கடற்படையினரின் கெடுபிடியினால் ஊர்காவற்துறை மக்கள் அவதி!

 
 
    யாழ்ப்பாணத்தில் பல அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, பாதுகாப்பு கெடுப்பிடிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை கடற்படை முகாமுக்கு எதிரில் உள்ள வீதி திறக்கப்படாததன் காரணமாக 10 கிலோ மீற்றர் தூரம் சென்று அராலி வழியாக ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை குறித்து அரசியல்வாதிகள் ஊடாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் அடுத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாத்திரம் இந்த வீதி வழியாக பயணிக்க இடமளிக்கப்பட்டுள்ளது. எனினும், 
 
   பொதுமக்களின் பயணத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், தமது அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தவிர கடற்படையினர் அநாவசியமாக தமது அதிகாரத்தை பயன்படுத்தி, திடீரென மக்களை கைதுசெய்வதாகவும், அநாவசியமான முறையில் தாக்குதல் நடத்துவதாகவும் தெரியவருகிறது. இவ்வாறு கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளான இருவர் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடற்படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல சேனரத், கடற்படை முகாமுக்கு எதிரில் உள்ள வீதி மூடப்பட்டிருந்த போதிலும் முகாமைச் சுற்றிவுள்ள வீதியில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஊர்காவற்துறையின் பாதுகாப்பு கடற்படையினரின் பொறுப்பில் இருப்பதால், அவர்கள் ஒருபோதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதில்லை எனவும் சேனரத் குறிப்பிட்டுள்ளார்.

7 thoughts on “கடற்படையினரின் கெடுபிடியினால் ஊர்காவற்துறை மக்கள் அவதி!”

 1. இந்த முகாம்களூம்,வலயங்களூம் ஆக்கிரமிப்புச் சின்னங்களாய் தொடரும் போல்தான் இருக்கிறது.ஏனென்றால் தட்டிக் கேட் க ஆளீல்லை நிலையில்தான் தமிழ் இனம் இருக்கிறது.ஊர்காவற்றூற மிகவும் பிந்தங்கிய நகரம் கொழும்பில் கூலிகளாய் சென்றூ பிழைத்துக் கொண்டுருக்கும் மிகவும் வறீய மக்கள கொண்ட நகரம்.இவர்களது நாளாந்த வாழ்க்கையை படையின்ர் அலட்சியம் செய்வது கவலை தருகிறது.

 2. இன்று யாழில் அதிகக்கூடிய விருப்பு வாக்குகள் பெற்றதென மார் தட்டிக்கொள்ளும் டக்கிளசு இந்த ஊர்காவற்துறை மக்களின் வாக்குகளால் தான் இந்த வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் விடயத்தை இவர்களை ஆளும் மாண்புமிகு. டக்கிளசு அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றால் உடன் தீர்த்து வைப்பார். முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. மதனராசா இங்கிருந்து தான் பாராளுமன்றம் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  ஆனால் இன்றைய நிலையில் தீவுப் பகுதியில் வாழும் மக்களுடன் அங்கிருக்கும் கடற்படையினர் அந்நியோன்னியமாகப் பழகுகிறார்கள்.

  கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்!

  ஓர் ஆதாரம், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்தில் கூடிய ஆசனங்களைப் பெற்ற போதும் விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டாவதாக வந்த மாவை சேனாதிராஜாவிலும் பார்க்க 8000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இவ்வளவு தொகையான வாக்குகளைப் பெற முடிந்தமைக்கான காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாக்கு வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி இருந்தமையே. தீவுப் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்ட மூன்று கூட்டங்களில் கலந்து கொண்ட போதும் அம்மக்கள் தங்கள் ஆதரவை அமைச்சருக்கு வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான ஆதரவு ஏனைய எந்தக் கட்சி வேட்பாளருக்கும் கிடைத்திருக்கவில்லை. அதற்கு அவர் அமைச்சராக இருந்ததால் ஏற்பட்ட அணுகூலங்கள் முக்கிய காரணம்.
  வேலனை, ஊர்காவற்துறை, சரவணை ஆகிய இடங்களில் கூட்டங்களில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களின் உடனடித் தேவைகளைக் கேட்டறிந்து சிலவற்றை அங்கேயே தீர்த்து வைத்தார். நல்ல தண்ணீர் வரவில்லை என்பதனை மறுநாளே தண்ணீர் வர ஏற்பாடு, பாடசாலைக்கான தளபாடங்களுக்கு 50000 ரூபாய்கான காசோலை, மீன்பிடி சங்கத்திற்கு 2 00 000 ரூபாய்க்கான காசோலை என்பன உடடினயாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சரிடம் தங்கள் குறைகளை எழுத்தில் வைத்து பெருமளவு கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டது.” http://thesamnet.co.uk/?p=19730

  So, if you bring this to our Honourable Doglost he will solve it.

 3. சரவணயில் சின்னமடுக்கோயிலைச் சேர்ந்த தமிழர் மற்றூம் ஊர்காவற்றூறத் தமிழ்ர், வேலண மக்கள் காய்கறீக் கடகக்காரர்களயும் அய்யா என்றே அழைப்பர் அது அவர்களது பண்பாடு.சிலுவை அடையாளங்களோடு சின்ன கோயில்கள் கட்டி வைத்திருப்பர்.நாரந்தனை, ஊர்காவற்றூறயிலும் இவற்றக் காணலாம்,மிகவும் வறீய மக்கள் அதிகம் படிக்காதவர்கள் இவர்கள் கடந்த பல காலமாக் டக்ளஸ் அவர்களோடுதான் இருக்கிறார்கள்.திரு கே.எஸ்.ராஜாவும் சரவண சின்னமடுப்பகுதியச் சேர்ந்தவரே.

