கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 2) : T.செளந்தர்

சுரங்கள் நுட்பமாகப் பிரிக்கப்படும் போது அவை “சுருதிகள்” என்று அழைக்கப்படுகின்றன. தொன்மைக் காலத்தில் அவை “அலகுகள்”  என்றும்,  ”மாத்திரைகள்” என்றும் அழைக்கப்பட்டன. பண்டைய தமிழ் ராகங்கள் வடமொழியில் மாற்றம் செய்யப்பட்ட உண்மை அம்பலமானது.

 

தமிழ்ப் பெயர் வடமொழிப் பெயர்
செம்பாலைப்பண் -சங்கராபரணம்
படுமலைப்பண் -கரஹரப்பிர்யா
அரும்பாலைப்பண் -கல்யாணி
கோடிம்பாலைப்பண் -கரிஹாம்போதி
விளரிப்பாலைபண் -நடனபைரவி
செவ்வழிப்பண் -தோடி
மேற்செம்பாலைப்பண் -சுத்ததோடி

 

இங்கே பண் என்பது தமிழிசை ராகத்தையே குறிக்கும். இது மட்டுமா?…

தமிழ்ப் பெயர் வடமொழிப் பெயர்
பஞ்சமம் ஆவகிரி
சீகாமரம் நாதநாமக்கிரியை
புறநீர்மை பூபாளம்
வியாழக்குறிஞ்சி  செளராட்டிரம்
கெளசிகம் பைரவி
செந்துருத்தி மத்யமாவதி
அந்தாளகுறிஞ்சி சாமா
தக்கேடு காம்போதி
கொல்லி நவரோஜ்
மேககுறிஞ்சி நீலாம்பரி
சாதாரி பந்துவராளி

 

நாட்டுப்புற இசையில் இருந்து தோன்றியனவே தமிழ்ப்பண்களில் இருந்து விருத்தியானதே செவ்வியல் இசை

தமிழில் தோன்றிய பண்கள் இன்று ராகங்கள் எனப்படுகின்றன . செவ்வியல் இசையான தமிழிசையே பார்ப்பனர்கள் “கர்நாடக இசை” என பெயரிட்டுச் சொந்தம் கொண்டாடத்தலைப்பட்டனர்.

சாஸ்திரிய சங்கீத இலக்கணம் என்று எதை எதையோ எல்லாம் சாதிக்கத்தலைப்பட்டனர். பண் ‘ என்றால் இன்று சம்பூரணராகம் என்றும் ‘பண்ணியம்’ என்பது இன்று சாடவராகம் என்றும் .’திறம்’ என்பது ஒளடவராகம் என்றும் ‘திறத்திறம்’ என்பது ஸ்வராந்தர ராகம் எனவும் அழைக்கப்படுகின்றன.

வட மொழி ஏடுகளில் இருக்கும் பாடல்களுக்கும் அவை பாடப்படும் முறைகளிலும் உள்ள முரண்பாடுகளை விளக்கி ஆப்ரகாம் பண்டிதர் கேட்ட கேள்விகளுக்கு மைசூர் அரண்மனை வீணைபண்டிதர் சேசண்ணா

“அவை நியாயமானவை, ஆனால் எம்மிடம் தான் பதில் இல்லை” என்று ஒத்துக்கொண்டார்.

தமிழிசை என்பது வெறும் வாய்ப்பாட்டு மட்டுமன்று.

தமிழிசைக்குப்பயன்படும் இசைக் கருவிகள் கூட தமிழ் நாட்டுக்கும் , தமிழ்மக்களுக்கும் சொந்தமானவை. குழல்,யாழ், குழவு என்பன இவ் உண்மையாகுச் சான்ராக பழந்தமிழ் நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

இவை மட்டுமல்ல ,வீணை,பிடில்,மிருதங்கம் ,,நாதஸ்வரம், தவில் என்பனவும் தமிழிசைக் கருவிகளே.

நாட்டிய சாத்திர நூலை எழுதிய பரதர் கி.பி.5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அந்தப் பரதரே” தென்னிந்திய மக்கள் பல விதமான நடனங்களிலும், வாய்ப்பாட்டிலும், வாத்திய சங்கீதத்திலும் த்னித்துவமான கலையார்வம் காட்டுகிறார்கள்.

அவர்களின் கலைகளில் அழகும் ,மதுரமும் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன” என்கிறார்.

பண்டைத் தமிழகத்தில் பண் இசைத்த ஆடவரை பாணர்கள் என்றும் பெண்டிரை பாடினி என்றும் அழைத்தனர்.

 இசைப் பாடல்களைப் பாடியவர்கள் இசைப்பாணர்கள், யாழ் இசைத்தவர்கள் யாழ்ப்பாணர்கள். இதே போல் நடனமாடிய பெண்கள் விறலியர், கூத்தியர் எனஅழைக்கப்பட்டனர்.

கர்நாடகைசை வட மொழியில் இருந்து தான் தோன்றியது .அது தமிழ் நாட்டில் தோன்றவில்லை”. என்று வாதிடுபவர்கள் அதன் தொன்மைக்கு வட மொழியில் இருந்து காட்டும் ஆதாரமாக சாரங்க்குதேவர் என்பவர் எழுதிய இசை இலக்கண நூலாகிய “சங்கீதரத்னாகரம்” என்பதே இவர் கி.பி.12 ம் நூற்றாண்டைச்சேர்ந்தவர். கார்ஷ்மீர் தேசத்தைச் சேர்ந்த சொட்டில்தேவர் என்பவரின் மகன்.

பெளலதபாத் என்ற தேவகிரிராஜ்ஜியத்தை ஆண்ட சிம்மண ராஜசபையில் சமஸ்தான வித்துவானாக இருந்தவர் இவர் தமிழ்நாட்டில் நன்றாக வளர்ந்திருந்த த்மிழிசையை நன்கு பயின்ற பின்னரே தமது நூலை எழுதினார். அந்நூலில்(சங்கீதரத்னாகரம்) அவர் இத்தளம் ,காந்தாரபஞ்சமம், கெளசிகம், நட்டராகம், தக்கராகம்,தக்கேசி, நட்டபாடை,செவ்வழி,செஞ்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம்,குறிஞ்சி முதலான தமிழ்ப்பண்களைக் குறிப்பிடுகின்றார்.

சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரத்துக்குப் பதினொரு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் தான் சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரத்தில் வரும் அரங்கேற்றுக்காதை,வேனிற்காதை , ஆச்சியர்குரவை, நடுநற்காதை, ஆகிய நாங்கு காதைகளும் தமிழிசை பற்றிய குறிப்புகளை தெளிவாக விளக்குகின்றன. அத்துடன் யாழாசிரியன்,அமைதி, குழலோன் அமைதி, தண்ணுடையோன் அமைதி, ஆடலாசிரியன் அமைதி என அந்நூல் விவரிக்கும் விளக்கங்கள் தமிழிசையின் தொன்மைக்கு சான்றாகவுள்ளன.

சிலப்பதிகாரத்தை அடியொற்றியே சங்கீதரத்னாகரம் எழுதப்பட்டது என்பது தான் வரலாற்றுண்மை.

 பார்ப்பணர்கள் வகுத்தவிதிகளின் படி அவர்கள் ஆடலிலோ , பாடலிலோ ஈடுபடக் கூடாது. அப்படி அக்கலைகளில் ஈடுபட்ட பார்ப்பணர்களை அவர்களே விலக்கி வைத்தார்கள் என சிலப்பதிகாரத்தில் கூறப்ப்ட்டுள்ளது. பார்ப்பணசேரிகள் என அவை அழைக்கப்பட்டன.

சிலப்பதிகாரம் மட்டுமல்ல  அடியார்க்கு நல்லார் தாம் வாழ்ந்த காலத்தில் வழங்கிய இசைச் சொற்,   அடியார்க்கு நல்லார் காலத்திலும் தமிழிசையின் தொன்மைக்கு சான்றாக இன்ன ,இன்ன நூல்கள் இருந்தன என்பதற்கும் தேவையான ஆதாரங்கள் உள்ளன.

சில சான்றுகள்

1.அகத்தியம்

2 .இசை நுணுக்கம்

3. இந்திரகானியம்

4.குணநூல்

5. கூத்தநூல்

6.சயுந்தம்

7.செயிற்றியம்

8. தாளவகை கோத்து

9. நூல்

10. பஞ்சபாரதீயம்

11. பஞ்சமரபு

12.பரதம்

13. பரதசேனாதீயம்

14.பெருங்குருகு

15.பெருநரரை

16.மதிவாணர் நாடகத்தமிழ்நூல்

17. முறுவல்

அடியார்க்கு நல்லார் தாம் வாழ்ந்த காலத்தில் வழங்கிய இசைச் சொற்களையே தமது நூலுரையிலும் கையாண்டார்.

 உதாரணமாக குரல் ,துத்தம் , கைக்கிளை, உழை , இனி, விளரி,தாரம் என்பவை . இவை சுரங்களைக்குறிப்பிட தமிழர்கள் பாவித்த சொற்கள் ஆகும். அதுமட்டும் அல்ல ஒரு ஸ்தாயியை ஒரு இலக்கு என்றும் மண்டிலம் என்றும் த்மிழில் வழங்கினர்.
ச.ரி .க. ம .ப. த.நி என்ற குறியீட்டு எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களே. இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதரத்னாகரம் என்ற நூலை சாரங்கதேவர் சமஸ்கிருத பெயர்களை கொடுத்து அவை வடமொழியிலிருந்து வந்தவை போன்ற புரட்டை ஏற்படுத்த உதவினார் .

தமிழ்’ச’வுக்கு வடமொழி ‘ஸ’ வலிந்து திட்டமிடப்பட்டது. இந்தப்புரட்டை மறைத்த நாராயண சாத்திரிகள் கீழ்க்கண்டவாறு வன்மையாகக் கண்டிக்கிறார்.

“சாரங்கதேவர் விபரித்த ‘ச ரி க ம ப த நி’ என்ற ஏழு சுரக்குறிகள் காரணப் பெயருள்ளவை என்பது, இடுகுறிப்பெயர்கள் என்று மெய்ப்பித்து விளக்குகிற சிகண்டி மாமுனிவர் அருளிச் செய்த இசை நூலுக்கும் விரோதப்படுகிறது.

அன்றியும் ஷட்ஜா என்ற பதத்திலிருந்து “ஸ” வும்,

ருஷப என்ற பதத்திலிருந்து “ரி” யும்,

காந்தார என்கிற பதத்திலிருந்து “க” வும்,

மத்திம என்ர பதத்திலிருந்து “ம” வும்,

பஞ்சம என்கிற பதத்திலிருந்து “ப” ,

தைவத என்கிற பதத்திலிருந்து “த” வும் ,

நிசாத என்கிற பதத்திலிருந்து “நி” யும் வந்ததென்று உரைக்கில்”  ஸ” என்கிற சமஸ்கிருத அட்சரம் “ஸ” என்கிற மாறுதலை அடைவதற்கும் “,ரு” என்கிற உயிரெழுத்து “ரி” என்று சமஸ்கிருதத்தில் மெய் எழுத்தாக மாறுவதற்கும், “கா” என்கிற நீட்டம் “க” என்று குறைவதற்கும் தைவதம் என்பது “த” என்று அகர வடிவமைந்து யாதொரு சமஸ்கிருத வியாகரண பிரமாணமும் காண முடியாமையாலும் , ஷட்ஜா முதலிய ஏழு பதங்களும் காரணச் சொற்களென்று காட்டுவதற்கு “ரிஷப, காந்தார ,தைவத” என்கிற மூன்று பதங்களின் பொருள் ஆராச்சியில் சுரங்களைச் சம்பந்தித்தவைகளாகவே சாரங்கதேவர் விபரிப்பதால் ஷட்ஜா, மத்திம, பஜ்சம , நிஷத என்கிற உரைகள் சுரங்களையே சம்பந்தித்ததெனக் கூறுவது கிரமமில்லாமையாலும் அபந்தியாயத்தையும் ஷண்ட , ருதம், காத்ரம், மதுரம், பட்டலம், தைரியம் முதலான சமஸ்கிருதப் பதங்களில் முதல் அட்சரமாக அதிப்பிரசிங்கப்பதாலும் திராவிடர்கள் அமைத்த இடுகுறிப்பெயரை மாற்றுவதற்கு எடுத்த புரட்டு என்று தீர்மானிக்கப்படுகிறது”.

