கருணாஸ் என்னும் பச்சைத் தமிழன் ராஜபட்சே விருந்தில்.


தமிழக நடிகர்களுள் கவனிக்கப் பட்ட ஒரு நடிகர் கருணாஸ். அம்பாசமுத்திரம் அம்பானி என்னும் படத்தில் ஹிரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பமே கலைக் குடும்பம்தான். இலங்கை அரசு போரின் வெற்றியைக் கொண்டாடும் விதமான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இந்திய தமிழக நடிக நடிகர்களை அழைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு தன் இனக்கொலை முகத்தை மாற்றும் முயர்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது இலங்கை அரசு.

பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கும் தமிழக குழுக்களோ தொடர்ந்து இலங்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இவர்கள் ராஜபட்சேவின் கம்பெனியோடு சேர்ந்து அகதி முகாம்களுக்குச் சென்றூ போட்டோவுக்கும் போஸ் கொடுக்கிறார்கள். அந்த வகையில் இப்போது தமிழக நடிகர் கருணாஸ் குடும்பத்தோடு நான்கு நாள் பயணமாக இலங்கை செல்கிறார். இலங்கை அரசு வானொலி, தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியைச் செய்யவிருப்பதோடு, அகதிகளுக்கும் குத்துப்பாட்டுகளை பாடி ஆட விருக்கின்றனர்.

23 thoughts on “கருணாஸ் என்னும் பச்சைத் தமிழன் ராஜபட்சே விருந்தில்.”

 1. இந்தச் செய்தியும்,தலைப்பும் ஆரோக்கியமான விடையமல்ல;

  1. சற்று முன் கர்ணாவின் விளக்கத்தை கேட்டேன்.அவர் மனம் நொந்து பேசிக்கொண்டிருந்தார்.அதாவது தான் இலங்கை அரசின் நிகழ்ச்சிகளிலோ,அல்லது கலை நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ள இலங்கைச் செல்ல திட்ட மிடவில்லையென்றும்தனது முன்னோர் வணங்கிய நல்லூர் கந்தசாமி ஆலையத்தில் தன் மகனுக்கு மொட்டை அடிக்கவே செல்லத்திட்ட மிட்டிருந்ததாகவும் அப்போது தன்னை நேயர்களுடன் ஒரு சந்திப்புக்கு அழைத்த இலங்கை சூரியன் எப்.எம்(சன் குழுமத்துடையது அல்ல!) நிறுவனத்தினரின் அழைப்பை கூட இன்றைய சூழலில் தவிர்த்து விட்டதாகவும்.ஆனால் நாம் தமிழர் இயக்கத்தினர் இப்பயணம் பற்றி கேட்டதாகவும் தான் விளக்கம் சொன்ன பிறகும் திருப்தியடையாமல் தான் 10லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ராஜபக்க்ஷேவின் விருந்தினராக செல்வதாக புரளியை கிழப்பி விட்டதாகவும் இதனால் தனது பயணம் ரத்தாகி விட்டதாகவும்.தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும்.நாம் தமிழர் இயக்கத்தின் இந்த செயல் ஈழ மக்களுக்காக,விடுதலைக்காக பள்ளி நாட்கள் முதலே தன்னால் இயன்ற உதவிகளை உணர்வுபூர்வமாக செய்துவரும் தன்னை மிகவும் வேதனை படுத்தியிருப்பதாகவும்.தான் இரண்டு நாட்களாக தூங்கமுடியவில்லை என்றும் தெரிவித்தார்.
   அதேசமயத்தில் தன் பயணம் தள்ளிவைக்கப் பட்டிருப்பதாகவும் கண்டிப்பாக தான் இலங்கைக்கு போகவிருப்தாகவும் அது பணத்திற்காகவோ கூத்தடிக்கவோ இல்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.-
   நாம் தமிழர் இயக்கம் இத்தகைய பொறுப்பற்ற வேலைகளை தவிர்த்தால் உருப்படலாம்-அதே போன்று கர்ணா ஜாதிரீதியாக செயல்படுவதை தவிர்க்கலாம்

   1. கருணா பற்றி நான் எழுதியிருப்பதை வாபஸ் பேறுகிறேன்.அவர் சிங்களரும் பஞ்சாபியரும் இணைந்து நடத்தும் எப் எம் நிகழ்ச்சி கொண்டாட்டத்துற்காகத்தான் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார் என்பதை கொழும்மிலுள்ள நண்பர்கள் மூலம் உறுதிபடுத்திய பிறகே இந்த தகவலை எழுதுகிறேன்..’கொழும்பில் நமது பஞ்சாமி இந்தியர் நடத்தும் ரேடியோவில்..’என்று அவர் டி வி யில் பேசும்போதே இவர் எதற்கடா பஞ்சாபி இந்தியர் என்றெல்லாம் பேசுகிறார் என்று நினைத்தேன்.இப்போது விளங்கிவிட்டது .போகிறக்கில் இனி அவர் ஜெய்ஹிந்த் சொன்னாலும் சொல்வார்.மிஸ்டர் கருணா டிவி நிருபர்கள் முன் நடித்த இந்த நடிப்பை சினிமா கேமரா முன் நடித்தால் படமாவது ஓடும்.

