கருணாநிதி வீட்டு முன் வேலையில்லா இளைஞர் விரக்தியில் தற்கொலை.

சென்னை கோபாலபுரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதின் முதலாவது மனைவியின் வீடு உள்ளது. கருணாநிதி வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் மயங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் கிடந்தார் அங்கிருந்த காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர் அவர் அங்கு உயிரழந்தார். அவரது பெயர் எம். சுரேஷ் வயது 25. பத்தாவது வகுப்புவரைப் படித்துள்ள சுரேஷ் வேலையில்லாமல் வறுமையில் வாடியுள்ளார் வறுமை காரண்மாய் கணவன் மனைவிக்குள் எழுந்த பிணக்கால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் தனக்கு வேலை கேட்டு சுரேஷ் முதல்வர் குறைதீர்ப்பு பிரிவில் இரண்டு முறை மனுக் கொடுத்துள்ளாராம். அங்கிருந்து எவ்வித பதிலும் இல்லாத காரணத்தால் கருணாநிதியிடம் நேரடியாக மனுக் கொடுக்க கோபாலபுரம் சென்ற போது அங்கிருந்த காவலர்கள் அவரை துரத்தி விட்ட்தாகத் தெரிகிறது. வறுமையினாலும் தமிழக அரசின் கண்டுகொள்ளாமையினாலும் கடும் வெறுப்படைந்த சுரேஷ் விஷம் அருந்தி கருணாநிதியின் வீட்டருகே தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.

3 thoughts on “கருணாநிதி வீட்டு முன் வேலையில்லா இளைஞர் விரக்தியில் தற்கொலை.”

  1. அரசுதான் எல்லாம் செய்ய வேண்டும் என் எதிர்பார்ப்பாதே முட்டாள்த்தனமானது.முடவரும்,குருடரும் வாழவில்லை.அலுவலகத்தில்தான் வேலை செய்ய வேண்டும் என்றூ கலைஜர்நினைத்திருந்தால் அவரால் தமிழக முதல்வராகவே வந்திருக்க முடியாது.

    1. அவர் போல எல்லாராலும் தமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியுமா?

      அரசு எல்லாம் செய்வது தவறென்றால் தமிழரைச் சீரழிக்கவா இலவச டி.வி. போக, பல வேறு தேர்தல் கால இலவசங்களும் வழங்கப்படுகின்றன?

  2. எல்லாவற்றையும் மக்களே பார்த்துக் கொள்ளலாம். கல்வியும், வேலையும், உணவும் தர அரசு தயாராக இல்லை என்றால் பின்னர் அரசுதான் எதற்கு? கருணாநிதிதான் எதற்கு…. ஊழல், சொத்து, குடும்ப அரசியல், ஈழத் தமிழர்களை கழுத்தருப்பு என தற்காலத்தில் நாம் பார்க்கும் நாவீன ராமனாக கருணாநிதி வளர்ந்து நிற்கிறார்.

Comments are closed.