இப்படி தமிழிசையை ஒழித்துக்கட்ட வடமொழியாளர்கள் செய்த சதிகள் கொஞ்சமல்ல. இன்றைய கீர்த்தனை வகை இசைப்பாடல்கள் தேவாரத்திலிருந்தே தோன்றின .கீர்த்தனையில் நிரவல், விருத்தி முதலிய இசை அமைப்புக்கள் எல்லாம் தேவாரபாடல்களைக் கொண்டே அமைந்தவை.

கர்நாடக இசை , கர்நாடக இசை என்று நாம் இங்கே குறிப்பிடும் இசைக்கும் இன்றைய தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்வுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? இல்லை, இல்லவேஇல்லை.

கி.பி.10ம் நூற்றாண்டில் மகராட்டிரத்தை ஆண்ட மன்னனான சோமேச புல்லேகமால் என்ற என்பவன் இசைக்கலை மீது தீவிர நாட்டம் கொண்டவனாக விளங்கினான். தென்கோடியில்(தமிழ்நாட்டில்) வழங்கி வந்த இசையை ஒரு குறியீட்டிற்காக கர்நாடக இசை என தவறுதலாக கூறியதன் விளைவே இத் தவறு என்பது வரலாறு. தனது நாட்டுக்கு தெற்கே உள்ள நாட்டு இசை என்பதை சொல்ல கர்நாடகத்தை குறிப்பிட்டு சொன்னதே அது . மலையைக் கல் என்பது தமிழ் வழக்கு , இமயமலையை வடபெருங்கல் என்று தொல்காப்பியம் சொல்கிறது.

(இன்னும்வரும்…)

பாகம் 1

41 thoughts on “கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 2) : T.செளந்தர்”

 1. தங்கள் கட்டுரையை படிக்கும் போது இந்த ஐயர்மாருடைய நரித்தனம் ஏன் என்று இன்னும் புரியவில்லை.என்னைய்யா இது.கேவலமாக இருக்கு.அவங்களும் தமிழ் தானே பேசுறாங்கள்.

 2. சங்கரன்
  வேளாளச் சாதியமும் சாதித் தடிப்பும் ஒரு விஷயம் தனிப்பட்ட ஒவ்வொரு வேளாளரதும் நடத்தை இன்னொரு விடயம் என்பது போல, தனிப்பட்ட பிராமணர் வேறு பார்ப்பனியம் வேறு.
  பார்ப்பனரும் பார்ப்பனியத்திலிருந்து விடுவிக்கப் பட வேண்டியவர்களே.

  கொழும்பில் 19ம்நூற்றாண்டில் குடியேறின தமிழ்ப் பெருங்குடிகளுக்கு ஏதேன் தமிழ்ப் பற்று இருந்ததா?
  தமிழ்ப் பேச மறுத்த காலமும் இருந்ததே.

 3. இக் கட்டுரை இப்போது இலங்கையில் சென்ற 19.9.2001 தொட்டு ஞாயிறு தினக்குரலில் தொடராக வருகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  1. shiva புதிதாக இருக்கிறது , பிராமணர், பார்ப்பன்னர்,
   இரண்டும் ஒன்று என்றுதான் இவ்வள்வு நாளும் நினைத்து ஏமாந்து இருக்கிறேன் தயவுசெய்து குளப்பாமல் தெளிவுபடுத்துவீர்களா,
   சிவன், உருத்திரன் ,மகாதேவன் , நடராசர் ,தில்லையம்பலம், என்பதுபோலல்லாமல்,

  2. இரண்டும் சமூக வழக்கில் ஒன்றையே குறிக்கின்றன.
   பார்ப்பனர் என்பது சங்க காலத் தமிழில் வழக்கில் இருந்து வந்து, பின்னர் பிராமணர் என்ற சொல்லால் மேவப் பட்டது. பார்ப்பன என்பது பிராமண என்ற வட சொல்லின் வழி வந்திருக்கலாம்.
   நான் இரண்டையும் வேறு பொருட்படப் பயன்படுத்திய நினைவில்லை. செய்திருப்பின் அல்லது அவ்வாறு எண்ணத் தூண்டியிருப்பின் தவற்றுக்கு வருந்துகிறேன். சுட்டிக் காட்டின் நன்றியுடையவனாவேன்.

   பார்ப்பனர் (பிராமணர்) பலர் பின்னைய சொல்லை விரும்பக் காரணங்கள் உள. அச் சொல் பிரமா, பிரம்மம் என்பனவற்றுடன் எளிதாகத் தொர்பு பெறுகிறது. அதை விட அதில் சமஸ்கிருதச் சாயல் அதிகம். அதில் ஒரு சாதி உயர்வுத் தொனியும் உண்டு.

   1. நன்பர் சிவா,
    ஆதியில் பார்ப்பனர் என்பவர் தமிழர்களே. ஓலைச்சுவடிகளைப் படித்துக் காண்பித்து சொற்பொழிவு செய்பவர்.

    மேலும், ஆசீவகர்கள் வாணியல் மேதைகள். அவர்களில் ஒரு சாரார் சோதிடத்தை உருவாக்கினர். சோதிடச் சுவடிகளைப் பார்த்து வருங்காலம் சொல்பவர்களும் பார்ப்பனர்களே. சுவடி பார்ப்பவர் பார்ப்பனர்.

    இவை உட்கார்ந்து கொண்டு பார்க்கும் வேலை என்பதால், தெற்கே வந்த பிராமணர்கள், உடலுழைப்பில்லாத இந்த வேலைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்து கொண்டு, அத்தொழிலில் இருந்த தமிழர்களை விரட்டி விட்டனர். அவர்களின் எடுப்பொலிப் பேச்சும், சூழ்ச்சியும் வென்றன.
    அதேபோல, பழங்கால அந்தனர்களும் தமிழர்களே.