    1. நண்பர் செழியன்,ஆழம் தெரியமல் இந்த சாக்கடையில் காலைவிட வேண்டம்!.
     “சமூக நீதி போராட்டத்தில்” பகுத்தறிவாளர்கள்(ஐரோப்பிய தத்துவம்) என்று கூறிக்கொண்டவர்கள் மட்டும் பங்குபெறவில்லை.இலங்கையில்,வடக்கிலோ,எங்கேயோ,சமூககநீதி போராட்டம் நடைபெறவில்லை.இலங்கை இடதுசாரிகளின்? தலித்திய அதரவு என்பது,மர்க்ஸிய லெனினிஸ்ட் என்று போலி பெயர் வைத்திருக்கும் திரு.சண்முகதாஸன் அவர்கKஇன் ஆதரவளர்கள்.தமிழ்நட்டு தலித்தியத்துடன் இவர்கள் போட நினைக்கும் முடிச்சு ஒரு “கோன்ஸ்பைரஸி”.தமிழ்தேசிய? தலித்தியத்திற்கும்,சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது.பின்நவீனத்துவ எதிர்ப்பு என்று இவர்கள் “வண்டுருட்டாம் பழம் போல்” எதையாவது உருட்டிக் கொண்டு வருவார்கள்.தமிழ்நாட்டில் புதிதாக(வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்த சமூகநீதியை அம்போ என்று விட்டு),கருணாஸ் போன்றவர்கள் ஜாதியிஸம் பேசுவது,இந்த மார்க்ஸிய – லெனினிய வாதிகளாள்தான்!.புலம்பெயர்ந்த இலங்கை மார்க்ஸிய – லெனினிய வாதிகளுக்கும் “வெள்ளால ஜாதி” அடையாளத்திற்கும் உள்ள தொடர்புகளும்,இந்திய மார்க்ஸிய – லெனினிய வாதிகளுக்கு “நாயுடு – ரெட்டி – தெலுங்கு பற்றிற்கும்” உள்ள தொடர்புகளை அராய்ந்தால்,கருணாஸின் ஜாதியிஸம் ஒரு எதிர் விளைவே என்று புலப்படும்.மார்க்ஸியத்தின் வர்கப்போராட்டமும் இல்லை,பின்நவீனத்துவத்தின் கோமாளித்தனமும் இல்லை.எது இருக்கிறது என்று அதைப்பற்றிப் பேசுகிறவர்களுக்குத் தெரியும் ஆனால்,அவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்கள்!.

     1. எங்கள் சிவனேசச் செல்வனை நினைவூட்டும் தமிழ் தங்களீடம் இருகிறது ஜேம்ஸ்.உங்கள் அறீவுபூர்வமான கருத்துக்களீன் ரசிகன் நான்

   2. எச்சரிக்கை!
    மறுபடியும் “துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு” இடுகை தொடங்கிவிட்டது.

 2. மானங்கெட்ட இன உணர்வு இல்லாத தமிழர்கள் இல்லாத வரைநாம் உருப்படுவது மிகவும் கடினமான விசயம்.

 3. கருணாஸ்க்கு இலங்கைத்தமிழன் சார்பில் எனது பாராட்டுக்கள்.அசின் போன்ற மனித
  நேயமுள்ள நடிகை போல வளரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

   1. ராசா!

    நம்ம சேரிகளுக்கும் ‘மனித நேய’ அசினை அனுப்புங்கோ ராசா.போட்டோ போட்டிக்கிறோம்.

