கண்ணிவெடித் தாக்குதலில் ஏழு பொலிசார் பலி

பீகா‌ரி‌ல் மாவோ‌யி‌ஸ்டுக‌ள் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி தா‌க்குத‌‌லி‌ல் 7 காவல‌ர்க‌ள் ப‌லியானா‌‌ர்க‌‌ள்.

பீகார் மாநில சட்ட‌ப்பேரவை‌க்கு முத‌ல் க‌ட்ட தே‌‌ர்த‌ல் முடி‌ந்து நாளை 2வது கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவ‌ல‌ர்க‌ள் நேற்று ஷியோகார் மாவட்டத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமுக்கு சென்று விட்டு ஒரு ஜீப்பில் வழக்கமான ரோந்துப் பணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, புதைத்து வைத்து இருந்த கண்ணிவெடியை மாவோ‌யி‌ஸ்டுக‌ள் வெடிக்கச் செய்தனர். இதில் ஜீப்பில் இருந்த ஒரு காவ‌ல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர் உள்பட 7 காவல‌ர்க‌ள் உடல் சிதறி பலியானார்கள்.