காணமல் போனோரைத் தேடியலையும் உறவினர்கள்

வன்னியில் காணமல் போனோரைத் தேடியலையும் உறவினர்கள்.
கடந்த ஆண்டு வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணமல் போய் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்காமல் உள்ளவர்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்காக பல உறவினர்கள் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களின் உதவியை நாடி அலைந்து திரிந்து கொண்டு வருகின்றனர். காணமல் போனோர் தொடர்பான புகார் தெரிவப்பதற்hக நாளாந்தம் பலர் வவுனியா வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வவுனியாவில் மனித ஆணைக்குழுவில் காணமல் போனோர் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிதனை அடுத்து, அச் செய்தியை நம்பிப் பல உறவினர்கள் காணமல் போன தங்கள் உறவினர்கள் பற்றி அறிய வவுனியா வந்து ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார்கள்.

இதே வேளை வன்னியில் நடந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் காணமல் போன தங்கள் உறவுகளை மீட்டுத் தருமாறு பொது மக்கள் பலர் கண்ணீருடன் வேண்டு கோள் விடுத்துமிருந்தனர். ஆயினும் இதுவரை காணமல் போனோர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாமலே உள்ளது.