 4. இந்த செய்தி பதிந்த ‘பச்சை’த் தமிழனுக்கு வணக்கம்,
  ஓர் முன்னனி பாட்டுக்கார் முள்ளிவாய்க்கால் விழா முடிந்து நந்திக்கடலில் தீர்த்தோற்சவமும் முடிந்த பின் தீர்த்தோற்சவ மூலவரால் அமிரான சிவனின் விருப்பத்திற்கு இணங்க பொன்னாலைக் கிருஷ்ண பரமாத்மாவுக்கு பலி கொடுக்கப்பட்டவரின் பெயரில் உள்ள மைதானத்தில் (ஸ்டேடியம்) ஓர் இலங்கை அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட பாட்டு-நடன விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதியிடம் பரிசும் வாங்கியது மட்டுமல்லாமல் தான் இங்கு வந்து பாடியதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் புலங்காகிதமடைந்து தான் திரும்பவும் வருவேன் என்று மேடையில் கூறியது செய்தியில் பார்த்தது ஜாபகம்.

  தற்போது கனடாவில் இருவாரங்களிற்கு முன் புலிப் பினாமிகளால் நடாத்தப்பட்ட ஓர் விழாவிற்கும் அவர் வருவதாக விளம்பரம் மூலம் அறிந்த்தேன்

  தற்போது நல்லாக வெற்றிலை பாக்கு போடும் இந்த முன்னணி பாடகரைப் பற்றி என்ன கூறப்போகிறீர்கள்?
  இவரை எந்த அணியில் சேர்க்கப் போகிறீர்கள்?

  தென்னிந்தியாவின் கலை வாரிசுகளைப் பற்றி கூறாதீர்கள்.இவர்களின் ஒப்பாரிகளும் வண்டவாளங்களும் ஊரறிந்தது.

  இலங்கைக்கு போகும் கலைஜர் ஒருவரை பற்றி முறையிடுகிரீர்களே, இந்தியாவில் இருக்கும் கலைஜர்கள் அகதி முகாம்களில் இருக்கும் ஈழத்தமிழருக்கு என்ன உதவி செய்கிறார்கள்?

  புலியின் பணத்திற்கு சோடை போகிறவர்களை என்ன சொல்கிறீர்கள்?

  வெளிநாட்டிற்கு ஒரு கலைஜரை கூப்பிடால் தன குடும்ப பரிவாரங்களுடன் வெளிக்கிட்டுவிடுவார்கள். இப்படி கூப்பிட்டவர்கள் (குதிரையுடன் சேர்த்து கழுதையும் ஏத்தாமல்) எத்தனை பேர் நட்டப்பட்டவர்கள்.

  தற்போது படங்கள் பூசை போடும்போதே வியாபாரப் போட்டியில் புலம் பெயர்ந்த தமிழர்களால் டாலரில் முற்பணம் கொடுக்கப்படுகிறது.
  கலைஜர்களைக் கூப்பிடும்போது குதிரையுடன் சேர்த்து கோவேறு கழுதையும் ஏற்றப்படுகிறது.

  பணம் எல்லாம் செய்யும் தமிழ்நாட்டு நண்பரே!

  தமிழ்நாடு முகவர்களின் விபரங்கள் வேண்டுமா? நீங்களும் வெளிநாடு செல்லலாம்…, பணம் பண்ணலாம்.

  பிற்குறிப்பு:
  இனியொரு நிர்வாகத்தினரே!
  மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளிக்கான இத்தளத்தில் இப்படி செய்திகளை இனம் கண்டு தகுதியறிந்து தரமறிந்து பிரசுரிப்பீர்கள் என ஓர் வாசகர் என்னும் ரீதியில் எதிர்பார்க்கிறோம்.

  நன்றி
  – அலெக்ஸ் இரவி

  1. மாற்று அரசியல் என்றால் எல்லா வகையான கருத்துக்கதும் இடம் இருக்கலாம் என்று தான் நினைத்தேன்.

   1. Before they published his phone number (now they removed) that so I mentioned.

 5. புலிகள் பிரேமதாசவுடன் விருந்து போட்டு இந்திய இராணுவத்தை
  அழிக்க முற்பட்டபோது, தமிழகத் தமிழரின் தேசபக்தி எங்கே போயிருந்த்து.
  புலி ஆதர்வாள்ர்களின் மான்மும் நடுக்கடலில் நின்றதா?

  துரை

 6. பெயர் கருனா என்பதாலா ? அப்பொ கருனா என்ற சொல் தமிழனின் விரோத சொல்லா .

