கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுகிறது!:HRW

இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.