கட்சித் தாவல் : பௌத்த பீடம் அறிக்கை

இலங்கை அரசியலைத் தீர்மானிப்பதில் பௌத்த மதம் பிரதான பங்கு வகிக்கிறது. பெரும்பாலான சிங்களக் கிராமங்கள் பௌத்த விகாரையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பேரின வாதத்தின் தத்துவார்த்த அங்கங்களாகத் தொழிற்படும் இவ்விகாரைகளின்  தலைமைப்பகுதிகள் பௌத்த பீடங்களாகும்.

ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கும் தாவுவோர் தொடர்பில் கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் கடும் விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளார்.
சில அரசியல்வாதிகள் அண்மைக் காலமாக கட்சி தாவல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவ்வாறு கட்சி தாவுவோர் எவ்வித கொள்கையுமற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுய லாப நோக்கங்களுக்காகவே குறித்த நபர்கள் கட்சித் தாவல்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் புத்திக்க பத்திரனவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்திற்காக கொள்கைகளை விட்டுக் கொடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.