கருங்கடல் பகுதியில் பதட்டம் உருவாக்கப்படுகிறது:ரஷ்யா

29.08.2008.
தெற்கு ஒசெட்டியா பிரச் சனையைத் தொடர்ந்து கருங்கடல் பகுதியில் பதட் டத்தை உருவாக்கும் முயற் சியில் நேட்டோ நாடுகளும் நேட்டோவில் சேர விரும் பும் நாடுகளும் அமெரிக் காவும் ஈடுபட்டுள்ளன.

சோவியத் யூனியன் சிதைவுண்ட பின் ஐரோப் பாவில் எதிர்ப்பாரின்றி ஆதிக்கம் செலுத்த விரும் பிய அமெரிக்காவுக்கு ஜார் ஜியா நிகழ்வுகள் பலத்த அடி கொடுத்தன. இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ஆதரவு நாடுகளை உசுப்பி விட்டுள்ளது. உக் ரைன் நாட்டில் ஒரு கடற் படைத் தளத்தை ரஷ்யா குத்தகைக்கு எடுத்துள்ளது. இதன் குத்தகைக் கட்ட ணத்தை உயர்த்துவது குறித்து விவாதிக்க வேண்டு மென்று உக்ரைன் ஜனாதிபதி யுஷ்சென்கோ கூறினார்.

உக்ரைனில் உள்ள செவஸ்டோ போல் கடற் படைத் தளத்தை ரஷ்யா குத்தகைக்கு எடுத்துள்ளது. 1997-ல் நிறைவேற்றப்பட்ட குத்தகை ஒப்பந்தம் 2017 வரை செல்லும். ரஷ்யா குத்தகைப் பணமாக ஆண் டொன்றுக்கு 9.8 கோடி டாலர்களை உக்ரைனுக்கு கொடுத்து வருகிறது.

ரஷ்யா இன்றுவரை இந்த ஒப்பந்தத்தை செயல் படுத்தி வருகிறது. நேட்டோ நாடுகள் மற்றும் அமெரிக் காவின் ஆலோசனைப்படி நேட்டோவில் சேர விரும் பும் உக்ரைன் புதிய பிரச் சனையைக் கிளப்புகிறது என்று ரஷ்யா கூறுகிறது.

எங்கும் இல்லாத நடை முறையாக உதவிப் பொருட் களை போர்க்கப்பலில் ஏற்றி அனுப்பியுள்ளது அமெரிக்கா.

ரஷ்யாவின் கட்டுப்பாட் டில் உள்ள போட்டி துறை முகத்துக்கு இக்கப்பல் செல் லாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இக்கப்பலில் யுத்த தள வாடங்கள் உள்ளதால் அமெரிக்க கப்பல் போட்டி துறை முகத்துக்கு வர வில்லை என்று ரஷ்யா கூறு கிறது.

தெற்கு ஒசெட்டியாவை யும், அப்காசியாவையும் ரஷ்யா அங்கீகரித்துள்ள தற்கு அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, இத் தாலி, பிரான்ஸ் மற்றும் ஜப் பான் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

போட்டி துறைமுகத் தில் உள்ள ரஷ்ய துருப்புக் களை ரஷ்யா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜெர்மனி கூறியுள்ளது.

ஐ.நா. கண்காணிப்பாளர் களை அங்கு அனுப்பினால் ரஷ்யா வெளியேறும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள தூதரை ஜார்ஜியா திரும்ப அழைத் துக் கொண்டது.