காட்டிய தோழ்களில் : நோர்வே நக்கீரா

வான்வெளில் வானரங்கள் வட்டமிடும்
வன்னிமண்ணை தின்று தீர்க்கத் திட்டமிடும்

வடக்கிலிருந்து வானமளக்க அனுமார் படை
வைதேகி மாவியாவுக்கு இந்தியாவில் கொடி குடை
கிழக்கிலிருந்து கொண்டு வந்து கொட்டினர் சீனவெடி
பங்கர் கிடங்குகளுள் அழிந்தனர் எங்கள் தமிழ்குடி.

பசியெடுக்கும் பாக்கிஸ்தானில்
படியளக்க யாருமில்லை
தமிழர் உயிர் உண்ண உதவுகிறார்கள்
இதற்கொன்றும் குறைவில்லை.

உயிர்கொழுத்தி உள்ளம் எரிய
ஆற்றாய் வடித்த வன்னியின் கண்ணீர்
சிந்து நதியாய் கரையுடைத்தது.
நடை படித்தது
உயிரெடுத்தது.
தாகத்துக்குக் குடித்த நீரே
உயிர் குடித்தது.

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
இயற்கை அன்றே கொல்லும்.

இலங்கையில் அள்ளிய பாவப்பணம்
பாக்கிய ஏழைகளை எட்வேயில்லை
வெள்ளம் கொண்டு போனது கொள்ளை

எங்கள் உடல்களில் ஓடிய உதிரம்
சீனாவில் வெள்ளமாய் கரை உடைப்பு
சீனப்பெருஞ்சுவர் கற்களின் மேலே
பொதுவுடமைத் தத்துவங்கள் தலை உடைப்பு

பொருளாதார வெள்ளம் சீனாவில் பாயும்
பொதுமக்கள் வாழவே உணர்வின்றி ஓயும்.
மஞ்சக்கடலே மாறும் சிவப்பாய்
வன்னிமக்களின் சாபக் கொடுப்பாய்.

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
இயற்கை அன்றே கொல்லும்.

இராவணன் தேடிப்போன சீதை
இந்தியப் பெண்மணி இல்லை என்பதை
கறுப்புக் கண்ணாடி காட்டுவதில்லை

மாரீசன் மாமாக்களின்
உணவுண்ட உண்ணாவிரதங்களால்
உண்ணாநோன்பே உயிரின்றிப் போனது.
காந்தியின் பெயர்களால்
காந்தியின் சாந்தியும் புதையுண்டு போனது.

இராவண வதம் என நடந்த
வன்னிவதை ஐரோப்பாவுக்குக் கேட்டாலும்
அயோத்திக்குக் கேட்காது
சுக்கிரீவன் அரசுக்குமா கேட்காது?

எங்கள் மண்ணில் ஏறிய கைகளை
கூரிய வாள்கள் கிழித்த போதும்
சீறிய தமிழர்கள் சிவந்தபோதும்
இந்தியச் சகோதரம் இழித்தது
உறவுகளை எறிந்து கிழித்தது.
திராவிடம் திண்டு திமிர்த்தது.
தமிழைச் சொல்லிப் பழித்தது.

பங்கர்களுக்குள் இருந்த வன்னிப் குழந்தைகள்
பெற்றோரைத் தேடிப் பசியோடு எழுந்தனர்
உதிரம் உறைந்த உடல்களோடு
நீட்டிய கைகளில் நீளத்தாவினர்
காட்டிய தோழ்களில் சாயத்தொடங்கினர்

கேட்பதற்கு எவரும் இல்லை
கொடுப்பதற்கும் ஏதுமில்லை- இனி
எதிரி என்று எவரும் இல்லை
துரோகிகளே எதிரியுடன் கைகோர்த்தபோது
நாம் காட்டிய தோழ்களில் சாய்ந்து கொள்கிறோம்
எதிரிகள் என்பது எமக்கு இனி இல்லை
எங்களை எவரும் தேடவும் வேண்டாம்
முதுகில் ஏறிக் குத்தவும் வேண்டாம்.

