கதிர்காமம் பஸ் தாக்குதல் : 3 பேர் பலி 16 பேர் காயம்

புத்தல – கதிர்காமம் பிரதான வீதியின் 149ம் மைல் கல்லிற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை 10.45 அளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்ää இந்தத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கயாமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

One thought on “கதிர்காமம் பஸ் தாக்குதல் : 3 பேர் பலி 16 பேர் காயம்”

  1. இது எந்த வகைக்குள் அடங்கும். இது ஓர் துன்பியல்…………….

Comments are closed.