 4. மதிப்பிற்குரிய சௌந்தர் , ஐயா! மன்னிக்கவேண்டும்! எனக்கு இசையில் பெருத்த ஞானம் ஒன்றும் கிடையாது, ஆனால் தமிழ் பற்றி அறியவேண்டுமென்கிற ஆர்வம் அதிகமுண்டு. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ராகங்களில் ஒன்று “பஞ்சமம்” எனக்குறிக்கப்பட்டுள்ளது.. பஞ்சமம். பஞ்சமி. பஞ்சதந்திரம். இவையெல்லாம் சமஸ்கிருத சொற்கள் என்பது எனது பணிவான அபிப்பிராயம். பஞ்சமம் ,பஞ்ச . பஞ்சமி. என்கிற சொற்பதஞ்கள் ஐந்தாம் எண்ணுடன் சம்பந்தப்பட்டவை என்றும் அறியக்கிடைக்கிறது, கட்டுரையாளர் கொஞ்சம் சந்தேகத்தை தீர்ப்பீர்களா,
  நன்றி.
  பாரதி,

 5. சிவா
  பிராமணர் இல்லாத பிராமணியம் இருக்கிறதா ? இது நல்ல பகிடி .

  1. பார்ர்ப்பனியம் என்பது ஒரு சிந்தனை முறையும் நடத்தை நெறியுமாகும்.
   இலங்கையில் அது சைவத்தின் பேரால் கடைப்பிடிக்கப் படுகிறது. அதை முன்னெடுப்போர் பார்ப்பனர் அல்லர்.
   வெள்ளை இன மேம்பாட்டுச் சிந்தனை, வெள்ளையர் இல்லாத நாடுகளிலும் வலுவாக உள்ளது. கறுப்பரிடையில் அது வலுவாகத் தொற்றியுள்ளது. ஆசியரிடையே வலுவாக உள்ளது.

   நான் சொல்வதை விளங்கிக் கொள்ள விரும்பின் அந்தோனியோ கிராம்ஸ்சியின் மேலாதிக்கச் சிந்தனை பற்றிக் கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள்.
   மக்களை அடிமைகளாக வைத்திருப்பது மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளை விட முக்கியமாக மேலாதிக்கச் சிந்தனைகளை ஒடுக்கப் பட்டோர் சிந்தனைத் தளத்தில் உள்வாங்கி ஏற்றுக் கொண்டமையே என அவர் விரிவாக விளக்கியுள்ளார்.

   1. பெரியார் கூட ஒரு இடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். பார்ப்பனரும் பார்ப்பனியமும் வேறு என்பதை. பார்ப்பனியத்துக்கு எதிராகவே நாம் குரல் கொடுக்க வேண்டும். சிவா கூறுவது போல் பார்ப்பனியம் இன்று பல வெவ்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

 6. பாரதிகுஞ்சு
  மிக நல்ல கேள்வி ஒன்றை கேட்டிருந்தீர்கள் .இக்கட்டுரை எழுதும் போதுஎனக்குள் எழுந்த ஐயமும் இதுவே.இருப்பினும் சங்கீத உலகில் நடந்த தில்லுமுல்லுகள்,இருட்டடிப்புகள் ,திருட்டுக்கள்,வழிப்பறிகள் போன்ற காரியங்களை எல்லாம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மேதைகள் இனம் கண்டு காட்டிய குறிப்புக்கள் அவை.
  இதை எனது கட்டுரையில் தவிர்த்து எழுதியிருக்க முடியும் .அது தவறானது என்பதால் அதை செய்யவில்லை.அது ஒரு புறம் .தங்கள் சந்தேகதத்தை தீர்த்து வைக்கும் அளவுக்கு கட்டுரையாளருக்கு ஆழ்ந்த மொழி புலமை கிடையாது என்பது மறுபுறம் .

  பார்ப்பனீயம் இசையில் மட்டும் கை வைக்கவில்லை மொழியிலும் புகுந்து சீரழிவை செய்திருக்கிறது.உதாரணம் :நேபாளிய மக்கள் தமது சொந்த மொழியை இழந்து இன்று பார்ப்பனீயம் சார்ந்த மொழியை பேசுகின்றார்கள்.
  நாம் இன்று நமது மொழியான தமிழ் என்று நினைத்து கொண்டிருக்கின்ற ,பாவித்து கொண்டிருக்கின்ற பல சொற்கள் தமிழ் சொற்கள் அல்ல என்பது சிலர் மட்டுமே அறிந்தது.
  வட மொழி – தமிழ் அகராதி ஒன்றை பார்த்ததில் சிக்கிய சில் வட மொழி சொற்களை கீழே தருகிறேன் .
  அகதி,அநாதை, அர்ப்பணம் ,அனுபவம் , ஆகாசம் ,அபிவிருத்தி ,இக்கணம் ,ஆபாசம் ,இலவசம் ,உச்சரிப்பு ,கணிதம் ,சகோதரன் ,சுத்தம் ,சுகம் ,சமூகம் ,பூசாரி ,சன்னல் வாந்தி ,சுபாவம் ….

  எத்தனையோ தமிழ் சொற்களை எல்லாம் திரித்தும் வட மொழி ஆக்கி இருக்கிறார்கள்.உதாரணம் : கலை என்ற தமிழ் சொல்.நாமில் பலர் அது வடமொழி சொல் என்றே எண்ணுகிறார்கள்.அதை திரித்து கலா என்றும் அதை ஒட்டி எத்தனயோ சொற்களை உருவாக்கி விட்டார்கள்.

  இப்படி தமிழில் இருந்து பறி போன சொற்களை எல்லாம் ,சமஸ்கிருதமயமாக்கப்ப்ட்ட சொற்களை எல்லாம் கண்டு பிடிக்க கூடிய “மூல சொல் இயல் ” (root words ) தமிழ் ஆராய்ச்சியாளர்கள் இருந்தால் அவர்களை நாம் தேடி படிக்க வேண்டும்.பார்ப்பனீயம் மிகவும் கொடுமையானது.அது புற்று நோய் .