திராவிடம் காட்டித் தலைநிமிர்ந்த தலைவா
உன்தலைபோகு முன்னரே
தமிழ் போய்விட்டு போ

இந்தியத் தமிழர் எட்டித் துப்பினால்
இலங்கை ஒருதரம் சனிநீராடும்
துப்பக் கூட துப்பில்லாமல்
போனதே துப்புக் கெட்ட தமிழினம்

நாம் காட்டிய தோழ்களில் சாய்ந்து கொள்கிறோம்
எதிரிகள் என்பது இனி எமக்கு இல்லை
எங்களை எவரும் தேடவும் வேண்டாம்
முதுகில் ஏறிக் குத்தவும் வேண்டாம்.

வறுமையில் வாழ்ந்து வளர்ந்த
அப்பு அப்துல் கலாம் காலநிதியும்.
கனவு காண் என்று அன்றே சொன்னார்
நிஜமாக எதுவுமே கிடைக்காது என்பதாலா?

அப்பு கண்ட கனவு கூட
இறுதியில் இந்தியாவில் இராச்சத இரக்கட்டு
பேரழிவுச் சிகரெட்டு.
வாடிய வயிறு வதைபட்டிருக்க
சிறுகுடலைப் பெருங்குடல் தின்று தீர்க்க
சோறுதானே ஐயா கனவிலும் வருகிறது.

வறுமையில் வளர்ந்த
தமிழ் விஞ்ஞானி கூட
ஏறிய ஏழை ஏணிகளை
ஏற்றவே இல்லையே.
ஏழையின் வாழ்க்கையே கனவுகளின் தொல்லையே.

நாம் காட்டிய தோழ்களில் சாய்ந்து கொள்கிறோம்
எதிரிகள் என்பது இனி எமக்கு இல்லை
எங்களை எவரும் தேடவும் வேண்டாம்
முதுகில் ஏறிக் குத்தவும் வேண்டாம்.

தோழ்கள் தேடும்
நோர்வே நக்கீரா

18 thoughts on “காட்டிய தோழ்களில் : நோர்வே நக்கீரா”

 1. கவிதை காரமாக இருக்கிறது. புலிகள் பாஷையில் போக்குக் காட்டி அடித்தது போன்று உள்ளது. தோழ்களில் இருந்து தலையில் அடிக்கும் ஒரு ஆழமான கவிதை. எமது மக்களின் இன்றை நிலையை ஒருவரியில் “காட்டிய தோழ்களில் சாய்து கொள்கிறோம்” என்ற வரிகளால் ஆழப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இதைவிடச் சிறப்பாக ஒரு வார்த்தையாடலை தெரிவு செய்ய முடியாது. பாவம் அப்துல் கலாமுக்குமா? அவர் ஏழைகளைப் பற்றிக் கனவு கண்டு கொண்டே இருக்கிறாராக்கும். மாரீசன் என்று பரமேஸ்வரனையா குறித்தீர்கள்.

  “பசியெடுக்கும் பாக்கிஸ்தானில்
  படியளக்க யாருமில்லை
  தமிழர் உயிர் உண்ண உதவுகிறார்கள்
  இதற்கொன்றும் குறைவில்லை.

  உயிர்கொழுத்தி உள்ளம் எரிய
  ஆற்றாய் வடித்த வன்னியின் கண்ணீர்
  சிந்து நதியாய் கரையுடைத்தது.
  நடை படித்தது
  உயிரெடுத்தது.
  தாகத்துக்குக் குடித்த நீரே
  உயிர் குடித்தது.
  ” இந்த ஆழமான வரிகள் நெஞ்சை அள்ளுகிறது.

  1. /மாரீசன் என்று பரமேஸ்வரனையா குறித்தீர்கள்/ இல்லை. உண்ணாவிரம் என்று உலகெங்கும் இருந்தவர்கள்: இந்தியாவில் ஒருவர் இருக்க மற்றவர் வந்த எழுப்பிக் கூட்டிப்போன எல்லா உண்ணாவிரங்களும் மாயமான் மாரீரன் போல் கவர்ச்சி காட்டி மறைந்து விட்டனரே அவர்களைத்தான் குறிப்பிட்டேன்.

