கத்தியின் புலம்பெயர் பிரவேசமும் போராட்டங்களும்

lyca-kaththiலைக்கா புரடக்ஷன் தயாரிப்பான கத்தி இலங்கை, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் எங்கும் வெளியிடப்பட்டுள்ளது. வன்னி இன அழிப்பு நடைபெற்ற பின்பு தென்னிந்திய சினிமாவின் களியாட்ட நுகர்வு வெறிக்குள் சமூகத்தை இழுத்துச் செல்லும் நடவடிக்கை அதிகாரவர்க்கத்திற்கு வெற்றியளித்துள்ளது. தனிமனித சாகசம், சமூகத்தின் மீதான வன்மம், பாலியல் வக்கிரம் ஆகியவற்றின் நச்சுக் கலவையான தென்னிந்திய சினிமாக் கலாச்சாரம் ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் எழாதவாறு கவனமாகத் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படுகின்றது.

நூறு மில்லியன் டொலர்கள் அப்பாவி மக்களின் ஊழல் பணத்தை ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து சுருட்டிக்கொண்ட லைக்கா நிறுவனம், தென்னிந்திய சினிமாவை புலம்பெயர் மக்கள் மத்தியில் 90 களிலிருந்து அறிமுகப்படுத்திய சினிமா வியாபாரிகளான ஐங்கரன் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்த கத்தி திரைப்படம் புலம் பெயர் நாடுகளின் திரையரங்குகளில் காண்பிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இனக்கொலை அரசுடன் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கும் லைக்கா நிறுவனம் புலம் பெயர் நாடுகளில் இளைஞர் அமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், அரசியல் கட்சிகள், இணைய சஞ்சிகைகள் ஆகியவற்றை பணபலத்தால் கட்டுப்படுத்தி வருகின்றது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புக்களும் அதன் தலைமைகளும் லைக்காவின் பணத்தால் உள்வாங்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

லைக்காவின் கத்தி திரைப்படத்திற்கு எதிரான சர்ச்சையில் கைதான மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப் போவதாக பிரித்தானிய தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது. லைக்காவிற்கும் சமூகத்தின் மீதான் அதன் வன்முறைக்கும் எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூட இந்த அமைப்புக்கள் தயங்கும் நிலயில் கைதான மாணவர்களுக்கு ஆதரவான  இவர்கள் நடத்தும் வெற்றுப் போராட்டம் வலுவற்றைது.

இந்த நிலையில் லைக்காவிற்கு எதிராக சினிமா அரங்குகளின் முன்னால் திடீர்ப் போராட்டங்களை நடத்தபோவதாக சமூகப் பற்றுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

One thought on “கத்தியின் புலம்பெயர் பிரவேசமும் போராட்டங்களும்”

  1. தாயக மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதற்கு தனிமனித நம்பிக்கை அல்ல எமது போராட்டத்தின் அரசியல் வழிஎன்பதில் நம்பிக்கை கொண்டே தாயக மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வளர்க்கின்றார்கள் 

    அதனைப் போல் சமாதான காலம்  ஒரு முக்கியத்துவத்தை புலம் பெயர் தேசத்திடம் ஒப்படைத்துள்ளது அதன் அடிப்படையில் நா.க.தமிழீழ  அரசாங்கம் உருவாக்கம் பெற்றுள்ளதே தவிர   பிரதமாராக கொண்ட உருத்திர குமாருக்காகவோ  கே.பிக்காகவோ தமிழர்கள் நா.க.தமிழீழ அரசாங்கத்தில் அக்கறை கொள்ளவில்லை போராட்டத்தின் நகர்வை தமிழினம் தமது காலத்தின் தேவைகளுக்கு அமைவாக   செயல்படத்தவறினால் அது எதிரிக்கு சந்தற்பமாகிவிடும் . 

    உண்மையில் தமிழீழத்திற்காக விடுதலைப்புலகள் அமைப்பை மதிப்பவர்கள் எந்தக் குழப்பநிலைகளிலும் நின்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பையோ நா.க.தமிழீழ அரசாங்கத்தையோ குறை கூற முடியாது   பிரதர் உருத்திர குமாரும்   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்களும்  இந்த ஐந்து வருடங்களில் தமது செயல்பாடுகளில்    தாயக மக்களின் ஆதரவை தமிழ் தேசியக் கூட்மைப்பு பெற்றது போல் நா.க.தமிழீழ அரசாங்கம் வளர்கப்படாதமைக்கு காரணத்தை அறிய வேண்டியதன் தேவைதான் அன்றைக்கு முக்கியமானதே தவிர    தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அப்பால் நா.க.தமிழீழ அரசாq

Comments are closed.