கருணாநிதி பன்முக ஆற்றல் கொண்டவராம்- சிவத்தம்பி புகழாரம்.

செம்மொழி மாநாட்டிற்கு விடுதலைப் புலிகளின் ஒரு கோஷ்டியினர் என்று சொல்லப்படும் ஒரு குழுவினர் ரூபான் என்பவரின் பெயரில் கருணாநியை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ” “சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த போது, அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல என்ற கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டும் என்ற சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அமைப்பு ஒரு கணம் எண்ணிப் பார்த்தால், சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதை சாட்சியங்கள் கூறும் ” என்று எழுதியிருந்தார். இதில் அவர் பயன்படுத்திய சண்டாளர்கள் என்னும் சொல் சாதீய அடுக்குகளில் ஒடுக்குண்ட தாழ்த்தப்பட்ட மக்களை வசவோடு உயர்சாதியினர் விழிக்கும் சொல்லாகும். ஆக மொழியறிவுக்குப்பால் தட்டையான இந்து சாதி வெறி பொதுப்புத்தியின் வெளிப்படாகவே கருணாநிதியின் இந்த மொழிப் பிரயோகத்தைக் காண வேண்டும் என்கிற நிலையில், தமிழில் ஆந்த புலமை கொண்டவர் கருணாநிதி என்று செம்மொழி மாநாட்டில் பேசியுள்ளார். பேரா.சிவத்தம்பி. அவர் பேசியதாவது “உலகின் மூத்த மொழி களில் மதச்சார்பற்ற மொழி தமிழ் மட்டுமே என இலங் கைப் பேராசிரியர், மார்க் சிய அறிஞர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டார்.செம்மொழி மாநாட் டில் வாழ்த்துரை வழங்கிய அவர் பேசியது வருமாறு:-முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவ ரது காலத்தில் நடக்கும் இம் மாநாடு சிறப்பானது. தமி ழின் பெருமைகளை முற் றும் அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி, வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழி கள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது. இந்தியாவின் இலக்கிய, கலாச்சார மரபுகளையும், இன்றைய கணினியுக சொல் லாட்சியையும் பெற்ற ஓரே மொழி தமிழ் மொழி மட் டுமே. இத்தகு தமிழ் மொழி யின் பெருமை உலக மக்க ளுக்குத் தெரிய வேண்டும். உலகம் அறிய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை யில் இடம்பெற்றுள்ள நாட்டு மக்கள் அனைவரும் தமிழின் பெருமைகளை அறியும் வகையில் உலக மொழிகளில் தமிழின் மாண்பை விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் எழுதப் பட வேண்டும். அப்புத்தகம் எல்லா உலக மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும். இப்பணியை முதல்வர் கருணாநிதி செய்ய வேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உலகப் பொது நோக்கினைக் கொண்ட ஒரே மொழி தமிழ். ஆத லால், இம்மொழியின் புக ழை உலகம் முழுக்க கொண்டு செல்ல முதல்வர் கருணாநிதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.

7 thoughts on “கருணாநிதி பன்முக ஆற்றல் கொண்டவராம்- சிவத்தம்பி புகழாரம்.”

 1. இதுவெல்லாம எலும்புத் துண்டங்களுக்கு குரைக்கும் நாலு கால் பிராணிகள்.  இத்தனை தமிழன் அழிந்தான் ஏதாவது ஒரு கதை இவர்கள் பக்கமிருந்து. அல்லது இத்தனை தமிழர் அழிவிற்கும் கருவியாக நின்ற ஒருவனை புகழ இவர்களுக்கு மனது…? அப்படி ஒன்று இருந்திருந்தால ஈனத் தமிழன் என்றொ தனது இலட்சியத்தை வென்றிருப்பான் வெட்கம் கெட்டதுகள். இவர்கள் இனி எப்படி ஈழத்தமிழரின் முன் வருவார்கள்.      யாழ்

 2. தமிழை விட மூத்த இலக்கிய வரலாறுடைய சீன மொழியும் தொல் கிரேக்க மொழியும் சமயச் சார்பற்றவை என்பது பேராசிரியர் சிவத்தம்பிக்குத் தெரியாமலிருக்க முடியாது.
  எந்த மொழியும் சமயச் சார்பானதாக உருவாவதில்லை.
  சமயம் மொழியில் தொற்றிக் கொள்கிறது. பல சமயங்கள் இருந்த எல்லாச் சமூகங்களிலும் மொழி எல்லா மதங்களிலிருந்தும் விடயங்களை உள்வங்குகிறது.
  ஒரு சமய ஆதிக்கம் ஹீப்றுவுக்கு வேளைக்கே நடந்தது. லத்தின் கிறிஸ்தவத்தின் வருகையோடு கிறிஸ்த்தவச் சார்பானதாயிற்று.
  வேத காலச் சமஸ்கிருதம் எவ்வளவு சமயச் சார்பானது என்பது நிச்சயமற்றது. சமஸ்கிருதத்துக்கு நடந்ததென்னவென்றால், பார்ப்பனியம் அதிலிருந்த லோகயதச் சிந்தனைகளை நீக்கியது.
  இம் மொழிகள் இறந்திராவிட்டால் அவற்றின் சமயச் சார்பு நீங்கி இருக்கும்.