 2. உறப்புச் சாப்பிடும் போது இலையில் இருக்கும் இனிப்பைக் கடிப்பது போலொரு உணர்வு.பாகிஸ்தானியர்களீன் கர்மா அவர்கள ஜல சமாதிக்குள் தள்ளீயது சமயம் சமயம் எனப் பேசியே கொல்வார்கள் தமது மக்களூக்கு என்றூ எதையாவது செய்தார்களா?

  1. நியாயமான கேள்வி தமிழ்மாறன். இலங்கையில் சுனாமி வந்தபோது பாக்கிஸ்தான் என்ன செய்தது? சரி இலங்கைக்கு ஆயுதம் விற்ற பணத்தில் எவ்வளவு பணம் ஏழைப் பாக்கிஸ்தானியருக்குப் போய் சேர்ந்தது. எப்படிப்பார்த்தாலும் துன்பதுயரங்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாவது ஏழைப் பாட்டாளி மக்களே

  2. பாகிஸ்தானியர்களீன் கர்மா அவர்கள ஜல சமாதிக்குள் தள்ளீயது என்றால் யாருடைய கர்மா முள்ளிவாய்க்காலுக்குள்ளும் முட்கம்பி வேலிகளுக்குள்ளும் தள்ளியது?
   இந்திய அரசின் கர்மாவின் பயன் எப்படி அமையும்?

   மக்களின் அவலம் உங்களுக்கு இனிக்கிறது.
   என்னே உங்கள் மனிதாபிமானம்! வெட்கக்கேடு!

   1. தாங்கள் தமிழ்மாறனின் பின்நோட்டத்துக்குப் பின்நோட்டம் விட்டிருக்கிறீர்கள். பதில் சொல்ல வேண்டியவர் தமிழ்மாறனாக இருந்தாலும். கவிதையை மீண்டும் ஒருதரம் கவனமாகப் படியுங்கள் ஏழைகளின் அவலங்களை எழுதியுள்ளேன்.:
    //சிறுகுடலைப் பெருங்குடல் தின்று தீர்க்க
    சோறுதானே ஐயா கனவிலும் வருகிறது.

    வறுமையில் வளர்ந்த
    தமிழ் விஞ்ஞானி கூட
    ஏறிய ஏழை ஏணிகளை
    ஏற்றவே இல்லையே.
    ஏழையின் வாழ்க்கையே கனவுகளின் தொல்லையே
    // இங்கே அவலங்களும் துன்பியலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உங்களுக்குத் தெரியுமா புலிகளை வெற்றி கொண்ட தினத்தை அரசு இவ்வருடம் கொண்டாட முயன்றபோது பெரும் புயலுடனான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தனர். வள்ளத்தில்தான் மக்களை விமான நிலையத்திற்குக் கொண்டுவந்ததாக அறிந்தேன். கறுமவினை யாரையும் விடாது./இந்திய அரசின் கர்மாவின் பயன் எப்படி அமையும்?/ சீனாவின் வளர்ச்சி. மீதியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஏழை அழுதகண்ணீர் கூரியவாளை ஒக்கும் என்பது. கரையுடைத்தது தண்ணீரல்ல வன்னி மக்களின் கண்ணீர். அதில் அடிபட்டுப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைமக்கள் என்பதுதான் வேதனைக்குரியது.

    1. தமிழ்மொழி கணீதம் சார்ந்தது சைவம் விஜஜானம் கொண்டது இதனால் இப்படி என க் கணீக்க முடிந்தது ஆக்வேதான் நாம் மூத்த குடி.தாங்கள் சைவமும் தமிழும் பற்றீ நிறய எழுத வேண்டும்.

