காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்- பிருந்தாகாரத் கோரிக்கை.

இருபதாயிரம் போபால் மக்களைக் கொன்றொழித்த யூனியட் கார்பைட் இயக்குநர் வாரன் ஆண்டர்சனை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் அவரது கூட்டாளிகளும் தனி விமானத்தில் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் பீகாரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் பேசியது: வாரன் ஆன்டர்சனை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மத்தியப் பிரதேச அரசும், மத்திய அரசும் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குற்றத்துக்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும்.போபால் விஷவாயு வழக்கில் அன்று முதல் இன்றுவரை காங்கிரஸ் கட்சி பல குற்றங்களைச் செய்துள்ளது. இப்போது அமைச்சர்கள் குழு இது குறித்து விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். போபால் விஷவாயு வழக்கில் காங்கிரஸ் அரசு நீதியை நிலைநாட்டத் தவறியது குறித்து அமைச்சரவைக்குழு முறைப்படி விசாரிக்குமா? என்று அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பிகார் மாநிலப் பிரச்னை குறித்துப் பேசிய அவர், நிலச்சீர்திருத்தம் குறித்து பந்தோபாத்யாயா கமிஷன் அளித்த பரிந்துரையை அமல்படுத்த அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு தவறிவிட்டது. நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக அப்போது பாஜக நடந்து கொண்டுள்ளது. இப்போது பாஜக ஆதரவுடன் பிகாரில் ஆட்சி நடத்தி வரும் நிதீஷ்குமாரும், அந்தப் பரிந்துரையை அமல்படுத்த மறுக்கிறார். இதற்கும் நிலச்சுவான்தாரர்களின் நெருக்குதலே காரணம். ப்ந்தோபாத்யாயா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி தனி இயக்கத்தை பிகாரில் நடத்தும் என்று பிருந்தா காரத் மேலும் தெரிவித்தார்

One thought on “காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்- பிருந்தாகாரத் கோரிக்கை.”

  1. அதே காங்கிரசோடு தான் நாலாண்டுகளாக சி.பி.எம். ஒட்டிக் கிடந்ததே! அதற்காக சி.பி.எம். மன்னிப்புக் கேட்குமா?
    நந்திக் கிராம நர வேட்டைக்காக மன்னிப்புக் கேட்குமா?
    பழங்குடிகள் மீது குண்டு வீசச் சொல்லுகிறதே. அதற்காக மன்னிப்புக் கேட்குமா?
    ஆளும் போது ஒரு பேச்சும் ஆளாத போது ஒரு பேச்சும் பாராளுமன்ற இடதுசாரிகளின் சீர்கேட்டின் வெளிப்பாடு.

Comments are closed.