காஷ்மீரை தனிநாடாக ஆங்கீகரித்து வீசா வழங்கியுள்ளது சீனா.

kasmirநீண்டகாலமாகவே காஷ்மீர் மக்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலை கோரி போராடிவருகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த போது எல்லா சமஸ்தாங்களையும் அச்சுறுத்தி தன்னோடு இணைத்துக் கொண்டது இந்தியா ஆனால் எப்போதும் தனி சுயாட்சிப்பகுதியாக இருந்த காஷ்மீரை இணைக்கும் போது ஒரு தற்காலிக ஏற்பாட்டு என்றுதான் மன்னர் ஹரிச்ங்கிடம் இருந்து ஆட்சியை எடுத்துக் கொண்டது. ஆனால் காஷ்மீர் மக்களிடம் அவர்களின் அரசியல் சுயநிர்ணயம் குறீத்து நடத்துவதாக ஒத்துக் கொண்டிருந்த இந்தியா இன்றுவரை அவர்களுக்கு அந்த உரிமையை வழங்க மறுத்து வருகிறது இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்திய எல்லைகளை சீனா ஆக்ரமித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ள நிலையில் சில காஷ்மீர் மாணவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சீனா இந்திய கடவுச்சீட்டை ஆங்கீகரிக்காமல் தனி வீசா வழங்கியுள்ளது. இது போன்ற ஒரு நடைமுறையை அருணாச்சலப் பிரதேசத்திலும் செயல்படுத்துகிறது சீனா. அருணாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் சீனாவுக்கு வர வீசா வங்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சீனா அருணாச்சல பிரதேச வாசிகள் பலரை வீசா இல்லாமலே சீனாவுக்குள் அனுமதிக்கிற நிலையில் இப்போது காஷ்மீருகளுக்கும் தனி வீசா வழங்கியிருக்கிறது. இந்த நிலை இந்திய உயர் பீடங்களை கடுங்கோபம் கொள்ளச் செய்துள்ள நிலையில் இந்தியா தன் கடுமையான கண்டனத்தை சீனாவுக்கு தெரிவித்துள்ள்து.