  1. எனது சந்தேகத்திற்கு மட்டுமல்லாது பொதுவாக எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டுமென்பதற்காகவே அந்தக்கேள்வியை எழுப்பியிருந்தேன் , நன்றி நான் சிறு வயதில் அறிந்த இன்னும் ஒருவிடயத்தையும் இங்கு ஒப்பிக்கிறேன்,
   காசி ஆனந்தன் அவர்கள் குறிப்பிட்டதாக ஒரு கலண்டரில் கிடைத்ததாக ஞாபகம், ”சர்க்கார் ஆபீஸ் கட்டடத்திலிருந்த பீரோவை திருடிய ஆசாமி துரதிஸ்டவசமாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டான்” இங்கு இடம்பெற்ற உரையாடல் தமிழ்போலத்தெரிந்தாலும் ,ஹிந்தி, பாளி, ஆங்கிலம், சமஸ்கிருதம்,உருது, இன்னும் பல மொழிகளின் கலப்பாகவே அந்தச்சொற்றொடர் அமைந்திருக்கிறது எனவே சமஸ்கிருதம் ஆன்மீகத்தோடு சேர்த்து எம்முள் பார்ப்பன்னரால் திணிக்கப்பட்டாலும் வணிகர்கள் மூலமாகவும் வேறுவழிகளிலும் பல மொழிக்கலப்பு தமிழுக்குள் ஊடுருவியிருக்கின்றது இன்றும் அவை HIV வைரசுகள்போல் இனங்காணமுடியாதவைகாளாகிவிட்டன,

  2. நன்பர் சௌந்தர்,
   உங்களது கட்டுரையிலிருந்து பல புதிய செய்திகளை அறிந்தேன்.
   அடுத்து, கர்நாடகம் என்பது தமிழப்பெயரே. கரு என்றால் மேடான, உயரமான என்பது பொருள். தென்னிந்தியாவின் மேற்கே உள்ளது கருநாடு. மேற்கு என்ற சொல்லே மேல் என்ற கருத்திலிருந்தே வந்தது. கிழக்கு கீழ் என்பதிலிருந்து வந்தது போல. எனவே கருநாடு என்பது தான் கர்நாடகம் என்றானது. சிலப்பதிகாரத்தில் இன்றய கர்நாடகம் கருநாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.
   கருமாரியம்மன் என்பது மேடான பகுதியில் உள்ள மாரியம்மன் என்ற பொருளில் தான்.
   கரும்பு என்பதும் கரும்+புல் – கரும்பு என்றானது. உயரமான புல் என்பது அது. கரும்பு புல் வகையைச் சேர்ந்தது என்பது நாம் அறிந்தது.

 7. கொடுத்தும்,எடுத்தும்,வாங்கியும் வளரட்டுமே செந்தமிழ்.தனித்திருந்தால் தமிழ் தனித்தே நின்றீருக்கும் ஆனால் உல்கின் மொழிகளீன் ஒரு சொல்லிலாவது தமிழ் வாழ்கிறதேஇது பெருமையல்லவா? நேபாளீகளீன் பெயரெல்லாம் பார்த்தால் சீத்தா ராம்,சிவராம்,பிரகாஸ்……..என்றீருக்கும் இது வடமொழியின் கொடை என்றால் தமிழில் இருந்து கடன் பெற்றூ வாழும் மொழிதானே வடமொழி.பார்ப்பணீயம் கொடுமையானதே அதுதான் இந்தியாவை இனைத்து வைத்திருக்கிற்து என்றால் நம்பவா போகிறீர்கள்.

  1. நன்பர் தமிழ்மாறன்,
   ஆங்கிலம் கூச்சநாச்சமில்லாமல் கடன்வாங்கி வளர்வதோடு தமிழை இணைத்துப் பேசவேண்டாம். பொக்கிஷங்களை வைத்திருப்பவன் கடன் வாங்கத் தேவை இல்லை. தமிழில் வேர்களிலிருந்து எந்தசப் புதியச் சொல்லையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

   அடுத்து நேபாளத்தின் தலைநகர் காட்மண்டு கட்டமண்டபம் என்ற தமிழச்சொல்லிலிருந்து மருவி வந்தப் பெயர். குளிர் நாடான நேபாளத்தில் மரத்தில் வீடுகட்டுவதே வழமை. அப்படிக் க்ட்டப்பட்ட அழகு அரண்மணையின் பெயரால் மருவி உருவானப் பெயரே காட்மண்டு.
   கல்கத்தா என்பது கூட காளிக்கோட்டம் – காளிக்கோட்டா – கல்கத்தா என்று மருவி வந்த பெயர்தான்.
   காளி, தூய்மையானத் தமிழப்பெயர். காளி தமிழக்கடவுள்.
   4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய உபகண்டம் முழழுவதும் தமிழின் வட்டார வழக்குகள் பேசப்பட்டன என்பதன் ஆதாரங்கள் இவை.

   1. ஜோதி பாசு கூட ஒரு முறை ஒவொருவரும் அவர்கள் மாநிலத்தில் மற்ற மாநிலத்தாரை வெளி ஏற்றினால் தமிழர்களை தவிர இந்தியாவில் யாரும் வசிக்க முடியாது என்று கூறினார்.

   2. ஆனால் தமிழ் நாட்டில் ஸ்டீபன் கிங்….ஜெப்ரி ஆர்ச்சர்….என்றூதான் படிக்கிறார்கள்.எதற்கெடுத்தாலும் பாப்லோ நெருடா………கெமிங்வே….என உதாரணம் காட்டுவார்கள்.ஒரு முத்துலிங்கம்….முருகையன்…..நடன ஆசிரியை ராகினி ராஜகோபால்….என்றால் யாருக்குத் தெரியும் என்பார்கள்…பாலகுமாரனை படித்துக் கொண்டிருந்தால் இங்கிலாந்திலுமா எனக் கேள்வி எழுப்புகிறார்கள்…காளீ பூஜை எனும் நவராத்திரி நேபாளத்தில் பிரபலம் ஆனால் தமிழராகிய நமக்கு நினைவிலும் இல்லையே?,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 8. “இலங்கையில் அது சைவத்தின் பேரால் கடைப்பிடிக்கப் படுகிறது. அதை முன்னெடுப்போர் பார்ப்பனர் அல்ல.”
  அதனால் பாரநீயத்டிற்கு என்ன லாபம் ?

  1. லாபம் பற்றி என்னைக் கேளாதீர்கள்– நான் வணிகனல்ல.

   நான் சொல்லுவதெல்லாம் ஒரு பிற்போக்கான சமூகச் சிந்தனையை நாம் உள்வாங்கியுள்ளோம் என்பதைத்தான்.
   அது யாருக்கு நன்மையாயுள்ளது என்பதை ஆங்காங்கு ஆதிக்கத்திலுள்ள வர்க்கங்கள் முடிவு செய்கின்றன.

