கத்தி:சீமானின் சாயம் வெளுத்தது

Director-Seemanலைக்காவும் அதனது நீண்டகால நட்பு நிறுவனமான ஐங்கரனும் விஜய் என்ற சினிமா கோமாளியை உடன் இணைந்து தயாரித்த கத்தி என்ற தென்னிந்திய வன்முறை கலைப்படைப்பு 20ம் திகதி லண்டனில் ஓடியோ வெளியீடு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தி விழாவிற்கு ராஜபக்ச குடும்பத்திலிருந்து யாராவது கலந்து கொள்கிறார்களா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

லைக்கா உடன் இணைந்ததற்காக நமது செந்தமிழர் அல்லது பச்சைத் தமிழர் அல்லது ஏதாவது ஒரு கலர்  சீமான் அவரது தளபதி விஜய் உடன் செல்லமாகவாவது கோபித்துக் கொள்வார் என்று கணிப்பிட்டவர்கள் கத்தியால் வெட்டுமட்டுமே வாங்கியுள்ளனர். அம்மாவின் வில்லுப்பாட்டு கோஷ்டியில் தேர்தல் கோரஸ் பாடிய சீமான் இப்போது கத்தியோடு கலந்துவிட்டார்.

கத்திக்கு தனது முழு ஆதரவு உண்டு என சீமான் தனது பொன்மொழிகளை கழுத்து நரம்பு புடைக்காமல் உதிர்த்துள்ளார். என்ன இருந்தாலும் சீமான் தியாகி தான். பொதுவாக ஈழ தேசிய வியாபாரிகள் மந்திரிப் பதவியோடு செட்டிலாகிவிடுவார்கள். சீமான் முதலமைச்சர் கனவிலிருந்து இன்னும் விடுபடாமல் ஒட்டுப் பதவிகளை எல்லாம் தியாகம் செய்தவர்.

இப்போது ஒரு படி மேலே போய், இளைய தளபதி விஜய் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழ் உணர்வு பொங்கத் தெரிவித்திருக்கிறார்.

தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் அவர் தான் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.

மோடி மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மகத்தான தலைவர் எனவும் நேர்மையான தலைவர் எனவும் முழங்கிய சில நாட்களின் பின்னர் மோடி இனக்கொலையாளி என பெரும் கண்டுபிடிப்பைச் செய்து காட்டியவர் சீமான்.

அதே போல விஜய் விடயத்திலும் பல்டி அடிப்பார் என தொண்டர்கள் ஆசைப்படுவதாக பேஸ் புக் பதிவுகள் சொல்கின்றன.

பாவம் சீமான், புலம் பெயர் நாடுகளில் லைக்காவை எதிர்க்கும் தமிழ்த் தேசிய வியாபாரிகளுக்கு வேறு வழிகள் உண்டு. லைக்காவை விட்டால் போட்டி நிறுவனமான லெபாராவின் எலும்புத்துண்டை பெற்றுக்கொண்டு வாலாட்டுவார்கள்.

சீமானுக்கு லைக்கவை விட்டால் வேறு வழியில்லைப் போலும். பேசாமல் சீமானுக்கு லைக்கா பணம் கொடுத்து முதலமைச்சர் ஆக்கிவிட்டால் சினிமாவிற்கான ஏக உரிமையை லைக்காவிற்குப் பெற்றுக்கொடுத்துவிடுவார்.

எது எவ்வாறாயிமும் லைக்கா வெல்கிற்தோ தோற்கிறதோ, சீமானின் சாயம் வெளுத்துப்போனது.

7 thoughts on “கத்தி:சீமானின் சாயம் வெளுத்தது”

 1. ..இன்றைய உலகமும் யதார்தத்தின் தேவைகளும் எதுவாகவும் இருக்கலாம் தமிழர்  நாம் தமிழ் நாட்டில் தமிழை  பேச மறுத்தால் வரலாறு எம்மை மன்னிக்காது    முள்ளிவாய்காலில் தமிழர்களை அழித்துவிட்டோம் என்பதனை சிங்கள தேசம் வெற்றி கொண்டாடிய போது  . உலகத்தமிழர்   நாம் உலகத்தில் எமது அரசியல் பாதை உருவாக்கப்படதமிழீழம் என்ற அரசியல் நகர்வை   தமிழர்கள் ஏற்றார்களா?  அதனை பயன்படுத்தும் தமிழர்கள் உண்மை  வரலாற்றை பின்பற்றாதமைதான்   இத்தனைக்கும்   காரணம்.