  3. எவரது அவலத்துக்கும் பிறரது கர்ம வினையைச் சாடிப் பேசுவது எனக்கு உடன்பாடற்றது.
   நமக்கும் நம்முடைய சரி பிழைகளே தெரியாது. நம்முடைய தேவைகள் விளங்காது.
   ஆனால் நமக்குக் கேடு செய்தவர்கள் என்று நாம் நினைப்போருக்குக் கேடு நேர்ந்தால் அதில் ஒரு சிறிய ஆனந்தம் என்றால் அது பரிதாபமான மனநிலை.

   உங்கள் கவிதைக்குள் நான் போக முயலவில்லை. அது கிளறி விட்டுள்ள கீழ்த்தரமான எண்ணங்கள் கவலை தருவன. குறிப்பாக:
   “உறப்புச் சாப்பிடும் போது இலையில் இருக்கும் இனிப்பைக் கடிப்பது போலொரு உணர்வு.”
   இது உங்கள் கண்ணில் படவில்லையா?

   பி.கு. தோழ் அல்ல, தோள்.

   1. மாற்றம் கொண்டு வா. எந்த நிலையிலும் உண்மையாய் இரு.ஆறறீவு பேரறீவு ஆவதற்கு ஆழ்ந்து, ஆழ்ந்து போகவும் வழியைக் காட்டும் சைவம் நமது வாழ்வு நெறீ.கர்மா என்றால் ஊழ்வினைப் பயன்.உறப்பில் இனிப்பு பிழயான வார்த்தயே மன்னியுங்கள்.அலட்டல் இல்லா நக்கீராவும் தங்கள் பொறூமையான பின்னோட்டமும் பிடிக்கிறது தொடர்ந்து வாருங்கள்.

   2. தோழ் என்பது தவறானது. கொம்பு “ள” தான் சரியானது என்று அறிந்தும் ஏற்பட்ட பிழையை இனியொரு திருத்துவார்கள் என்று எண்ணுகிறேன: உங்களுக்கு கவிதைக்குள் போகமுடியவில்லை என்பது தெரிகிறது. இங்கே பாக்கிஸ்தானில் நடந்த அவலத்துக்காக யாரும் மகிழவில்லை. ““பசியெடுக்கும் பாக்கிஸ்தானில்
    படியளக்க யாருமில்லை
    தமிழர் உயிர் உண்ண உதவுகிறார்கள்
    இதற்கொன்றும் குறைவில்லை” இங்கே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று விளங்குகிறதா? வேற்றுநாடுகளில் முக்கியமாக அயல்நாடுகளில் இலங்கையில் செய்யும் பாவங்களுக்கு கொடுக்கும் பணத்தை தம்மக்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.வெள்ளத்தால் மக்கள் அழிந்து கொண்டிருந்தபோது குண்டுவைத்து 40 அப்பாவிப் பாக்கிஸ்தானியர் பாக்கிஸ்தானியரால் கொல்லப்பட்டார்கள். காரணம் மதம்.இது தெரியுமா? இக்கவிதையில் மகிழ்ச்சி பொங்கி வழியவும் இல்லை:கொண்டாடப்படவுமில்லை. துன்பம் துயரம் வேதனைகளைத்தான் சொல்லியிருக்கிறது. நாம் மகிழ்ச்சி அடைவதாக நீங்கள் கருதுவீர்கள் என்றால் உமது மனநிலையும் காழ்புணர்வையும் காட்டுகிறது. எனது கவிதையையும் மாறனின் பின்னோட்டத்தையும் சேர்த்து தாங்கள் குழப்புவதால் நீங்கள் நன்றாகக் குழம்பியிருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

  4. Nackeera,
   கவிதைக்குள் போக முயலவில்லை என்றால் வாசிக்கவில்லை என்பதில்லை. அதைப் பற்றி இங்கு விரிவாக எழுத முயலவில்லை என்பது தான்.
   நீங்கள் மகிழுகிறீர்கள் என்பது என் நிலைப்பாடல்ல. உங்கள் சொற்கள் எவ்விதமான வசிப்புக்களை இயலுமாக்கியுள்ளன என்று யோசித்துப் பாருங்கள்.

