கருணா குழுவின் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு!

26.09.2008.

மட்டக்களப்பு, நல்லையா வீதியில் உட்புறத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணாகுழு)வின் அலுவலகத்தினுள் நேற்று முற்பகல் 11.15 மணியளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது.
எனினும், இக்குண்டு வெடிப்பினால் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
கருணா குழுவினரின் அலுவலகம் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. அக்குண்டு அங்கு எப்படிக் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.