  தமிழர்கள் சரியாக ஏற்காத காரணம்  தொட்டு   காலம் காலமான வரலாறுகள் தமிழர்கள் தமிழர்களாக வாழதமை  எமது இனத்தை பலவீனமாக்கி பல இனம் வளர்கப்பட்டு   தமிழர்களை அழித்துவிடலாம் என்பது தமிழர்கள் விட்ட தவறாகும்.  

  வரலாற்றில் தவறுகள் இதுவரை தமிழர்களுக்கு ஏற்படாத போது   தமிழர்கள் அதனை மதிக்கத்தவறி உள்ளார்கள்.    ஒரு மனிதன் தன்னை மதிக்க அடுத்தவனை மதிக்க வேண்டும் அவனது உண்மைத்தன்மையை எதிர்பார்க்க வேண்டும்.  அந்தப்  பண்பாடுகளை தவிர்த்து ஊழல் அரசியலுக்கு   தமிழர்கள் தம்மை அடைமானம் வைத்தபோதும் தமிழர்களை உலகத்தோடு போராட வைப்பதற்கு    விடுதலைப்புலிகள் அமைப்பு   ஒரு அடையாளத்தை கையளித்துள்ளது .

  அதனை உலகத்தின் ஊடகங்களும் அமைப்புகளும்   விமர்சித்து தம்மை அடையாளப்படுத்த நினைக்கும்  தனிமனிதர்கள்   தாம் இந்த நிலைக்கு வந்தமை  இன்றைய தேவைகள் எதிர்காலம் என்பதற்கு உண்மைத்தன்மை யோடு செயல்படாதவரை    தமிழர்களாக வாழ்ந்தோம் என்பதற்கான அர்தத்தை தேட முடியாது.  

  வரலாற்றின் விதிக்கு மாறாக   தம்மை வளர்க்கும் தமிழர்களை விட சீமான் ஜி.ரி.வி    மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள போது    விஜய்   தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லைதவராக இருந்தாலும்    எதிர்காலம் ஒன்றை நாம் நோக்கி நகரவேண்டியது காலத்தின் அவசியம் . அதனால்   இவர்களை தவறுகாணும் யாரானாலும் தம்மை நிரூபிக்க தயாராக இருக்க வேண்டும்.  

 2. //முள்ளிவாய்காலில் தமிழர்களை அழித்துவிட்டோம் என்பதனை சிங்கள தேசம் வெற்றி கொண்டாடிய போது  .//

  புலிகழுடன்  நடந்த போரில் , புலிகள்  தமிழர்களை தமக்கு கவசமாக்கியதால் பலியானவர்கள் தான் அநேகமான தமிழர்கள். புலிகள் கூட  தப்ப முயன்றவர்களைக்  கொன்றுள்ளார்கள்.   இன்று  புலிகள்  அழிக்கப்படாதிருந்தால்  யாருமே  புலிகள்  மீது  நடவடிக்கை  எடுத்திருக்க
  மாட்டார்கள்.

  முள்ளிவாய்க்காலில்  போர்  நடக்கும்போது   வடக்கிலும் கிழக்கிலும்
  தெற்கிலும்  தமிழர்  கொல்லப்பட்டார்களா?
  புலிகளால்  கொல்லப்பட்ட  தமிழ்ர்ழும்   சக  அமைபுகழும்  புலிகளிற்கு
  எதிரான போரில்  புலிகளிற்கு  ஆதர்வாகவா  செயற்பட்ட்டிருப்பார்களா?

  உண்மைகளை   மறைத்து  புலிகளிற்கு சார்பாக  விமர்சனங்களை  எழுதி
  தமிழர்கள்   எல்லோரையும்   பயங்கரவாதிகளாக  காட்டி   முள்ளிவாய்க்காலில்  அழிவினை  பரிசாக  பெற்ரது போதும்.

