காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் வேண்டாம்!: பிரிட்டன்

brown_getty-203பொதுநலவாய அமைப்புக்களின் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற அந்த நாட்டின் கோரிக்கையை தாம் தடுக்க முனைவோம் என்று பிரிட்டன் கோடிகாட்டியுள்ளது.

அண்மையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை இலங்கை கையாண்ட விதத்தை காரணமாகக் கொண்டே பிரிட்டன் இந்த நடவடிக்கையை எடுப்பதாக பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

மாநாட்டை நடத்துவதற்கான இலங்கையின் கோரிக்கை குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து இலங்கை அரசாங்க தரப்பு கருத்துக்களை உடனடியாக பெற முடியவில்லை.