  1. அப்ப திரு கே.எஸ்.ராஜாவிற்கு என்ன நடந்ததென்பதையும் சொல்லுங்களேன். அப்படியே கரம்பொன், வேலணை, சுருவில் மக்கள் ஏன் தம் வாழ்விடங்களை விட்டு வெளியேறினார்கள்…. வெளியேற்றப்பட்டார்கள்…. அதுவும் யாரால் என்பதையும் சொல்லுங்கள்.

   1. காயம் ஆறீவிடும் காயம் பட்ட வலியும் வேதனையும் போகாது என்பார்கள் இன்னும் உள்ளீருந்து வலிக்கும் வலியும், வேதனையும் மொழிபெயர்க்க முடியாத ரணங்க

    ள்,அவமானங்கள்.

    எந்தப் பிரச்சனைகளீலும் சிக்காது அமைதியாக இருந்த இந்த ஊர்கள் எல்லாம் காட்டு எருமைகள் வுயலுக்கு வந்த காட்சியாய் மாறீற்றூ.

    இன்னும் நெருப்பாய் இருக்கும் கோபங்களே வெறூப்பாய் உள்ளீருக்கிறது.
    ஆனால் காலம் எல்லாவற்றயும் மாற்றீற்றூ.

    எங்கள் வேர்களீல் எல்லாம் வேறூ மரங்கள் முளத்திருக்கின்றன நாங்களூம் வேற்றூ மனிதர்களாகி விட்டோம்.

    ஆனால் நாம் இழந்தவை அதிகம்.பேசினால் எழுதினால் எம்மீதே பாய்கிறார்கள்.

    1. தமிழ்மாறன் அவர்களே!
     அழகாக சொல்லியுள்ளீர்கள்.

     “ஆனால் நாம் இழந்தவை அதிகம்”
     “பேசினால் எழுதினால் எம்மீதே பாய்கிறார்கள்”

     ஆம்! நாம் ஏதாவது உண்மைகளை வெளியில் கொண்டுவந்தால் எம்மீது எப்படி பாய்வது என்று தான் பார்ப்பார்கள். ஆனால் அதில் இருக்கும் உண்மையின் சரி பிழைகளை ஆராயமாட்டார்கள்.

     “எங்கள் வேர்களில் எல்லாம் வேறு மரங்கள் முளைத்திருக்கின்றன நாங்களூம் வேற்று மனிதர்களாகி விட்டோம்”

     ஆம்! இது உண்மை. எனக்கு மிகவும் அறிந்தவர் 1984 இன் பின் தான் பிறந்து வாழ்ந்த கரம்பொன் இற்கு கடந்த மாதம் சென்று வந்தார். அவர்களின் வீடு சுவர் மட்டும் அதுவும் குறை நிலையில் (சீமெந்து கல்லுகளையே உடைத்து எடுத்து விட்டார்கள்). கடற்படையினர் மக்களுடன் மக்களாக இருக்கிறார்கள். அவருடன் படித்தவர்களோ, அயலவர்களோ ஒருவரும் இல்லை. வீதிகள் (ஒழுங்கைகள்) ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி எங்கு பார்த்தாலும் உடைந்த நிலையில் (உடைக்கப்பட்ட) வீடுகள், மதில்கள் புதர்கள் மண்டி உள்ளது.

     கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்!

     “காயம் ஆறிவிடும் காயம் பட்ட வலியும் வேதனையும் போகாது என்பார்கள்; இன்னும் உள்ளிருந்து வலிக்கும் வலியும், வேதனையும் மொழிபெயர்க்க முடியாத ரணங்கள்! அவமானங்கள்!”

     பிற்குறிப்பு:
     தாங்கள் இதை அழகாக ஓர் கவிதை வடிவில் தரலாமே!

 4. கூட்மைப்புக்கு மாவட்ட மொத்தத்தில் கிடைத்தது 9%. ஆளும் கட்சிக்குக் கிடைத்தது 6%. பழுது 2.5%.
  தமிழ் அச்சு ஊடகங்கள் கூட்டமைப்புக்கு வழங்கிய உதவி விகிதாசாரப்படி பார்த்தால் தென்னிலங்கையில் சிங்கள ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு வழங்கிய உதவியிலும் மேலானது.

  இப்போது கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச ஆயத்தம் என்று சொல்லியிருக்கிறது.
  அமைச்சர் பதவிக்கும் ஆயத்தம் என்று எப்போது சொல்லுவார்கள் என்று தெரியாது.
  டக்ளஸ் பாடு தரும சங்கடமாகலாம். ஆகாமலும் இருக்கலாம்.
  இரு பகுதிக்கும் பொது எதிரி ஆனந்தசங்கரி அல்லவா! இரு பகுதியும் ஒன்றுபடலாம். படாமலும் இருக்கலாம்.

  தில்லி அம்பலத்தமர்ந்து அருள் பாலிக்கும் சோனியா அம்மையைத் தான் கேட்க வேன்டும் !

Comments are closed.