காஷ்மீரில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டுகிறது இந்தியா.

பல்லாண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டது காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய விடுதலைப் போராட்டம். இந்திய சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்பட்ட காலத்தின் பின்னர் காஷ்மீர் மக்களின் இப்போராட்டம் பல வடிவங்களை எடுத்து வருகிறது. ஆனால் காஷ்மீரிகளின் இந்தப் போராட்டத்தில் அத்து மீறி மூக்கை நுழைக்கும் இந்திய, பாகிஸ்தான் படைகள் தங்களின் போர் வெறிக்கு காஷ்மீர் மக்களின் உயிரை பலியெடுத்து வருகிறார்கள். இந்தியாவின் இரும்புப் பிடிக்கும் சிக்கியிருக்கும் காஷ்மீர், பாகிஸ்தானின் இரும்புப் பிடிக்குள் சிக்கியிருக்கும் காஷ்மீர் என்று நீண்டகாலமாக காஷ்மீர் மக்களின் குரல் வளை நெரிக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆனால் இந்திய இராணுவத்தின் அத்து மீரல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய இராணுவத்திற்கு எதிராக கடந்த ஒரு மாதமாக வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த காஷ்மீரிகள் போராட்டம் கடந்த இருவாரங்களாக உச்சக்கட்டத்தை அடைய காஷ்மீர் மாநில முதல்வரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்தியா ஏராளமான இராணுவத்தை காஷ்மீரில் இறக்கியுள்ளது இந்தியாவின் கொடுங்கரங்களுக்குள் காஷ்மீர் மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் இப்போது முஸ்லீம் மக்களுக்கு எதிராக காஷ்மீர் பண்டிட்கள் போராடுகிறார்கள். இந்த பண்டிட்கள் எனப்படும் பார்ப்பனர்கள் எப்போதுமே இந்திய அடிவருடிகளாக மட்டுமே செயல்பட்டு வந்தவர்கள். காஷ்மீர் மக்களின் இறையமையை எப்போதெல்லாம் இந்தியா குழப்ப வேண்டும் என நினைக்குமோ அப்போதெல்லாம் இந்துக்கள் என்னும் பெயரில் பண்டிட்களை தூண்டி விட்டு போராட வைக்கும் . காஷ்மீர் மக்கள் வீதிகளுக்கு வந்து தங்களின் உரிமைக்காக போராடும் இப்போது பண்டிட்களை தூண்டி விட்டு போராட்டங்களை இந்து முஸ்லீம் பிரச்சனையாக திசை திருப்புகிறது காங்கிரஸ் அரசு. இந்தியாவின் இந்தச் சூழ்ச்சியை முறிய்டித்து காஷ்மீர் மக்களின்  விடுதலைப் போருக்கு துணை நிற்போம்.

2 thoughts on “காஷ்மீரில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டுகிறது இந்தியா.”

 1. Before publishing this news you have to think that even Pakistan once with India. India never, does harm to J-K people. The news that you publish is foolish

 2. காஷ்மீர் பன்டிட்களும், மண்ணின் மைந்தர்கள் தான்!அவர்கள் தான் அகதியாகத் திரிகின்றனர்!
  தற்போதிய காஷ்மீர் கலவரம், முட்டாள் தனமானது!
  மதவெறி பிரச்சாரத்தால்,கல்வீச்சுப் போராட்டம்,நடத்தி,உயிர்களை பலியிட்டு வருகின்றனர்!

  இலஙகை முஸ்லீம்களை எதிர்த்த, உம் மக்கள், காஷ்மீர் முஸ்லீம்களை ஆதரிப்பது,அருவருப்பானது!
  இந்தியாவை, உம்மைப் போன்ற அறிவிலிகள், தொடர்ந்து, எதிர்த்தால்,கதி மோட்சம் உமக்கில்லை!
  கஷ்மீரில் நடப்பது, முச்லிம் பேரினவாத தாக்குதல்தான்!
  கலவரம் செய்பவர்களை, தடுப்பது அடக்குமுறை ஆகாது!

Comments are closed.