கப்பல் கைப்பற்றப்பட்டது தேர்தலுக்கான கட்டுக்கதை : ஐ.தே.க

பின்ஸஸ் கிரிஸ்டினா கப்பல் உண்மையில் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார அனுப்பிவைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

புலிகளுக்குச் சொந்தமான பின்ஸஸ் கிரிஸ்டினா என்ற கப்பலைக் கைப்பற்றி, இலங்கைக்கு இழுத்து வந்துள்ளதாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பிரசாரம் அரசியல் இலாபத்திற்காகவும், ஜனாதிபதித் தேர்தலின் சுலோகம் என்பதனையும் நாம் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்தக் கப்பல், புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியுடன் நிரூபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம்.