காஷ்மீரிகள் 7 பேர் சுட்டுக் கொலை போராட்டம் தீவீரமடைந்தது.

பெரும் படைகளை காஷ்மீரில் குவித்து நிலமையைக் கட்டுப்படுத்தலாம் என்ற இந்தியாவின் கனவு தகர்ந்துள்ளது. காஷ்மீரில் நாளுக்கு நாள் நிலமை மோசமாகிக் கொண்டே செல்கிறதே தவிற அமைதி திரும்பிய பாடில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன் றாவது நாளாக ஞாயிறன்றும் பெரும் பதட்டம் நீடித்தது. 9 மாவட் டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனி டையே பாதுகாப்புப் படையின ரின் துப்பாக்கிச்சூட்டில் பலியா னோர் எண்ணிக்கை 7 ஆக அதிக ரித்தது. இதுமேலும் பதட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.கடந்த வெள்ளியன்று பாது காப்புப்படையினரால் விசார ணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட இளைஞர் காணாமல் போனதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை வெடித் தது. ஸ்ரீநகர், பாரமுல்லா உள் ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவிய போராட்டத்தை கலைக்க ஆங்காங்கே பாதுகாப்புப் படை யினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் முதல் 2 நாட்களில் 5 பேர் பலியாகினர். இந்நிலையில் ஞாயிறன்று பார முல்லா புங்கால்பாக் எனுமிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஜாவேத் அகமது தேலி என்பவரும் பந்திபோராவில் முதாசிர் அகமது லோன் என்பவரும் கொல்லப்பட் டனர். இந்த நடவடிக்கையில் 11 பேர் படுகாயமடைந்தனர். ஏற்கெனவே கொந்தளிப்பில் இருக்கும் நிலையில், செவ்வா யன்று இந்த சம்பவங்களால் வன் முறை மேலும் பரவியது. கிரீரி, நய்த் காய், பாரமுல்லா, பாம்பூர், பிஜ்பெகரா, சங்கம்பிரிட்ஜ், காகா போரா ஆகிய இடங்களில் பாது காப்புப் படையினருக்கும் அப்ப குதி மக்களுக்கும் இடையே நேருக்குநேர் கடும் மோதல் நடந் தது. பல இடங்களில் காவல்நிலை யங்களுக்கும், ரோந்துப்போலீசா ரின் முகாம்களுக்கும் ஆர்ப்பாட் டக்காரர்கள் தீவைத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான முறையில் கல்வீச்சு, பெட்ரோல் குண்டுவீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு என நிலைமை மேலும் மோச மடைந்தது. இதனிடையே, ஜம்முகாஷ் மீர் ஆயுதப்படை பிரிவின் தலை மையகம் முன்பு நூற்றுக்கணக் கான மக்கள் கூடி கொந்தளிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கும் கல்வீச்சு நடந்தது.
நிலைமை மோசமாகிவரும் சூழலில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்துப்பகுதிகளிலும் ஊர டங்கு உத்தரவு அமல்படுத்தப்பட் டது. அனந்தநாக், ஸ்ரீநகர், பார முல்லா, குல்காம், பட்காம், பந்தி போரா, கந்தர்பால், சோபியான், புல் வாமா ஆகிய 9 மாவட்டங்களும் முழு ஊரடங்கு உத்தரவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. குப்வாரா மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் தடை உத்த ரவுஅமல்படுத்தப்பட்டுள்ளது.

மன்மோகன் ஆலோசனை

காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை காது கொடுத்துக் கூட கேட்கத் தயாரில்லாத இந்தியா காஷ்மீரில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவக் கலவரங்களை தூண்ட திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்திய இராணுவத்தின் அடக்குமுறையையும் மீறி காஷ்மீரிகள் தெருக்களில் இறங்கி போராடி வரும் நிலையில் எப்படியாவது காஷ்மீரை அமைதியாக்க வேண்டும் என்று தில்லியில் காஷ் மீர் நிலைமை குறித்து விவாதிக்க ஞாயிறன்று மாலை பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச் சரவைக்குழு கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் நடத்தினார். இக்கூட்டத்தில்காஷ்மீர் பாது காப்பு நிலவரம் குறித்து ஆராயப் பட்டது. முதலமைச்சர் உமர் அப் துல்லாவுடனும் பிரதமர் ஆலோ சனை நடத்தியதாக தகவல்கள் தெரிவித்தன.

One thought on “காஷ்மீரிகள் 7 பேர் சுட்டுக் கொலை போராட்டம் தீவீரமடைந்தது.”

  1. காஸ்மீர் மக்களுக்காக நாமும் குரல் கொடுக்க வேண்டும் .லண்டனில் ஒரு ஆதரவு ஊர்வலத்தை நடாத்த வேண்டும். வேண்டும்.

Comments are closed.