காஷ்மீரிகள் இந்திய அரசின் மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள்- பிரகாஷ்காரத்.

காஷ்மீர் போராட்டம் வெடித்து ஒரு வருடம் ஆகிறது. மக்கள் போராட்டம் கடந்த மூன்று மாதங்களாக காஷ்மீர் முழுக்க கொழுந்து விட்டெறிகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 100 நாட்களாக நீடிக்கும் பதட்டம்வன்முறைதுப்பாக் கிச் சூடுகளில் மொத்தம் 98 பேர் பலியாகியுள்ளனர். இந் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் தலை மையில் செப்டம்பர் 20 திங் களன்று அனைத்துக்கட்சி நாடாளுமன்றக்குழு ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு செல் கிறது.முன்னதாக, இது தொடர் பாக கடந்த 15ம் தேதி தில்லி யில் பிரதமர் இல்லத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆற்றிய உரையின் முக் கிய அம்சங்கள் வருமாறு:-
கடந்த மூன்று மாத கால மாக காஷ்மீர் பள்ளத்தாக்கு கொந்தளித்துப்போயிருக்கிறது. தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவுகள்; போராட்டங்கள். மக்களின் வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துப்போய் நிற்கிறது. 80க்கும் மேற்பட்டோர் மத்திய ரிசர்வ்போலீஸ் படை மற்றும் காவல்துறையினரின் துப்பாக் கிச் சூட்டிற்கு பலியாகியிருக் கிறார்கள். அவர்களில் பெரும் பாலானோர் 9 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட அப்பாவி இளைஞர்கள். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களின் உயிர் பறிக்கப் பட்டிருப்பது குறித்து எங்க ளது அதிர்ச்சியையும் ஆதங் கத்தையும் வெளிப்படுத்துகி றோம். 1947ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து வந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒரே குரலில் எழுந்து நின்று விரட்டியடித்தவர்கள் காஷ்மீர் மக்கள். அவர்கள் இந்திய ஒன்றி யத்தோடு தங்களைப் பிணைத் துக்கொள்ளும் வழியையே தேர்ந்தெடுத்தார்கள். இன் றைக்கு இந்திய அரசின் மீது கடும் ஆத்திரத்திலும், தனி மைப்படுத்தப்பட்ட வேதனை யிலும் இருக்கிறார்கள். இது ஏன் நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதுகுறித்து ஆராய முடியாது என்ற போதி லும் அரசு தனியாக இதை ஆய்வு செய்ய வேண்டிய அவ சியம் உள்ளது.

காஷ்மீரில் நடக்கும் பெரு வாரியான மக்கள் பங்கேற்கும் இந்த போராட்டங்களை எப் படிப்பார்க்கவேண்டும் என் பதே முதல் பிரச்சனை. காவல் துறையினருக்கு எதிராக கல் வீச்சில் ஈடுபடும் இளைஞர் களை, பயங்கர வன்முறைகளை நடத்தும் கொடிய பயங்கர வாதிகளோடு ஒப்பிடுவது கூடாது. துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்புப் படையினர் இந்த கண்ணோட்டத்தில் அணு காமல் நடத்திய துப்பாக்கிச் சூடுகளால் ஏராளமான உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது.பாதுகாப்புப்படைகள் அதிகபட்ச நிதானத்தை கடைப் பிடித்ததாக உள்துறை அமைச் சர் கூறுகிறார். ஆனால் தினந் தோறும் துப்பாக்கிச்சூடு தொடர்கிறது. இதில் உயிர்கள் பறிக்கப்படுவதால் நிலைமை மேலும் மேலும் மோசமடைந் துள்ளது. கூட்டத்தினரை கலைப்பதற்காக காவல்துறை யினர் கடுமையான அடக்கு முறையை பிரயோகிப்பதை நியாயப்படுத்துவது எந்தவிதத் திலும் சரியல்ல.அதுமட்டுமின்றி இந்தப் போராட்டங்கள் பயங்கரவாதி களாலும், பாகிஸ்தான் ஆதரவு சக்திகளாலும் தூண்டிவிடப் படுகின்றன என்ற கருத்தும் தவறானது. 20 ஆண்டுகாலமாக பயங்கரவாதத் தாக்குதல் களை யும், அதற்கு பதிலடியாக பாது காப்புப் படையினரின் நட வடிக்கைகளையும் மட்டுமே பார்த்து வளர்ந்த இளைஞர் கள் அவர்கள். எனவே அவர் களது கோபத்தை, மனநிலை யை மேற்கண்ட சில சக்திகள் பயன்படுத்த முயற்சிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.எனவே இவற்றையெல் லாம் கணக்கில் கொண்டு, காஷ் மீர் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவும், அவர்க ளது குறைகளை காது கொடுத்து கேட்கவும் வேண்டும் என்பதே முதல் கோரிக்கை. இதற்கு அடிப்படையானது ஒரு அர சியல் ரீதியான அணுகுமுறை; சட்டம்ஒழுங்கு பிரச்சனை என்ற கண்ணோட்டத்துடன் கூடிய அணுகுமுறை அல்ல. அதுமட்டுமின்றி மேலும் மேலும் பாதுகாப்புப் படை யினரை குவிப்பதில் இத்தகைய போராட்டங்களுக்கு எந்த தீர்வும் காண முடியாது.
எனவே காஷ்மீர் பள்ளத் தாக்கில் இயல்பு நிலைமையை மீட்க 5 முக்கிய கடமைகளை மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