   “உயிர்கொழுத்தி உள்ளம் எரிய
   ஆற்றாய் வடித்த வன்னியின் கண்ணீர்
   சிந்து நதியாய் கரையுடைத்தது.”
   இதை மேற்கோள் காட்டியவர் இன்னொருவர்.

   தமிழ்மாறனின் மதத் துவேஷம் எனக்கு வியப்பளிக்கவில்லை. அதற்குத் தீனி போடுகிற விதமாக உங்கள் வரிகள் அமைவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

   தமது ஒவ்வொருசொல்லும் எத்தகைய சிந்தனைகளைத் தூண்டி விடுகின்றன என்பது பற்றிக் கவிஞர்கள் கவனமாயிருக்க வேண்டும்.
   நம் உணர்ச்சிக் கவிஞர்கள் மூலம் இனப் பகை உணர்வுகள் தூண்டப்பட்டன. அவை வேறெதையும் சாதிக்கவில்லை.
   அந்த வரிசையில் நீங்கள் ஒருவரல்ல என நம்புகிறேன்.

   1. எக்ஸ்!
    “உயிர்கொழுத்தி உள்ளம் எரிய
    ஆற்றாய் வடித்த வன்னியின் கண்ணீர்
    சிந்து நதியாய் கரையுடைத்தது.”
    இதில் என்ன பிழை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. இது எனது கருத்து. யார் யாரோ ஒரு கவிதையை வைத்து மட்டுமல்ல ஒரு சொல்லை வைத்தே எப்படி எப்படியோ சிந்திப்பார்கள். அதற்காக எமது கருத்துக்களை சொல்லக்கூடாது என்கிறீர்களா? உலகில் நடப்பவற்றை உன்னிப்பாக பார்ப்பீர்கள் முக்கியமாக மதங்களுக்கு- அப்பால் கைக்குக் கைமேல் பல நடப்பதைக்காணலாம். வன்னி அவலம் எழுத்துகளால் விபரிக்க முடியாதது. அதேவேளை பாக்கிஸ்தான் மக்கள் பசியும் பட்டிணியுமாக இருக்க பாக்கிஸ்தான் இந்த ஏழைவன்னி மக்களுக்கு மட்டுமல்ல தன்மக்களுக்குமே பாதகமாகத் தானே நடந்தது. முக்கியமாக சிந்துநதி தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமானது. சிந்துவெளிநாகரீகம் திராவிட நாகரீகம் என்பதை யாரும் மறுக்க இயலாது. இங்கே தமிழன் பாக்கிஸ்தான் ஆயுதங்களால் விட்ட கண்ணீர் எமது பண்டைய பரம்பரை குடித்து வளர்ந்த சிந்துநதி நீர் பெருக்கெடுத்தது. தமிழர்களுக்கும் சிந்துநதிக்கும் தொடர்பு இருந்தது.
    கவிதைகளை வாசிப்பவர்கள் எல்லாம் கவிதைகளை புரிந்து கொண்டார்கள் என்று கொள்ள இயலாது. புரிந்து கொண்டவர்களெல்லாம் சரியாகத்தான் புரிந்து கொண்டார்கள் என்றும் கூற இயலாது. அதேவேளை கவிதையாசிரியர் ஒன்றை எழுத வாசிப்பர் அதைவிடப்பன்மடங்காகக் கற்பனை செய்யலாம். இவை சாதாரணமானவையே. முக்கியமாக கவிதைகள் உள்ளூட்டமாக பல பல கருத்துக்களை ஒரு வரியிலேயே கொண்டிருக்கும். சிந்துவுக்கும் தமிழர்களுக்கும் உரிய பண்டைய உறவை மறைமுகமாக வைத்திருந்தேன். இன்னொரு விடயத்தை எக்ஸ் யோசியுங்கள் அடிக்கடி குண்டு வெடிப்புக்கள் பாக்கிஸ்தானில் நடக்கிறது. பல உயிர்கள் போயின. வெள்ளப்பெருக்கு நடைபெறும் போதே குண்டுவெடிப்பால் 40 உயிர் பாக்கிஸ்தானில் போனது.அவற்றை வன்னி அவலத்துடன் ஏன் ஒப்பிடவில்லை என்று கொஞ்சம் யோசித்தீர்களா? உங்கள் மூளையில் எனது உணர்வுகளுக்குக் கவிதை எழுத முடியாது. அது எங்கள் மறைபெயரான எக்ஸ் எக்ஸ் எக்ஸ் என்பது வளமையில் பயன்படுத்தும் செக்ஸ் (காமம்) என்றாகிவிடும். கவிதை எனது உணர்வுகள் உந்தி எழுதப்பட்டனவே தவிர மற்றவர்கள் அதாவது கோடானு கோடி மக்கள் எப்படியெல்லாம் உங்களைப்போல் சிந்திப்பார்கள் என்று எண்ணினால் உலகில் ஒருகவிதை கூட எழுத இயலாது. உங்கள் கருத்துப்படி பார்த்தால் கவிதை எழுதாதே அல்லது எழுதாதீர்கள் மக்கள் இப்படி அப்படியெல்லாம் சிந்திப்பார்கள் என்பது போல் உள்ளது. தங்களது பின்நோட்டத்தை தங்களது கருத்தா மட்டும் தான் பார்க்கலாமே தவிர அதான் எனது கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் புரிக