  இனியாவது  தமிழ்பயங்கரவாதிகள் வேறு, இலங்கைத்தமிழர்களின்
  அரசியல் ,உருமைப்பிரச்சினைகள்  வேறு என்பதனை  உலகிற்கு
  எடுத்துக்காட்டுவதே  இன்றைய  தேவையாகும்.

  1. வன்னியில் மெளப்படையினராலும்  திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கும்போது  வட கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் , இலங்கையின் ஏனைய பகுதிகளிலும்  புலான்ய்வுப்பிரிவினராலும் , ராணுவத்தினலாலும் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை இவ்வாறு கேணத்தனாமா க பின்னூட்டமிடுவதன் மூலம் மறைத்து விட முடியாது.
   அவ்வாறு இலங்கை அரசே சொல்லவில்லை .
   எசமான் சும்மாயிருந்தாலும் , எசமானின் ஏவலாளிகள் சும்மாயிருக்கமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

   1. இராணுவத்தால் தமிழர்கள்  அழிக்கப்பட்டார்கள் அதற்காக
    இராஜ்பகசமீதும் இராணுவத்தின் மீதும் போர் விசாரணை
    நடத்துவோம்.    தமிழரின்   தலைவர்களைக் கொன்ற புலிகளின்
    மீது  எவ்வாறு   விசாரணை  நடத்துவது?  சாதாரண  மக்களை
    தப்பி ஓட  விடாமல்  கொன்றார்களே  அவ்ர்களின் உறவினர்கள்
    யார்  மீது  குற்ரம் சாட்டுவது?  

    2009  மே முதல் இதுவரை  புலிகளால்  எத்தனை பேர்  துரோகியாக்கப்பட்டு
    கொல்லப்படிருப்பார்கள்?   எத்தனை  ச்ர்வதேச  தமிழர்  நிறுவனக்கள்
    உருவாகியிருக்கும்?    இதுவெல்லாம்   தமிழ் துரோகிகளின்
    கேள்விகள்.    லாலாவின் பதிலை  எதிர்பார்க்கின்றேன்

    1. ##   தமிழரின்   தலைவர்களைக் கொன்ற புலிகளின்
     மீது  எவ்வாறு   விசாரணை  நடத்துவது?  சாதாரண  மக்களை
     தப்பி ஓட  விடாமல்  கொன்றார்களே  அவ்ர்களின் உறவினர்கள்
     யார்  மீது  குற்ரம் சாட்டுவது?##

     உங்களுக்கு விருப்பெமென்றால் தாரளமாக புலிகளை குற்றம் சாட்டலாம் .
     அப்படியாவது உங்கள் எசமானர்கள் தப்பி விடுவார்கள் என் கிற நப்பாசை இருந்தால் .

     அதுவும் சும்மாவல்ல  ஐ ,நா  விசாரணை குழுவின் முன் சாட்சியமளிப்பதன்  மூலம்  புலிகளின் குற்றங்களை உலகறியச்செய்யலாம் .

     அதற்கு முன் ஒரு விடயம் . அங்குள்ள மக்கள் ஐநா  முன் சாட்சியமளிப்பதற்கு உங்கள் எசமானரும் , இனக்கொலயாளிகளுமான  இலங்கை அரச தரப்பினர் அவர்களை உள்ளெ அனுமதிக்க வேண்டுமே ?

     அதற்கு ஏன் அனுமதி மறுக்கிறர்கள் ? மடியில் கனமிருப்பதனால்தானே ?

     இவ்வளவுக்கு பிறகும் ஒரு இணைய தளத்தில்  வந்து புலிகள்  குற்றம் புரிந்து விட்டார்கள் என ஒலமிடுவதில்  என்ன பயன் ?

     இதன் மூலம் எசமான் மீது அதிக  கரிசனை உங்களுக்கு அதிகமா ? அல்லது புலிகள் மீது இருக்கும்  காழ்ப்புணர்வு அதிகமா ? என்ற பட்டி மன்றமே நடத்தலாம் 

 3. சீமானின் கனவு பலிக்க அவரு என்ன வேணும்நாளும் செய்வார்.
  மக்கள் மடையர்கள் இல்லை. அவர் விடும் அறிக்கையை நம்புவதற்கு
  இதை இன்னும் அவர் தெரிந்து கொள்ளவில்லை போலும்.

Comments are closed.