1) கடும் குற்றச்சாட்டு எது வும் இல்லாமல் சிறையில் அடைக் கப்பட்டுள்ள அனைத்து இளம் சிறார்களையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும்.

2) பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் காயமடைந் துள்ளனர். சிலர் நிரந்தரமாக ஊனமடைந்துள்ளனர். அவர் களுக்கு உரிய நிவாரணமும், அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்வாதாரமும் ஏற்படுத்தப் படவேண்டும்.

3) பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்பு பயங்கரவாதிகளாக இருந்து வன்முறையை கை விட்டு வாழ்வு தேடி வந்தவர் கள் ஆகியோரின் வாழ்வாதா ரத்திற்கு உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத வன்முறையின் அளவு கணிச மாக குறைந்திருப்பதை கணக் கில் கொண்டு, ராணுவம் மற் றும் பாதுகாப்புப் படையின ரின் அளவை படிப்படியாக குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இங் கேதான், ஆயுதப்படையின ரின் சிறப்பு அதிகாரச்சட்டம் தொடர்வதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஸ்ரீநகரிலும் இதர முக்கிய நகரங்களிலும் ராணுவம் நிறுத்தப்பட வில்லை அல்லது பிரயோகிக் கப்படவில்லை. ஆயுதப்படை யினர் சிறப்பு அதிகாரச்சட் டத்தின் எதிர்காலம் குறித்து பேசுவதற்கு முன்பு, ராணுவம் நிறுத்தப்படாத ஸ்ரீநகர் மற் றும் இதர முக்கிய நகரங்களில் இருந்துபதட்டமான பகுதி கள்” என்ற அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த அறிவிப்பை வெளியிட்டாலே, மேற்கண்ட சட்டம் அந்தப் பகுதிகளில் பிரயோகிக்கப் படாது. மக்கள் குடியிருக்கும் பகுதிகளில், கடுமையான பயங் கரவாத செயல்கள் எதுவும் இல்லை. எனவே ராணுவம் இந்த பகுதிகளில் குவிக்கப் படவேண்டிய அவசியம் இல்லை என்பதையே பாது காப்பு தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. ஆயுதப்படை யினரின் கடினமான பணி என்பது எல்லைக்கட்டுப் பாட்டுக் கோட்டை தாண்டி ஊடுருவும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் அடங்கி யிருக்கிறது.

4. மற்றுமொரு முக்கிய அம்சம், பாதுகாப்புப்படை யினரின் பொறுப்பு குறித்த தாகும். மனித உரிமை மீறல் களும் அதீதமான தாக்குதல் களும் அங்கு நடக்கின்றன. இன்றைக்கு நீடிக்கும் இந்தப் பெரும்போராட்டத்திற்கு அடிப்படைக் காரணமே மச் சில் எனும் பகுதியில் ஏதுமறி யாத மூன்று அப்பாவிகளை பாதுகாப்புப் படையினர் என் கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது தான். எனவே இது போன்ற அப்பட்டமான மீறல் களுக்கு எதிராக உறுதியான நடவ டிக்கை எடுக்காமல், மக்களி டையே இந்த அரசால் நம் பிக்கை ஏற்படுத்த முடியாது.