 3. எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை கர்மவினை கரைபுரண்டது என்பதை ஏழை அழுதகண்ணீர் கூரியவாளை ஒக்கும் என்றும் பார்க்கலாம். இவை மகிழ்ச்சிக்குரியது அல்ல அப்படி மகிழ்ச்சி என்று கருதினால் அது அவரவர் மனநிலையையே காட்டும். ஒரு பங்கருக்குள் எழும்பி வந்த குழந்தை முள்ளிவாய்க்காலில் எப்படி உணரும் என்பதையே காட்டிய தோள்களாக எழுதினேன். உற்றார் இல்லை பெற்றார் இல்லை யார் யார் கையை நீட்டி அழைத்தாலும் உதவி கிடைக்கும் என்ற நிலையில் தாவிப்போகும் குழந்தைகளாகவே எம்மக்களைச் சித்தரித்துள்ளேன். அந்தக் கைகள் யார் யார் தோள்களைச் சுட்டிக்காட்டுகிறதோ அந்தத் தோள்களிலேயே அவர்கள் சாய்ந்து விடுகிறார்கள். இவை எல்லாம் மகிழ்ச்சியானது என்று எக்ஸ் கருதினால் என்னால் அதை பிக்ஸ் பண்ண இயலாது. துன்பத்துக்கான காரணம் கர்மவினை என்று சொல்வது எமக்கு மகிழ்ச்சியானது என்று எக்ஸ் கருதினால் என்னைப் பொறுத்தவரையில் கவிதையை அவர்விளங்கிக் கொள்ளவில்லை என்றே கருதலாம். அன்றேல் அது அவர் கருத்து எனறே எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது.

  1. நான் உரைநடையில் சொன்னதை கூடப் பொறுமையாக வாசிக்காமல் தயவு செய்து ஒவ்வொரு மாற்றுக் கருத்துக்கும் “காழ்ப்புணர்வு” என்று காரணம் கற்பித்து உங்களைத் தேற்றிக் கொள்ளாதிர்கள்.
   கவிதையில் வருகிற சில சிந்தனைகளில் எனக்கு உடன்பாடில்லை என்றல் அது கவிதையை விளங்கிக் கொள்ளாததாலாக இருக்க வேண்டியதில்லை.
   உங்களுடன் உடன்பட்டு மெச்சினால் மட்டுமே கவிதை விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால், மிக நன்று. அவ்வாறே ஆகுக.

