கருணாவிற்கு பிரித் நூல் கட்ட முடியுமாயின்,சரத் பொன்சேகாவிற்கு ஏன் கட்ட முடியாது? : மங்கள கேள்வி!

mankala_sa_karuna தேச விரோத செயல்களில் ஈடுபட்ட கருணாவிற்கு பிரித் நூல் கட்டி ஆசி வழங்க முடியுமாயின் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஏன் ஆசி வழங்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய தேரர்களிடம், மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தியமை, பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளை படுகொலை செய்தமை என பல்வேறு குற்றச் செயல்களுடன் தற்போதைய தேச நிர்மாண அமைச்சர் கருணாவிற்கு தொடர்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபருக்கு ஆசி வழங்க முடியுமாயின், தேசத்திற்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்த ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஏன் பிரித் நூல் கட்டி ஆசி வழங்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றும் நோக்கில் ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், சிலர் அவரை தேசத் துரோகி என முத்திரை குத்தி குறுகிய இலாபம் அடைய உத்தேசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.