கருணாவின் இன்றைய தத்துவம்- விலைவாசி உயர்வு எல்லா நாடுகளிலும் சகஜமாம்.

கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கூறிய புகார்களுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ​ காங்கிரஸ் கட்சியோடு திமுக தோழமையாக இருப்பதால் தான்,​​ திமுகவுடன் உறவு கொள்ள முடியாத நிலை உள்ளதாக இடதுசாரி நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.​ ​ ஆனால்,​​ கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜெயலலிதா,​​ மத்திய அரசை விமர்சிப்பதை தவிர்த்து இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ​ ​ இந்த நிலையில்,​​ ஜெயலலிதா இடதுசாரி நண்பர்களை ஏமாற்றுவது கூட பிறகு இருக்கட்டும்,​​ அவருடைய கட்சித் தொண்டர்களையே ஏமாற்றுவதற்காக கோவையில் பேசும் போது,​​ கூட்டணியைப் பற்றி அவரே கவனத்துக் கொள்வதாக உறுதி அளித்து இருக்கிறார். ​ காங்கிரஸ் கட்சியையும்,​​ மத்திய அரசையும் விமர்சிப்பதைத் தவிர்த்து இருக்கிறார்.​ ​ இப்படியெல்லாம் செய்து இடதுசாரிகளை ஏமாற்ற நினைக்கலாம்;​ கட்சித் தொண்டர்களை ஏமாற்றலாம்.​ ஆனால்,​​ சோனியா குறித்து ஜெயலலிதா கூறிய விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியினர் அவ்வளவு சுலபமாக மறந்து இருக்க மாட்டார்கள். ​ வாங்கும் சக்தி பெருகுகிறது:​ அத்தியாவசியப் பொருள்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை ஏறிவிட்டதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.​ ​ ​ ​ விலைவாசி உயர்வு என்பது வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பொதுவாக எல்லாநாடுகளிலும் உள்ள ஒன்றாகும். ​ ​ இந்த விலைவாசி உயர்வு தமிழகத்தில் மட்டுமல்ல;​ இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏன் உலக அளவிலும் இருந்து கொண்டு தான் உள்ளது.​ விலைவாசி உயர்கின்ற அதே நேரத்தில் மக்களின் வாங்கும் சக்தியும் பெருகிக் கொண்டு வருகிறது. ​ ​ உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் சாதாரண மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.​ துவரம் பருப்பு,​​ உளுத்தம் பருப்பு,​​ பாமாயில் ஆகியன மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.​ மலிவு விலையில் ரூ.50-க்கு 10 மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.அதிமுக ஆட்சியிலும்:​​ அதிமுக ஆட்சியிலும் விலைவாசி ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டு போனது.​ அதைத் தவறு என்று சொல்லவில்லை.​ இவ்வாறு விலை உயர்ந்த போது,​​ திமுக அரசு இப்போது எடுத்த நடவடிக்கைகளைப் போல ஏதாவது எடுக்கப்பட்டதா?​​