   1. எக்ஸ்! இதைத்தானே நான் முன்பே சொல்லியுள்ளேனே. அது உமது கருத்தாக மட்டுமே எடுக்கலாமே ஒழிய கவிதையின் கருத்தா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கவிதை எழுதுவதே எனது எண்ண உணர்வுகளைத் தேற்றிக் கொள்வதற்காகத் தான் என்பதை அறிக. கவிதை உடன் உடன்பாடாத பக்தா “உங்களுடன் உடன்பட்டு மெச்சினால் மட்டுமே கவிதை விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால்” மெச்சுவதற்காகக் கவிதை எழுதினால் அது ஒருகவிதையுடனே நின்றிருக்கும். கவியாளர்கள் என்றும் திருப்திப் படுவதில்லை. திருப்திப் பட்டார்களோ எழுத்து வற்றிவிடும். உங்கள் கருத்தை உங்கள் கருத்தாகவே மனமார ஏற்கிறேன். இக்கவிதை மட்டுமல்ல எல்லாக் கவிதைகளுமே வேற்று மாற்றுச் சிந்தனைகளை ஏற்படுத்தும். அதற்கு நான் என்றும் பொறுப்பாளியாக முடியாது. உ-ம் நீங்கள் கூட அப்படித்தானே. உங்கள் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து வைக்கலாம். விமர்சனங்களை நான் என்றும் வரவேற்பவன். நான் விமர்சனங்களுக்குப் பதில் எழுதுகிறேன் என்றால் விமர்சனங்களைக் கருத்தில் கொண்டுள்ளேன் என்பதை ஏன் உங்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. இவர்களுக்கெல்லாம் பதில் அழிப்பதா என்று எண்ணி விமர்சனங்களை அசட்டை செய்யும் நிலைகளை ஏறக்குறைய எங்கும் காணலாம். உங்கள் சந்தேகங்கங்களுக்கும் சரி விமர்சனங்களுக்கும் சரி என் சிற்றறிவுக்கு எட்டியவரை பதிலளிக்க முயல்கிறேன்.

 4. என்னுடைய கவலைக்குரிய காரணங்களை ஏலவே சொல்லி விட்டேன்.
  நான் மேற்கொண்டு சொல்லக் கூடிய எல்லாமும் என் அபிப்பிராயங்களே. எனவே முன் சொன்னதற்கும் மேல் எதையும் சொல்லித், தேவையின்றிக் “காழ்ப்புணர்வு போன்ற’நோக்கங் கற்பிக்கப்பட நான் விரும்பவில்லை.
  உங்கள் உயரிய நோக்கங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  1. கவிதை என்பதே சுருங்கச் சொல்லுதல் என்ற ஒரு கட்டுரை இந்த இணையத்தளத்தில் இருகிறது. ஆனால் அப்படிதான் இருக்காமல் சற்று பெரிய தோற்றத்துடன் இருந்தாலும் அதன் தேவை இருந்தாலும் கவிதை வாசகரை உள் இழுக்க வேண்டும். மூச்சு வாங்வைக்க்கூடாது. Mr xxx உங்கள் கருத்துளுடன் நானும் ஒத்துப்போகிறேன். கவிதையை உணரவேண்டும் விளங்கப்படுத்த ஆரமப்பித்தால் உயிர் போய்விடும்.

   1. ஆதவனே!//கவிதையை உணரவேண்டும் விளங்கப்படுத்த ஆரமப்பித்தால் உயிர் போய்விடும்.// இப்படி எழுதியுள்ளீர்கள். வேடிக்கையாக இருக்கிறது. விளங்கினால்தான் உணரமுடியும். விளங்காக எதையும் உணரமுடியாது. கவிதை விளங்கவில்லை என்று தெரிகிறது. அது கவிதைக்கு மட்டுமல்ல சொற்கள் வசனம் எந்த மொழியாயினும் இதுவே விதி.