  2. சைவம் என்பது வேறூ பார்ப்பணீயம் என்பது வேறூ.

  3. சைவக் கோவில்களில் பிராமணரே பூசை நடத்துவதுடன் சமஸ்கிருதமே கோவில்களின் அதிகார மொழியாகவும் உள்ளதே.
   சைவம் ஆதி சங்க்ரர் காலத்தில் தன் இன்றைய வடிவைப் பெற்ற போது, முற்றான பார்ப்பனிய மதமாகி விட்டது.
   சென்ற ஆண்டு சிதம்பரத்தில் நடந்ததை அறிய மாட்டிர்களோ!

   கன்னடர் நடுவே வீர சைவம் பார்ப்பனியத்துக்கு எதிராக நின்றது.

   1. கன்னடர் நடுவே வீர சைவம் பார்பனியத்திற்கு நின்றது ஒரு காலம் இன்று அதேவீர சைவம் தலிதுகளுக்கு எதிராக நிற்கிறது. இ ந்து தீவிரவத்தை தூகிப்பிடிக்கிறது . தென்னாட்டில் ஆர் எஸ்.எஸ் அதிகம் உள்ள இடம் கன்னட தேசம் . பொதுவாக் எல்லா மதப் பிரிவிகளும் ஆரம்பத்தில் புரட்சிகரமாக தோற்றமளிக்கும் பிறகுதான் பிற்போக்கு வடிவம் பெறும் வைணவர் ராமானுசர் ஒரு காலத்தில் தாழத்தப் பட்டோரை தன்னுடன் இணைத்துக் கொண்டார் அதற்காக் வைணவம் முற்போக்கு ஆகிவிடமுடியுமா

   2. மிகக் கவனமாக “எதிராக நின்றது” என இறந்த காலத்தில் தான் எழுதினேன்.
    அதற்கொப்பாகத் தமிழகத்தின் சைவத்தில் எதுவும் நிகழவில்லை என உணர்த்தவே அதைக் கூறினேன்.
    வீர சைவம் என்பது தன்னளவில் முற்போக்கானதாகி விடாது — அதைக் கொண்டு வந்தது ஒரு முற்போக்கான சமூக விடுதலைக் கருத்தியல்.

    ராமானுசர் முற்போக்கானவர் என்பேன். வைணவம் முற்போக்கு என்பது என் நிலைப்பாடல்லவே.

 9. சொற்கள் வழக்கொழிதல் மொழியின் இயல்பு.
  அயற் சொற்கள் நீண்ட காலத்துக்கு வழங்கி வரும் போதும் ஒரு மொழியின் பழஞ் சொற்கள் வழக்கொழிவதுண்டு. அது தன்னளவிலேயே தீயதல்ல. மொழியின் கருத்துரைக்கும் ஆற்றலை அது மேம்படுத்திய சூழல்களும் இருந்துள்ளன.
  திட்டமிட்டமுறயில் தமிழை சமஸ்கிருதமாக்கும் முயற்சி இருந்ததையும் அதற்கான காரணங்களையும் அறிவது தமிழைச் சங்க காலத்துக்கு மீட்கவல்ல, மாறாக அதன் அடிப்படை வலிமைகளை அறிந்து அவற்றின் மீது வலுவான ஒரு மொழியயைக் கட்டியெழுப்பவே.
  சமஸ்கிருத மூலச் சொற்களகவும் பேர்களாகவும் கூறப்படும் பல சொற்களும் பேர்களும் ‘பிராகிருதங்கள்’ எனப் பொதுப்பட அழைக்கப் பட்ட ஆரிய/திராவிட/முண்டா மற்றும் அயல் மொழிக் கலப்புக்குட்பட்ட மொழிகளிலிருந்து பெறப்பட்டவை.
  சமஸ்கிருத்தச் சொற்களை (குறிப்பாக மேலதிகச் சொற்களை) பழம் ஐரோப்பிய, பார்ஸி மொழிச் சொற்களுடன் ஒப்பிட்டால் அவற்றின் ‘ஆரியமல்லாத’ மூலங்களை அறிய இயலுமாயிருக்கலாம்.

 10. ‘1.அகத்தியம்

  2 .இசை நுணுக்கம்

  3. இந்திரகானியம்

  4.குணநூல்

  5. கூத்தநூல்

  6.சயுந்தம்

  7.செயிற்றியம்

  8. தாளவகை கோத்து

  9. நூல்

  10. பஞ்சபாரதீயம்

  11. பஞ்சமரபு

  12.பரதம்

  13. பரதசேனாதீயம்

  14.பெருங்குருகு

  15.பெருநரரை

  16.மதிவாணர் நாடகத்தமிழ்நூல்

  17. முறுவல்’
  இன்த நூல்களில் எத்தனை இன்றைக்கு அச்சில் உள்ளன அவை எங்கு கிடைக்கும் என்று தெர்வித்தால் பயன் அளிக்கும் . இருந்த்து பார்ப்பனன் என்ற பதிலைத் தவிர வேறு பதிலை எதிர்பார்க்கிறேன்

 11. நூற் பட்டியலில் “சில சான்றுகள்” எனத் தவறக இடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  இந்த நூல்கள் எங்கு குறிப்பிடப் பட்டுள்ளன என்பதே தேவைப்படும் விளக்கமாகும். அதை விட, அவற்றினின்று சான்று கூறப் பட்டுள்ளதா என்பதையும் சுட்டிக் காட்டலாம்.

  சொல்லப்படும் 5 தமிழ்க் காவியங்களிலே இரண்டு தான் முழுமையாக உள்ளன. ஒன்று குறைபாடாக. மற்றவை காவிய வடிவில் இல்லை என நினைக்கிறேன்.
  சங்க நூல்கள் பலவும், உ.வெ. சாமிநாத ஐயர், தாமோதரம் பிள்ளை போன்றோரின் முயற்சி இல்லாதிருப்பின் இன்று பேரளவில் மட்டுமே அறியப்பட்டிருக்கும்.
  சைவத் தமிழ்த் திருமுறைகளைக் கறையானுக்கு இரையாக்கும் சதி பற்றிச் சொல்லப் பட்டுள்ளது.
  நூல்கள் குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் நலன்களுக்குக் கேடாக இருந்த்த போது திட்டமிட்டே அழிக்கப் பட்டிருக்கும் வாய்ப்பை நாம் மறுக்க முடியாது. இது உலகெங்கும் நடந்து வந்த ஒன்று.

