கமலினி குறித்த முறைப்பாடுகளை முன்வைக்கும்படி கோரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவரெனக் கருதி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கமலினிக்கு எதிராக முறைப்பாடுகளை மிக விரைவாக முன்வைக்கும்படி கொழும்பு பிரதான நீதவான் திரு. ரஷ்மி சிங்கப்புலி கடந்த ஏழாம் திகதி இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இரகசியப் பொலிஸ் அதிகாரிகள், முறைப்பாடுகளை முன் வைக்கத் தேவையான தகவல்களை சட்டத்தரணி தமக்கு இன்னும் தரவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

2009.05.20ம் திகதி வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கமலினி, அப்போதிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள போதும் சட்டமன்றத் திணைக்களமானது இதுவரையில் அவருக்கெதிரான முறைப்பாடுகளை முன்வைக்கவில்லை.

கமலினியை திரும்பவும் அடுத்த மாதம் நான்காம் திகதி நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.