காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புப் பணிகளை இந்தியாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சி!

 kankesan  யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைக்கப் பணிகளை இந்தியாவிடம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில், இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் யோசனையொன்றையும் இலங்கை துறைமுக அதிகாரசபை முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியத்தும் வாய்ந்த இந்தத் துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகளை இந்தியாவிடம் வழங்கும் பாதுகாப்பான விடயமல்லவென பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா, பாதுகாப்பு ரீதியில் அதற்குத் தேவையான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்ற அச்ச நிலையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
   காங்கேசன்துறை துறைமுகத்தில், வடிகால்கள், பாதைகள் போன்றவை செப்பனிடப்படவேண்டிய நிலையில் உள்ளன. இந்தநிலையில் குறித்த பணிகளுக்காக 23 மில்லியன் அமரிக்க டொலர்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.