  “இருந்த்து பார்ப்பனன் என்ற பதிலைத் தவிர வேறு பதிலை எதிர்பார்க்கிறேன்”. — து.இ. இவ்வாறான சீண்டலின் நோக்கமென்ன?
  தற்செயலாக, உண்மையாகவே பார்ப்பனர் அழித்த கதை ஏதும் சுட்டிக்காட்டப்பட்டாலும் என அஞ்சுவதாலா?

  1. எம்முடைய கேள்வினையைப் புரிந்துகொள்ளாமல்

   பதில் எழுதியுளீர்கள் பார்பனன் அழித்தான் என்றல் அபோது தமிழன் என்ன செய்து கொண்டிருந்தான் ? இதுவே எனது கேள்வி பார்ப்பனன் தமிழ நாட்டின் மீது படையெடுத்து வரவில்லையே? மக்களில் 5% விழுக்கடு கூட இல்லாத ஒரு கூட்டம் 98% விழுக்காட்டின் தொனமைகளை அழித்துவிட்டது என்பதை ஒரு பெருமையாகப் பேசித்திரிவதை சகிக்க முடியவில்லை என்பதே எமது வாதம்

   1. பார்ப்பணன் அழித்தான் என்றால் எப்படி அழித்தான்? கத்தி வெட்டுகிறது என்றால் தானாக வெட்டுகிறதா? பார்ப்பணனும் மன்னர்கள வார்ததை வசியம் செய்து தமிழரிடை இருந்த எல்லா மரபுகளயும் அழித்து தன் அறீவால் அப்பாவியாய் இருந்த தமிழனின் அடையாளத்தைச் சிதைத்து குருக்களாய் உயர்ந்து கொண்டான்.

  2. இன்னார் அழித்தார் என்பது என் வாதமல்ல.
   வலிந்து பொருள் கொள்வதே உங்கள் நோக்கமாயின் கொள்க.
   உங்கள் கேள்விக்குக் கட்டுரையாளர் பதிலைக் கூறட்டும்.
   ஐயங்களைப் பண்பாக எழுப்பும் போது ஆக்கமான விவாதங்கட்கு இடமுண்டு.

 12. உலக மக்களில் 0.01 விழுக்காடு இல்லாத கூட்டங்கள் கூட உலகப் பேரழிவை நிகழ்த்தியுள்ளன. போரில்லாமற் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன
  அது பற்றிப் பாதிக்கப்பட்ட யாரும் “பெருமை பேசல்” ஒரு வகையான பிரச்சனை.
  அதைப் பற்றிப் பேசாதே என்பது இன்னொரு வகையான பிரச்சனை.

  உண்மைகள் திரும்பத்திரும்பப் பேசப்படுவதில் ஒரு கேடும் இல்லை— மடியில் கனமிருந்தாலொழிய.

  1. திருவாளர் 3 எக்ஸ் நீங்கள் சுட்டிகாட்டிய பேரழிப்புகளை பட்டியலிட முடியுமா?..அரசு அதிஅகரத்தை கைப்ற்றாமல் கருத்தை மட்டும் காட்டி பல நூற்றாண்டுகள் அழிக்க முடியுமா?எமக்கு மடியில் கனமில்லை உங்களுக்கும் அப்படி என்றால் நேரான பதில் சொல்லவும்

  2. “உலக மக்களில் 0.01 விழுக்காடு இல்லாத கூட்டங்கள் கூட உலகப் பேரழிவை நிகழ்த்தியுள்ளன. போரில்லாமற் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன” — இவை தனித்தனி வாக்கியங்கள்.
   முதலாவது அதிகாரத்திலிருந்த ஒரு சிறுபான்மையின் வன்முறையால் ஏற்பட்ட அழிவுகள் பற்றியது.
   இரண்டாவது போரின்றி (பெருமளவும் வன்முறையும் இன்றி) ஏற்பட்ட அழிவுகள் பற்றியது
   அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்காவிலெல்லாம் போரில்லாமலும் ஏற்பட்ட அழிவுகளுக்குப் போதிய சான்றுகள் உண்டு. உண்மையாகவே பட்டியல் தேவையா?

   மதகுருமார் வரலாற்றில் நீண்ட காலமாக அரசின் மீது பெரும் செல்வாக்குச் செலுத்தியுள்ளனர் என்று அறிவீர்கள். பர்ர்ப்பனர் அரசு அதிகாரத்தில் முக்கியமான இடத்தைப் பிடிக்கவில்லை என்கிறீர்களா?
   க்ஷத்ரிய-பார்ப்பன அதிகார உறவும் பார்ர்ப்பன-மேட்டுக்குடி வேளாள அதிகார உறவும் எதைப் பற்றியன?
   பார்ப்பனியம் என்பது வெறுமே பார்ப்பனரைக் குறிப்பதல்ல.

   இந்தியாவில் பொருள்முதல்வாத மெய்யியல் மரபும் நூல்களும் தகவல்களும் போராலா காணமற் போயின? பவுத்தமும் சமணமும் போராலா அழிக்கப் பட்டன? சூழ்ச்சிகள் நிகழவில்லையா?

   “உண்மைகள் திரும்பத்திரும்பப் பேசப்படுவதில் ஒரு கேடும் இல்லை— மடியில் கனமிருந்தாலொழிய” என்றேன். உங்கள் மடியில் கனமிருப்பதாக நான் சொன்னதாக ஏன் வெருளுகிறீர்கள்?
   (நான் “திருவாளர்” என்று உங்களுக்கு நிச்சயம் என்ன? இதற்கு நான் உங்களிடம் ஆதாரம் கேட்டு மினக்கெடப் பொவதில்லை).