 7. புலிகள் செய்தால் எல்லாம் சரி…

 8. கருணா தமிழரல்ல தேவர்.தேவாதி தேவர்.ஜாதி சங்க நிகழ்ச்சிகளில் போளந்துகட்டும் கர்ணா இலங்கை போனால் என்ன? பாக்கிஸ்தான் போனால் நமெக்கேன்ன.கர்ணா ஜாதி சங்கத்தில் போய் முழங்கிய பிறகு அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டேன்

 9. அட கொக்கா மக்கா ..இப்பதான் எல்லா  நாடு நாடா கொடி பிடிச்சன்வங்க குடும்பத்தோட இலங்கைக்கு விடுமுறைக்கு போய் அள்ளி அள்ளி செலவு செய்கிறான்களே அவங்களை “துரோகிகள்” என்று ஏனுங்கோ இன்னும் சொல்லவில்லை.?..வெளிநாட்டில் சுகபோகமாக இருக்கும் இலங்கை தமிலனுகள் இலங்கைக்கு போகலாம் ..கே பி கூட கூட்டு வைக்கலாம்..கோவில் திருவிழா ..அது.. இது …எல்லாம் செய்யலாம்…ஆனால் தமிழ் நாடு தமிழனை லூசுபயளுகளாக “இலங்கைக்கு போகதேடா…போனால் நீ துரோகி…” என்று சொலுறது…..இந்திய தமிழர்கள் இவ்வளவு மடையர்கள் என்று நான் நினைக்கவே இல்லிங்கோ…வாழ்க,,

 10. அசின்,கருணா இவர்களையெல்லாம் பற்றியெல்லாம் கதைக்க வேண்டி வந்துவிட்டது எமது நிலமை.

 11. ஈழத் தமிழனை ப்ராடுத் தமிழன் எனப் பேசிய இழிந்தவன் இவனா பச்சைத் தமிழன்?இவன் இருக்கும் எந்தத் தமிழ்ப்படமும் நான் பார்ப்பதில்லை.முழியவளத்திற்கு சரியில்லாத இவன் முகத்தை பார்த்தால் துப்பவே தோன்றூம்.கிடகிறான் கேணப்பயல்.

 12. ஒரே பாட்டு, ஒரே இசை, ஒரே வசை. இதே ராகத்தை எத்தனை நாளைக்குத்தான் பாடப்போகீறீர்கள்? உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக இருக்கும் மீதித் தமிழர்களையும் ஈழத்தில் பலி கொடுக்கப்போகிறீர்களா ? .
  தமது மகிழ்ச்சியையும், நிம்மதியையும், அமைதியையும் போராட்டத்தின் பேரில் இயக்கங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு அல்லாடிப் போயிருந்த எம் மண்ணின் இனிய உறவுகளுக்கு கிடைத்திருக்கும் இடைவேளையைக் கூடாவ பறிக்கப்பார்க்கிறீர்கள்? இனியாவது வர்களின் வாழ்க்கையைச் சுய நிலைக்குத் திரும்ப விடுங்கள். அரசியலில் உங்கள் , உங்கள் சுயலாபங்களுக்காக ஒரு சமுட்காயத்தை நாசப்படுத்தாதீர்கள். கலைஞர்கள் கலையை வளர்க்கட்டும், அரசியல்வாதிகள் அரசியல் நடத்தட்டும் பாவம் மக்களை இனியாவது வாழவிடுங்கள்.
  இதுதான் கடைசிக் கண்ணீர்த்துளியையும் ஈழத்து தமிழர்களுக்கு விடுதலை என்னும் பெயரில் காயவைத்து விட்டுக் கலங்கிப் போயிருக்கும் மக்களின் அன்பான வேண்டுகோள்.

 13.  உண்மைவிளம்பி சுதந்திரம் என்ன சுக்கா மிளகா சும்மா கிடைப்பதற்கு? நீங்கள் ஈழத்தில் வாழும் தமிழர் இல்லை என்று நினைக்கிறேன். ஈழ மக்கள் மட்டும் போராட வில்லை என்றால் என்றோ அவர்கள் அழிந்திருப்பார்கள் சிங்கள இனவெறியால் . இன்று வரையில் ஈழம் உலத்தாரல் நன்கு கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. விரைவில் விடுதலை கிட்டும்.
  கருன்னஸ் விடயம் எல்லாம் விரைவில் கரையக் கூடியது.  அது உள்நாட்டு பிரச்சனையுடன் முடிந்து விடும். அனால் ஒரு வேளை அவர் அங்கு சென்று சிங்கள தந்திரத்த்ல் செய்யும் ஒவொரு சிறு தவறும் ஈழ விடுதலை நாளை தள்ளிப் போடும். மேலும் நாம் துன்பங்கள் கூடும். அவர் குழந்தைக்கு மட்டும் மொட்டை போட்டால் அவருக்கு மட்டும் நல்லது. அவர் ஈழத் தமிழர்களுக்கு மொட்டை போட்டர்னா? . 

Comments are closed.