  பேராசிரியர் சிவத்தம்பி கருணாநிதியைப் பொய்யாகப் புகழும் போக்கில் தமிழுக்கும் இல்லாத பெருமைகளைச் சொல்லியுள்ளார் போலும் .
  அவரின் சிந்தனைத் தெளிவு பற்றிக் கேள்விகள் எப்போதிருந்தோ எழுப்பப் பட்டே வருகின்றன.
  அவர் மார்க்சியச் சிந்தனைக்குப் பயனுற எப் பங்களிப்பைச் செய்தார் என்று யாராவது சொன்னால் நன்றியுடையவனாயிருப்பேன்.

  ஏனினும் சன்டாளன் என்ற சொல் தமிழரிடையே உள்ள எச் சாதியையும் குறிக்காது என்பது சரி போலவே தெரிகிறது. பாதகன் என்பது போல சண்டாளன் என்ற சொல் நெடுங் காலமாகப் பாவனையிலுள்ளது —
  அந்நியனைக் குறிக்கும் மிலேச்சன் என்ற சொல், அறிவிலி என்று பொருள்படுவது போல?

 3. புறபெசருக்கு தெரியவில்லை, செம்மொழி மாநாடு கருணாநிதியைப் புகழவல்ல என்று.

 4. “உலகின் மூத்த மொழி களில் மதச்சார்பற்ற மொழி தமிழ் மட்டுமே என இலங் கைப் பேராசிரியர், மார்க்சிய அறிஞர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டார்.சரி , மார்க்சியமும் மதச்சார்பற்றது சிவத்தம்பி மத சார்பற்றவரா ? என்பது தான் என்கேள்வி . சிவன் கோயிலில் விழுந்து வணங்குபவர் சிவத்தம்பி.மார்க்சியச் சிந்தனைக்கு இவர் ஆற்றிய தொண்டு என்னவென்றால் ஓசியில் ரஷ்யா பயணம் செய்ததே.

  1990 களில் ருசியாவில் ஏற்பட்ட மார்ற்றங்களின் பின் 1960 களில் நடந்த கம்யுனிஷ பிளவும் ,அன்றைய சீன நிலைப்பாடும் சரி என்றும் ,நீங்கள் பெரிய பேராசிரியர் உங்களுக்கு அவை ஏன் புரியவில்லை , நீங்கள் ஏன் ரஷ்சியா பக்கம் நின்றீர்கள் என்ற கேள்விக்கு மாணவர்களிடம் அவர் தெரிவித்த கருத்து ” அவர்கள் (ரஷ்யா)சொன்னதை எல்லாம் நாங்கள் நம்பி விட்டோமடப்பா !!!!
  இவரா மார்க்சிய அறிஞர் ?!!சிவத்தம்பியும் ,கருணாநிதியும் சந்தர்ப்பவாதிகள்.

  1. தமிழ் மகாநாட்டில் வெள்ளைக்காரன் தமிழ் பேசி தமிழை பெருமை படுத்திய போதும்,பேராசிரியர் சிவத்தம்பி  தன திமிரான ஆங்கிலத்தில் இவர் யார் என்று காட்டி கொடுத்து உளார். பாவி மகான்.

 5. தமிழுக்கு அதிக கூடிய (அளவிட முடியா ) தொண்டு செய்த தமிழ் அரசியல் வாதி கருணாநிதி என்பதில் கருது வேறுபாடு இருக்க முடியாது, ஒரு கொலைகார கூட்டம் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி முனையல்  பாமர ,வழி தெரியாத மக்களை பிடித்து வைத்திருந்து பலி  குடுத்துவிட்டு (தாங்கள் மட்டும் வெள்ளை கோடி பிடித்தது வேறு விடயம் ) அவன் காபத்தவில்லை இவன் காபத்தவில்லை என்பது வெறும் பொட்டை தனமானது. இந்திய தமிழருக்கும் இலங்கை (குறிப்பாக யாழ் தமிழர் ) தமிழர் செய்த நன்மைகள் இரண்டு கூறமுடியுமா ?. செய்தது எல்லாம் துரோகம்..ஆனால் இவர்களை கையெடுத்து கும்பிட வேடும் எதிர ஆணவம் ..அதுக்கு மட்டும் குறை  இல்லை…தமிழ் மகாநாட்டுக்கு போன தலைமை  இலங்கை தமிழன் ஆங்கிலத்தில் பேசினான்…வெட்கப்படுங்கள்..

 6. திருக்குறள் மிதமிருக்கும் எல்லா யுகங்களூக்கும் பொருந்தப் பேசுவது மதம் பற்றீப்பேசவில்லையே/திருமந்திரம் சமயநூல்போல் தோற்றம் தந்தாலும் தமிழ்னுக்கு அறம் போதிப்பது.இன்னும் இன்னுமாய் தமிழ் நம்க்கு அள்ளீத் தருகின்ற ஆயிரம் சொத்துக்கள் தமிழில் குவிந்திடல் காண்லாம்.இதில் கலைஜர் பேச்சில் இருக்கும் நகைச்சுவை அது தரும் தமிழ்ச் சுவை அவரை விற்பன்னராய்க் காட்டிவது உலகே ஒப்புக் கொள்ளூம் உண்மை இதில் மறூப்பு எதற்கு.விழியாய் நம் மொழியாய் இலக்கியத்தின் ஊற்றாய் கலைஜர் கால்ங் கடந்தும் நிற்கும் ஓவியம்.

Comments are closed.