 13. 1917 இல் வெளிவந்த கர்ணாமிர்த சாகரத்திர்க்கு பார்ப்பனர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அவ்வப்பொழுது எழுதப்படும் ஆதாரங்களுக்கு ஏன் எதிர் வினை பார்ப்பனர்கள் ஆட்ருவதில்லை .இந்த கள்ள மௌனத்திற்கு என்ன காரணம் ?இதை தட்டி கேட்டல் மத உணர்வை புண்டுத்துவது என்று சொல்லப்படும்.அதற்க்கும் வக்காலத்து வாங்க சிலர் எப்போதும் இருப்பார்கள். பார்ப்பனர்கள் ஒன்றியுமே அழிக்கவில்லை ,அவர்கள் அப்பாவிகள்.தமிழர்கள் தான் இதை அழித்தார்கள் !!!!

  முன்பு ராஜ ராஜ சோழன் பார்ப்பைநீயதிர்க்கு தொண்டு செய்தான் .மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே .இப்போ எத்தனையோ பரிவாரங்கள் எல்லாம் இருக்கிறது .அதில் ஓரு வகையை சேர்ந்தவர்கள் தான் நண்பர் துரை இளமுருகு வும் .
  சொற்களை வைத்து வாதம் புரிவது ?????

  சில சான்றுகள் என்று சொல்லப்பட்டது இன்ன ,இன்ன நூல்கள் இருந்தன என்பதை சொல்லவே ஒழிய இன்று அந்த நூல்கள் எல்லாம் இன்றும் உள்ளன என்பதற்கு அல்ல.

  1. சவு ந்தர் அவர்க்ளே நேரடியாகச் சொல்லுங்களேன் பர்பனன்உடன் தமிழின மேனமைச் சாதிகளும் சேர்ன்த்துதான் அழித்த்தன என்று.
   ஆக செய்தி இதுதான் பார்ப்பனன் மட்டும் அழிக்கவில்லை. அவர்களோடு மன்னனும் சேர்ந்து அழித்தான். ஏன்? அழித்தான் . மனனர்களுக்கு தேவையான கருதியலைப் பார்ப்ப்னர்கள் ஒரு வடிவாக அமைத்துக் கொடுத்தனர் நால் வருணம் , மன்னன் கடவுளின் மறு அவதாரம் என்ற கொள்ககைகளை மக்களிடம் பரப்ப அதை ஊன்றச் செய்ய பார்ப்னர் உதவி மன்னனுக்கு தேவையாய் இருந்ததது .அதனால் பர்ப்ப்னன் அழித்தபோதும் மன்னன் அதை ஊக்கிவிதான் சோழன் கண்ணயிரம் என்ற ஊரில் கல்விசாலை அமைத்து பார்பனர்கள் மட்டும் படிக்கும் வண்ணம் வகை செய்தான் . வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டது.. மன்னர்களுக்கு ஒரளவு கல்விக் கற்பிக்கப் பட்டது. மற்றவர்களுக்கு கல்வி கற்க வேறு வகை ஏற்பாடு ஏதும் உண்டா?

 14. மலையைக் கல் என்பது தமிழ் வழக்கு , இமயமலையை வடபெருங்கல் என்று தொல்காப்பியம் சொல்கிறது.”

  என்த இடத்தில் தொல் காப்பியத்தில் வருகிறது என்று சொல்ல முடியுமா?

 15. “மலையைக் கல் என்பது தமிழ் வழக்கு , இமயமலையை வடபெருங்கல் என்று தொல்காப்பியம் சொல்கிறது.”…

  அது தொல்காப்பியம் அல்ல .புறநானூறு என்பதே சரியானது.

  தென் குமரி, வட பெருங்கல்,
  குண குட கடலா வெல்லை,
  குன்று, மலை, காடு, நாடு
  ஒன்று பட்டு வழி மொழியக்,
  கொடிது கடிந்து, கோல் திருத்திப்,
  படுவது உண்டு, பகல் ஆற்றி, ……………….குறுங்கோழியூர் கிழார் என்ற புலவர் எழுதியது.

  மன்னனுக்கு மக்களை சுரண்ட வேண்டும் ,அதற்க்கு பொருத்தமாக பார்ப்பனீயம் அமைந்தது.அவன் அதற்க்கு ஈடாக நிலங்களை கொடுத்து தாஜா பண்ணினான்.மக்கள் எல்லோரும் படித்து விட்டால் தங்களது ஏமாற்று புரிந்து விடும் என்பதால் கல்வி மறுக்கப்பட்டது.தாழ்த்த பட்ட மக்களுக்கு இந்த வாய்ப்புக்கள் முற்று முழுதாக மறுக்கப்பட்டது. கல்வி என்னும் வெளிச்சம் அவர்கள் மீது ஓரளவு பட நூற்றாண்டுகள் ஆனது.
  பார்ப்பனீயம் என்பது உன்னை விட நான் உயர்ந்தவன் என்பதை கட்டமைப்பதே.இப்படியான ஒரு கொள்கையை வகுத்து கொடுத்தது பிராமணீயமே.கருத்த பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்குவதல்ல எனது நோக்கம்அல்ல.

  1. முருகையன் கவிதை வரி ஒன்றுநினைவுக்கு வருகிறது.
   “முட்டையிலே மயிர் பிடுங்கிப் பேனும் பார்ப்பார்”.

   (பார்ப்பார் என்பது பார்ப்பனரைக் குறிப்பிடுவதாகக் கொள்ளக் கூடாது என்று முட்டையிலே மயிர் பிடுங்கும் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்).

   1. நண்பர் சவுன்தர் அவர்களுக்கு, நீங்களும் நானும் ஏறத்தாழ ஒரே கருதை எதிரிகள் போல சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

 16. முட்டையிலும் நரை முடி புடுங்குகிரார்களே அது தான் கொடுமையிலும் கொடுமை

 17. நண்பர் துரை இளமுருகு

  நாம் ஏறத்தாழ ஒரே கருதை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
  உங்களை நான் எதிரியாக நினைக்கவில்லை.

 18. இங்கு சில சொற்றிருபுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

  மலை+ஆள்+அ[க]ம்=மலையாளம். கல்+நாடு+அ[க]ம் கல்நாடகம்.கன்னடம்
  இதில்,’ல்,ர்’ஆக திரிவது இயல்பு. வல்மம்,வன்மம்>வர்மம்,என்பதுபோல்,
  ஒகனேகல்=புகைவிடும்மலை,ஒகே=புகை,அருவியின் நீர்த்திவலை புகை

  விடுவதுபோல் காட்சியளிப்பதால் அப்பெயர்.

Comments are closed.