை இரத்து செய்துவிட்டது.
தொலைபேசிகள் யாவும் நிறுத்தப்பட்டுவிட்டன. ஈழத் தமிழர்களின் அழிவிற்கு எதிராகக் உணர்வுபூர்வமாகக் கோபம் கொள்ளும் எவரும் மனித இனத்தின் அழிவிற்கு எதிராகக் குரல் கொடுப்போரே. இலங்கையில் அப்பாவிகள் அழிக்கப்பட்டது போன்று இன்று காஷ்மீரில் நடைபெறுகிறது. மனித குலத்தின் மீது பற்றுக்கொண்ட ஒவ்வொரு மனிதனும் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.