    சுருங்கச் சொல்வது தான் கவிதை என்ற வரைவு இலக்கணத்தை எந்தப்பண்டிதர் சொன்னார். யாப்பிலக்கணத்தில் எங்கு உள்ளது? தமிழுக்கு யாப்பிலக்கணம் எழுதியது யார்?
    மரபுக்கவிதைகள் தோற்றம்: மொழி அடுக்குப்பற்றிப் பேசுகின்றன. நீங்கள் எந்த கவிதை வரம்புக்குள் நின்று பேசுகிறீர்கள்? கவிதை உள் இழுக்க வேண்டும் மூச்சு வாங்கக் கூடாது. ஆதவா! கவிதை வாசித்தல் என்பது ஓட்டப்பந்தயம் போல் வாசித்தால் கவிதைகள் அப்படித்தான் இருக்கும். அமைதியாக இருந்து இரசித்துச் சுவைக்க வேண்டியது மட்டுமல்ல கவியாளர் என்ன சொல்கிறார் சொல்ல வருகிறார் என்பதை அறிதலே கவிதையில் புரிதலாகும். எட்டாம் பழம் புளிக்கும் என்று சொல்வது தவறு. நீங்கள் மிஸ்டர் செக்சுடன் உடன் உடன்படுவது உமது உரிமை அத்துடன் நான் உடன்படவேண்டும் என்பதில்லை. கவிதைக்கு வரவு இலக்கணமும் விமர்சனமும் எழுதும் நீர் எனக்கு சில விளக்கங்கள் தர இயலுமா? எத்தனை வடிவக்கவிதைகள் உண்டு. கவிதைகள் உருமாறினாலும் அதன் பண்புகளில் இருந்து என்றும் தவறியதில்லை அவற்றில் ஒரு 5 கூறமுடியுமா? காவியம் என்றால் என்ன? புதுக்கவிதை என்றால் என்ன? புதுக்கவிதைகளைப் பலர் கடிதம் என்றோ கட்டுரை என்றோ குறுகச் சொல்வது என்றோ கருதுகிறார்கள்? உங்கள் கருத்து என்ன? படிமங்கள் என்றான் என்ன? இது எங்கே பாவிக்கப்படுகின்றன? கவிதைகளுக்கு அணிகள் ஆயிரம் உண்டு ஒரு 10 அணிகளைச் சொல்லமுடியுமா? சிவன் விஸ்ணு முருகனுக்கு ஆறுதலையாம் இப்படி ஒரு பண்டைய கவிஞன் பாடியிருக்கிறான்.முழுமடையன் என்கிறீர்களா? இது சாத்தியமா? அப்படிச் சாத்தியமானால் எப்படி என்று விளக்குவீர்களா?
    சரி எனது கவிதைக்கே வருவோம்
    “வடக்கிலிருந்து வானமளக்க அனுமார் படை
    வைதேகி மாவியாவுக்கு இந்தியாவில் கொடி குடை”
    இந்தவரிகள் என்னத்தைச் சொல்கின்றன. நான்தான் முட்டாள் தனமாக எழுதிவிட்டேன் புலவ ஆதவ ஏதாவது உங்களுக்கு விளங்கினால் எனக்குச் சொல்வீர்களா?

    “சீனப்பெருஞ்சுவர் கற்களின் மேலே
    பொதுவுடமைத் தத்துவங்கள் தலை உடைப்பு

    பொருளாதார வெள்ளம் சீனாவில் பாயும்
    பொதுமக்கள் வாழவே உணர்வின்றி ஓயும்.”

    மேலே எழுதிய 6 வரிகளுக்கும் சரியான விளக்கம் சொல்லுங்கள் அதன்பின் கவிதை பற்றி நாம் பேசுவோம். காட்டிய தோழ்களில் சாய்ந்து கொள்கிறோம் என்றவரிகளில் கவிதை என்ன விடயத்தைச் சொல்லவருகிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம். நான் கவிதை முழுக்கக் கேட்கவில்லை சிலவரிகளை மட்டுமே கேட்கிறேன். இதன்பின் கவிதைகள் பற்றி விவாதிப்போம்.

    ஆவலுடன் நோர்வே நக்கீரா

Comments are closed.