இதை அனைத்தையும் மன தில் கொண்டு, உடனடியாக அங்கு அனைத்து தரப்பின ருடனும் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்; ஒரு அர சியல் நடவடிக்கை துவக்கப் படவேண்டும்.அனைத்துக்கட்சி குழு காஷ்மீர் சென்று பல்வேறு தரப்பு மக்கள் பிரதிநிதிகளுட னும் விவாதிக்க வேண்டும். எவ்வித முன்நிபந்தனையும் விதிக்காமல் பேச்சுவார்த் தையை துவக்குவதாக பிரதமர் அறிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை கண்கா ணிக்க ஒரு மூத்த அரசியல் பிரதிநிதியை கூட பிரதமர் நியமிக்கலாம். கடந்த மாதம் நான் ஸ்ரீநகர் சென்றிருந்தேன், ஏராளமான மக்களை சந்தித்தேன். நாடாளு மன்றத்தில் எங்களது பிரச்ச னையை அரசியல் கட்சிகள் எழுப்பாதது ஏன் என்று அவர் கள் கேள்வி எழுப்பினார்கள். எனவே காஷ்மீர் மக்களின் உணர்வுகளையும் அபிலாசை களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்தத்தீர்வும் காண முடியாது என்பதை நாட்டு மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும், அரசும் உணர வேண்டும்.

7 thoughts on “காஷ்மீரிகள் இந்திய அரசின் மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள்- பிரகாஷ்காரத்.”

 1. இந்தியாவுடன் எந்த உறவும் இல்லை என்பதையே காசுமீரிகளின் போராட்டம் உண்ர்த்துகிறது, காசுமீரிகளுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவேண்டும்.

 2. இதே விதமான கருத்துக்களை சி.பி.எம். தலைவர்கள் இலங்கைத் தமிழர் தொடர்பாக எப்போதோ சொல்லியிருந்தால் யோக்கியமாயிருந்திருக்கும்.
  இன்றுங் கூடக் காஷ்மீரிகளுக்குச் சுயநிர்ணயம் வேண்டும் என்று சொல்ல சி.பி.எம். தலைவர்கள் ஆயத்தமாக இல்லை.

 3. இந்தியாவிலிருந்து பிரிந்து போக போராட்டம் நடாத்தும் காஸ்மீர் மக்களை வாழ்த்துவோம் .

  1. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரே இஸ்லாமிய மத வெறீயரால் விரட்டப்பட்ட அகதியே அவர்தான் ரோஜாவின் ராஜா நேரு.இன்றூ வரை விரட்டப்பட்ட இந்துக்கள் தமது பூர்வீக மண்ணூக்கு திரும்ப முடியவில்லை.இந்தியாவை இந்துக்கள் தேசம் என்பதே பொய்யானது இந்துவால் இந்தியாவின் காஸ்மீரில் தனது பூர்வீக மண்ணீல் வாழ முடிகிறதா?

  2. நேரு எப்போது விரட்டப் பட்டார்?
   யார் காதில் பூச் சுற்றுகிறிர்கள்?
   காஷ்மீரிப் பண்டிட்டுகள் இன்னமும் அங்கு சொகுசாகத் தான் வாழுகிறர்கள்.
   நேரு குடும்பம் தன் சொத்து எதையும் இழக்கவில்லை.

   உங்கள் முஸ்லிம் விரோதம் உங்களை எந்த எல்லைகளுக்கெல்லாம் கொண்டு போகிறது!
   உங்களிடமிருந்து இந்து பாசிசம் தொலைவிலில்லை.

 4. இந்திய் தலைவர்களின் அரசியல் வின்ள்யாட்டில் கஷ்மீர் ஒரு பந்து

 5. தமிழ்மாறன் நிறைய பக்தி படம் பார்ப்பதால் வந்த கோளாறு இது .

Comments are closed.